நயன்தாரா நடிக்கும் ‘அறம்’ படத்தில் ஹாலிவுட் டீம்!!

ஆஸ்கர் விருதிற்கு பரிந்துரை செய்யப்பட்ட  ‘THE PKF – PRAGUE PHILHARMONIA’ இசை குழு, நயன்தாரா நடித்திருக்கும் ‘அறம்’ படத்தில் இணைந்து பணியாற்ற இருக்கின்றது. மிகவும்  பழமை வாய்ந்த இந்த PRAGUE PHILHARMONIA இசை குழு,  ஒவ்வொரு வருடமும் 250 க்கு ம் அதிகமான இசை பதிவுகளை நடத்தி, உலகின் மதிப்பிற்குரிய இசை குழுக்களில் ஒன்றாக திகழ்கின்றது.
மேலும் ‘பாரமௌன்ட்’, ‘சோனி’, ‘லூகாஸ் பிலிம்’ போன்ற தலைச் சிறந்த தயாரிப்பு நிறுவனங்களுடனும், ஆஸ்கர் விருதிற்கு பரிந்துரை செய்யப்பட்ட ‘லார்ட் ஆப் தி ரிங்ஸ்’, ‘ஹாரி பார்ட்டர்’ மற்றும் ‘கேம் ஆப் த்ரோன்ஸ்’ போன்ற படங்களிலும் இணைந்து பணியாற்றி இருப்பது குறிப்பிடத்தக்கது.
தலை சிறந்த நடிகர் கமல் ஹாசனை போலவே விடா முயற்சியை பின்பற்றி வரும் ஜிப்ரான் தான், அவர் இசையமைத்து வரும்  அறம் படத்திற்கு இந்த இசை குழுவையை தேர்வு செய்தார்.
சமுதாயத்தில் நிலவி வரும் முக்கிய பிரச்சனையை மையமாக கொண்டு உருவாகி இருக்கும் அறம் திரைப்படம், நிச்சயமாக உலக சினிமா பட்டியலில் இடம் பெறும். அதற்கு இந்த பிரம்மாண்ட இசை குழு பக்கபலமாய் இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
தமிழ் படங்களின் தரத்தை உயர்த்துவது என்பது அத்தியாவசமாகிவிட்டது. ‘உத்தம வில்லன்’ படத்திற்காக சர்வதேச விருதுகளை வாங்கி, அந்த பணியை  மிக அற்புதமாக செய்தார், இசையமைப்பாளர்  ஜிப்ரான்.
எங்களின் அறம் படத்தை உலகெங்கும் உள்ள ரசிகர்களிடம் கொண்டு போய் சேர்க்கவும், நம் தமிழ் திரையுலகிற்கு சர்வதேச புகழை தேடி தரவும், தங்களின் பேராதரவை  அளிக்குமாறு அன்போடு கேட்டு கொள்கின்றோம்.” என்று அறம் குழுவினர் கேட்டுக் கொண்டுள்ளனர்,
அடிசினல் தகவல் :

தண்ணீர் பஞ்சத்தில் பரிதவிக்கும் கிராமத்து மக்களுக்காக போராடும், குரல் கொடுக்கும் கலெக்டர் வேடம் இதில் நயன்தாராவுக்கு. படத்தில் நடித்த பின், பெருமைமிகு படத்தில் நடித்த திருப்தி கிடைத்ததாக படக்குழுவிடம் மனம்திறந்து கூறியிருக்கிறார்.

தண்ணீர் பிரச்சனையை மையப்படுத்திய கத்தி படத்தின் கதை என்னுடையது என்று ஆதாரத்துடன் வாதாடி பணத்தால் வாய் அடைக்கப்பட்ட மீஞ்சூர் கோபிதான் அறம் படத்தின் இயக்குனர்.