“மதராஸி” படத்தின் முதல் சிங்கிள் “சலம்பல” பாடல் வெளியானது !!

“மதராஸி” படத்தின் முதல் சிங்கிள் “சலம்பல” பாடல் வெளியானது !!

டைம்ஸ் மியூசிக்கின் ஒரு பிரிவான ஜங்லீ மியூசிக், ஏ.ஆர்.முருகதாஸின் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் படமான "மதராஸி" படத்திலிருந்து முதல் பாடலான “சலம்பல” பாடலை வெளியிட்டுள்ளது. அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்த இந்தப் பாடல், இந்த ஜோடியின் 8வது படத்தில், ரசிகர்களின் ஃபேவரைட்டாக வெளியாகியுள்ளது. துடிப்பான குரல் மற்றும் பன்முக வித்தகராக, வளர்ந்து வரும் சக்தி வாய்ந்த இளம் திறமையாளர், சாய் அபயங்கர் தனது பிரத்யேகமான குரலில், துடிதுடிப்பான “சலம்பல” பாடலை பாடியுள்ளார். அனிருத்தின் முத்திரை இசையில், அதிரடி டியூனில், மனதை அதிரடிக்கும் தாளத்தில், அழுத்தமான பிரேக்அப் பாடலாக இப்பாடல் அமைந்துள்ளது. "மதராஸி" படத்தின் இசையமைப்பாளர் அனிருத் கூறுகையில், நாங்கள் வழக்கமான பிரேக்அப் பாடல் மனநிலையிலிருந்து விடுபட்டு "சலம்பல” பாடலை, மாறுபட்ட பாடலாக உருவாக்க விரும்பினோம். இது வித்தியாசமான, கணிக்க முடியாத பாடலாக இருக்கும், மேலும் SK உடன் இணைவது எப்போதும் மிரட்டலான ஒன்றாக இருக்கும். இயக்குநர் முருகதாஸின் தொலைநோக்குப்…
Read More
காந்தாரா: சாப்டர் 1 ‘ படத்தின் மேக்கிங் வீடியோ வெளியீடு!!

காந்தாரா: சாப்டர் 1 ‘ படத்தின் மேக்கிங் வீடியோ வெளியீடு!!

  'காந்தாரா : சாப்டர் 1' படத்தின் மேக்கிங் வீடியோவை அதன் தயாரிப்பு நிறுவனமான ஹோம்பாலே ஃபிலிம்ஸ் வெளியிட்டுள்ளது. இது மூன்று வருட சினிமா பயணத்தின் சக்தி வாய்ந்த பார்வையை வழங்குகிறது ' ராஜ குமாரா' , 'கே ஜி எஃப்', 'சலார் ' மற்றும் ' காந்தாரா' போன்ற சாதனை படைத்த படங்களுக்கு பின்னால் உள்ள - அனைவராலும் பாராட்டப்பட்ட தயாரிப்பு நிறுவனமான ஹோம்பாலே ஃபிலிம்ஸ், நேற்று 'காந்தாரா :சாப்டர் 1 ' படத்தின் மேக்கிங் வீடியோவை வெளியிட்டுள்ளது.‌ படத்தின் பின்னணியில் உள்ள காவிய தன்மையின் அளவையும், அதற்கான கடினமாக மேற்கொள்ளப்பட்ட முயற்சியையும் பார்வையாளர்களுக்கு ஒரு அற்புதமான அனுபவமாக இந்த வீடியோ வழங்குகிறது. படப்பிடிப்பு நிறைவடைந்ததைக்கொண்டாடும் வகையில் வெளியிடப்பட்ட இந்த வீடியோவில், 250 நாட்களுக்கும் மேலான படப்பிடிப்பின் உச்சக்கட்டத்தை விவரிக்கிறது. மேலும் இது மூன்று ஆண்டுகளுக்கும் மேலான அசைக்க முடியாத அர்ப்பணிப்பின் பிரதிபலிப்பாகும். ஆயிரக்கணக்கானவர்கள் இப்படத்தின் தயாரிப்பின் ஒவ்வொரு கட்டத்திலும்…
Read More
கன்னடத்து பைங்கிளி: பி. சரோஜா தேவி-நினைவஞ்சலி!

கன்னடத்து பைங்கிளி: பி. சரோஜா தேவி-நினைவஞ்சலி!

