சங்கமித்ரா-வில் இருந்து விலகியது ஏன்? – ஸ்ருதி தரப்பு விளக்கம்!

சங்கமித்ரா-வில் இருந்து விலகியது ஏன்? – ஸ்ருதி தரப்பு விளக்கம்!

ஸ்ரீதேனாண்டாள் ஃபிலிம்ஸ் தயாரிக்கும் சங்கமித்ரா என்ற பிரம்மாண்ட படம் சுந்தர்.சி இயக்கத்தில் தயாராகிவருகிறது . இந்த படத்தில் ஜெயம்ரவி, ஆர்யா உள்ளிட்டோருடன் ஸ்ருதிஹாசன் நடிப்பதாக இருந்தது. இதனிடையே இப்படத்தின் கதை என்ன என்பது குறித்து படக்குழு தெரிவித்துள்ளது. சங்கமித்ரா 8ம் நூற்றாண்டில் நடக்கும் கதை. சங்மித்ரா ஒரு பேரழகி. அவள் தன் ராஜ்ஜியத்தை காக்க போராடும் போது சந்திக்கும் இன்னல்களும், துயரங்களும் தான் படத்தின் கதை. பல்வேறு ராஜ்ஜியங்கள், உறவுகள் குறித்து இப்படம் பேசவுள்ளதாகவும். திரைப்பட மகுடத்தில் சங்கமித்ரா ஒரு ரத்தினமாக ஜொலிக்கும் என படக்குழு தரப்பில் தெரிவிக்க ப்பட்டுள்ளது.இது கற்பனை கதை என்றும். தொன்மையான தமிழ் மொழிக்கு இந்தப்படம் சமர்ப்பணம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. சங்கமித்ரா இரண்டு பாகங்களாக வெளியாகும் என அதில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இப்படி தமிழ் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்புடன் தயாரிப்பில் இருக்கும் படமான 'சங்கமித்ரா'. கான் திரைப்பட விழாவில் இப்படம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் அறிமுக விழாவில் இயக்குநர்…
Read More
12 மணி நேரத்தில் 50 லட்சம் பார்வைகள் -‘விவேகம்’ டீஸரின் தென்னிந்திய சாதனை!

12 மணி நேரத்தில் 50 லட்சம் பார்வைகள் -‘விவேகம்’ டீஸரின் தென்னிந்திய சாதனை!

சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படம் 'விவேகம்'. விவேக் ஓபராய், காஜல் அகர்வால், அக்‌ஷரா ஹாசன் உள்ளிட்ட பலர் நடித்து வரும் இப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு பல்கேரியாவில் மும்முரமாக நடைபெற்று வருகிறது. விரைவில் மொத்த படப்பிடிப்பையும் முடித்து சென்னை திரும்ப படக்குழு திட்டமிட்டுள்ளது. ஆகஸ்ட் 10-ம் தேதி படத்தை வெளியிட முடிவு செய்துள்ளது படக்குழு. மே 11-ம் தேதி 'விவேகம்' டீஸர் இணையத்தில் வெளியிடப்பட்டது. இதற்கு அஜித் ரசிகர்கள் பெரும் வரவேற்பு கிடைத்துள்ள https://www.youtube.com/watch?v=uM7zTAMFRxc&feature=youtu.beது. "இந்த உலகமே உன்னை எதிர்த்தாலும், எல்லா சூழ்நிலையும் நீ தோத்துட்ட, நீ தோத்துட்ட என உன் முன்னால் நின்னு அலறினாலும் நீயா ஒத்துக்கிற வரைக்கும் எவனாலும், எங்கேயும், எப்பவும் உன்னை ஜெயிக்க முடியாது. NEVER EVER GIVE UP" என்று அஜித் பேசியுள்ள வசனம் இணையத்தில் வைரலாக பரவிவருகிறது. 12 மணி நேரத்தில் 50 லட்சம் பார்வைகளை கடந்த முதல் தென்னிந்திய படத்தின் டீஸர்…
Read More
மே 30 முதல் ஸ்ட்ரைக் நடக்கும்? ஆனா நடக்காது!

மே 30 முதல் ஸ்ட்ரைக் நடக்கும்? ஆனா நடக்காது!

