விஜய் சேதுபதி கொடுத்த மாமனிதன் எப்படி இருக்கிறார்?

விஜய் சேதுபதி கொடுத்த மாமனிதன் எப்படி இருக்கிறார்?

மாமனிதன் சீனு ராமசாமி இயக்கத்தில், விஜய் சேதுபதி மற்றும் காயத்திரி நடிப்பில், யுவன் சங்கர் ராஜா மற்றும் இளையராஜா இசையில் உருவான வாழ்வியல் சார்ந்த திரைப்படம். யுவன் சங்கர் ராஜா இப்படத்தை தயாரித்துள்ளார்.   ஒரு நல்ல குடும்பத்தை சேர்ந்த ஒரு நல்லவன் சூழ்ச்சியில் தோற்றுப்போக, அந்த ஊரிலிருந்து அவன் ஓடுகிறான். பின்னர் அவன் தன் குடும்பத்தை காக்க என்ன செய்கிறான் அந்த குடும்பம் என்ன ஆனது என்பதே படம் 3 ஆண்டுகளாக தயாரிப்பில் இருந்த படம் திரைப்பட ஆர்வலர்கள் மத்தியில் ஒரு எதிர்பார்ப்பை உருவாக்கியிருந்தது. யுவன் சங்கர் ராஜா, இளையராஜா முதல் முறை இணைந்து இசையமைத்துள்ள படம் என்பது கூடுதல் சிறப்பு. தோற்றுப்போகும் ஒருவனின் கதையை சொல்லவும் இங்கு ஆள் வேண்டும் அந்த வகையில் தோற்றுப்போனவனின் கதையை தொடர்ந்து சொல்லி வருகிறார் சீனு ராமசாமி. ஏமாற்றுக்காரன் ஓடிப்போவதில்லை நல்ல மனதுக்காரன் மட்டுமே ஓடுகிறான் என்ற ஆழ்ந்த அர்த்தம் நிறைந்த கதையை…
Read More
திரைக்கதையில் என்னுடைய பங்களிப்பும் உள்ளது –  கமல்ஹாசன்

திரைக்கதையில் என்னுடைய பங்களிப்பும் உள்ளது – கமல்ஹாசன்

நடிகர் கமல்ஹாசன் பிரான்சில் நடைபெற்று வரும் கேன்ஸ் திரைப்பட விழாவில் ஊடகம் ஒன்றிற்கு இன்று அளித்த பேட்டி ஒன்றில், “லோகேஷ் கனகராஜ் முதலில் படத்தின் ஒரு வரி கதை சொன்னபோதே பிடித்துவிட்டது. அதன்பிறகு லோகேஷ் கனகராஜ் தன்னுடைய வழக்கமான பாணியில் கதையை டெவலப் செய்தார். திரைக்கதையில் என்னுடைய பங்களிப்பும் உள்ளது. சூர்யாவின் கதாபாத்திரத்திற்காக கடைசி நேரத்தில் தான் அவருக்கு அழைப்பு விடுத்தோம் ஆனால், அவர் உடனே ஒத்துக்கொண்டு இந்தப் படத்தில் நடிச்சுக் கொடுத்தார். அவருடைய கதாபாத்திரம் தான் 'விக்ரம்' படத்தின் மூன்றாம் பாகத்திற்கான ஒரு தொடக்கமாக அமையும்” என்று கூறினார். இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, பகத் ஃபாசில் என திறமையான நடிகர்கள் இருக்கும்போது உங்களுக்கு போட்டி இருக்கும் என்று நினைக்கிறீர்களா? என்ற கேள்விக்கு பதிலளித்த கமல்ஹாசன், "நிச்சயமாக திறமையானவர்கள் யார் என்னுடன் நடித்தாலும் அவர்களை என்னுடைய போட்டியாக தான் பார்ப்பேன்” அப்படீன்னு கூறினார். பழைய 'விக்ரம்' படத்திற்கும் இந்தப் படத்திற்கும்…
Read More
“விக்ரம்”படத்தின் உரிமையை கைப்பற்றிய ரெட் ஜெயன்ட் மூவீஸ் !

“விக்ரம்”படத்தின் உரிமையை கைப்பற்றிய ரெட் ஜெயன்ட் மூவீஸ் !

