நாய் மனிதன் மீது வழக்கு தொடர்ந்தால்.?

நாய் மனிதன் மீது வழக்கு தொடர்ந்தால்.?

பொதுவாக நியாயம் கிடைக்க வேண்டும் என்பதற்காக மனிதர்கள் கோர்ட்டுக்கு சென்று போராடுவார்கள், ஆனால் இந்த படத்தில் ஒரு நாய் தனக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்பதற்காக கோர்ட் படி ஏறி போராடுகிறது மொத்தத்தில் இந்த திரைப்படத்தில் நாங்கள் சொல்ல வருவது என்னவென்றால் மனித உயிரும், விலங்குகள் உயிரும் ஒன்றுதான் என்றும், இந்த உலகம் மனிதர்களுக்கானது மட்டுமல்ல, விலங்குகள், பறவைகள், மரங்கள், செடிகள், கொடிகள், மலர்கள் இவைகளுக்குமானது தான் என்ற கருத்தை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசிக்கும் வகையில் உரக்கச் சொல்லியிருக்கிறோம். இப்படத்தில் பயிற்சி பெற்ற ஜான்சி என்ற போலீஸ் நாய் கதையின் நாயகனாக நடித்திருக்கிறது. அதனுடன் இணைந்து எஸ்.ஏ. சந்திரசேகர், YG மகேந்திரன், சத்யன், பாலாஜி சக்திவேல், ஜார்ஜ் மரியன், இந்திரஜா ரோபோ ஷங்கர் போன்ற பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். விலங்குகளை மையப்படுத்தி எடுக்கப்பட்ட பல படங்கள் தமிழ் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. இவ்வரிசையில் நன்றியுணர்ச்சிக்குப்…
Read More
ஆர். ஜே. பாலாஜி நடிப்பில் ‘ஹேப்பி எண்டிங்’ பட டைட்டில் டீசர் வெளியீடு !!

ஆர். ஜே. பாலாஜி நடிப்பில் ‘ஹேப்பி எண்டிங்’ பட டைட்டில் டீசர் வெளியீடு !!

'குட் நைட்', 'லவ்வர்' என தமிழ் திரையுலகில் கொண்டாடப்பட்ட திரைப்படங்களை தயாரித்த மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் - எம். ஆர். பி என்டர்டெய்ன்மென்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்க, அறிமுக இயக்குநர் அம்மாமுத்து சூர்யா இயக்கத்தில், முன்னணி நட்சத்திர நடிகரான ஆர். ஜே. பாலாஜி நடிப்பில், கலக்கலான ரொமாண்டிக் காமெடியாக உருவாகும், 'ஹேப்பி எண்டிங்' படத்தின் அசத்தலான டைட்டில் டீசர், தீபாவளி திருநாளை முன்னிட்டு இன்று வெளியிடப்பட்டுள்ளது. அறிமுக இயக்குநர் அம்மாமுத்து சூர்யா, இன்றைய நவ நாகரீக உலக இளைஞர்களின் வாழ்வியலைச் சொல்லும் வகையில், மிக புதுமையான திரைக்கதையில் இப்படத்தினை உருவாக்கி வருகிறார். நடிகர் ஆர். ஜே. பாலாஜி இதுவரை ஏற்றிராத புதுமையான வேடத்தில் இப்படத்தில் நடிக்கிறார். ஆண் பெண் உறவுகளை, இதுவரை தமிழ் சினிமா காட்டியிருக்கும் மரபிலிருந்து மாறுபட்டு, இன்றைய உலகின் உறவு சிக்கலை படம்பிடித்துக் காட்டுகிறது இந்த டீசர். மிகப் புதுமையான டைட்டில் டீசர், இணையத்தில் வைரலாக பரவி…
Read More
இந்தக் கதைக்கு கவின் வேண்டாம் என்றேன் – இயக்குநர் நெல்சன் !!

இந்தக் கதைக்கு கவின் வேண்டாம் என்றேன் – இயக்குநர் நெல்சன் !!