கோலிவுட் என்றழைக்கப்படும் தமிழ் திரை உலகில் உள்ள பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. அக்கூட்டம் முடிந்தவுடன் பத்திரிகையாளர்கள் மத்தியில் பேசிய விஷால், "மே 30-ம் தேதி முதல் போராட்டம் நடத்தவுள்ளோம். எந்ததொரு திரையரங்கிலும் படம் ஓடாது, படப்பிடிப்பும் நடக்காது என்று தயாரிப்பாளர் சங்கமும், திரையரங்க உரிமையாளர்கள் சங்கமும் மற்றும் முக்கிய அமைப்புகள் இணைந்து முடிவு எடுத்துள்ளோம்" என்று தெரிவித்தார். ஆனால் விஷா லின் இந்த முடிவுக்கு பல திரையங்க உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர். மேலும், இம்முடிவுக்கு குறித்து ஆலோசிப்பதற்காக விரைவில் சங்கக் கூட்டத்தை கூட்டவும் திட்டமிட்டுள்ளார்கள். இது குறித்து கோயம்புத்தூர் திரையரங்க உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியத்திடம் பேசிய போது, "தமிழக அரசை விஷால் முறைப்படி அணுகி கோரிக்கை வைத்திருக்க வேண்டும். அப்படி எதுவுமே நடக்காமல் வேலைநிறுத்தம் என்பது எந்த விதத்தில் நியாயம். விஷால் அறிவித்துள்ள வேலைநிறுத்தத்தில்…
Read More
ஆன்லைன் வர்த்தகத்தை ஆதரிக்கும்  “விளையாட்டு ஆரம்பம்”

ஆன்லைன் வர்த்தகத்தை ஆதரிக்கும் “விளையாட்டு ஆரம்பம்”

கார்த்திகேயன் பெருமையுடன் வழங்க மேக் 5 ஸ்டுடியோஸ் என்ற பட நிறுவனம் அதிகப் பொருட்செலவில் தயாரிக்கும் படம் “ விளையாட்டு ஆரம்பம். இந்த படத்தில் யுவன் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக ஸ்ராவியா நடிக்கிறார். மற்றும் ரியாஸ்கான், பவர்ஸ்டார் சீனிவாசன், பானுசந்தர், விஜய்ஆனந்த், எலிசபெத் ஆகியோர் நடிக்கிறார்கள். இவர்களுடன் நீண்ட இடைவெளிக்கு பிறகு அனுஜா நடிக்கிறார். ஒளிப்பதிவு - அருண்மொழி சோழன் / இசை - ஸ்ரீகாந்த் தேவா பாடல்கள் - ருக்சீனா, இந்துமதி, எழில்வேந்தன், தென்றல், ஸ்ரீகாந்த்தேவா கலை - A.S.சாமி / நடனம் - பாபி, தினேஷ், இருசன் , அபீப் ஸ்டன்ட் - ஹரிதினேஷ் / எடிட்டிங் - எஸ்.பி.அகமது தயாரிப்பு நிர்வாகம் - கார்த்திக் தயாரிப்பு மேற்பார்வை - ஆத்தூர் ஆறுமுகம், ரபீக். இந்த படத்தின் கதையை பெரோஸ்கான் எழுதி இருக்கிறார். தயாரிப்பு - ஆனந்த் உதார்கர், கார்த்திகேயன். திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார்கள் விஜய் R.…
Read More
“என் ஆளோட செருப்பக் காணோம்” – டைட்டில் ஏன்?- இயக்குநர் ஜெகன்நாத் விளக்கம்

“என் ஆளோட செருப்பக் காணோம்” – டைட்டில் ஏன்?- இயக்குநர் ஜெகன்நாத் விளக்கம்

‘என் ஆளோட செருப்பக் காணோம்’ என்ற தலைப்பில் சில நாட்களுக்கு முன்பு வெளிவந்த போஸ்டர்கள் நிச்சயம் தமிழ் திரைப்பட ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கும். அது என்ன ? , இப்படி ஒரு தலைப்பு என இயக்குனர் ஜெகன்நாத்திடம் கேட்ட போது, “ஒரு செருப்பு கூட நம் வாழ்க்கையில் சில திருப்பங்களை ஏற்படுத்திவிடும். ஒரு சமயம் ஒரு தெலுங்குத் தயாரிப்பாளருக்குக் கதை சொல்ல போன போது, நான் அணிந்து கொண்டிருந்த ஒரு ஷு, அவரைச் சந்திக்க சென்ற ஹோட்டலுக்கருகில் தனித் தனியாக வந்துவிட்டது. என்ன செய்வதென்று தெரியாமல், அவருக்கு போன் செய்து வேறு ஒரு காரணத்தைச் சொல்லி மாலை சந்திப்பதாகச் சொன்னேன். அந்த ஷு பிரச்சனை இல்லாமல் இருந்து, நான் அவரைச் சந்தித்து, அந்தப் படத்தை எடுத்திருந்தால் தெலுங்கில் ஒரு பெரிய வெற்றிப் படத்தைக் கொடுத்திருக்கலாம். ஆனால், அவரைச் சந்திக்க முடியாமல் போனதால் அப்படி எதுவும் நடக்கவில்லை. சென்னையில் மழை, வெள்ளம் வந்த போது எத்தனையோ…
Read More
பிரபாஸ் – உலகமெங்கும் உற்று நோக்கும் உச்ச நட்சத்திரம்

