கோலிவுட்டின் ‘’மார்க்கண்டேயி’ என்ற பெயரெடுத்த. 17 வருடங்களை கடந்தும் அரை டஜன் படங்களுடன் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் த்ரிஷா. அவரது நடிப்பில் ‘96’, ‘சதுரங்க வேட்டை-2’, ‘மோகினி’, ‘கர்ஜனை’ `1818′ உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இதில் `மோகினி’ படத்தை ஆர்.மாதேஷ் இயக்கி இருக்கிறார். இவர் ஷங்கரிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர். மேலும் விஜய் நடித்த `மதுர’ படத்தை இயக்கியவரும் இவர் தான். ஹாரர் த்ரில்லர் படமாக உருவாக்கி உள்ள இந்த படத்தை சிங்கம் 2 படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது.. கதாநாயகி த்ரிஷாவோடு யோகி பாபு, சுகன்யா, கவுசல்யா, முகேஷ் திவாரி, சாமிநாதன், கணேஷ் உள்பட பலர் நடிக்கிறார்கள். இசை-விவேக் மெர்வின். இவர் ‘புகழ்’ படத்தின் இசையமைப்பாளர். ஒளிப்பதிவு -ஆர்.பி.குருதேவ், படத் தொகுப்பு தினேஷ் பொன்ராஜ் மேற்கொள்கிறார். இப்படம் படம் வரும் 27-ம் தேதி வெளிவர விருக்கும் சூழலில் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது இதில் நாயகி த்ரிஷா , இயக்குனர் மாதேஷ் , தயாரிப்பாளர் லட்சுமன் , நகைச்சுவை நடிகர் சுவாமிநாதன் , கணேஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதில் இயக்குநர் மாதேஷ் பேசிய போது, “இந்த படத்தை மிகப் பிரமாண்டமான படமாக உருவாக்கி யுள்ளோம். படத்தில் நாயகி த்ரிஷா சிறப்பாக நடித்துள்ளார். த்ரிஷா நினைத்திருந்தால் கமர்ஷியல் கதாபாத்திரத்தில் நடித்திருக்கலாம். ரொமாண்டிக் காட்சிகளில் நடித்துவிட்டு அழகாக சென்றிருக் கலாம். ஆனால் இந்த படத்தில் சிரமப்பட்டு நடித்திருக்கிறார். இந்த படத்தில் நிறைய எமோஷன்ஸ் காட்சிகள் குடும்பத்தை கவரும் வகையில் இருக்கும். இது ஹாரர் படமாக இருந்தாலும் வழக்க ன படமாக இருக்காது. படத்தில் எபி ஜெனெடிக்ஸ் என்ற கான்செப்ட் உள்ளது. டிஎன்ஏ தொடர்பு பற்றிய விஷயங்கள் தான் படத்தின் முக்கியமான விஷயம்.
இப்படத்தின் vfx காட்சிகள் லண்டனில் எடுக்கப்பட்டது. இப்படம் தமிழகத்தில் வெளியாவது போல் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவிலும் அதிக அளவிலான திரையரங்குகளில் வெளியாகுகிறது. படத்தில் த்ரிஷா நிறைய சண்டை காட்சிகளில் டூப் இல்லாமல் நடித்துள்ளார். படத்தில் சோட்டானிக்கரை கோவிலில் நாங்கள் கண்ட உண்மையான விஷயங்களை கிளைமாக்ஸ் காட்சிகையாக உருவாக்கியுள்ளோம்” என்றார் இயக்குநர் மாதேஷ்.
நாயகி த்ரிஷா பேசிய போது, “ நான் இப்படத்தில் மோகினி மற்றும் வைஷ்ணவி என்ற இரண்டு கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். நான் முதன் முதலில் நடித்துள்ள இரட்டை கதாபாத்திரம் இது தான். இரண்டு கதாபாத்திரத்தில் இரண்டுமே என் ஃபேவரைட்டு கதாபாத்திரங்களாக இருந்தாலும் சவாலானது ‘மோகினி’தான். படத்தில் ஆக்ஷனுக்காக பல ஸ்டன்டுகளை டூப் இல்லாமல் நடிச்சிருக்கேன். பொதுவாக பேய் படங்கள் என்றால் எனக்கு அதிக விருப்பம். எனக்கு பேய் நம்பிக்கை உண்டு. அதேபோல் பேய் பயமும் அதிகம்.
’96’, ‘சதுரங்கவேட்டை 2’ படங்களில் நான் நடிப்பது சாதாரண ஹீரோயின் ரோல்தான். அதெல்லாம் பெரிய ஹீரோ படங்களளும்கூட. கதை நல்லா இருக்கும் பட்சத்தில் கதாநாயகி பிரதானமாக இருக்கும் கதைகளைத் தேர்ந்தெடுப்பேன். கதை நல்லா இருந்தா இன்னொரு பேய் படம்கூட கண்டிப்பா பண்ணுவேன். ஹாரர் படங்கள் இன்னிக்கு ஒரு மினிமம் கியாரண்டி படமா இருந்து வருகிறது. எல்லோரும் அதை பார்க்க நினைக்கிறார்கள்” என்றார்.
மேலும் பேசிய அவர், “தினம் தினம் காலை எழுந்து செய்திதாளை படித்தால் அதில் குழந்தைகளுக்கு நடக்கும் அநீதிகள் பற்றி தான் செய்தி அதிகமாக உள்ளது. அந்த செய்திகளை படிக்கும் போது மனதுக்கு வருத்தமாக உள்ளது. அந்த செய்தியை படித்த நாள் முழுவதும் நமக்கு அதை பற்றிய நினைப்பு தான் இருக்கும். மோகினி படத்திலும் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு நடக்கும் அநீதிகளை பற்றிய பல விஷயங்களை பேசியுள்ளோம். இப்படத்தில் குடும்பத்தோடு அனைவரும் வந்து பார்க்கும் வகையில் நிறைய விஷயங்கள் உள்ளது. படத்தை நாங்கள் லண்டன் , பாங்காக் போன்ற இடங்களில் படமாக்கியுள்ளோம்” என்றார் த்ரிஷா..