வசந்த் ரவிக்கு வில்லனாகிறார் இயக்குனர் பாரதிராஜா!

தரமணி’ படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகி பலரின் பாராட்டுக்களையும் தரமான விருதுகளையும் வென்ற நடிகர் வசந்த் ரவி ‘ராக்கி’ எனப் பெயரிடப்பட்டுள்ள புதிய படத்தில் நாயகனாக நடிக்கின்றார். இந்தப் படத்தை RA Studios நிறுவனத்தின் சார்பாக C.R.மனோஜ் குமார் பிரம்மாண்டமான செலவில் தயாரிக்கவுள்ளார்.

 

இந்தப் படத்தில் ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா வில்லனாக நடிக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை அருண் மாதேஷ்வரன் இயக்கவுள்ளார்.

தயாரிப்பு – C.R.மனோஜ் குமார் – RA Studios, கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – அருண் மாதேஷ்வரன், இசை – டர்புகா சிவா, பாடல்கள் – கவிப்பேரரசு வைரமுத்து, கபேர் வாசுகி, ஒளிப்பதிவு – ஸ்ரேயாஸ் கிருஷ்ணா, படத் தொகுப்பு – நாகூரான், கலை இயக்கம் – ராமு, சண்டைப் பயிற்சி – தினேஷ் சுப்பராயன், மக்கள் தொடர்பு – நிகில்.