திரிஷா நடித்திருக்கும் தி ரோட் திரைப்படம் எப்படி இருக்கிறது ?

திரிஷா நடித்திருக்கும் தி ரோட் திரைப்படம் எப்படி இருக்கிறது ?

  திரிஷா நாயகியாக நடித்திருக்கும் திரில்லர் திரைப்படம் டான்சிங் ரோஸ் ஷபீர், எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அருண் வசீகரன் இயக்கியுள்ள இந்தப் படத்துக்கு சாம் சி. எஸ்  இசையமைத்துள்ளார். ஹீரோயினை முன்னிலைப்படுத்திய கதையில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி நடிகையாகக் கலக்கி வரும் த்ரிஷா நடித்திருக்கிறார். பாதிக்கப்பட்டவர்களின் அமைதி தான் அடுத்தடுத்த தவறுகளுக்கு காரணம், அவர்கள் அமைதியாக போகக் கூடாது என்பது தான் படத்தின் மையம் அழகான குடும்பம், குழந்தை என வாழ்ந்து வரும் த்ரிஷா, சாலை விபத்தில் தன் கணவர், குழந்தையை பரிகொடுக்கிறார் ஆனால் தன் கணவர், குழந்தையை த்ரிஷா இழந்த NH 44 சாலையின் ஒரு குறிப்பிட்ட இடத்தில் தொடர் சாலை விபத்துகள் நடப்பது த்ரிஷாவுக்கு தெரிய வருகிறது. இன்னொரு மறுபுறம் கல்லூரி ப்ரொஃபசராக வரும் ‘டான்சிங் ரோஸ்’ ஷபீர் தன் கல்லூரி மாணவி ஒருவர் தன் மீது சுமத்தும் அபாண்டமான பழியால் நற்பெயர், மதிப்பு,…
Read More
“இன்னும் ஒரே ஒரு வாய்ப்பு கொடுங்கள்” ; ரஜினிகாந்த்தையே வியப்பில் ஆழ்த்திய லால் சலாம் ஆடை வடிவமைப்பாளர் சத்யா NJ

“இன்னும் ஒரே ஒரு வாய்ப்பு கொடுங்கள்” ; ரஜினிகாந்த்தையே வியப்பில் ஆழ்த்திய லால் சலாம் ஆடை வடிவமைப்பாளர் சத்யா NJ

சமீபத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்துடன் இலங்கை நட்சத்திர கிரிக்கெட் வீரர் மலிங்கா இணைந்து எடுத்துக்கொண்டது போன்ற புகைப்படம் ஒன்று சோசியல் மீடியாவில் வெளியாகி மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது. ஆனால் பலரும் நினைப்பது போல அவர் கிரிக்கெட் வீரர் மலிங்கா அல்ல.. தமிழ் சினிமாவில் பிரபல ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றி வரும் காஸ்ட்யூமர் சத்யா NJ தான் அவர். ஐஸ்வர்யா ரஜினிகாந்த இயக்கிவரும் லால் சலாம் படத்திற்கு ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றியுள்ள சத்யா NJ, மேலும் அந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். படத்தில் தான் நடித்த கதாபாத்திர தோற்றத்திலேயே சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் ஞாபகார்த்தமாக சத்யா NJ எடுத்துக் கொண்ட புகைப்படம் தான் இன்று அவரை கிரிக்கெட் வீரர் மலிங்காவாக பலரையும் நினைக்க வைத்துள்ளது. மூன்று பேர் மூன்று காதல் படத்தின் மூலமாக ஆடை வடிவமைப்பாளராக தனது பயணத்தை துவங்கிய சத்யா NJ கிட்டத்தட்ட 46 படங்கள் வரை பணியாற்றி…
Read More
சர்ச்சைகளின் நாயகன் பாலாவின் “வணங்கான்” போஸ்டரே மிரட்டல் !!

சர்ச்சைகளின் நாயகன் பாலாவின் “வணங்கான்” போஸ்டரே மிரட்டல் !!