இந்தியத் திரைப்பட உலகின் மறக்க முடியாத நட்சத்திரமாக விளங்கிய பி. சரோஜா தேவி  2025 ஜூலை 13 நேற்று தனது 87-வது வயதில் பெங்களூருவில் காலமானார். “கன்னடத்து பைங்கிளி”, “அபிநய சரஸ்வதி”, “கனவு கன்னி” என்று பல புனைப்பெயர்களால் அன்போடு அழைக்கப்பட்ட இவர், கன்னடம், தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் 200-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து, இந்திய சினிமாவில் தனக்கென ஒரு தனித்துவமான இடத்தைப் பிடித்தவர். இவரது மறைவு, இந்தியத் திரைப்பட உலகிற்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகும். திரைப்பயணத்தின் தொடக்கம் 1938 ஜனவரி 7-ஆம் தேதி பெங்களூரில், காவல்துறை அதிகாரி பைரப்பா மற்றும் இல்லத்தரசி ருத்ரம்மாவின் நான்காவது மகளாகப் பிறந்தவர் சரோஜா தேவி. 17 வயதில், 1955-ல் ‘மகாகவி காளிதாசா’ என்ற கன்னடத் திரைப்படத்தில் அறிமுகமானார். இந்தப் படம் அவரது திரையுலக பயணத்திற்கு அடித்தளமிட்டது. கன்னடத்தில் தாம் நடித்த முதல் படத்திலேயே கதாநாயகியாகப் புகழ்பெற்ற அவர், 1958…
Read More
“பைசன் காளமடான்”, தீபாவளி கொண்டாட்டமாக உலகமெங்கும் வெளியாகிறது !!

“பைசன் காளமடான்”, தீபாவளி கொண்டாட்டமாக உலகமெங்கும் வெளியாகிறது !!

இயக்குநர் மாரி செல்வராஜின் இயக்கத்தில், துருவ் விக்ரம் நடிப்பில், தமிழ் திரையுலகில் மிகவும் எதிபார்க்கப்படும், ஸ்போர்ட்ஸ் டிராமா திரைப்படமான “பைசன் காளமாடன்” திரைப்படம், வரும் 2025 அக்டோபர் 17 அன்று, தீபாவளிக் கொண்டாட்டமாக திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் நீலம் ஸ்டுடியோஸ் நிறுவனங்களின் தயாரிப்பில், மாரி செல்வராஜ் இயக்கியுள்ள இந்தத் திரைப்படம், துணிவும் தைரியமும் நிறைந்த ஒரு விளையாட்டு வீரனின், ஆழமான கதையை சொல்ல வருகிறது. நடிகர் துருவ் விக்ரம் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தில், அனுபமா பரமேஸ்வரன், இயக்குநர் ஆமீர், இயக்குநர் லால், பசுபதி, மற்றும் ரஜிஷா விஜயன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தமிழ்த் திரையுலகப் பயணத்தில் மற்றொரு மைல்கல்லாக இப்படம் அமைந்துள்ளது. மாறுபட்ட கதைக்களத்தில், அழுத்தமான திரைக்கதையுடன், மிகச்சிறந்த தொழில் நுட்ப கலைஞர்களின் உழைப்பில், புதுமையான அனுபவம் தரும் படைப்பை, அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் வழங்கியுள்ளது.
Read More
நடிகர் விமல் நடிப்பில் ‘ஓம் காளி ஜெய் காளி’ டிரெய்லர் வெளியாகியுள்ளது!

நடிகர் விமல் நடிப்பில் ‘ஓம் காளி ஜெய் காளி’ டிரெய்லர் வெளியாகியுள்ளது!

  நடிகர் விமல் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஓம் காளி ஜெய் காளி’ வெப்சீரிஸின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. டிரெய்லரில் வெப்சீரிஸ் மார்ச் 28, 2025 அன்று வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. சினிமா மற்றும் வெப்சீரிஸ் ரசிகர்களுக்கு ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சிறந்த கதைகளை வழங்கி வருகிறது. ராமு செல்லப்பா இயக்கத்தில் விமல் நடித்திருக்கும் 'ஓம் காளி ஜெய் காளி' வெப்சீரிஸ் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது வெளியாகியுள்ள சுவாரஸ்யமான டிரெய்லர் இந்த எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டின் பிரம்மாண்டமான தசரா திருவிழாவின் பின்னணியில் பழிவாங்கும் கதையாக இது அமைந்திருக்கிறது. டிரெய்லரில் வெப்சீரிஸ் மார்ச் 28 ஆம் தேதி வெளியாகும் என்ற அறிவிப்பும் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. ஆக்‌ஷன், எமோஷன், உண்மை, அதிகாரம் மற்றும் பழிவாங்கல் என ’OKJK’ வெப்சீரிஸின் உலகம் ரசிகர்களைக் கவர்ந்துள்ளது. குலசேகரப்பட்டினம் தசரா திருவிழாவின் இதுவரை பார்த்திராத கண்கவர் காட்சிகளுடனும் கொண்டாட்டத்துடனும் அதற்கு பின்னான உணர்வுகளுடனும் ‘ஓம்…
Read More
‘விடாமுயற்சி’ புகழ் கணேஷ் சரவணன் நடிக்கும் புதிய படம் !

