பொட்டு படம் விரைவில் வரப் போகுது!

இந்தப் படத்தை ஷாலோம் ஸ்டுடியோஸ் பட நிறுவனம் சார்பில் ஜான்மேக்ஸ், ஜோன்ஸ் இருவரும் இணைந்து தயாரிக்கின்றனர்.  படத்தில் பரத் கதாநாயகனாகவும், கதாநாயகிகளாக நமீதா, இனியா, சிருஷ்டி டாங்கே ஆகியோரும் நடிக்கிறார்கள். நடிகர்கள் தம்பி ராமய்யா, பரணி, நான் கடவுள் ராஜேந்திரன், ஊர்வசி, நிகேஷ்ராம், ஷாயாஜி ஷிண்டே, மன்சூர் அலிகான், ஆர்யன், சாமிநாதன், பாவா லட்சுமணன், பயில்வான் ரங்கநாதன் உள்ளிட்ட பலரும் நடிக்கிறார்கள்.
ஒளிப்பதிவு – இனியன் ஹரீஷ். இசை – அம்ரீஷ். கதை, திரைக்கதை, இயக்கம் – வடிவுடையான். இவர் இதற்கு முன்னதாக தம்பி வொட்டோத்தி சுந்தரம், சவுக்கார்பேட்டை ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.படம் பற்றி இயக்குநர் வடிவுடையான் கூறியதாவது:இந்தப் படத்தில் பரத், சிருஷ்டி டாங்கே இருவரும் மருத்துவ கல்லூரி மாணவர்களாக நடிக்கிறார்கள். மந்திரம், தந்திரம், பில்லி, சூனியம் தெரிந்த  அகோரியாக நமீதா  நடிக்கிறார். இனியா மலைவாசி பெண்ணாக நடித்துள்ளார். முழுக்க முழுக்க மருத்துவ கல்லூரி பின்னணியில் படு பயங்கரமான ஹாரர் படமாக ‘பொட்டு’ உருவாகி உள்ளது.

இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் ஆகி இருக்கிறது. ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ படத்தை தொடர்ந்து அம்ரீஷ் இசையில் உருவாகும் இரண்டாவது படம் இது. படம் விரைவில் வெளியாக உள்ளது என்று கூறினார்.