விக்ரம் திரை விமர்சனம் !

விக்ரம் திரை விமர்சனம் !

இயக்கம் - லோகேஷ் கனகராஜ் நடிகர்கள் - கமல்ஹாசன், பகத் பாசில், விஜய் சேதுபதி. தொடர்கொலைகளை விசாரிக்க நியமிக்கபடும் அதிகாரி, அந்த கொலைகளை பற்றி விசாரிக்கையில் அதுகொலைகள் இல்லை ஒரு போரின் அடித்தளம் என்பதை கண்டுபிடிக்கிறார். அந்த கொலைகளை செய்ததுயார்? ஏன் செய்தார்கள்? என்பதை திருப்பங்களுடன் சொல்வதே விக்ரம். கமல்ஹாசன் இப்படிபட்டவர், விக்ரம் 1986ல், கைதியில், என இழுத்தடிக்காமல், சுற்றலுக்கு செல்லாமல்விக்ரம் என்ற திரைப்படத்துடைய விமர்சனத்தை மட்டும் பார்க்கலாம். படத்தின் முக்கியமான இரண்டு சிறப்பம்சம் கமல்ஹாசன், பகத் பாசில் என்ற இரு நடிகர்களும் படம் முழுவதும்தெரியவில்லை. விக்ரம், அமர் என்ற கதாபாத்திரம் மட்டுமே தெரிகின்றது. இதுவே ஒரு நடிகனின் மிகப்பெரியசாதனை தான். யார் கொலை செய்வது? எங்கே பொருள்? இந்த இரண்டு கேள்விகளை நோக்கியே திரைக்கதைநகர்த்தப்பட்டுள்ளது. இதுபோக கதையின் கதாபாத்திரங்களுக்கு நிகழும் சொந்த பிரச்சனைகளுடன்நகர்வதாய் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. ஒரு நேர்த்தியான திரைக்கதை ஆசிரியர் மிகவும் நுட்பமாகயோசித்து வைக்கும் ஐடியா தான் இந்த…
Read More
திரைக்கதையில் என்னுடைய பங்களிப்பும் உள்ளது –  கமல்ஹாசன்

திரைக்கதையில் என்னுடைய பங்களிப்பும் உள்ளது – கமல்ஹாசன்

நடிகர் கமல்ஹாசன் பிரான்சில் நடைபெற்று வரும் கேன்ஸ் திரைப்பட விழாவில் ஊடகம் ஒன்றிற்கு இன்று அளித்த பேட்டி ஒன்றில், “லோகேஷ் கனகராஜ் முதலில் படத்தின் ஒரு வரி கதை சொன்னபோதே பிடித்துவிட்டது. அதன்பிறகு லோகேஷ் கனகராஜ் தன்னுடைய வழக்கமான பாணியில் கதையை டெவலப் செய்தார். திரைக்கதையில் என்னுடைய பங்களிப்பும் உள்ளது. சூர்யாவின் கதாபாத்திரத்திற்காக கடைசி நேரத்தில் தான் அவருக்கு அழைப்பு விடுத்தோம் ஆனால், அவர் உடனே ஒத்துக்கொண்டு இந்தப் படத்தில் நடிச்சுக் கொடுத்தார். அவருடைய கதாபாத்திரம் தான் 'விக்ரம்' படத்தின் மூன்றாம் பாகத்திற்கான ஒரு தொடக்கமாக அமையும்” என்று கூறினார். இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, பகத் ஃபாசில் என திறமையான நடிகர்கள் இருக்கும்போது உங்களுக்கு போட்டி இருக்கும் என்று நினைக்கிறீர்களா? என்ற கேள்விக்கு பதிலளித்த கமல்ஹாசன், "நிச்சயமாக திறமையானவர்கள் யார் என்னுடன் நடித்தாலும் அவர்களை என்னுடைய போட்டியாக தான் பார்ப்பேன்” அப்படீன்னு கூறினார். பழைய 'விக்ரம்' படத்திற்கும் இந்தப் படத்திற்கும்…
Read More
“விக்ரம்”படத்தின் உரிமையை கைப்பற்றிய ரெட் ஜெயன்ட் மூவீஸ் !

“விக்ரம்”படத்தின் உரிமையை கைப்பற்றிய ரெட் ஜெயன்ட் மூவீஸ் !

