புதுமுக கலைஞர்கள் பணியாற்றும் ‘அந்த நிமிடம்’ என்ற புதிய திரில்லர் படம் சென்னை யில் படப்பிடிப்புடன் ஆரம்பமாகியது. லீ.கி.பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் மஞ்சுளா இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். இந்தப் படத்தில் கதாநாயகனாக ருத்ரா நடிக்கிறார் இவர் ‘சர்க்கரை தூக்கலாய் ஒரு புன்னகை’ என்ற தமிழ்ப் படத்திலும் ‘பிக் சல்யூட்’ என்ற மலையாளப் படத்திலும் கதாநாயகனாக நடித்தவர். அமெரிக்காவை சேர்ந்த நாசிங்கான் கதாநாயகியாக நடிக்கிறார். தெலுங்கு, கன்னட படங்களில் நாயகியாக நடித்த சஞ்சனாவும் மற்றொரு கதாநாயகியாக நடிக்கிறார்.
சிங்கள மொழியில் 34 படங்களுக்கு மேல் நடித்திருக்கும் நடிகர் லால் வீர சிங் இந்தப் படத்தில் வில்லனாக நடிக்கிறார். சன்னா பெராரோ போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். இவர் சிங்கள மொழி படங்களை இயக்கியவர், கூடவே கதாநாயகனாகவும் நடித்தவர்.
இந்த படத்தின் இயக்குநரான ஆர். குழந்தை ஏசு, ‘இயக்குநர் சிகரம்’ கே.பாலச்சந்தர், எஸ்.பி. முத்துராமன் ஆகியோரிடம் உதவியாளராகப் பணியாற்றியவர். இவர் இதற்கு முன்பாக 3 சிங்கள மொழிப் படங்களை இயக்கியிருக்கிறார்.
மீ டூ (#MeToo) பிரச்சனையை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படத்தின் கதை, திரைக்கதையை அமைத்திருக்கிறார்கள்.
சென்னையிலிருந்து வேலை தேடி வெளிநாடு செல்லும் நாயகன் ஒரு மீ டு பிரச்சனையில் சிக்கிக் கொள்கிறார். அதனால் ஏற்படும் விபரீதங்கள்தான் படத்தின் கதை. இந்தப் படத்திற்கான படப்பிடிப்பு சென்னையிலுள்ள முக்கிய இடங்களிலும் இலங்கையிலுள்ள சீதாவை சிறை வைத்த இராவணக் கோட்டையிலும் மற்றும் மலேசியாவிலும் நடைபெற இருக்கிறது.
இந்தப் படத்தின் பூஜை நிகழ்வும், படப்பிடிப்பும் நேற்று காலை சென்னையில் உள்ள சீதா ஹவுஸில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் படத்தில் நடிகர், நடிகைகள், தொழில் நுட்பக் கலைஞர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
ஒலிப்பதிவு – மாட்ஸ், இசை – அருணகிரி இவர் ‘சண்டி வீரன்’, ‘கோலி சோடா’, ‘கடுகு’ போன்ற படங்களுக்கு இசை அமைத்தவர். பாடல்கள் – அருண் பாரதி, படத் தொகுப்பு – எல்.கே.வி.தாஸ், இவர் ‘மைனா’, ‘கும்கி’, ‘தொடரி’ போன்ற படங்களில் படத் தொகுப்பாளராகப் பணியாற்றவர். சண்டை இயக்கம் – எஸ்.ஆர்.முருகன் நடனம் – ரேகா, தயாரிப்பு நிர்வாகம் – எஸ்.வி. சந்துரு, மக்கள் தொடர்பு – பெருதுளசி பழனிவேல், தயாரிப்பு – திருமதி. மஞ்சுளா, கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – ஆர்.குழந்தை ஏசு.