ஹர ஹர மஹா தேவி வெற்றிப்படத்திற்குப் பிறகு நடிகர் கௌதம் கார்த்திக், இயக்குனர் சந்தோஷ் பி. ஜெயக்குமார் கூட்டணி கடந்த அக்டோபரில் இருட்டு அரையில் முரட்டுக் குத்து படப்பிடிப்பைத் துவங்கியது. இதில் சர்வர் சுந்தரம் மற்றும் சக்கப்போடு போடு ராஜா படத்தில் நடித்த வைபவி ஷாண்டில்யா கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் சந்த்ரிகா ரவி மற்றும் யாஷிகா ஆனந்த் ஆகியோரும் நடித்துள்ளனர். சந்த்ரிகா இந்த படத்தில் பேயாக வருகிறார். யாஷிகா முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
தாய்லாந்தில் முதற்கட்டப் படப்பிடிப்பை முடித்துவிட்டு படக்குழு சென்னைக்குத் திரும்பியது. தற்போது சென்னையில் ஒரு பாடலுக்கான படப்பிடிப்பு நடைப்பெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து மீண்டும் தாய்லாந்திற்கு இறுதிக்கட்டப் படப்பிடிப்பிற்காக இக்குழு செல்ல உள்ளது.
இந்தப்படத்தில் ராஜேந்திரன், கருணாகரன், பால சரவணன், மதுமிதா, மீசைய முறுக்கு புகழ் ஷா ரா ஆகியோரும் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். இசை- பாலமுரளி பாலு. ஒளிப்பதிவு- தருண் பாலாஜி. 2018ஆம் ஆண்டு துவக்கத்திலேயே இருட்டு அரையில் முரட்டுக் குத்து படத்தை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.
Related posts:
ஹாரர் படங்களில் சந்திரமுகிக்கு பின்னர் புது வித திரைக்கதையில் உருவான 'காட்டேரி'..!September 4, 2018
பருத்திவீரன் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்த நடிகர் செவ்வாழை ராசு உடல் நலக்குறைவால் காலமானார்.May 19, 2023
மேரி கிறிஸ்துமஸ் திரையில் ஒரு நாவல் !!January 14, 2024
பெண்களுக்கு எதிரான அநீதிகள் குறித்து பேசும் படம் ‘பென் விலை வெறும் ரூபாய் 999’October 4, 2018
விஜய்சேதுபதி பிறந்த நாளையொட்டி ஒரு லட்சம் ரூபாய் பரிசுப் போட்டிகள்!December 24, 2019