இந்தியாவின் முதல் லெஸ்பியன் க்ரைம் திரில்லர் !

இந்தியாவின் முதல் லெஸ்பியன் க்ரைம் திரில்லர் !

  இந்திய திரைப்பட வரலாற்றில் வியத்தகு மாற்றங்களை தந்த இயக்குநர் ராம் கோபால் வர்மாவின் லேட்டஸ்ட் திரைப்படம் ‘காதல் காதல்தான்’ . ஆண்களை வெறுக்கும் இரு பெண்களுக்குள் காதல் வர, ஓர் பாலின காதலை காப்பாற்றிக்கொள்ள அவர்கள் போராடுவதே இந்தப்படம். இந்தியாவின் முதல் லெஸ்பியன் க்ரைம் திரில்லராக இப்படம் உருவாகியுள்ளது. Artsee Media / Rimpy Arts International இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர். இந்தி மொழியில் தயாரான இப்படம் ஏப்ரல் 8 ஆம் தேதி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் வெளியாகிறது. தமிழ் பதிப்பின் முன் வெளியீட்டை ஒட்டி இயக்குநர் ராம் கோபால் வர்மா நாயகிகள் நைனா கங்குலி, அப்ஷரா ஆகியோர் இன்று சென்னையில் பத்திரிக்கை ஊடக நண்பர்களை சந்தித்தனர். இந்நிகழ்வில் நாயகி நைனா கங்குலி பேசியதாவது… ராம் கோபால் வர்மா சாருக்கு நன்றி, என் மீது நம்பிக்கை வைத்து என்னை தெலுங்கு படத்தில் அறிமுகப்படுத்தினார். இப்போது புதுமையான முயற்சியான இந்தப்படத்தில்…
Read More
நடிகர் ஜீவா பிடித்த சிகரெட் !  ஹோட்டலில் தீ அலாரம்!

நடிகர் ஜீவா பிடித்த சிகரெட் ! ஹோட்டலில் தீ அலாரம்!

நடிகர் ஜீவா 83 பட ஷீட்டிங்கில் கலந்து கொண்ட போது, சிகரெட் பிடித்தே மொத்த ஹோட்டலையும் அலாரமடிக்க வைத்து காலி செய்திருக்கிறார். 1983 கிரிக்கெட் உலககோப்பையை வென்ற தருணத்தை மையமாக வைத்து உருவான பாலிவுட் படத்தில் நடிகர் ஜீவா ஶ்ரீகாந்த் பாத்திரத்தில் நடித்திருந்தார். இந்தப்படம் அனைத்து மொழிகளிலும் பெரு வெற்றி பெற்றிருக்கிறது இந்தப்படத்தின் ஷூட்டிங்கின் போது லண்டனில் ஒரு ஹோட்டலி படக்குழு தங்கியுள்ளது. அங்கே தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. இதை குறித்து நடிகர் ஜீவாவே இரு பேட்டியில் கூறியதாவது… 83 பட ஷீட்டிங்கில் பண்ண கலாட்டா எக்கசக்கமாக இருக்கு. லண்டன் போன மொத நாளே ஹோட்டல் மொத்தத்தையும் காலி பண்ணி பெரிய கலாட்டா நடந்தது. முதல் நாள் ஷீட்டிங் எல்லோரும் ஹோட்டல் வந்தப்புறம், நான் அங்க இருந்த டீமோட சேர்ந்து ரிகர்சல் பண்ணேன். படத்துல ஒரு சீன் வரும் ஶ்ரீகா தொடர்ந்து சிகரெட் பிடிக்கிற மாதிரி, அந்த காட்சிக்காக டீமோட…
Read More
முதன்முறையாக உலக கோப்பை வென்ற இந்தியா!!!!- எப்படி இருக்கிறது 83!

முதன்முறையாக உலக கோப்பை வென்ற இந்தியா!!!!- எப்படி இருக்கிறது 83!

