புதுமுகங்கள் நடிக்கும் ‘ஏகாந்தம்’ படப்பிடிப்பு ஆரம்பம்!

அன்னை தமிழ் சினிமாஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் அர்சல் ஆறுமுகம் தயாரித்து, இயக்கியிருக்கும் புதிய திரைப்படம் ‘ஏகாந்தம்’. இந்தப் படத்தில் விவாந்த் ஹீரோவாகவும், நீரஜா ஹீரோயினாகவும் நடிக்கின்றனர்.

மேலும்,  அனுபமா குமார், தென்னவன், கெளதம், ஷர்மிளா, சாந்தி ஆனந்த், ‘வி்ஜய் டிவி’ ராமர், சசிகலா மற்றும் பலர் நடிக்கின்றனர்.

ஒளிப்பதிவு – எஸ்.கே.பூபதி, படத் தொகுப்பு – எஸ்.பி.அஹமத், இசை – கணேஷ் ராகவேந்திரா, பாடல்கள் – யுகபாரதி, ஏக்நாத், டி.ஜெ.குமார், பாடகர்கள் – ஜெயமூர்த்தி, சாய் விக்னேஷ், ஷுர்முகி, சைந்தவி, குரு, நடன இயக்கம் – ராதிகா, கலை இயக்கம் – கே.வி.லோகு, உடை வடிவமைப்பு – நட்ராஜ், ஒப்பனை – குப்புசாமி, தயாரிப்பு நிறுவனம் – அன்னை தமிழ் சினிமாஸ், தயாரிப்பு, எழுத்து, இயக்கம் – அர்சல் ஆறுமுகம்.

படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் மும்முரமாக நடைபெற்று வருகிறது.