உலக நாயகன் கமல்ஹாசனின் “விக்ரம்”படத்தின் தமிழக திரையரங்கு விநியோக உரிமையை கைப்பற்றிய ரெட் ஜெயன்ட் மூவீஸ் உலக நாயகன் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பஹத் பாசில் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் படம் "விக்ரம்". பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். கமல்ஹாசன், R. மகேந்திரன் இணைந்து மிகப் பிரம்மாண்டமாக தயாரித்திருக்கும் இப்படம் ஜூன் 3 அன்று வெளியாக உள்ளதாக முன்னரே அறிவிப்பு வெளியானது. தற்போது விக்ரம் படத்தின் தமிழக திரையரங்கு விநியோக உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவீஸ் கைப்பற்றியுள்ளது. தமிழ் திரையுலகின் பெருமைமிகு திரைப்படமாக உருவாகும் விக்ரம் படத்துடன் கைக்கோர்ப்பதில் மகிழ்ச்சி என ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம் தயாரிப்பு - கமல்ஹாசன், R.மகேந்திரன் (ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல்) இயக்கம் - லோகேஷ் கனகராஜ் இசை - அனிருத் சண்டை பயிற்சி - அன்பறிவு ஒளிப்பதிவு -…
Read More
விஜய் சேதுபதி படத்தில் இணைந்த கௌதம் மேனன்

விஜய் சேதுபதி படத்தில் இணைந்த கௌதம் மேனன்

இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடியின் 'மைக்கேல்' பட அப்டேட் சந்தீப் கிஷன்= விஜய் சேதுபதி=இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி கூட்டணியுடன் இணையும் கௌதம் வாசுதேவ் மேனன் பான் இந்தியா படமான ‘மைக்கேலில்’ வில்லனாகும் கௌதம் வாசுதேவ் மேனன் ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல் எல் பி மற்றும் கரன் சி புரொடக்சன்ஸ் எல் எல் பி இணைந்து 'மைக்கேல்' என்ற புதிய ஆக்சன் எண்டர்டெய்னர் படத்தை தயாரிக்கிறது. இதில் இளம் நட்சத்திர நடிகர் சந்தீப் கிஷன் முதன்மையான வேடத்தில் நடிக்கிறார். ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி அதிரடியான சிறப்புத் தோற்றத்தில் நடிக்கிறார். தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் உருவாகும் இந்த படத்தை இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கவிருக்கிறார். இந்த படத்தில் தற்போது தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநரும், நடிகருமான கௌதம் வாசுதேவ் மேனன் வில்லனாக நடிக்கிறார். பல சூப்பர்ஹிட் படங்களை இயக்கிய இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் சில படங்களிலும்,…
Read More
மகளுடன் விஜய் சேதுபதி நடிக்கும் படம் !

மகளுடன் விஜய் சேதுபதி நடிக்கும் படம் !

நடிகர் விஜய் சேதுபதி  திரைப்படங்கள் பற்றிய செய்திகள் இப்போது அடிக்கடி வந்துகொண்டு இருக்கிறது. சமீபத்தில் மூன்று திரைப்படங்கள் வெளியிட்ட விஜய் சேதுபதிக்கு, தமிழ் மட்டுமல்லாது, ஹிந்தி, மலையாளம், தெலுங்கு என பல மொழி படங்களை கையில் வைத்திருக்கிறார் விஜய் சேதுபதி. திரைப்படம் வெப்சீரிஸ் தொடங்கி, டிவி ஷோ, விளம்பரம் என விஜய் சேதுபதியை பார்ப்பதற்கான சாத்திய கூறுகள் தினமும் அதிகரித்துவருகின்றனர். இப்போது, விஜய் சேதுபதி தன் மகளுடன் ஒரு புதிய படத்தில் நடித்துள்ளார். அந்த படத்தின் படபிடிப்பும் முடிவடைந்து வெளியீட்டுக்கு தயாராக உள்ளது. " முகிழ்" என பெயரிடபட்ட திரைப்படம் , விஜய் சேதுபதி மகள் ஸ்ரீஜா விஜய் சேதுபதி, நடிகராக அறிமுகமாகும் திரைப்படம். அண்மையில் படத்தின் டீசரும், முதல் பாடலும் வெளியாகி ரசிகர்களால் பாராட்டபட்டது. இந்த திரைப்படத்தில், விஜய் சேதுபதி, ஸ்ரீஜா விஜய் சேதுபதி உடன் ரெஜினா காசன்ட்ரா முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார். முழு நீளபடத்தை விட குறைவான நேரம்…
Read More
பெஃப்ஸி தொழிலாளர்களின் குடியிருப்பு திட்டத்திற்காக ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி ஒரு கோடி ரூபாய் நன்கொடை

பெஃப்ஸி தொழிலாளர்களின் குடியிருப்பு திட்டத்திற்காக ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி ஒரு கோடி ரூபாய் நன்கொடை