தமிழ்நாட்டுல ஏன் இந்தியாவிலயே மக்கள் உடம்புல இருந்து பிரிக்க முடியாத ரெண்டு விசயம் அரசியல் அப்புறம் சினிமா. ஆனா இந்த ரெண்டையும் தாண்டி இங்க இருக்க ஆளுங்கள கட்டி போட்டு, உணர்வுகளா நம்ம எல்லோரையும் ஒண்ணா பிணைக்கிற ஒரு விஷயம் கிரிக்கெட் சுதந்திரத்திற்கு பின்னாடி உலக நாடுகள் மத்தியில நம்ம நாட்ட தலை நிமிர வைத்த சம்பவம் தான் 83 உலககோப்பையை இந்தியா வென்ற தருணம். வரலாற்றுல இன்னைக்கும் ஒரு பொன் தருணமா இருக்கிற சம்பவம் தான் 83 கிரிக்கெட் உலககோப்பை. வரலாற்று சம்பவமாக இருக்கட்டும், உண்மை நிகழ்வாக இருக்கட்டும், வலி நிறைந்த வாழ்கையா இருக்கட்டும், இல்ல காவியமா இருக்கட்டும், அது சினிமாவா எடுக்கபடும் போது, அது வெறும் கதை தான். அது ஆழமான சம்பவம்னு யாரும் ரெண்டு நிமிஷம் எக்ஸ்ட்றா கைதட்ட மாட்டாங்க. இப்படி இருக்க நிலைமைல ஒரு கிரிக்கெட் டீம், அது வேலைக்கே ஆகாது, இதுவரையும் அந்த டீம்…
Read More
பிரம்மாஸ்த்ரா தென்னிந்திய பதிப்பை இயக்குநர் வெளியிடுகிறார் ராஜமௌலி !

பிரம்மாஸ்த்ரா தென்னிந்திய பதிப்பை இயக்குநர் வெளியிடுகிறார் ராஜமௌலி !

  நடிகர் அமிதாப் பச்சன், ரன்பீர் கபூர், ஆலியா பட், மௌனி ராய் மற்றும் நாகார்ஜுனா அக்கினேனி ஆகியோரின் நட்சத்திரக் கூட்டணியில் இயக்குநர் அயன் முகர்ஜி இயக்க்த்தில் உருவாகியுள்ள பிரம்மாஸ்த்ரா படத்தை தெலுங்கின் பிரபல இயக்குநர் SS.ராஜமௌலி வழங்குகிறார் இது குறித்து SS.ராஜமௌலி கூறுகையில், பிரம்மாஸ்திரம் திரைப்படத்தை நான்கு தென்மொழிகளிலும் பார்வையாளர்களுக்கு வழங்குவதில் நான் உண்மையிலேயே மகிழ்ச்சியடைகிறேன். பிரம்மாஸ்திரம் படத்தின் கரு தனித்துவமானது, இது கதை மற்றும் காட்சியிலும் பிரதிபலிக்கிறது. பல வழிகளில், இது பாகுபலியின் உழைப்பையும், காதலையும் எனக்கு நினைவூட்டுகிறது. நான் பாகுபலிக்கு செய்ததைப் போலவே, பிரம்மாஸ்திரம் திரைப்படத்தை உருவாக்குவதில் அயன் அதிக நேரத்தை செலவிடுவதையும், அதைச் சரியாகப் உருவாக்குவதில் காட்டும் பொறுமையையும் நான் பார்த்துகொண்டிருக்கிறேன். இந்தத் திரைப்படம் பழங்கால இந்தியப் பண்பாட்டின் கருப்பொருளை, நவீன தொழில்நுட்பம் மற்றும் அதிநவீன VFX உடன் இணைத்து  உங்கள் மனதைக் கவரும் வைகையில் உருவாக்கபட்டுள்ளது! எனது திரைப்பயணத்தில், நான் நினைத்து மகிழக்கூடிய ஒன்றாக…
Read More
ரன்பீர் கபூர், ஆலியா பட் நடிப்பில் “பிரம்மாஸ்த்ரா பாகம் – 1”,  09.09.2022  வெளியாகிறது ! !

ரன்பீர் கபூர், ஆலியா பட் நடிப்பில் “பிரம்மாஸ்த்ரா பாகம் – 1”, 09.09.2022 வெளியாகிறது ! !

இந்தியாவின் பிரம்மாண்ட படைப்பான “பிரம்மாஸ்த்ரா” வெளியீட்டை ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருந்த, உலகெங்கிலும் உள்ள திரைப்பட ரசிகர்களின் காத்திருப்பு இறுதியாக முடிவுக்கு வந்திருக்கிறது. அமிதாப் பச்சன், மௌனி ராய் மற்றும் நாகார்ஜுனா அக்கினேனி ஆகியோருடன் ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா பட் ஜோடியாக நடித்துள்ள “பிரம்மாஸ்த்ரா”, பண்டைய இந்தியா மற்றும் நவீன உலகின் பிரதிப்லிப்பை ஒருங்கினைத்த திரை காவியமாக தரவுள்ளது, 2022 ஆம் ஆண்டில் இந்திய ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இத்திரைப்படம் தற்போது வெளியீட்டுக்கு தயாராகியுள்ளது. டில்லியில் ஏராளமான ரசிகர்கள் முன்னிலையில், இளைஞர்களின் இன்றைய அடையாளமாக திகழும் ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா பட் மற்றும் இயக்குனர் அயன் முகர்ஜி ஆகியோர் இணைந்து, மோஷன் போஸ்டரை ரசிகர்களின் பெரும் ஆரவாரத்திற்கு மத்தியில் வெளியிட்டனர். மேலும் இப்படத்தின் அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதி 09.09.2022 எனவும் அறிவித்தனர். மோஷன் போஸ்டர் ரன்பீர் கபூரின் கதாப்பாத்திரமான சிவன் பாத்திரத்தை, பிரமிக்க தக்கவகையில், நெருப்புக்கு மத்தியில் போற்றும் வகையில் அறிமுகப்படுத்தியுள்ளது.…
Read More
அசத்தலான திரைப்படம் மூலம், பாலிவுட்டில் கால் பதிக்கிறார், நடிகர் மஹத் ராகவேந்திரா  !

