கலகலப்பு 2 – திரை விமர்சனம்- 2 மட்டும் இருக்குது!

0
389

இயக்கம் சுந்தர் சி

நடிப்பு: ஜீவா, ஜெய், சிவா, கேத்தரின் தெரசா, நிக்கி கல்ராணி.

சுந்தர் சி மசாலா என தனி ஃபார்முலா ஒன்று அதில் அச்சுப்பிசகாமல் வந்திருக்கும் படம் தான் கலகலப்பு 2. ;கலகலப்பு ஒன்றின் கதையை அப்படியே கொஞ்சம் மெருகேற்றி பிரமாண்டம் சேர்த்து பெரிய நடிகர் பட்டாளத்தை கூட்டி வந்திருக்கிறார்.

சிந்தர் சி யின் குறி எப்போதும் சி செண்டர்தான். அந்த ஆடியன்ஸை மகிழ்வித்தால் போதும் என்பதில் தெளிவாக இருக்கிறார். கவர்ச்சி, காமெடி, இரட்டை வசனங்கள் எல்லாம் குவிந்த கலவை. அவரது படங்களில் லாஜிக், நல்ல கதையம்சம், நல்ல படம் என ஏதாவது எதிபார்த்தால் வேறு கடையை பார்ப்பது நல்லது.

கலகல்ப்பு போலவே இதில் மேன்சன் ஒன்றை நடத்தி வருகிறார் ஜீவா. மேன்சனின் ஒரிஜினல் ஓனர் ஜெய் மேன்சனை கைப்பற்ற வர அவரை ஏமாற்றுவதில் முதல் பாதியும் இருவரும் சேர்ந்து தங்களை ஏமாற்றிய சிவாவை பிடிக்கப்போய் வேறு பல சிக்கலில் மாட்டிக்கொள்வதில் இரண்டாம் பகுதியும் செல்கிறது. கதையாக எதையும் சொல்லாமல் ஒவ்வொரு காட்சிக்கும் ஒரு காமெடி என வேலை பார்த்திருக்கிறார்கள். கட்சிகள் அனைத்துமே பல படங்களில் பார்த்துப் புளித்துப்போன பழைய காட்சிகள் தான். ஆனாலும் சிரிக்க வைக்க முயன்றிருக்கிறார்கள். ஆனால் முதல் பாதி  முழுதுமே எரிச்சல் தான் வருகிறது. இரண்டாம் பாதியில் உண்மையிலேயே சில இடங்களில் சிரிக்க முடிகிறது.

ஜீவாவிற்கு பெரிய நடிப்பெல்லாம் இல்லை. ஜெய் , சிவா என எல்லோருக்கும் பெரிய பாத்திரங்கள் இல்லை. இவர்கள் தவிர இன்னும் பெரிய நட்சத்திர பட்டாளமே இருக்கிறது. எல்லொருக்கும் ஒரு காமெடி பிரித்து கொடுத்திருக்கிறார்கள். காட்சிகள் அதிக பிரமாண்டம் தெரிகிறது. காசியை கலர்புல்லாக காட்டியிருக்கிறார்கள். கவர்ச்சியும் காமெடி தவிர்த்து படத்தில் ஒன்றுமில்லை. பாடல்கள் எதுவும் ஒட்டவில்லை.

காமெடியும் வரவர குறைந்து கொண்டே வருகிறது. சுந்தர் சி தன்னை சரிபார்த்துக்கொள்ள வேண்டிய நேரம்.

கலகலப்பு 2  – கலகலப்பு குறைச்சல். அதே சமயம் ரெண்டு மட்டும் இருக்குது.. அது என்னான்னு தியேட்டருக்கும் போய் பார்த்துக்கலாம்

 கதிரவன்