ட்விட்டர் உள்ளிட்ட சோஷியல் மீடியாவுக்கு குட் பை சொன்னார் சிம்பு!

தமிழ் சினிமாவில் டாப் ஹீரோவாக வலம் வருபவர் சிம்பு. தனக்கே உரிய தனி ஸ்டைல் மூலமாக தமிழ் சினிமாவில் முத்திரை பதித்து வரும் சிம்புவுக்கு ரசிகர்களிம் எக்கச்சக்கம். அதிலும் ஆண் ரசிகர்களை விட பெண் ரசிகைகளே அதிகம் என்னும் அளவுக்கு தனத் திறமை கொண்டவர்.

எத்தனை சர்ச்சைகள் வந்தாலும் அதனால் துவண்டுவிடாத சிம்பு, சமீபத்தில் அவரது அடுத்த படம் குறித்த அதிரடி அறிவிப்புகளை அவரது டுவிட்டர் பக்கத்தில் தொடர்ந்து தெரிவித்து வந்தார். அதேநேரத்தில் தனது பொது கருத்துக்களையும் பகிர்ந்து வந்தார். அதேநேரத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து சமீபத்தில் வெளியேறிய ஓவியாவுக்கு ஆதரவாக சிம்பு கருத்து தெரிவித்து வந்தார்.

அவரது கருத்தினை சிலர் தவறாக பயன்படுத்தினர். தன்னைப் பற்றிய தவறான கருத்துக்கனை பகிர வேண்டாம் என்று கோரிக்கை விடுத்திருந்தார். அப்போதே சமூக வலைதளங்களில் எதிர்மறை எண்ணங்கள் உலாவுவதாக சிம்பு கூறியிருந்தார். இந்நிலையில் பேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட முக்கிய சமூக வலைதளங்களில் இருந்து தான் வெளியேறுவதாக சிம்பு அறிவித்திருக்கிறார்.

.இது குறித்து சிம்பு, “எதிர்மறை எண்ணங்கள் இருந்தாலும், நேர்மறை சிந்தைதான் எனது வலிமையே. ஆனால் இன்றைய சமூக ஊடகத்தில் எதிர்மறை எண்ணங்களே ஆதிக்கம் செலுத்துகின்றன. அதில் ஒரு பங்கு வகிக்க எனக்கு பயமாக இருக்கிறது.

ஒரு நட்சத்திரத்துக்கு சமூக ஊடகம் அவசியம் தான். ஆனால் நான் என் மனம் சொல்வதை கேட்கிறேன். நான் விலகும் முன் சொல்ல விரும்புவது இதுதான், எப்போதும் அன்பைத் தேர்ந்தெடுங்கள்

சுதந்திர தின வாழ்த்துகள்”இவ்வாறு சிம்பு தெரிவித்துள்ளார்.