  ’விஜய் சேதுபதி போன்ற மனிதர்களால் தான் உலகம் தழைத்தோங்குகிறது’- ஆர்.கே.செல்வமணி ‘ஒரு கோடி மட்டுமல்ல...இன்னும் உதவுவேன்’ ஃபெப்ஸி விழாவில் விஜய் சேதுபதி திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் சார்பில் சென்னையில் எழுப்பப்பட்டு வரும் அடுக்குமாடி குடியிருப்பு திட்டத்திற்கு ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி ஒரு கோடி ரூபாய் நன்கொடையாக வழங்கினார். இதற்காக நடைபெற்ற விழாவில் பெஃப்ஸி தலைவர் ஆர் கே செல்வமணி, செயலாளர் சபரீகீரிசன் மற்றும் 23 சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகளும், செயற்குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். இவர்களுடன் தயாரிப்பாளர் எஸ் தாணு, மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ஆகியோரும் கலந்து கொண்டனர். விழாவில் ஒரு கோடி ரூபாய்க்கான காசோலையை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, பெஃப்ஸியின் தலைவர் ஆர்கே செல்வமணி உள்ளிட்ட பெஃப்ஸி நிர்வாகிகளிடம் வழங்கினார். முன்னதாக மேன் கைண்ட் ( Man Kind) என்ற நிறுவனம் சார்பில் முப்பத்தியோரு லட்ச ரூபாய் நிதி உதவியாக பெஃப்ஸி சம்மேளனத்தின் வங்கி…
Read More
இயக்கம் அப்பாவிடம் கற்கவில்லை – அனபெல் சேதுபதியை இயக்கிய ஆர் சுந்தர்ராஜன் மகன் தீபக்

இயக்கம் அப்பாவிடம் கற்கவில்லை – அனபெல் சேதுபதியை இயக்கிய ஆர் சுந்தர்ராஜன் மகன் தீபக்

PASSION STUDIOS சார்பில் தயாரிப்பாளர்கள் - சுதன் சுந்தரம், G. ஜெயராம் தயாரிக்க, தமிழ் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகியிருக்கும், பிரமாண்டமான காமெடி திரைப்படம் “அனபெல் சேதுபது” விஜய் சேதுபதி, டாப்ஸி பண்ணு முதன்மை பாத்திரங்களில் நடித்துள்ள இந்தப்படத்தை, இயக்குநர் தீபக் சுந்தர்ராஜன் இயக்கியுள்ளார். தமிழ், தெலுங்கு திரைப்படவுலகை சார்ந்த முன்னணி நட்சத்திரங்கள் பலர் இணைந்து நடித்துள்ளனர். உலகமெங்கும் செப்டம்பர் 17 அன்று வெளியாகவுள்ள இப்படத்தின் முன்னோட்டமாக, இயக்குநர் சுந்தர்ராஜனும் அவரது மகனும் அறிமுக இயக்குநருமாகிய, தீபக் சுந்தர்ராஜன் இணைந்து பத்திரிக்கையாளர் சந்தித்தனர். இந்நிகழ்வில் இயக்குநர் R சுந்தர்ராஜன் பேசியதாவது..நான் சினிமாவுக்கு வந்து 40 வருடங்கள் ஆகிவிட்டது. எனது ஆரம்ப கால படங்களுக்கு விமர்சனம் தந்த பத்திரிக்கையாளர்கள் இங்கு உள்ளனர். எனது திரைப்பயணத்திற்கு ஆதரவும், பாராட்டும் தந்த பத்திரிக்கையாளர்கள் என் மகனுக்கும் அதே ஆதரவை தந்து வளர்த்து விட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். எனக்கு படத்தின் கதை தெரியாது படம்…
Read More
சூர்யா, விஜய் சேதுபதி படங்களுடன் மோதும் ‘தி மஸ்கிட்டோ பிலாசஃபி’

சூர்யா, விஜய் சேதுபதி படங்களுடன் மோதும் ‘தி மஸ்கிட்டோ பிலாசஃபி’