ஃபிலாமெண்ட் பிக்சர்ஸ், இயக்குநர் நெல்சன் திலீப்குமார் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் சிவபாலன் முத்துக்குமார் இயக்கத்தில் நடிகர் கவின் நடிப்பில் இந்த மாதம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் 31 ஆம் தேதி வெளியாக இருக்கும் திரைப்படம் ‘ப்ளடி பெக்கர்’. இந்தப் படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவண்ட் நடைபெற்றது. நடிகர் ரெடின் கிங்ஸ்லி, “என் வாழ்க்கையில் மறக்க முடியாத படம் ‘ப்ளடி பெக்கர்’. ஏனெனில், இந்தப் படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோதுதான் எனக்குத் திருமணம் நடந்தது. எல்லோரும் சிறப்பான பணியைக் கொடுத்துள்ளனர். சிவபாலன் தனக்கு என்ன வேண்டும் என்பதை மிகச்சரியாக எடுத்துள்ளார். டிரெய்லருக்கு பாராட்டுகள் கிடைத்து வருகிறது. நிச்சயம் படமும் பெரிய வெற்றி பெறும். இந்தப் படத்துக்குப் பிறகு கவினின் நடிப்பிற்கு பெரிய பாராட்டு கிடைக்கும். நான் வாழும் வாழ்க்கை, சாப்பாடு, டிரஸ் எல்லாமே நெல்சன் சார் கொடுத்தது. அவருக்கு நன்றி” என்றார். இயக்குநர் சிவபாலன் முத்துக்குமார், “நான் இந்த இடத்திற்கு வர நிறைய…
Read More
“ஜில்லா விட்டு ஜில்லா வந்து” டூ “சில்லாஞ்சிறுக்கி” ; பாடலாசிரியர் மோகன் ராஜனின் வெற்றி பயணம்

“ஜில்லா விட்டு ஜில்லா வந்து” டூ “சில்லாஞ்சிறுக்கி” ; பாடலாசிரியர் மோகன் ராஜனின் வெற்றி பயணம்

சமீபத்தில் இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ் நடிப்பில் வெளியான ‘லப்பர் பந்து’ திரைப்படம் பல கலைஞர்களின் திறமைகளை மீண்டும் வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது. குறிப்பாக இந்தப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘சில்லாஞ்சிறுக்கி பாடல்’ இளைஞர்களின் காதுகளில் ரீங்காரமிடும் ரிங் டோனாக மாறியுள்ளது. ஏற்கனவே பல ஹிட் பாடல்களை கொடுத்துள்ள பாடலாசிரியர் மோகன் ராஜன் மீது ‘லப்பர் பந்து’ மீண்டும் புது வெளிச்சம் பாய்ச்சியுள்ளது. சசிகுமார் இயக்கத்தில் இரண்டாவது படமாக உருவான ‘ஈசன்’ படத்தில் மிகவும் புகழ்பெற்ற “ஜில்லா விட்டு ஜில்லா வந்த கதையை நீயும் கேட்டியா” என்கிற சூப்பர் ஹிட் பாடலின் மூலம் ரசிகர்கள் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தவர் பாடலாசிரியர் மோகன் ராஜன். ஜேம்ஸ் வசந்தன் இசையமைத்த யாதுமாகி படத்தின் மூலம் அறிமுகமானாலும் அதற்கடுத்து வெளியான ஈசன் படம் தான் இவருக்கான அடையாளத்தை பெற்று தந்தது. சினிமாவில் நுழைந்த இந்த 15 வருடங்களில் கிட்டத்தட்ட 500 பாடல்களை…
Read More
‘சூர்யா 45’ ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வ அறிவிப்பு !!

‘சூர்யா 45’ ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வ அறிவிப்பு !!

தமிழில் மிகச்சிறந்த தரமான திரைப்படங்களைத் தொடர்ந்து வழங்கி வரும் முன்னணி நிறுவனமும் ’ஜோக்கர்’, ’அருவி’, ’தீரன் அதிகாரம் ஒன்று’, ’கைதி’, ’சுல்தான்’, ’கணம்’ மற்றும் ’ஃபர்ஹானா’ போன்ற விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட பிளாக்பஸ்டர்களை உருவாக்கிய புகழ்பெற்ற தயாரிப்பு நிறுவனமுமான ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ், நடிகர் சூர்யா நடிக்கும் 'சூர்யா 45' படத்தைப் பூஜையுடன் தொடங்கியுள்ளது. தற்போதைய நிலையில் பெயரிடப்படாத இந்தப் படம், தயாரிப்பு நிறுவனத்தின் புகழ்பெற்ற பட வரிசையில் மிகப்பெரும் பொருட் செலவில் உருவாகும் படமாக இருக்கும். மூக்குத்தி அம்மன், வீட்ல விசேஷம் போன்ற நகைச்சுவை மற்றும் சமூக அக்கறையுடன் கூடிய படங்களை இயக்கிய, நடிகர், இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி இந்த பிரம்மாண்டமான ஆக்‌ஷன் படத்தை இயக்கவுள்ளார். ஒரு வருடத்திற்கும் மேலாக, இந்த படத்தின் பரபரப்பான திரைக்கதையை உருவாக்கி வரும், இயக்குநர் RJ பாலாஜி தற்போது சூர்யா 45 படத்தின் முன் தயாரிப்பில் மும்முரமாக ஈடுபட்டுள்ளார். இந்தப் பக்கா என்டர்டெயினர் திரைப்படத்தின் படப்பிடிப்பிற்கான…
Read More
டாக்டர் ஐசரி.கே.கணேஷ் பிறந்தநாளை கொண்டாடிய  பிரபலங்கள்!