‘விடாமுயற்சி’ புகழ் கணேஷ் சரவணன் நடிக்கும் புதிய படம் !

அஃப்ரிஞ்ச் புரொடக்‌ஷன்ஸ் வழங்கும் அறிமுக இயக்குநர் ஜாபர் இயக்கத்தில், ‘விடாமுயற்சி’ புகழ் கணேஷ் சரவணன் நடிக்கும் புதிய படம் அறிவிக்கப்பட்டுள்ளது! சமீபத்திய ஆண்டுகளில் மீடியாத் துறையில் இருந்து திறமை மிக்க பல இளம் இயக்குநர்கள் கோலிவுட்டில் வந்திருக்கின்றனர். அவர்களின் புதிய கதை சொல்லல் முறையும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்த வரிசையில் சமீபத்தில் இணைந்திருப்பவர் பிரபல சினிமா பத்திரிக்கையாளரான ஜாபர். இவர் இயக்குநராக அறிமுகமாகும் படத்தில், ’இராவணக் கோட்டம்’ மற்றும் நடிகர் அஜித்தின் ‘விடாமுயற்சி’ படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த கணேஷ் சரவணன் கதாநாயகனாக நடிக்கிறார். படத்தை அஃப்ரிஞ்ச் தயாரிக்கிறார். கதாநாயகியாக ஆயிஷா (பிக்பாஸ் சீசன் 6 மற்றும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் வெப்சீரிஸ் ‘உப்புப்புளி காரம்’ புகழ்) நடிக்கிறார். இவர்களுடன் விஜய் டிவி புகழ் எம். புகழ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். வில்லன் மற்றும் மற்ற முக்கிய கதாபாத்திரங்களுக்கான பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. காமெடி திரில்லர் திரைப்படமான…
Read More
புதிய தொழில்நுட்பத்துடன் அறிமுகமாகும் OPPO Reno 13 !!

புதிய தொழில்நுட்பத்துடன் அறிமுகமாகும் OPPO Reno 13 !!

OPPO Reno 13 இந்தியாவில் புதிய MediaTek Dimensity 8350 சிப்செட் மற்றும் AI-தயார் கேமராக்களுடன் அறிமுகப்படுத்தியுள்ளது .   OPPO Reno 13 தொடர் Gen AI ஐ தொழில்நுட்பம் கொண்ட இந்த ரக செல்ஃபோன்கள் பார்வையாளர்களிடம் கொண்டுவந்து, இந்திய சந்தையில் AI தொழில்நுட்பத்துடன் இயங்கும் ஸ்மார்ட்போன்களுக்கு ஒரு புதிய அறிமுகத்தை கொடுத்துள்ளது. AI Live புகைப்படம், AI தெளிவுத்திறன் மற்றும் நீரிலும் புகைப்படம் எடுக்கும் திறன் ஆகியவை இதில் புகுத்தப்பட்டுள்ளது. நீர் மற்றும் தூசிகளை எதிர்கொள்வதற்கான IP66/ IP68/IP69 ஆகிய மதிப்பீடுகளால் வடிவமைக்கப்பட்டுள்ளன. OPPO Reno 13 Series முதலில் MediaTek Dimensity 8350 உடன் அறிமுகப்படுத்தியுள்ளதோடு, விளையாடுவதற்கு ஏற்ற ஆற்றல் திறன் கொண்ட AI ஸ்மார்ட் போன் ஆகும்.   National, 15th January 2025: இன்றைய ஸ்மார்ட் போன் அனுபவத்தை மறு வரையறை செய்ய வடிவமைக்கப்பட்ட Reno 13 Series 5 ஜியை  OPPO இந்தியா…
Read More
விலங்குகளுக்கு நான் டப்பிங் பேசுவது இதுதான் முதல்முறை – அசோக்செல்வன் !!

விலங்குகளுக்கு நான் டப்பிங் பேசுவது இதுதான் முதல்முறை – அசோக்செல்வன் !!

கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான ஆக்ஷன் பிளாக்பஸ்டர் திரைப்படமான 'தி லயன் கிங்' வெற்றியைத் தொடர்ந்து ’முஃபாசா: தி லயன் கிங்’ டிசம்பர் 20, 2024 அன்று வெளியாகிறது. தமிழில் முஃபாசா கதாபாத்திரத்திற்கு நடிகர்கள் அர்ஜுன் தாஸ், டாக்காவுக்கு அசோக் செல்வன், ரோபோ சங்கர் மற்றும் சிங்கம் புலி முறையே பும்பா மற்றும் டிமோன், ரஃபிக்கியின் இளைய பதிப்பிற்கு நடிகர் விடிவி கணேஷ் மற்றும் கிரோஸின் குரலாக நடிகர் எம். நாசர் ஆகியோர் குரல் கொடுத்திருக்கின்றனர். இதன் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு இன்று நடைபெற்றது. நடிகர் நாசர், “நடிகனாகவும் டப்பிங் கலைஞராகவும் பல படங்கள் பணிபுரிந்து விட்டேன். சிவாஜி சார், அமிதாப் பச்சன் சார், ராஜா அண்ணன் இவர்கள் குரல் எல்லாம் எனக்கு ரொம்பப் பிடிக்கும். இதில் சிவாஜி சார் குரல் எனக்கு ஆதர்சம். உங்களுக்கு எத்தனை வயதானாலும் உங்களுக்குள் ஒரு குழந்தை எப்போதும் இருக்கும். அதனால், இது குழந்தைகளுக்கான படம்…
Read More
கவிப்பேரரசு வைரமுத்து படைப்புலகம் பன்னாட்டுக் கருத்தரங்கம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு !!

கவிப்பேரரசு வைரமுத்து படைப்புலகம் பன்னாட்டுக் கருத்தரங்கம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு !!

கவிப்பேரரசு வைரமுத்துவின் கவிதைக்கு வயது 52. அவரது திரைப்பாட்டுக்கு வயது 44. இதுவரை 39 நூல்கள் எழுதியிருக்கிறார். சாகித்ய அகாடமி விருதுபெற்ற இவரது கள்ளிக்காட்டு இதிகாசம் 10 இந்திய மொழிகளில் பெயர்க்கப்பட்டு வெளிவந்திருக்கிறது; மேலும் 12 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு வருகிறது. இந்தியாவின் சிறந்த பாடலாசிரியருக்காக 7 ஜனாதிபகளிடம் விருது பெற்றிருக்கிறார். இவரது படைப்புகளை ஆராய்ச்சி செய்து இதுவரை 180 பேர் டாக்டர் பட்டமும், எம்.பில் பட்டமும் பெற்றிருக்கிறார்கள். இந்தியாவின் உயரிய விருதுகளான பத்மஸ்ரீ மற்றும் பத்மபூஷண் விருதுகளையும் பெற்றிருக்கிறார். கவிப்பேரரசு வைரமுத்து படைப்புகள் குறித்த பன்னாட்டுக் கருத்தரங்கம் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் சென்னையில் நடைபெறுகிறது. உலகெங்கிலுமிருந்தும் பல்கலைக்கழகப் பேராசிரியர்களும், ஆராய்ச்சி அறிஞர்களும் கலந்துகொண்டு கட்டுரை வாசிக்கிறார்கள். கருத்தரங்கம் முழுநாள் நிகழவிருக்கிறது. மாலையில் நிகழும் நிறைவு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொள்ள வேண்டும் என்று கவிப்பேரரசு வைரமுத்து நேரில் சென்று அழைப்பு விடுத்தார்.
Read More
சமூக அக்கறை மிக்க படைப்பு – ’பராரி’ !!

சமூக அக்கறை மிக்க படைப்பு – ’பராரி’ !!

தமிழில் நல்ல இயக்குநர் என பெயர் வாங்கியிருக்கும் இயக்குநர் ராஜு முருகன் வழங்க, அவரது உதவி இயக்குநராக இருந்த எழில் பெரியவேடி இயக்ததில் வந்துள்ள படம் பராரி. திருவண்ணாமலை மாவட்டத்தில்  அருகே உள்ள  கிராமத்தில்  சாலைக்கு ஒரு புறத்தில் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர் நாயகன் ஹரி சங்கர் மறுபுறம் வேறு சமூகத்தை சேர்ந்த நாயகி சங்கீதாவும் வாழ்ந்து வருகிறார்கள். அதே கிராமத்தில் இருவரும் கரும்பு வெட்டும் வேலை பார்த்து வருகிறார்கள். சிறு வயதில் இருந்தே நாயகனை ஒரு தலையாக காதலித்து வருகிறார் நாயகி சங்கீதா  இதே ஊரில் பாறையை மையமாக வைத்து நடக்கும் சண்டை, தண்ணீர் தொட்டி பிரச்சனை இரு ஊருக்கும் நடந்து கொண்டே இருக்கிறது. இந்நிலையில் கர்நாடகாவில் உள்ள ஒரு தனியார் ஜூஸ் நிறுவனத்திற்கு  இரு சாதியினை சேர்ந்த  மக்களும் 3 மாத வேலைக்காக செல்கின்றனர். இதே சமயம் ஹீரோ ஹரி சங்கரை மற்றொரு வகுப்பைச் சேர்ந்த ப்ரேம்நாத் கர்நாடகாவில்…
Read More