மிகச்சிறந்த இந்தியப் படங்கள் – முதல் இடம் பிடித்தது ‘விக்ரம் வேதா’

0
460

 IMDb இணையதளத்தின் 2017 ஆண்டின் சிறந்த 10 இந்தியப் படங்கள் பட்டியலில் ‘விக்ரம் வேதா’ முதல் இடத்தைப் பிடித்திருக்கிறது.

இணையதளங்களில் அனைத்து மொழி படங்களைப் பற்றிய தகவல்களை கொடுப்பதில் முக்கிய மானது IMDb. 2017-ம் ஆண்டிற்கான சிறந்த 10 இந்திய படங்களை வெளியிட்டு இருக்கிறது.

10-வது இடத்தில் மலையாள படமான ‘தி க்ரேட் பாதர்’, 9-வது இடத்தில் ‘மெர்சல்’, 8-வது இடத்தில் இந்திப் படமான ‘ஜாலி எல்.எல்.பி 2’, 7-வது இடத்தில் இந்திப் படமான ‘டாய்லெட்- ஏக் பிரேம கதா’, 6-வது இடத்தில் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் வெளியான ‘தி காஸி அட்டாக்’, 5-வது இடத்தில் இந்திப் படமான ‘இந்தி மீடியம்’, 4-வது இடத்தில் இந்திப் படமான ‘சீக்ரெட் சூப்பர்ஸ்டார்’, 3-வதி இடத்தில் தெலுங்கில் பெரும் வரவேற்பைப் பெற்ற ‘அர்ஜுன் ரெட்டி’, 2-வது இடத்தில் ராஜமெளலியின் ‘பாகுபலி – 2’ மற்றும் முதல் இடத்தில் மாதவன் – விஜய் சேதுபதி நடித்த ‘விக்ரம் வேதா’ என பட்டியலிட்டு இருக்கிறார்கள்.

 தமிழில் பெரும் வரவேற்பைப் பெற்ற ‘விக்ரம் வேதா’ படத்துக்கு IMDb இணையம் முதல் இடத்தைக் கொடுத்திருப்பதால், படக்குழு மிகவும் சந்தோஷத்தில் இருக்கிறது. மேலும் விஜய் நடிப்பில் வெளியான ‘மெர்சல்’ படமும் இடம்பெற்றிருப்பதை, அவருடைய ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.