டாக்டர் ஐசரி.கே.கணேஷ் பிறந்தநாளை கொண்டாடிய பிரபலங்கள்!

பிரபல தயாரிப்பாளரும் கல்வியாளருமான டாக்டர் ஐசரி.கே.கணேஷ் அவர்களின் பிறந்தநாளை கொண்டாட கூடிய கோலிவுட் மற்றும் அரசியல் பிரபலங்கள்! டாக்டர் ஐசரி கே கணேஷ் அவர்களின் பிறந்தநாள் விழா கொண்டாட்டங்கள் சென்னையில் உள்ள பிரபல தனியார் நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது. இதில் அரசியல் மற்றும் திரைத்துறை பிரபலங்கள் கலந்துக்கொண்டு டாக்டர். ஐசரி கே கணேஷ் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். குறிப்பாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு.சேகர்பாபு, பா.ம.க தலைவர் திரு.அன்புமணி ராம்தாஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திரு.திருமாவளவன், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் திரு. சீமான், தயாரிப்பாளர் தானு, இசையமைப்பாளரும் நடிகருமான திரு விஜய் ஆண்டனி, நடிகர்கள் பார்த்திபன், தனுஷ், பிரபு தேவா, ஜெயம் ரவி, ஜீவா,விஷ்னுவிஷால், ஆர்யா, இயக்குநர்கள், கவுதம் வாசுதேவ் மேனன், சுந்தர் சி, ஆர்.கே.செல்வமணி, மாரிசெல்வராஜ், விக்னேஷ் சிவன், ஏ.எல்.விஜய், நடிகைகள் ராதிகா, மீனா, சங்கீதா மற்றும் பாடகர் கிருஷ் ஆகியோர் கலந்துக்கொண்டு தங்கள் வாழ்த்துக்களை…
Read More
CTMA- ன் ஆவணிப்பூவரங்கு 2024 நிகழ்வு !!

CTMA- ன் ஆவணிப்பூவரங்கு 2024 நிகழ்வு !!

நடிகர்கள் காளிதாஸ் ஜெயராம், மஹத் ராகவேந்திரா மற்றும் பல முக்கிய அரசியல்வாதிகள் CTMA- ன் ஆவணிப்பூவரங்கு 2024 நிகழ்வில் கலந்து கொண்டனர்! CTMA (Confederation of Tamil Nadu Malayalee Association) சமீபத்தில் சென்னையில் ஆவணிப்பூவரங்கு 2024 நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது. ஓணம் பண்டிகைக்கு ஒரு வாரத்திற்குப் பிறகு கொண்டாடப்படும் பண்டிகை இது. வயநாடு நிலச்சரிவின் போது வீடுகளை இழந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த நிகழ்வின் மூலம் திரட்டப்படும் நிதியை நன்கொடையாக வழங்குவதற்காக ஒரு சிறப்பு முயற்சியாக இந்த நிகழ்வு திட்டமிடப்பட்டது. தமிழ்நாடு அரசின் இந்து சமய, அறநிலையத்துறை அமைச்சர் மாண்புமிகு திரு பி.கே. சேகர் பாபு முதன்மை விருந்தினராகக் கலந்து கொண்டார். தமிழ்நாடு அரசின் ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் மாண்புமிகு டாக்டர் எம். மதிவேந்தன் கெளரவ விருந்தினராகப் பங்கேற்றார். இவர்களுடன் நடிகர்கள் மஹத் ராகவேந்திரா மற்றும் காளிதாஸ் ஜெயராம் ஆகியோரும் கலந்து கொண்டனர். திரு பி.கே. சேகர் பாபு பேசுகையில்,…
Read More
ஆரம்பமே அதிர்ச்சி தந்த பிக்பாஸ், களை கட்டும் சீசன் 8 !!

