பாலகைலாசம் 2017ம் ஆண்டு நினைவு விருதுகள் விழா!

 பால கைலாசம்  மூன்றாமாண்டு நினைவு விருது வழங்கும் விழா, நேற்று சனிக்கிழமை மாலை சென்னை ரஷ்யன் கல்சரல் சென்டரில் நடைபெற்றது. சமூகத்தின் முன்னேற்றத்துக்காக மீடியாவைப் பயன்படுத்த வேண்டும் என்று விரும்பிய, பால கைலாசத்தின் பெரும் விருப்பத்தையும், நோக்கத்தையும் தற்போது செயல்படுத்தி வரும் ஆளுமைகளுக்கு அவருடைய பெயரில் விருதுகள் வழங்கப்படுகிறது.

அச்சு ஊடகம், உலகளாவிய வலைத்தளம், தொலைக்காட்சி, வானொலி, ஆவணப் படம் ஆகிய துறைகளில் இயங்கும் தனி நபர்கள் அல்லது நிறுவனங்களில் சமூக மாற்றத்துக்காக இயங்குபவர்களைத் தேர்ந்தெடுத்து இந்த விருது வழங்கப்படுகிறது. இந்த விருது பரிசு கேடயத்துடன் 50000 ரூபாய் பரிசுத் தொகையையும் கொண்டது. இந்த 2017-ம் ஆண்டிற்கான பால கைலாசம் நினைவு விருதினை தொலைக்காட்சி பிரிவில் News 18 நிறுவனத்தின் செய்தி ஆசிரியரான குணசேகர் பெற்றார்.

ஆவணப் பட பிரிவில் ‘Ko Ki Pa Lu’ என்கிற ஆவணப் படத்திற்காக ஈஸ்வர் ஸ்ரீகுமாரும், அனுஷ்கா மீனாட்சியும் விருதினைப் பெற்றார்கள்.

இணையத் தளப் பிரிவில் TheWire.in & Scroll.in இணையத் தளத்தின் Ms.Sohini Chattopadhyay  விருதினைப் பெற்றார்.

அச்சு ஊடகப் பிரிவில் இந்தியன் எக்ஸ்பிரஸ் நிறுவனத்தைச் சேர்ந்த ஹரீஷ் தாமோதரன்  விருதினைப் பெற்றார்.

நிகழ்வின் முடிவில் பரிசினை வென்ற ‘Ko Ki Pa Lu’ ஆவணப் படம் திரையிடப்பட்டது.