விஜய்யின் சாதி பெயர் கேட்டால் போராட்டத்தில் இறங்குவேன் ; பொங்கிய எஸ்.ஏ.சந்திரசேகர்

விஜய்யின் சாதி பெயர் கேட்டால் போராட்டத்தில் இறங்குவேன் ; பொங்கிய எஸ்.ஏ.சந்திரசேகர்

'ஒயிட் லேம்ப் புரொடக்சன்ஸ்' தயாரிப்பில் அந்தோணிசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'சாயம்'. விஜய் விஷ்வா கதாநாயகனாக நடித்துள்ள இந்தப்படத்தில் சைனி கதாநாயகியாக நடித்துள்ளார். பொன்வண்ணன், போஸ் வெங்கட், சீதா, இளவரசு, தென்னவன், செந்தி, எலிசெபத், பெஞ்சமின் மற்றும் பலர் நடித்துள்ளனர். சலீம் மற்றும் கிறிஸ்டோபர் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப்படத்திற்கு நாக உதயன் இசையமைத்துள்ளார். முத்து முனுசாமி படத்தொகுப்பை கவனித்துள்ளார். யுகபாரதி, விவேகா, அந்தோனிதாசன், பொன் சீமான் ஆகியோர் பாடல்களை எழுதியுள்ளனர் படிக்கும் மாணவர்கள் மீது சாதி சாயம் பூசுவதால் அவன் வாழ்க்கையே எப்படி திசை மாறுகிறது என்பதை மையப்படுத்தி இந்தப்படம் உருவாகியுள்ளது. இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று காலை சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேபில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் படக்குழுவினருடன் சிறப்பு விருந்தினர்களாக இயக்குனர்கள் எஸ்.ஏ.சந்திரசேகர், ஆர்.வி.உதயகுமார், சாய்ரமணி, ஜாக்குவார் தங்கம், நடிகர் போஸ் வெங்கட், தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்க தலைவர் டி..எஸ்.ஆர் சுபாஷ், நடிகைகள் கீர்த்தனா, கோமல்…
Read More
விஜய் நடித்த  மாஸ்டர் ; அமேசான் ப்ரைம் வீடியோவில் பிப்.29ல் வெளியாகிறது!

விஜய் நடித்த மாஸ்டர் ; அமேசான் ப்ரைம் வீடியோவில் பிப்.29ல் வெளியாகிறது!

சேவியர் ப்ரிட்டோ தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் எழுதி இயக்கியுள்ள இப்படத்தில் தளபதி விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா ஜெரமியா, சாந்தனு பாக்யராஜ், அர்ஜுன் தாஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். தமிழ் ஆக்‌ஷன் த்ரில்லர் திரைப்படமான மாஸ்டர் படத்தின் பிரத்யேக டிஜிட்டல் வெளியீட்டை இந்தியா உள்ளிட்ட 240 நாடுகள் மற்றும் பிரதேசங்களில் உள்ள ப்ரைம் சந்தாதாரர்கள் வரும் ஜனவரி 29 முதல் காணலாம். மும்பை, இந்தியா, 27 ஜனவரி 2021 - அதிகம் எதிர்பார்க்கப்பட்ட தமிழ் ஆக்‌ஷன் த்ரில்லர் திரைப்படமான மாஸ்டர் திரைப்படம் வரும் ஜனவரி 29 அன்று பிரத்தியேக மான டிஜிட்டலில் வெளியாகும் என்று அமேசான் ப்ரைம் வீடியோ இன்று அறிவித்து உள்ளது. மாஸ்டர் திரைப்படத்தில் தளபதி விஜய் மற்றும் விஜய் சேதுபதி இருவரும் நடித்துள்ளனர். இவர்களுடன் மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா ஜெரமியா, சாந்தனு பாக்யராஜ், அர்ஜுன் தாஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். லோகேஷ் கனகராஜ் எழுதி இயக்கியுள்ள…
Read More
மாஸ்டர் – விமர்சனம்!

மாஸ்டர் – விமர்சனம்!

