விஜய் ஊமை குசும்புக்காரர்..!

விஜய் ஒரு மூடி டைப், அவர் ஸ்பாட்ல யார்கிட்டயுமே பேசமாட்டார் என்பது போல தான் செய்திகள் வரும். ஆனால் விஜய் அதற்கு நேர் எதிர் கேரக்டர். ஆமாம் விஜய் போல கலாய்க்க யாராலும் முடியாது. ஒரு நக்கல் கமெண்டை நச்சென்று அடித்துவிட்டு நைஸாக நகர்ந்துவிடுவார்… அந்த அளவுக்கு ஊமை குசும்புக்காரர். அந்த அனுபவங்களில் சில…

சத்யன்

நண்பன் பட ஷூட்டிங்ணா…விஜய் சார், ஜீவா சார், ஸ்ரீகாந்த் சார்னு எங்க எல்லாரையும் ஜட்டியோட ஷேம், ஷேமா நிக்க வெச்சு ரேக்கிங் பண்ணுவாங்கள்ல அந்த ஸீனோட ஷாட்டுங்ணா… ஷாட் எடுத்தது மிட்நைட்ல. அது ஒரு குளிர் சீஸன். உடம்புல ஒட்டு துணி கூட இல்லாம ஜட்டியோட நிக்கணும். எப்படி இருக்கும் நினைச்சு பாருங்க. ஷாட் எடுக்கும்போது விஜய் சார், ஜீவா சார், ஸ்ரீகாந்த் சார்லாம் ஜட்டியோட நிப்பாங்க. ஷாட் முடிஞ்சதும் துண்டு எடுத்து போத்திக்குவாங்க. ஏன்னா ஆம்பளை, பொம்பளைகனு சுமாரா 200 பேர் ஸ்பாட்ல இருப்பாங்களா…அதனால வெட்கம். ஆனா ஸ்பாட்லயே ஒரே ஒரு ஜீவன் மட்டும் ஷாட் முடிஞ்சப்புறமும் கூட என்னவோ சிக்ஸ் பேக் சிங்கம் மாதிரி ஜட்டியோடயே உலாத்திகிட்டு இருந்துச்சு. அதுவும் அது வெள்ளை சிங்கம் வேறயா? பளபளனு கிட்டத்தட்ட ஷகிலா மாதிரி தனியாத் தெரியுது. அந்த வெட்கங்கெட்ட ஜீவன் வேற யாருமில்ல. நான் தான். என்னை பார்த்த விஜய் சார் என்கிட்ட வந்து ‘‘சத்யன் நீ பண்றது உனக்கே நல்லாருக்கா? இத்தனை பேருக்கு மத்தில இப்படியே இருக்கீயே, உனக்கு வெட்கமா இல்லையா?’’னு கேட்டாரு. நான் அதுக்கு ‘‘அண்ணா… நான் சினிமால நடிக்கறதுக்காக ஊர்லேர்ந்து மூட்டை, முடிச்சு கட்டிட்டு கிளம்பும்போதே நாலு நரம்பை கட் பண்ணி வீட்டுலயே வெச்சுட்டு வந்துட்டேன். அந்த நாலும் எது எதுன்னா வெட்கம், மானம், சூடு, சொரணை.’’ அப்படினுட்டு நம்மளோட அக்மார்க் சிரிப்பை விட்டேன். அவரு உடனே ‘டேய், உனக்கு இருக்காது. எங்களுக்கு இருக்கே… கண்ணு கிண்ணு எங்களுக்கு அவிய்ஞ்சுபோச்சுன்னா?’’ அப்படின்னதும் தான் நான் துண்டை எடுத்து போத்திகிட்டேன். அதுலேர்ந்து விஜய் சார் எங்கே என்னை பார்த்தாலும் ‘‘என்ன அந்த நாலு நரம்புகளும் பத்திரமா இருக்கா?’’ன்னு கேட்பாரு.

சதீஷ் – அவர் இன்னமும் கலாய்க்கிற ஒரு சம்பவம் நடந்துச்சு. கத்தி ஷுட்டிங்ல என்னை முருகதாஸ் சார் அவர்கிட்ட அறிமுகம் பண்ணி வெச்சார். அப்ப நான் இருந்த நெர்வஸ்ல என்னை பேசறதுன்னே தெரியலை. ஹாய்..ஹௌ ஆர் யூ?னு கேட்டார் விஜய். நான் பதட்டத்துல ‘’யா யூ ஃபைன். ஹௌ ஈஸ் மீ?’’னு உளறிட்டேன். அவர் சிரிச்சுட்டார். சதீஷ் இப்படிலாம் உளறுனீங்கனா டயலாக் எப்படி சொல்வீங்கனு கலாய்க்க ஆரம்பிச்சுட்டார். இன்னமும் என்னை பார்த்தா ஹௌ ஆர் யூ?னு கேட்டு சிரிப்பார்.