கவர்ச்சி நடிகை சில்க் மாதிரி பெண்ணை ஆன்லனில் தேடும் பார்த்திபன்!

பார்த்திபன் இயக்கி நடித்து தயாரித்து 1993-ல் வெளியான படம் ‘உள்ளே வெளியே’ ஆபாச வசனங்கள் நிறைந்த. கவர்ச்சிப் படம் என்று கடும் கண்டத்தைச் சந்தித்தது. ஆனால் சமீப காலமாக பல முன்னணி ஹீரோக்களின் பாடல்களிலேயே சர்வசாதாரணமாக கெட்ட வார்த்தை இடம் பெற்று அதுவும் ஹிட் அடிக்கும் சூழலில் தன் உ.வெ. படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க முடிவு செய்துள்ளார் பார்த்திபன். இந்தப் படத்தின் தயாரிப்பாளரைத் தேடித்தான் மலேசியா சென்றாராம். இது குறித்து பார்த்திபன் தனது ட்விட்டர் பக்கத்தில் . “மலேசிய நாட்டிற்கோர் நற்செய்தி! தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் நடக்கும் விழாவுக்கும், எனது அடுத்த படமான ‘உள்ளே வெளியே 2’ படத்திற்கான தயாரிப்பாளர்களை உறுதி செய்யும் பணிக்காகவும் மலேசியா வருகிறேன். சந்திக்க விரும்புபவர்கள் தொடர்பு கொள்ளலாம்” என தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார்.

இதனிடையே தற்போது உள்ள சூழ்நிலையில், இணையதளம் சினிமா உலகில் முக்கிய இடம் பிடித்து வருகிறது. ஒரு ஹீரோ மற்றொரு ஹீரோவுக்கு வாழ்த்து தெரிவிப்பது, நடிகைகள் தங்களுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வாய்ப்பு தேடுவது, இயக்குனர்கள் நடிகர் நடிகைகளை இணைய தளத்தில் தேடுவது என கோலிவுட் புதிய டிரென்ட்டாகி வருகிறது.

இந்நிலையில், தனது உள்ளே வெளியே 2ம் பாகத்தில் நடிக்கும் நட்சத்திரங்களையும் ஆன் லைன் மூலம் தேடி வருகிறார். இது குறித்து தனது ட்விட்டரில் அவர் வெளியிட்டுள்ள தகவலில்,

‘2.

0.

1.

8-ன்

18-ல் துவங்கும் ‘உள்ளெ வெளியே’

18-ற்கான commercial comedy thriller

படத்திற்கு

18-வயதில் அமைதி+வசீகரமான

பெண்ணும்,

28-வயதில் கவர்ந்திழுக்கும் சிலுக்கு

பெண்ணும்,

38-வயதில் இளம் பெண்ணின் அழகிய

அம்மாவும் தேவை! புகைப்படத்துடன் அணுக-ரம்யா 044-43523255/9092728965

என்று பதிவிட்டு  தேடுதல் வேட்டை தொடங்கி இருக்கிறார். இந்த ‘உள்ளே வெளியே’ படத்தின் முதல் பாகத்தை கடந்த 1993ம் ஆண்டு பார்த்திபன் இயக்கினார். அதில் இடம் பெற்ற இரட்டை அர்த்த வசனங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது குறிப்பிடத்தக்கது.