அசத்தலான திரைப்படம் மூலம், பாலிவுட்டில் கால் பதிக்கிறார், நடிகர் மஹத் ராகவேந்திரா !

  திரைத்துறையில் வெகு சில நடிகர்களே மொழி எல்லைகளை கடந்து, இந்தியா முழுதும் மிளிரும் நட்சத்திரமாக,  மின்னும் திறமை பெற்றிருக்கிறார்கள். அந்த வகையில் மின்னும் நடிகர்கள் வெற்றிகளையும், பாராட்டுக்களையும் மட்டும் குவிப்பதில்லை, ரசிகர்களின் அன்பையும் சேர்த்தே  வெல்கிறார்கள். அந்த வகை நடிகர்களை தனித்துவமாக்குவது, அவர்களிம் அடுத்த வீட்டு பையன் போன்ற லுக்கும், அவர்களின் இயல்பு மிகு,  நேர்த்தியான நடிப்புமே ஆகும். இந்த வரிசையில்,  பாலிவுட்டில் பெரும் நட்சத்திரங்களும், திறமையான  தொழில்நுட்ப கலைஞர்களும் இணையும், பிரம்மாண்ட படத்தில் இணைந்து, புதிதாக பாலிவுட்டில் தனது பயணத்தை துவங்கியுள்ளார் நடிகர் மஹத் ராகவேந்திரா. ஆம் இயக்குநர் சத்ரம் ரமணி இயக்கத்தில்,  முதாஸ்ஸர் அஜிஸ் கதை, திரைக்கதை எழுதி தயாரிக்கும், புதிய திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டில் நாயகனாக அறிமுகமாகிறார் மஹத் ராகவேந்திரா. மங்காத்தா புகழ் நடிகர் மஹத் ராகவேந்திரா, இப்படத்தில் நடிகர் ஜாஹிர் இக்பாலுடன் இணைந்து மற்றொரு நாயகனாக நடிக்கின்றார். பாலிவுட்டின் பெரும் நட்சத்திரங்களான சோனாக்‌ஷி சின்ஹா,…
Read More
சூர்யவன்சி திரை விமர்சனம் !

சூர்யவன்சி திரை விமர்சனம் !

இயக்கம் - ரோஹித் ஷெட்டி நடிகர்கள்  -  அக்‌ஷய்குமார், காத்ரீனாஃகைப் கதை : மும்பையில் 1996 குண்டு வெடிப்பு தாக்குதலில் ஈடுபட்ட குற்றவாளிகள், மீண்டும்ஒருபெரும்தாக்குதலைதிட்டமிடுகிறார்கள்அதைபோலீஸ்அதிகாரியானசூர்யவன்சிஎப்படிமுறியடிக்கிறார்என்பதுதான்கதை பாலிவுட்டில் இரண்டு வருடங்களாக தியேட்டருக்கென்றே காத்திருந்த படம். பாலிவுட்திரைக்கொண்டாட்த்தைதிரும்பகொண்டுவரும்எனதிரையுலகினர்பெரிதாகநம்பியபடம் பாலிவுட்டில் ஹிட்டடித்த சிம்பா, சிங்கம் பாத்திரங்கள் இப்படத்தின் டிரெய்லரில் வர எதிர்பார்ப்பு எகியிருந்தது. ரோகித் ஷெட்டி படங்களில் காமெடி, குத்துப்பாட்டு, பறக்கும் கார்கள், பறந்து பறந்து சண்டை போடும் நாயகர்கள் என ஒரு ஸ்டைல் இருக்கும். இவையனைத்தையும் எதிர்பார்த்து போகும் ரசிகர்களுக்கு படம் ஏமாற்றம் தரவில்லை.    1996 குண்டு வெடிப்பில் கதை ஆரம்பிக்கிறது. அங்கிருந்து நகர்ந்து நிகழகாலத்தில் சூர்யவன்சி போலீஸ் அதிகாரியின் காதல் கதைக்கு வருகிறது. அவர் ஒரு சண்டையில் மனைவி குழந்தையை பிரிந்து இருக்கிறார் இன்னொரு புறம் தீவிரவாதிகளை வேட்டையாடுகிறார். 1996 ல் மறைத்து வைத்திருந்த பல டன் எடை கொண்ட வெடிகுண்டை வைத்து தீவிரவாதிகள் மும்பையை தாக்க திட்டமிடுகிறார்கள் அதை தனது…
Read More
பிரபாஸின் அடுத்த பட அறிவிப்பு வெளியாகியுள்ளது

