மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக ரூ.50 லட்சம்! – விஜய் சேதுபதி!

நடிகர் விஜய் சேதுபதி மாணவி அனிதாவின் நினைவாக அரியலூர் மாவட்டத்தில் இருக்கும் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக ரூ.50 லட்சம் வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளார். இது குறித்து விஜய் சேதுபதி ஒரு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது, “செய்தியாளர்களுக்கு வணக்கம், நான் விளம்பர படங்களில் அதிகமாக நடிக்காமல் இருந்தேன். சில விளம்பரங்களை மட்டும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறேன். இப்போது, அணில் ப்ராடெக்ட் (ANIL PRODUCT) விளம்பரத்தில் நடித்துள்ளேன். இந்த விளம்பரப் படத்தில் நடித்ததற்காக எனக்கு கிடைத்துள்ள தொகையில், ஒரு பகுதியை கல்வி உதவித் தொகையாக வழங்க முடிவு செய்துள்ளேன். கல்வியில் பின் தங்கிய மாவட்டமாக அரியலூர் இருக்கிறது. இந்த மாவட்டத்தில் மொத்தமுள்ள 774 அங்கன்வாடிகளுக்கு தலா 5000 ரூபாய் வீதம் முப்பத்து எட்டு லட்சத்து எழுபது ஆயிரம் (38,70,000) ரூபாயும். மேலும், தமிழ்நாட்டில் உள்ள 10 அரசு பார்வையற்றோர் பள்ளிகளுக்கு தலா ஐம்பதாயிரம் வீதம் ஐந்து லட்சம் (5,00,000) ரூபாயும்.

View image on Twitter
 மேலும், தமிழ்நாட்டில் உள்ள 11 அரசு செவித்திறன் குறைந்தோர் பள்ளிகளுக்கு தலா ரூபாய் ஐம்பதாயிரம் வீதம் ஐந்து லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாயும் (5,50,000) மற்றும் அரியலூர் மாவட்டத்தில் உள்ள அரசு உதவிபெறும் ஹெலன் ஹெல்லர் என்கிற செவித்திறன் குறைந்தோர் பள்ளிக்கு ரூ.ஐம்பதாயிரமும் மொத்தம் நாற்பது ஒன்பது லட்சத்து எழுபதாயிரம் ரூபாய் (49,70,000) தமிழக அரசிடம் வழங்க முடிவு செய்துள்ளேன். கல்வியில் பின் தங்கிய மாவட்டமான அரியலூரில் இருந்து அதிக மதிப்பெண் எடுத்து டாக்டராக ஆசைப்பட்டு, அது முடியாமல் உயிர்நீத்த அனிதாவின் நினைவாக இந்தத் தொகையை வழங்குகிறேன்” என்று விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.