பிரபாஸ் – உலகமெங்கும் உற்று நோக்கும் உச்ச நட்சத்திரம்

பல தெலுங்கு வெற்றி படங்களில் நடித்த பிரபாஸ், பாகுபலி படத்தின் மூலம் தனது பிரம்மாண்ட நடிப்பால் அனைத்து மொழி ரசிகர்களையும் கவர்ந்து உலகமே உற்று நோக்கும் உச்ச நட்சத்திரமானார்.பிரம்மிப்பையும் பிரம்மாண்டத்தையும் இணை சேர்த்து அனைவரையும் கவர்ந்த S.S.ராஜமௌலியின் ’பாகுபலி’ படத்தின் வெற்றி உலகம் அறிந்ததே. தற்போது S.S.ராஜமௌலியின் இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் உலகமே பெரிதும் எதிர்பார்க்கும் 'பாகுபலி 2' திரைப்படம் உலகமெங்கும் ஏப்ரல் மாதம் 28ம் தேதி வெளியாகவுள்ளது. ஒவ்வொரு நடிகருமே ஒரு படத்தை ஒரு வருடத்துக்குள்ளாவது முடித்துவிட்டு, அடுத்த படத்துக்கு சென்றுவிடுவார்கள். ஆனால், 'பாகுபலி' 2 பாகங்களுக்கும் சேர்த்து சுமார் 3 ஆண்டுகள் ஒதுக்கி நடித்து முடித்துள்ளார் பிரபாஸ். படத்துக்கான அவருடைய உழைப்பை வார்த்தைகளால் விவரிக்க இயலாது. ஒரு நடிகர் சினிமா மீது கொண்ட காதலினாலும் தனது ரசிகர்கள் மீது கொண்ட பாசத்தினாலும் இதையும் தாண்டி எதுவும் செய்யக்கூடுமா என்று அனைவரது புருவத்தையும் உயர்த்த வைத்திருக்கிறது பிரபாஸின் உழைப்பு. ஒரே…
Read More
தனுஷ் இயக்கத்தில் ராஜ்கிரண் நடித்த ,ப. பாண்டி’ – ஏப் 13 ரிலீஸ்

தனுஷ் இயக்கத்தில் ராஜ்கிரண் நடித்த ,ப. பாண்டி’ – ஏப் 13 ரிலீஸ்

நடிகர் தனுஷ் இயக்குனராக களமிறங்கும் "ப.பாண்டி" (பழனிச்சாமி பாண்டி) படத்தில் ராஜ்கிரண் ஹீரோவாக நடிக்க ஜோடியாக ரேவதி நடித்துள்ளார். இவர்களுடன் பிரசன்னா, சாயாசிங், வித்யுலேகா ராமன், ரின்ஸன், தீனா(அறிமுகம்), ஆடுகளம் நரேன், பாஸ்கர், மாஸ்டர் எம்.பி.ராகவன், பேபி சவி ஷர்மா, சென்ராயன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சிறப்பு தோற்றத்தில் மடோனா செபாஸ்டின். நட்பு தோற்றத்தில் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன், இயக்குனர் பாலாஜி மோகன், ரோபோ சங்கர் மற்றும் திவ்யதர்ஷினி நடித்துள்ளனர். கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், தயாரிப்பு - தனுஷ்,ஒளிப்பதிவு - ரா.வேல்ராஜ், இசை - ஷான் ரோல்டான், பாடல்கள் - தனுஷ், செல்வராகவன் மற்றும் ராஜூ முருகன், நிர்வாக தயாரிப்பு - எஸ். வினோத் குமார், படத்தொகுப்பு - ஜி.கே. பிரசன்னா, நடனம் - பாபா பாஸ்கர், சண்டைப்பயிற்சி - சில்வா, ஆடை வடிவமைப்பு - பூர்ணிமா ராமசாமி, தயாரிப்பு மேற்பார்வை - எஸ்.பி. சொக்கலிங்கம், மக்கள் தொடர்பு…
Read More
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல் ; நடிகர் விஷால் வெற்றி!

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல் ; நடிகர் விஷால் வெற்றி!

தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல் சென்னை அண்ணாநகரில் உள்ள கந்தசாமி நாயுடு கல்லூரியில் நேற்று நடைபெற்றது. புதிய நிர்வாகிகளுக்கான இந்த தேர்தலில் தலைவர் பதவிக்கு நடிகர் விஷால், ஆர். ராதாகிருஷ்ணன், கேயார் ஆகிய மூன்று அணிகள் போட்டியிட்டன. இந்த தேர்தலில், நடிகர்கள் ரஜினிகாந்த், கமலஹாசன் உள்ளிட்டோர் வாக்களித்தனர். இதையடுத்து, பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு நேற்று இரவு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில், திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தலைவருக்கு போட்டியிட்ட விஷால் 478 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இதேபோன்று, பொருளாளர் பதவிக்கு விஷால் அணி சார்பில் போட்டியிட்ட எஸ்.ஆர்.பிரபு 344 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட எஸ்.ஏ.சந்திரசேகர் 326 வாக்குகளும், விஜய் முரளி 212 வாக்குகளும் பெற்றனர். துணைத்தலைவர் பதவிக்கு போட்டியிட்ட, நடிகர் பிரகாஷ்ராஜ் 408 வாக்குகளும், இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் 357 வாக்குகளும் பெற்று வெற்றி பெற்றனர். மேலும், செயற்குழு உறுப்பினர்களாக விஷால் அணியை சேர்ந்த…
Read More
‘வெங்காயம்’ படத்தின் இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார், ‘நெடும்பா’ வெளியீட்டுக்காக படும் துயர்!

‘வெங்காயம்’ படத்தின் இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார், ‘நெடும்பா’ வெளியீட்டுக்காக படும் துயர்!

சங்ககிரி ராஜ்குமார் இயக்கத்தில் வெளியான படம் 'வெங்காயம்'. கவுரவ வேடத்தில் சத்யராஜ் நடித்திருந்தார். இப்படத்துக்கு பலரும் தங்களுடைய பாராட்டைத் தெரிவித்திருந்தார்கள். இந்நிலையில் சங்ககிரி ராஜ்குமார் தன்னுடைய அடுத்த படமான 'நெடும்பா'வை வெளியிட தான் அடையும் துயரங்களின் வேதனையை தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார். இயக்குநர் சங்ககிரி ராஜ்குமாரின் ஃபேஸ்புக் பதிவு: '' 'நெடும்பா' திரைப்படம் முடிந்து இரண்டு வருடங்கள் ஆகிறது. முற்றிலும் புதுமுகங்கள் நடித்த ஒரு படத்தை அவ்வளவு எளிதாக திரையிட்டு விட முடியாது. அப்படி வெளியிட்டாலும் எந்த பயனும் இருக்காது. இந்நிலையில் படம் பார்த்த சேரன் அண்ணன் 'வெங்காயம்' திரைப்படத்தை விட பல மடங்கு சிறந்த படம் என சிலாகித்து இதை நானே வெளியிடுகிறேன் என சொல்லி ஒப்பபந்தம் செய்திருந்த நிலையில், சில சிக்கல்களால் ஒன்றரை ஆண்டுகள் கடந்து விட்டன. அதன் பிறகு வேறு நிறுவனம் மூலமாக வெளியிடலாம் என அவர் முயற்சித்த போது உயர்மதிப்பு நோட்டு பிரச்சினை உட்பட…
Read More
சந்திரஹாசன் நடித்த திரைப்படம் -அப்பத்தாவ ஆட்டய போட்டுட்டாங்க

சந்திரஹாசன் நடித்த திரைப்படம் -அப்பத்தாவ ஆட்டய போட்டுட்டாங்க

ஒரு முதியோர் இல்லம், முதுமை காலத்தில் காதலை அனுபவிக்க எண்ணும் ஒரு ஜோடி, அவர்களின் காதலை தடுக்க நினைக்கும் உறவுகள், காதலை காப்பாற்ற கைக்கொடுக்கும் நண்பர்கள், இறுதியில் காதல் ஜோடிகள் ஒன்று சேர்ந்தார்களா என்பதை வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் நகைச்சுவை திரைக்கதையாய் உறுமாற்றி புதுமுக இயக்குனர் N.ஸ்டிபன் ரங்கராஜ் இயக்கியுள்ள படம் "அப்பத்தாவ ஆட்டய போட்டுட்டாங்க" GB Studio நிறுவனத்திற்காக பிரான்சிஸ் ஆல்பர்ட் ஆண்டனி மற்றும் Leo Vision நிறுவனத்திற்காக V.S. ராஜ்குமார் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தின் கதாநாயகனாக நடிகர் கமல்ஹாசனின் சகோதரர் சந்திரஹாசனும், கதாநாயகியாக நடிகர் விக்ராந்தின் அம்மா ஷீலாவும் நடித்துள்ளனர். இவர்களுடன் டெல்லிகணேஷ், காத்தாடி ராமமூர்த்தி, ஷண்முகசுந்தரம், ஜெயராவ் ஆகியோர் நடித்துள்ளனர். படப்பிடிப்பின் போது பல ஆலோசனைகளை தந்து ஆசானாய் விளங்கிய சந்திரஹாசனின் மறைவு, இப்படக்குழுவை மிகவும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அவரது ஆத்மா சாந்தியடைய இறைவனிடம் வேண்டிக்கொள்ளும் இவ்வேளையில் அவரது நீங்கா நினைவாக இப்படம் அனைவரையும் கவரும்…
Read More