மூன்று நாள்களில் “மாஸ்டர்” உலகெங்கிலும் சேர்த்து 100 கோடி ரூபாய் வசூலித்து இருப்பதாக செய்தி. கொரோனா பொதுமுடக்கத்தால் மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு, திரையரங்குகளில் உச்ச வரிசை நாயகரான விஜய் படம் வெளியாகியிருக்கிறது. பொதுமுடக்க காலத்தின் இழப்புகளாலும் தொடரும் மனஅழுத்தங்களினாலும் “மாஸ்டர்” வந்தால் திரையரங்கில் பார்த்துவிட வேண்டும் என்ற உளவியல்ரீதியான முன்முடிவில் இருந்த மக்கள் படையெடுத்திருக்கிறார்கள். படம் எப்படி இருக்கிறது என்பதைவிட, படத்தை திரையரங்கில் பார்க்கிறோம் என்பதே இன்றைய நிலையில் “பெரிய என்டர்டெயின்மென்ட்” ஆக மாறியிருக்கிறது. கூடவே பொங்கல் விடுமுறை, வணிகரீதியாக போட்டிப் படங்கள் இல்லாதது உள்ளிட்ட காரணங்களால் 100 கோடி ரூபாய் வசூலித்திருப்பதில் வியப்பேதுமில்லை. திரையரங்குகள் வாயிலாக மீண்டும் தமிழ்த் திரைப்பட வர்த்தகம் பொதுமுடக்க காலத்துக்கு முந்தைய நிலையை எட்டும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. அது நிறைவேறியிருக்கிறதா? முன் கள திரை வர்த்தகர்களுக்குத்தான் தெரியும். சரி. படம் எப்படி இருக்கிறது? இது விஜய் படமா அல்லது விஜய் சேதுபதி படமா என்ற…
Read More
‘தளபதி 65’ ; விஜயை இயக்கப் போவது நெல்சந் சன் பிக்சர்ஸ் அறிவிப்பு!

‘தளபதி 65’ ; விஜயை இயக்கப் போவது நெல்சந் சன் பிக்சர்ஸ் அறிவிப்பு!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'மாஸ்டர்'. கரோனா அச்சுறுத்தலால் வெளியீடு தள்ளி வைக்கப்பட்ட இந்தப் படம், அடுத்த ஆண்டு பொங்கல் வெளியீடாகத் திரைக்கு வரவுள்ளது. ‘மாஸ்டர்’ படத்துக்குப் பிறகு, சன் பிக்சர்ஸ் நிறுவனத்துக்குத் தேதிகள் அளித்திருந்தார் விஜய். இதற்காக பல இயக்குநர் கள் தங்கள் கதைகளைக் கூறிவந்தார்கள். இறுதியில் ஏ.ஆர்.முருகதாஸ் கூறிய கதையில் நடிக்கச் சம்மதித்தார் விஜய். அதனைத் தொடர்ந்து முதற்கட்டப் பணிகள் நடைபெற்று வந்தன. இறுதியில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அப்படத்தை இயக்கும் பொறுப்பிலிருந்து விலகினார் ஏ.ஆர்.முருக தாஸ். இதனால், 'தளபதி 65' என்று அழைக்கப்பட்டு வரும் படத்தின் இயக்குநர் யார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. இறுதியில் நெல்சன் திலீப்குமார் கூறிய கதை, விஜய்க்கு மிகவும் பிடித்துவிடவே கூட்டணி உறுதியானது. இதனைத் தொடர்ந்து முதற்கட்டப் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. விஜய் - நெல்சன் திலீப்குமார் கூட்டணியில் உருவாகும் புதிய படத்தைத்…
Read More
நீட் ‘அனிதா’ வீட்டுக்கு போய்  ஆறுதல் கூறிய நடிகர் விஜய்!

நீட் ‘அனிதா’ வீட்டுக்கு போய் ஆறுதல் கூறிய நடிகர் விஜய்!

அரியலூர் மாவட்டம் குழுமூரை சேர்ந்த மாணவி அனிதா, நீட் தேர்வால் டாக்டருக்கு படிக்க முடியாததால் கடந்த 1-ந்தேதி தற்கொலை செய்து கொண்டார். ‘நீட்’ தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கக்கோரி மாநிலம் முழுவதும் போராட்டங்கள் நடந்து வந்த நிலையில், அரியலூர் மாணவி அனிதா தற்கொலைக்குப்பின் இந்த போராட்டங்கள் தீவிரமடைந்து வருகின்றன. பள்ளி-கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள், சமூக ஆர்வலர்கள், அரசியல் கட்சியினர் என பல்வேறு தரப்பினரும் இந்த போராட்டக்களத்தில் குதித்து உள்ளனர். நீட் தேர்வை ரத்து செய்யக் கோரியும், அனிதாவின் மரணத்திற்கு நீதி கோரியும் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நடிகர் விஜய் இன்று காலை அரியலூர் குழுமூரில் உள்ள மாணவி அனிதா வீட்டிற்கு சென்றார். அங்கு அனிதாவின் தந்தை  சண்முகம் மற்றும் உறவினர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் வீட்டில் தரையில் அமர்ந்தபடி சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தார். அப்போது எந்த உதவிகள் வேண்டுமானாலும் செய்து தருவதாக அனிதாவின் குடும்பத்தினரிடம் தெரிவித்தார். பின்னர்…
Read More
விஜய் அட்டகாசமான மேஜிக் மேன்! -மேஜிசியன் சர்டிபிகேட்