உலக நாயகன் கமல்ஹாசனின் “விக்ரம்”படத்தின் தமிழக திரையரங்கு விநியோக உரிமையை கைப்பற்றிய ரெட் ஜெயன்ட் மூவீஸ் உலக நாயகன் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பஹத் பாசில் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் படம் "விக்ரம்". பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். கமல்ஹாசன், R. மகேந்திரன் இணைந்து மிகப் பிரம்மாண்டமாக தயாரித்திருக்கும் இப்படம் ஜூன் 3 அன்று வெளியாக உள்ளதாக முன்னரே அறிவிப்பு வெளியானது. தற்போது விக்ரம் படத்தின் தமிழக திரையரங்கு விநியோக உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவீஸ் கைப்பற்றியுள்ளது. தமிழ் திரையுலகின் பெருமைமிகு திரைப்படமாக உருவாகும் விக்ரம் படத்துடன் கைக்கோர்ப்பதில் மகிழ்ச்சி என ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம் தயாரிப்பு - கமல்ஹாசன், R.மகேந்திரன் (ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல்) இயக்கம் - லோகேஷ் கனகராஜ் இசை - அனிருத் சண்டை பயிற்சி - அன்பறிவு ஒளிப்பதிவு -…
Read More
மகான் – விமர்சனம்!

மகான் – விமர்சனம்!

இயக்கம் - கார்த்திக்சுப்புராஜ் நடிகர்கள் - விக்ரம், துருவ், பாபி சிம்ஹா இரண்டு சிந்தாந்தங்களுக்கு இடையேயான சண்டை தான் மகான். தன்னுடைய சுய விருப்பத்தின் படி ஒரு வாழ விருப்பபடும் நாயகன், அதனால் தன் குடும்பத்தின் கோபத்திற்கு ஆளாகி, தனியாளாக மாற நேரிடுகிறது. அதன் பின் அவனது வாழ்கையில் நிகழும் சம்பவங்கள் தான் கதை. ஆழமான கதையோட்டத்தில் உருவாக்கபட்ட திரைக்கதை. காந்திய சிந்தாந்தங்களில் தான் நீ வாழ்ந்தாக வேண்டும் என்ற கட்டாயம் ஒரு பக்கம், எனக்கு விருப்பமான தவறுகள் நிறைந்த வாழ்கையை வாழவிடாமல் என்னை தடுக்காதீர்கள் என்ற சுதந்திரம் ஒரு பக்கம் என இருமுனைகளின் போராட்டத்தை கதைகளமாக எடுத்ததற்கு இயக்குனரை கண்டிப்பாக பாராட்டவேண்டும். படத்தின் அடிநாதம் அழகாய் அமைந்திருந்தாலும், திரைக்கதையில் கோட்டைவிட்டு இருக்கிறார்கள் படக்குழு. பல காட்சிகள் வெறுமனே ஓடுவது போல் உள்ளது. ஒவ்வொரு காட்சிகளுக்கும் ஆழமான தேவை இருக்கிறது, ஆனால் அது எதுவும் திரையில் வரவில்லை. மிகப்பெரிய சிந்தாந்த போராட்டமாக…
Read More
விக்ரம் ‘சீயான்’ ஆக மாற உதவிய சேது படத்தின் போராட்டக் கதை!

விக்ரம் ‘சீயான்’ ஆக மாற உதவிய சேது படத்தின் போராட்டக் கதை!

விக்ரம் நடிச்ச சேது இதே டிசம்பர் 10ல்தான் ரிலீஸாச்சு அதை ஒட்டி நம்ம கட்டிங் கண்ணையா அனுப்பி இருக்கும் சேது பட தயாரிப்பின் ஃபிளாஷ் பேக் ஸ்டோரி சேது 1999 ஆம் ஆண்டு வெளியான தமிழ் மொழி காதல் நாடகத் திரைப்படமாகும், நீண்ட காலமாக திரையுலகில் தன்னை நிரூபிக்க கடினமாக போராடிக் கொண்டிருந்த விக்ரமுக்கு தமிழ் சினிமாவுலகில் ஒரு தனி அடையாளத்தைக் பெற்றுத் தந்த திரைப் படம் இந்த சேது.அதேபோல் இயக்குநர் பாலுமகேந்திராவிடம் உதவி இயக்குநராக இருந்த பாலா இயக்கிய முதல் திரைப்படமும் சேது தான். தன்னை எந்தளவுக்கும் வருத்திக்கொள்ளக் கூடிய இன்னொரு நடிகனாகவே இருந்த விக்ரம் தனது சினிமா வாழ்க்கையின் முதல் வெற்றியை ருசித்த படமிது . இந்த ஒரு வெற்றிக்காக விக்ரமின் காத்திருப்பு என்பது பெரிய பகீரத பிராயத்தனம். தன்னுடைய முதல் படத்தில் இருந்து பல தோல்விகளைச் சந்தித்த விக்ரம், கடைசி வாய்ப்பாக தன் கையில் எடுத்தது ‘சேது’ படத்தைதான்…!…
Read More
பிரமாண்டமான பாடல் வெளியீட்டு விழாவுக்கு தயாராகும்  விக்ரமின் ’ஸ்கெட்ச்’!