  இயக்குநர் பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் வணாங்கான் படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முதல் படத்திலேயே புயலாக தாக்கியவர் இயக்குநர் பாலா. எப்போதும் சர்ச்சைகள் சூழ்ந்திருந்தாலும் அவரது படங்கள் மனிதம் பேசும். அனைவரையும் பிரமிக்க வைக்கும். சேது முதல் நாச்சியார் வரை அவரது ஒவ்வொரு படங்களும் தமிழ் சினிமா சரித்திரத்தில் நீங்காத இடம் பிடிப்பவை. ஒரு நீண்ட இடைவேளைக்குப் பிறகு தற்போது நடிகர் அருண் விஜயை வைத்து வணங்கான் படத்தை இயக்கி வருகிறார். பிரம்மாண்டமாக உருவாகி வரும் இப்படத்தை V House Production சார்பில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார். மாநாடு படதிற்குப் பிறகு இப்படமும் அவருக்கு மிகப்பெரிய வெற்றிப்படமாக அமையுமென தெரிகிறது. படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் இன்று ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. போஸ்டரே தற்கால சர்ச்சைகளை அழுத்தமாக பேசும் வகையில் அட்டகாசமாக அமைந்துள்ளது. போஸ்டரில்…
Read More
இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் !!

இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் !!

ஶ்ரீ லக்‌ஷ்மி மூவிஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், தமிழ்த் திரையுலகின் முன்னணி இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ், இயக்கத்தில் நட்சத்திர நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளார். மிகப்பிரம்மாண்டமாக உருவாகவுள்ள, இந்த புதிய திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. பலகாலமாக ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், இந்த அறிவிப்பு, ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. நடிகர் சிவகார்த்திகேயன் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ் உடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, இருவரும் இணையும் படம் விரைவில் துவங்கவுள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு தற்போது இணையம் முழுதும் வைரலாகி வருகிறது. தமிழ் திரையுலகில், தனது திரைப்பயணத்தில் பல ப்ளாக்பஸ்டர் படங்களைத் தந்து, பிரம்மாண்ட கமர்ஷியல் படங்களுக்கு புதிய இலக்கணம் தந்தவர் இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ். பெரிய ஹீரோக்களை வைத்து, இவர் உருவாக்கிய அத்தனை படங்களும், ஹீரோக்களுக்கு மட்டுமல்லாமல், படத்தின் அத்தனை கலைஞர்களுக்கும் திருப்புமுனை படங்களாக அமைந்தன. தற்போது சிறிது இடைவேளைக்குப் பிறகு நடிகர்…
Read More
எண் 6 வாத்தியார் கால்பந்தாட்ட குழு திரை விமர்சனம் !!

எண் 6 வாத்தியார் கால்பந்தாட்ட குழு திரை விமர்சனம் !!

கால்பந்தாட்ட விளையாட்டில் சாதிக்க முயலும் ஏழை குடும்பங்களைச் சார்ந்த இளைஞர்கள் திறமை இருந்தும் எவ்வாறு ஒதுக்கப்படுகிறார்கள் என்பதை மையமாக வைத்து உருவாகியிருக்கும் படம் இயக்குநர் எஸ்.ஹரி உத்ரா இயக்கியுள்ளார் நாயகன் சரத், நாயகி அய்ரா பெரிய கால்பந்தாட்ட வீரராக இருந்த மதன் தக்‌ஷிணா மூர்த்திக்கு ஒரு விபத்தில் காலில் காயம் ஏற்பட்டு ஒழுக்காக நடக்க முடியாத நிலை ஏற்படுகிறது. அவர் தன் கனவை நிறைவேற்ற ஏழை இளைஞர்களுக்கு கோச்சிங் தருகிறார். அதில் நாயகனும் ஒருவர். அவர் நாயகி அய்ராவை காதலிக்கிறார். இதனால் அவர் கவனம் தடுமாறுகிறது. குழு இளைஞர்கள் நன்றாக விளையாட கால்பந்து கமிட்டியில் இவர்களில் சிலரை தேர்ந்தெடுக்கிறார்கள். ஆனால் வில்லன் கீழ்மட்டத்தில் இளைஞர்கள் எப்படி மேலே வரலாம் என அவர்களை தேர்ந்தெடுக்கவிடாமல் தடுத்துவிடுகிறார். அதன் பின் அவர்கள் ஜெயித்தார்களா என்பதே படம். கால்பந்தாட்ட விளையாட்டில் முத்திரை பதிக்க துடிக்கும் கூலி தொழிலாளர்களின் குடும்பங்களைச் சார்ந்த இளைஞர்கள் திறமை இருந்தும் எவ்வாறு…
Read More