விஜய் அட்டகாசமான மேஜிக் மேன்! -மேஜிசியன் சர்டிபிகேட்

அட்லி டைரக்‌ஷனில் விஜய் நடித்துள்ள படம் ‘மெர்சல்’. இந்தப் படத்தில், அப்பா - இரண்டு மகன்கள் என மொத்தம் 3 வேடங்களில் நடித்துள்ளார் விஜய். தீபாவளிக்கு வெளியாகும் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் எகிறிக் கொண்டே வருகிறது. இப்படத்தில் மூன்று வேடங்களில் நடிக்கும் விஜய் மேஜிக் மேனாகவும் வருகிறார். பிரம்மாண்ட பட்ஜெட்டில் எடுக்கப்படும் இப்படத்தில் பல கலைஞர்கள் பணியாற்றியிருக்கிறார்கள். விஜய்யின் மேஜிக் மேன் ரோலுக்காக மூன்று பேர் பிரத்யேகமாக பணியாற்றியுள்ளார்கள். அதில் மாசிடோனியாவைச் சேர்ந்த மேஜிக் நிபுணர் கோகோ ரெக்கியூம் (Gogo Requiem) என்பவர் மேஜிக் விஷயங்களை கற்றுக் கொடுத்துள்ளார். தற்போது அந்த மேஜிசியன் . விஜய்யை புகழ்ந்து ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், “மெர்சல் படம் மூலம் ஜோசஃப் விஜய்யுடன் பணியாற்றும் நல்ல வாய்ப்பு எனக்கு கிடைத்தது. இப்போதைக்கு படத்தைப் பற்றி என்னால் எதுவும் சொல்ல முடியாது. இன்னும் சில மாதங்களில் படத்தை மொத்தமாகப் பார்ப்பீர்கள்.…
Read More
விஜய் நடித்து வரும்  ‘மெர்சல்’ – ஷூட்டிங் ஸ்பாட் அப்டேட்!

விஜய் நடித்து வரும் ‘மெர்சல்’ – ஷூட்டிங் ஸ்பாட் அப்டேட்!

அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் 'மெர்சல்' படத்தில் எஸ்.ஜே.சூர்யா, காஜல் அகர்வால், சமந்தா, நித்யா மேனன், சத்யராஜ், வடிவேலு, யோகிபாபு உள்ளிட்ட பலர் விஜய்யுடன் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரித்து வருகிறது. இப் படத்துக்கு இன்னும் சுமார் 5 நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு இருக்கிறது. அதனைத் தொடர்ந்து ஒரே ஒரு பாடல் மட்டுமே காட்சிப்படுத்த வேண்டியதுள்ளது. இதனால் ஜூலை 31-ம் தேதி நடத்த படப்பிடிப்பின் போது, படக்குழுவினர் அனைவருக்கும் தங்க நாணயத்தை பரிசாக அளித்துள்ளார் விஜய். விரைவில் இறுதிக்கட்டக் படப்பிடிப்பையும், பாடல் படப்பிடிப்பையும் தொடங்க திட்டமிட்டு வருகிறது படக்குழு. அனைத்துப் பாடல்களையும் ஏ.ஆர்.ரஹ்மான் கொடுத்துவிட்டார். இறுதிக்கட்டப் படப்பிடிப்பைத் தொடங்குவதற்கு முன்பாக, படத்தின் எடிட்டிங் பணிகளை முடித்து ஏ.ஆர்.ரஹ்மானிடம் பின்னணி இசைக்கு அளிக்கவும் படக்குழு திட்டமிட்டுள்ளது. இதனிடையே இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமெளலியின் தந்தை விஜயேந்திர பிரசாத். அண்மையில் பிரமாண்ட வெற்றிகண்ட ‘பாகுபலி’ படத்துக்கு திரைக்கதை எழுதியவர் இவர்தான். தற்போது அட்லீ…
Read More