பிரபாஸின் அடுத்த பட அறிவிப்பு வெளியாகியுள்ளது

  டி சீரிஸ் என்டெர்டெயின்மென்ட் உடைய பிரமாண்ட தயாரிப்பில், நடிகர் பிரபாஸின் 25-வது படத்தை சந்தீப் ரெட்டி வங்கா இயக்கவுள்ளார். இந்த திரைப்படத்திற்கு ‘ஸ்பிரிட்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. ‘அர்ஜுன் ரெட்டி’ மற்றும் ‘கபிர் சிங்’ ஆகிய படங்களை இயக்கியுள்ள சந்தீப், பிரபாஸ் நடிக்கும் அகில இந்திய திரைப்படமான ஸ்பிரிட்டுக்காக முன்னெப்போதும் திரையில் வந்திராத கதைக்களம் ஒன்றை தேர்ந்தெடுத்துள்ளார். ‘சலார்’ மற்றும் ‘ஆதி புருஷ்’ படங்களில் தற்போது நடித்து வரும் பிரபாஸ், ‘புரோஜெக்ட் கே’ எனும் திரைப்படத்திலும் ஒப்பந்தம் ஆகியுள்ளார். அவரது 25-வது படமான ‘ஸ்பிரிட்’ படப்படிப்பு அடுத்த வருடம் தொடங்கவுள்ளது. ‘சாஹோ’, ‘ராதே ஷியாம்’ மற்றும் ‘ஆதி புருஷ்’ ஆகிய படங்களுக்காக பிராபஸுடன் கைகோர்த்த டி சீரிஸ் என்டெர்டெயின்மென்ட், யுவி கிரியேஷன்ஸ் உடன் இணைந்து ‘ஸ்பிரிட்’ திரைப்படத்தை பிரமாண்ட பொருட்செலவில் தயாரிக்கிறது. இயக்கம்: சந்தீப் ரெட்டி வங்கா
Read More
போதை பொருள் கொண்டாட்டத்தில் ஷாருக் கான் மகன்!

போதை பொருள் கொண்டாட்டத்தில் ஷாருக் கான் மகன்!

நடிகர் ஷாருகான் மகன் ஆர்யன் கான் தனது நண்பர்களுடன் மும்பையில் இருந்து கோவா சென்ற சொகுசு கப்பலில், போதை பொருட்களுடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்டதாக, போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். மும்பையில் இருந்து கோவா செல்ல உள்ள கப்பலில் போதை பொருள் விருந்து பார்ட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், என்சிபி குழு, அதன் மண்டல இயக்குனர் சமீர் வான்கடே தலைமையிலான போலீசார், நேற்று மும்பை கடற்கரையில் கப்பலில் நடந்த பார்ட்டி ஒன்றை சோதனை செய்தனர். இதுகுறித்து என்சிபி தெரிவித்துள்ள சமீபத்திய தகவலின்படி, பாலிவுட் நடிகர் ஷாருகானின் மகன் ஆர்யன் கான் உள்ளிட்ட 8 பேரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருவதாக கூறப்படுகிறது. இந்த விருந்தில் பார்ட்டியில் நேற்று நடைபெற்ற பொது சோதனையில் 3 பெண்கள் உள்பட மொத்தம் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
Read More
வெளியீட்டு தேதியை அறிவித்த ” RRR”  படக்குழு

வெளியீட்டு தேதியை அறிவித்த ” RRR” படக்குழு

ராஜமெளலி இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் 'இரத்தம் ரணம் ரெளத்திரம்'. இதில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஆலியா பட், அஜய் தேவ்கன், ஸ்ரேயா சரண் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். டிவிவி நிறுவனம் சுமார் 400 கோடி ரூபாய் பொருட்செலவில் இப்படத்தைத் தயாரித்துள்ளது.   இந்தப் படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையைக் கைப்பற்ற முன்னணித் தயாரிப்பாளர்கள் பலரும் போட்டியிட்டார்கள். இறுதியாக, லைகா நிறுவனம் பெரும் விலை கொடுத்து தமிழக உரிமையைக் கைப்பற்றி இருக்கிறது.   உலகமெங்கும் ஜனவரி 7-ம் தேதி, 2022-ல் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது 'ஆர்.ஆர்.ஆர்' திரைப்படம்.
Read More