வாழ்க்கையை உள்ளபடி அப்படியே காட்சிப்படுத்தி எடுக்கப்பட்ட படம் The Mosquito Philosophy. தற்போது 18 வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இப்படம் நடிகர் சூரியாவின் சூரரைப் போற்று மற்றும் நடிகர் விஜய் சேதுபதியின் க/பெ ரணசிங்கம் ஆகியப் படங்களுடன் போட்டியிட களமிறங்கியுள்ளது. அப்பட்டமான நிதர்சனத்தை உள்ளடக்கிய இப்படம் காலங்காலமாக தமிழ் சினிமாவில் வேரூன்றியுள்ள புனைவுக் கதை சொல்லல் வடிவத்துடன் மோதுவது அனைவரின் எதிர்பார்ப்பினையும் கூட்டியுள்ளது. தன் குறுகிய திரை நேரத்தையும் குறைந்த பட்ஜெட்டினையும் சுமந்தபடி தமிழ் சினிமாவின் பிரமாண்டங்களுக்கு இடையே இச்சிறிய கொசுவின் தத்துவம் பறக்கவுள்ளது. இத்திரைப்படம் வெறும் ஒரு லட்சம் ரூபாய் கொண்டு எடுக்கப்பட்டது என்று சமீபத்தில் நடந்து முடிந்த சென்னை சுயாதீன விழாவில் (IFFC) இத்திரைப்படத்தின் இயக்குநர் ஜெயபிரகாஷ் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதுவே தமிழ் சினிமாவின் முதல் “Mumblecore ” என்னும் வகையறாவை சார்ந்த படம் எனக் கருதப்படுகின்றது. மேலும் “Dogme 95 ”…
Read More
குட்டி ஸ்டோரி – மூவி ரிவியூ!

குட்டி ஸ்டோரி – மூவி ரிவியூ!

நம்மில் பலரும் மெரினா பீச் அல்லது பொருட்காட்சி போயிருப்போம். போன இடத்தில் வாங்கிய சுண்டல் அல்லது துண்டு மாங்காய் சுருட்டிக் கொடுத்த பேப்பரில் உள்ள சேதியைப் படிப்பதில் ஆர்வம் காட்டியும் இருப்போம். அப்படியான நாலு துண்டுச் சீட்டில் நாலு விதமான கதைகளைப் படித்த பின்னர் அந்த பேப்பர்களை கசக்கி தூர எறிந்து விட்டு வருமோமில்லையா? அப்படியான மன நிலையை ஏற்படுத்திய படம்தான் ‘குட்டி ஸ்டோரி’. ஆம்.. ஒரு ஷார்ட் ஃபிலிமை கொஞ்சம் பில்ட் அப் கொடுத்து இரண்டு மணி நேர சினிமா கொடுத்து வரும் சூழலில் நாலு ஷார்ட் ஸ்டோரியை தொகுத்து ஒரு ஃபிலிமாக கொடுத்து இருக்கிறார்கள். நான்கு குட்டி கதைகளுக்கும் ஒரேயொரு மையப் புள்ளி முறை பிசகிய காதல் என்பதுதான் ஹைலைட். தந்தை சொல்மிக்க மந்திரமில்லை என்ற சொல்லி ஐசரிகணேஷ் வணங்கி விட்டு போனவுடன் தொடங்கும் முதல் குறுங் கதை கெளதம் மேனன் எழுதி, இயக்கி நடித்திருக்கும் சப்ஜெக்ட். காலேஜில்…
Read More
விஜய் நடித்த  மாஸ்டர் ; அமேசான் ப்ரைம் வீடியோவில் பிப்.29ல் வெளியாகிறது!

விஜய் நடித்த மாஸ்டர் ; அமேசான் ப்ரைம் வீடியோவில் பிப்.29ல் வெளியாகிறது!

சேவியர் ப்ரிட்டோ தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் எழுதி இயக்கியுள்ள இப்படத்தில் தளபதி விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா ஜெரமியா, சாந்தனு பாக்யராஜ், அர்ஜுன் தாஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். தமிழ் ஆக்‌ஷன் த்ரில்லர் திரைப்படமான மாஸ்டர் படத்தின் பிரத்யேக டிஜிட்டல் வெளியீட்டை இந்தியா உள்ளிட்ட 240 நாடுகள் மற்றும் பிரதேசங்களில் உள்ள ப்ரைம் சந்தாதாரர்கள் வரும் ஜனவரி 29 முதல் காணலாம். மும்பை, இந்தியா, 27 ஜனவரி 2021 - அதிகம் எதிர்பார்க்கப்பட்ட தமிழ் ஆக்‌ஷன் த்ரில்லர் திரைப்படமான மாஸ்டர் திரைப்படம் வரும் ஜனவரி 29 அன்று பிரத்தியேக மான டிஜிட்டலில் வெளியாகும் என்று அமேசான் ப்ரைம் வீடியோ இன்று அறிவித்து உள்ளது. மாஸ்டர் திரைப்படத்தில் தளபதி விஜய் மற்றும் விஜய் சேதுபதி இருவரும் நடித்துள்ளனர். இவர்களுடன் மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா ஜெரமியா, சாந்தனு பாக்யராஜ், அர்ஜுன் தாஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். லோகேஷ் கனகராஜ் எழுதி இயக்கியுள்ள…
Read More