ஒயிட் ஸ்கிரீன் புரொடக்க்ஷன் கம்பெனி சார்பில் சில்வெஸ்டர் ஆல்பர் ஒயிட் தயாரிப்பில் “அபியின் ரோஸ்” என்ற புதிய தமிழ் திரைப்படத்தை தயாரிக்கப்பட உள்ளது. இத்திரைப்படம் மூலம் M.S. மஹா இயக்குனராக அறிமுகமாகிறார்.
கதை சுருக்கம்:
உலகில் எங்கும் காதல் இருக்கு, தமிழன் காதல் தான் கல்லில் எழுத்து என்பதை மையமாக வைத்து உருவாக்கும் காதல் கதை .
முற்றிலும் புதுமுக நடிகர், நடிகைகள் நடிக்கின்றனர். இப்படத்தின் முக்கிய கதாநாயகி பிரான்ஸ் நாட்டை சேர்ந்த . டிரினிட்டி . இவர் பாண்டிச்சேரியில் பட்டப்படிப்பு பயில்கிறார் மற்றும் மதன் பாப் முக்கிய வேடத்திலும் நாடோடித் தென்றல் கிருபா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் . மேலும் ஸ்ரீ ராம், ககன தீபிகா ,ப்ரீத்தி ,சிந்து மற்றும்பிரான்ஸ் நாட்டு இசை கலைஞர்கள் இதில் பங்கேற்கிறார்கள்.
இப்படத்தில் பிரான்ஸ் கலைஞர்கள் அதிகமாக இடம்பெரும் படம் இது. இப்படம் முற்றிலும் பாண்டிச்சேரி அதைச்சுற்றியுள்ள பகுதிகளிலும் பாடல் காட்சிகள் மற்றும் பட காட்சிகளும் பிரான்ஸ் நாட்டில் படமாக்க படஉள்ளது.
அறிமுக இசையமைப்பாளர் ஷாஜீதனராஜ் இசையில் இனிமையான ஆறு பாடல்கள் இடம்பெறுகிறது.பாடகர்கள் ரஞ்சித், நரேஷ் ஐயர் மற்றும் புதுமுக பாடகி சோபியா , ஸ்ரீ ராம் ஆகியோர்கள் இதில் பாடியுள்ளனர்.
தொழிற்நுட்ப கலைஞர்கள்:
எழுத்து & இயக்கம்: M.S. மஹா
வசனம்: மாதவன்
இசை: ஷாஜீதனராஜ்
படத்தொகுப்பு : வாசு
நடனம் : ராதிகா
சண்டை பயிற்சி : ‘மெட்ரோ’ மகேஷ்
பாடல்கள் : விவேகா, சந்திரசேகர்
தயாரிப்பு நிர்வாகம் : A. எட்கர் போஸ்
மக்கள் தொடர்பு : செல்வரகு
தயாரிப்பு : சில்வெஸ்டர் ஆல்பர் ஒயிட்
Related posts:
நயன்தாரா உடைய அடுத்த படத்தில் இணையும் கவின்October 7, 2021
பிக்பாஸ் புகழ் நடிகை ஐஸ்வர்யா தத்தா ஆல்பம்!February 27, 2021
பாலா இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் & ஜோதிகா நடிக்கும் “நாச்சியார்” பட பூஜை ஆல்பம்!March 1, 2017
ஹிப் ஹாப் தமிழா ஆதியின் “Return Of The Dragon” இசைக்கச்சேரி அறிவிப்பு வெளியானது!August 26, 2024
கனடாவில் தயாரிப்பு நிறுவனம் தொடங்கிவைத்த ஏ.ஆர்.ரகுமான்February 4, 2017