ஆரம்பமே அதிர்ச்சி தந்த பிக்பாஸ், களை கட்டும் சீசன் 8 !!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் வரலாற்றில் முதல் முறையாக, போட்டி ஆரம்பித்த 24 மணி நேரத்தில், ஒரு போட்டியாளர் வெளியேற்றப்படுவார் என அறிவித்துள்ளார், பிக்பாஸ் நிகழ்ச்சியின் புதிய ஹோஸ்ட் விஜய் சேதுபதி, இந்த எதிர்பாரா அறிவிப்பு மக்களிடம் பெரும் பேசுபொருளாகியுள்ளது. தமிழக மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற விஜய் டிவியின், பிக்பாஸ் நிகழ்ச்சியின் 8வது புதிய சீசன் இன்று கோலாகலமாக ஆரம்பமானது. இந்த முறை, புதிய ஹோஸ்ட், பெரிய வீடு, எனப் பல புதுமைகளுடன், ஆரம்பமான நிலையில், முதல் எபிஸொடின் முடிவு ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியில், கடந்த 7 வருடங்களாக, ஒவ்வொரு சீசனிலும், பல புதுமைகளோடு, மக்களிடம் வரவேற்பைப் பெற்ற, பிக்பாஸ் நிகழ்ச்சியின் புதிய 8வது சீசன், இன்று கோலாகலமாக ஆரம்பமானது. இந்த முறை, நடிகர் விஜய் சேதுபதி ஹோஸ்டாக களமிறங்கி, புதிய போட்டியாளர்களை தன் பாணியில் அறிமுகப்படுத்தி, நிகழ்ச்சியைத் துவக்கினார். ஒவ்வொரு போட்டியாளர்களையும் அறிமுகப்படுத்தி, ஆண்களா? பெண்களா?…
Read More
விஜய்யிடம் தோற்ற ரஜினிகாந்த் !

விஜய்யிடம் தோற்ற ரஜினிகாந்த் !

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில், இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில், லைகா புரடக்சன்ஸ் தயாரிப்பில், வேட்டையன் படம் அக்டோபர் 10 ஆம் தேதி வெளியாகிறது. இந்த நிலையில் இப்படத்திற்கான அட்வான்ஸ் டிக்கெட் புக்கிங் வெகு மந்தமாக இருந்து வருகிறது. தமிழகத்தில் 50 வருடங்களை கடந்து சூப்பர்ஸ்டாராக ஜொலித்து வருபவர் ரஜினிகாந்த், அவருடைய திரைப்படங்கள் வெளியானால் திரையரங்குகள் கொண்டாட்டமாக இருக்கும், ஆனால் சமீப காலமாக அவரது நட்டத்திர அந்தஸ்து குறைந்து வருகிறது. ஜெயிலர் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது ஆனால் அதைத்தொடர்ந்து வெளியான லால் சலாம், மிகப்பெரிய தோல்வியைத் தழுவியது. இப்படம் இது வரையிலும் ஓடிடி தளத்தில் கூட வரவில்லை, ரஜினியின் சினிமா வரலாற்றில் மிக மோசமான திரைப்படமாக இப்படம் அமைந்துவிட்டது. தற்போது, மீண்டும் அமிதாப் பச்சன், பகத்பாசில், மஞ்சு வாரியர், ராணா என பெரிய நட்சத்திர பட்டாளத்துடன் களமிறங்கியுள்ளது வேட்டையன். இப்படத்தின் டிரெய்லர் பரவலாக பாரட்டப்பட்ட நிலையில் படத்தின் புக்கிங் நேற்று முன் தினக்…
Read More
வெகு விரைவில் வெளிவர உள்ளது படை தலைவன் !

வெகு விரைவில் வெளிவர உள்ளது படை தலைவன் !

பிரம்மாண்ட தயாரிப்பில் வெகு விரைவில் வெளிவர உள்ளது படை தலைவன் சிபி ராஜ் நடித்த வால்டர் படத்தை வெற்றிகரமாக இயக்கிய  இயக்குனர் அன்பு இயக்கத்தில் சண்முக பாண்டியன் விஜயகாந்த் நடிப்பில் இசைஞானி இளையராஜா அவர்களின் இசையில் படைதலைவன் படம் வெகு விரைவில் வெளிவர உள்ளது. வி ஜே கம்பைன்ஸ் சார்பில் பரமசிவம் அவர்கள் தயாரிப்பில், ராஜு காளிதாஸ் அவர்களின் இணை தயாரிப்பில் மிக பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் படம், படை தலைவன். இப்படத்தில் ஆக்சன் அதிரடியில் சண்முகபாண்டியன் விஜயகாந்த்  வெறித்தனமாக பெரும் மெனக் கெடல் எடுத்து நடித்துள்ளார். ரசிகர்களின் எதிர்பார்ப்பின் படி படத்தின் வெளியீட்டு வேலைகள் துவங்கி உள்ளன.  இசைஞானி இளையராஜா அவர்களின் அற்புதமான இசை படத்திற்கு மேலும் வலு சேர்த்துள்ளது. கஸ்தூரி ராஜா அவர்கள் முக்கிய கதா பாத்திரத்தில் மிக நேர்த்தியாக நடித்துள்ளார். படை தலைவன் படத்தை ஓப்பன் தியேட்டர் நிறுவனம் சார்பில் ஏ. செந்தில் குமார் வெளியிட உள்ளார்.…
Read More