பிரமாண்டமான பாடல் வெளியீட்டு விழாவுக்கு தயாராகும் விக்ரமின் ’ஸ்கெட்ச்’!

கலைப்புலி எஸ்.தாணுவின் வி கிரியேசன்ஸ் வழங்க மூவிங் பிரேம் பட நிறுவனம் சார்பில் மிக பிரமாண்டமாக தயாராகும்  படம் “ ஸ்கெட்ச் “. விக்ரம் நாயகனாக நடிக்கிறார். நாயகியாக தமன்னா நடிக்கிறார்.  மற்றும் சூரி, ஆர்.கே.சுரேஷ், அருள்தாஸ், மலையாள நடிகர் ஹரீஷ், ஸ்ரீமன், மதுமிதா,  விஷ்வாந்த், பாபுராஜா, வினோத், வேலராமமூர்த்தி, சாரிகா  ஆகியோர் நடிக்கிறார்கள். இவர்களுடன் முக்கிய வேடத்தில் பிரியங்கா நடிக்கிறார். படம் பற்றி கூறிய இயக்குனர் விஜய் சந்தர்....”வட சென்னையை பின்னணியாக கொண்டு உருவாகும் இந்த படம் புது மாதிரியான ஒரு உணர்வை ஏற்படுத்தும். வட சென்னையில் பாமரர்கள், ஏழைகள் மட்டுமல்ல, படித்த டாக்டர்கள், வக்கீல்கள் என்று உயர்மட்ட மக்களும் இருக்கிறார்கள் என்கிற ஸ்டைலிஷ் படமாக ‘ஸ்கெட்ச்‘ உருவாகி வருகிறது. பரபரப்பான ஆக்‌ஷன் படமாகவும் ‘ஸ்கெட்ச்’ தயாராகி வருகிறது” என்றார்   இப் படத்திற்காக சென்னையில் மிக பிரமாண்டமான அரங்குகள் அமைக்கப்பட்டு “ அச்சி புச்சி ஸ்கெட்சு  “ என்ற பாடல்…
Read More
ஸ்கெட்ச் ஷூட்டிங் முடிந்தது!

ஸ்கெட்ச் ஷூட்டிங் முடிந்தது!

வி கிரியேசன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ். தாணு மற்றும் மூவிங் பிரேம் பட நிறுவனம் தயாரிப்பில் பிரமாண்டமாக உருவாகி வரும் படம் `ஸ்கெட்ச்'. விஜய் சந்தர் இயக்கத்தில் விக்ரம் - தமன்னா இணைந்து நடிக்கும் இப்படம் வடசென்னை பின்னணியில் ஆக்ஷன் கலந்த ஸ்டைலிஷ் படமாக உருவாகி வருகிறது. இப்படத்தில் முக்கிய வேடத்தில் ஸ்ரீ பிரியங்கா நடிக்கிறார். இவர்களுடன் சூரி, ஆர்.கே.சுரேஷ், அருள்தாஸ், மலையாள நடிகர் ஹரீஷ், ஸ்ரீமன், ரவிகி‌ஷன், விஷ்வாந்த், மாலி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். தமன் இசையமைக்கும் இப்படத்தின் படிப்பிடிப்பு தற்போது முடிந்துவிட்டதாக படத்தின் இயக்குநர் விஜய் சந்தர் அவரது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார். படத்தில் இருந்து ஒரே ஒரு பாடல் மட்டும் ரிலீசாகி இருக்கும் நிலையில், மற்ற பாடல்கள் மீதான எதிர்பார்பார்ப்பு அதிகரித்துள்ளது. விரைவில் போஸ்ட் புரொடக்‌ஷன்ஸ் பணிகள் தொடங்க இருக்கிறது. படம் வருகிற நவம்பர் மாதம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. `ஸ்கெட்ச்' படத்தை முடித்த விக்ரம் `துருவ…
Read More