திருப்பதியில் வெளியிடப்பட்ட ‘ஆதி புருஷ்’ படத்தின் பிரத்யேக முன்னோட்டம்

  நடிகர் பிரபாஸ் நடிப்பில் தயாராகி இருக்கும் 'ஆதி புருஷ்' படத்தின் பிரத்யேக முன்னோட்டம் ஆன்மீக தலமான திருப்பதியில், நடிகர் பிரபாஸின் ரசிகர்களின் முன்னிலையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. உலகம் முழுவதும் பிரபலமான திருப்பதியில், பிரம்மாண்டமான முறையில் 'ஆதி புருஷ்' திரைப்படத்தின் பிரத்யேக முன்னோட்ட வெளியீட்டு விழா நடைபெற்றது. லட்சக்கணக்கில் திரண்டிருந்த பிரபாஸின் ரசிகர்களின் முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், நடிகர்கள் பிரபாஸ், கிருத்தி சனோன், சன்னி சிங், தேவதத்தா நாகே, தயாரிப்பாளர்கள் பூஷன் குமார், இயக்குநர் ஓம் ராவத், பாடலாசிரியர் மனோஜ் முண்டாஷீர், இசையமைப்பாளர்கள் அஜய்- அதுல் உள்ளிட்ட படக் குழுவினர் கலந்துகொண்டு, முன்னோட்டத்தை வெளியிட்டனர். சீதையை மீட்டெடுக்க ராமன், வானர சேனையுடன் அசாதாரணமான பயணத்தை மேற்கொள்வதையும், தீமையின் மீது நன்மையின் வீரம், சக்தி மற்றும் வெற்றியின் ஒரு பார்வையையும் முன்னிறுத்தும் இந்த முன்னோட்டம், இம்மாதம் பதினாறாம் தேதியன்று வெளியாகவிருக்கும் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகப்படுத்தி இருக்கிறது. 'ஆதி புருஷ்'…
Read More
தோனி தயாரிப்பில் ஹரிஷ் கல்யாண் நடிக்கும் ‘எல்ஜிஎம்’ படத்தின் செகண்ட் லுக் !!

தோனி தயாரிப்பில் ஹரிஷ் கல்யாண் நடிக்கும் ‘எல்ஜிஎம்’ படத்தின் செகண்ட் லுக் !!

தோனி தயாரிப்பில் ஹரிஷ் கல்யாண் நடிக்கும் ‘எல்ஜிஎம்’ படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியானது. தோனி மனைவி சாக்‌ஷியின் தோனி  என்டெர்டெய்ன்மென்ட் தயாரிக்கும் முதல் படம் L.G.M. இது, முற்றிலும் குடும்பங்கள் கொண்டாடும் ஒரு படமாக உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தின் இரண்டாவது லுக் வெளியிடப்பட்டுள்ளது. எல்.ஜி.எம் அறிவிக்கப்பட்டதிலிருந்தே ரசிகர்கள் மத்தியில் ஓர் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் அவர்களை மகிழ்விக்கும் விதமாக செகண்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது, இந்த செகண்ட் லுக் நிச்சயமாக ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் தூண்டும் விதமாக அமைந்துள்ளது. செகண்ட் லுக் போஸ்டரில் ஹரிஷ் கல்யாண் ஒரு பேருந்தின் நடுவில் அமர்ந்திருக்க பிரதான பாத்திரங்கள் அவரைச் சுற்றி அமர்ந்திருப்பதைக் காண முடிகிறது. இப்படம் கிரிக்கெட் வீரர் தோனி மற்றும் அவரது மனைவி சாக்‌ஷி தோனியின் தோனி என்டெர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் முதல் தயாரிப்பு என்பதாலேயே இது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. படத்தை ரமேஷ் தமிழ்மணி இயக்குகிறார். படத்தில் ஹரிஷ்…
Read More

அமெரிக்காவில் வெளியிடுவதற்கு முன் ஸ்பைடர் மேன்: அகிராஸ் தி ஸ்பைடர்-வெர்ஸ் இந்தியாவில் வெளியாகிறது

* இந்தியாவில் உள்ள அனைத்து ஸ்பைடர் மேன் ரசிகர்களுக்கும் சோனி பிக்சர்ஸ் எண்டர்டெயின்மென்ட் இந்தியா ஒரு ஆச்சரியத்தை அறிவித்துள்ளது! ஸ்பைடர் மேன்: அகிராஸ் தி ஸ்பைடர்-வெர்ஸ் 1 ஜூன் 2023 அன்று, அமெரிக்காவில் வெளியிடுவதற்கு ஒரு நாள் முன்னதாக வெளியிடப்படும்!*   இந்திய கிரிக்கெட் வீரர் ஷுப்மான் கில் குரல் கொடுத்த பவித்ர் பிரபாகரின் இறுதி டிரெய்லர் இன்று வெளியிடப்படுகிறது ஸ்பைடர் மேன்: ஸ்பைடர் வசனம் முழுவதும் படத்தின் டிரெய்லர் வெளிவந்ததில் இருந்து இந்திய ரசிகர்களை மிகவும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. சமீபத்தில், படத்தின் இந்தி மற்றும் பஞ்சாபி பதிப்புகளுக்கு இந்திய ஸ்பைடர் மேன், பவித்ர் பிரபாகரின் குரலை பிரபல கிரிக்கெட் வீரர் ஷுப்மான் கில் வழங்குவார் என்று தயாரிப்பாளர்கள் அறிவித்தனர், மேலும் இந்த அறிவிப்பு பார்வையாளர்களின் உற்சாகத்தை உச்சத்திற்கு கொண்டு சென்றது. ரசிகர்களின் ஆர்வத்தின் காரணமாக, படத்தை உலகம் முழுவதும் வெளியிடுவதற்கு ஒரு நாள் முன்னதாக, ஜூன் 1, 2023 அன்று…
Read More
நடிகை அனுஷ்கா ஷர்மா விதி மீறியதாக அவரது பாதுகாவலருக்கு 10,500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது

நடிகை அனுஷ்கா ஷர்மா விதி மீறியதாக அவரது பாதுகாவலருக்கு 10,500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது

நடிகை அனுஷ்கா ஷர்மா தனது பாதுகாவலருடன் பைக்கில் ஹெல்மெட் அணியாமல் சென்ற வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, விதி மீறியதாக கூறி அவரது பாதுகாவலருக்கு 10,500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டிருக்குள்ளது, ஆக்டர் அமிதாப் பச்சன் படப்பிடிப்புக்கு காரில் சென்று கொண்டிருந்தபோது டிராபிக் ஜாம் ஆனதாகவும், சாலையில் பைக்கில் நின்று கொண்டிருந்த ஒருவரிடம் லிஃப்ட் கேட்டு சென்றதாகவும் தகவல் பரவிச்சு. இதையடுத்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “ரைடுக்கு நன்றி நண்பா. நீங்கள் யார் என்று தெரியாது. ஆனாலும் நீங்கள் ஒப்புக்கொண்டு படப்பிடிப்பு நடக்கும் இடத்துக்கு வேகமாகவும், தீர்க்க முடியாத டிராபிக் சிக்கல்களை தவிர்த்தும், என்னை கொண்டு வந்து சேர்த்தீர்கள். தொப்பி, ஷார்ட்ஸ், மஞ்சள் நிற டி-சர்ட் அணிந்த உங்களுக்கு நன்றி” என பதிவிட்டிருந்தார். இதைப்பார்த்த நெட்டிசன்கள், ‘சாமானியர்களுக்கு மட்டும் தான் சாலை விதியா? பிரபலங்களுக்கு விதிவிலக்கா’ என விமர்சிச்சாய்ங்க. இதை யடுத்து நடிகை அனுஷ்கா ஷர்மா தனது பாதுகாவலருடன் இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட்…
Read More
திரைப்படங்களுக்கு ‘யூ/ஏ 7+, யூ/ஏ 13+, யூ/ஏ 16+ என்பது போன்று சான்றிதழை வழங்கபட உள்ளது

திரைப்படங்களுக்கு ‘யூ/ஏ 7+, யூ/ஏ 13+, யூ/ஏ 16+ என்பது போன்று சான்றிதழை வழங்கபட உள்ளது

பிரதமர் மோடி தலைமையில் நேற்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் திருத்தப்பட்ட ஒளிப்பதிவு சட்ட முன்வரைவுக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. வழக்கமாக ஒரு திரைப்படம் தியேட்டர் மூலமாக மக்களை சென்றடையும் முன் அதற்கு தணிக்கை குழு 'யு, யு/ஏ அல்லது ஏ' என்பது போன்று சான்றிதழை வழங்கும். இதில் யு சான்றிதழ் பெற்ற படங்களை சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினரும் பார்க்கலாம். அதேபோல் யு/ஏ சான்றிதழ் படங்களை 12 வயதுக்கு குறைவானவர்கள் பெற்றோர்களின் கண்காணிப்புடன் தான் பார்க்க முடியும். இறுதியாக ஏ சான்றிதழ் பெற்ற படங்களை 18 வயதுக்கு மேல் உள்ளவர்கள் மட்டுமே பார்க்க அனுமதிக்கப்படுவர். தற்போது மத்திய மின்னணு மற்றும் தகவல் தொடர்பு அமைச்சகம் கொண்டு வந்துள்ள திருத்தப்பட்ட ஒளிப்பதிவு முன்வரைவு சட்டத்தின் மூலம் தணிக்கை குழு வழங்கும் மேற்கண்ட சான்றிதழ்களை வயது வாரியாக பிரித்து சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளது. அதாவது 'யூ/ஏ 7+, யூ/ஏ 13+,…
Read More