நானியின் 30வது படத்தில் மிருணால் தாக்கூர் கதானாயகியாக நடிக்கிறார்! படத்தின் முதல் பார்வைவெளியானது!

நானியின் 30வது படத்தில் மிருணால் தாக்கூர் கதானாயகியாக நடிக்கிறார்! படத்தின் முதல் பார்வைவெளியானது!

  வைரா என்டர்டெயின்மென்ட்ஸ் பேனரில் மோகன் செருக்கூரி (சிவிஎம்) மற்றும் டாக்டர் விஜேந்தர் ரெட்டி தீகலா தயாரிப்பில் ஷௌர்யுவ் இயக்கத்தில் நேச்சுரல் ஸ்டார் நானி, மிருணால் தாக்கூர் நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு 'hi நான்னா' என்று பெயரிடப்பட்டுள்ளது. நானியின் 30வது படமான 'hi நான்னா' தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் ஒரே சமயத்தில் பான் இந்தியா திரைப்படமாக உருவாகிறது. #Nani30 என்று அழைக்கப்படும் இப்படத்தின் முதல் பார்வை இன்று வெளியிடப்பட்டது. வித்தியாசமான கதைக்களம் உள்ள திரைப்படங்களை தொடர்ந்து தேர்ந்தெடுத்து நடிக்கும் நானி அவ்வாறான ஒரு கதையையே தற்போதும் தேர்ந்தெடுத்துள்ளார் என்பது முதல் பார்வை மூலம் புலனாகிறது. தந்தை-மகள் உறவை மையமாகக் கொண்ட நேர்மறையான குடும்பத் திரைப்படமாக இது இருக்கும் என்று படக்குழுவினர் தெரிவிக்கிறார்கள். இயக்குநராக அறிமுகமாகும் ஷௌர்யுவ் அனைத்து தரப்பு ரசிகர்களையும் திருப்திப்படுத்துவார் என்று அவர்கள் மேலும் கூறினர். தமிழ், தெலுங்கு கன்னடம், மலையாளம் ஆகிய…
Read More
சலார் படத்தின் டீசர் வெளியானது! நடிகர் பிரபாஸின் மற்றுமொரு பிரம்மாண்டம்!

சலார் படத்தின் டீசர் வெளியானது! நடிகர் பிரபாஸின் மற்றுமொரு பிரம்மாண்டம்!

நீண்ட காத்திருப்புக்குப் பின் பிரபாஸ் நடிப்பில் பிரசாந்த் நீல் இயக்கிய 'இந்தியன் ஃபிலிம்' சலார் பகுதி-1 :சீஸ் ஃபயர் படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. இப்படத்தின் டீசர் அதிகாலை 5 12 மணிக்கு வெளியாகும் என்று தயாரிப்பாளர்கள் அறிவிப்பு வெளியிட்டதன் மூலம் ரசிகர்களிடம் பெரும் உற்சாகத்தை படக்குழுவினர் தூண்டினர். மேலும் அனைவரின் எதிர்பார்ப்பிற்கு ஏற்ற வகையில் புகழ்பெற்ற இயக்குநரான பிரசாந்த் நீல் உருவாக்கிய பரந்த பிரபஞ்சத்தின் பரபரப்பான செயல்பாடுகளின் காட்சிகளை இந்த டீசர் வழங்குகிறது. முன்னணி கதாபாத்திரத்தின் சக்தி வாய்ந்த உரையாடல்களால் நிறைந்திருக்கும் இந்த டீசர்... அதிக பொருட்செலவில் உருவாகியுள்ள இந்திய திரைப்படம் என்ற சாதனைகளை முறியடிக்கும் வகையில் உள்ளது. இதுவே வெற்றிக்கான தொடக்கம் என்பதனையும் எடுத்துரைக்கிறது. மிகப்பெரிய ப்ளாக் பஸ்டர் வெற்றியைப் பெற்ற 'கே ஜி எஃப்' படத்திற்குப். பிறகு அதன் அதிரடி இயக்குநர் பிரசாந்த் நீலிடமிருந்து தயாராகி இருக்கும் மற்றொரு படைப்பு. எதிர்காலத்தில் பல அத்தியாயங்களை வழங்கி.. தனக்கென புதிய…
Read More
அதிகாலை வெளியாகவுள்ளது சலார் படத்தின் டீசர்! பிரபாஸுக்கு இதுவே முதல் முறை!

அதிகாலை வெளியாகவுள்ளது சலார் படத்தின் டீசர்! பிரபாஸுக்கு இதுவே முதல் முறை!

  இந்தியாவையே திரும்பிப்பார்க்க வைத்த கேஜிஎஃப் படத்தின் இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில், மிகப்பெரிய சூப்பர் ஸ்டார் பிரபாஸ் நடிக்கும் 'சலார்' படத்தின் அறிவிப்பு வெளியானதிலிருந்தே, இப்படத்தின் மீது ரசிகர்களிடம் வானளாவிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்த ஆண்டில் ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்தியப் படங்களில் ஒன்றாக “சலார்” படம் இருக்கிறது. இந்த மெகா பட்ஜெட் படத்தின் அப்டேட் கேட்டு ரசிகர்கள் ஆவலோடு காத்திருந்த நிலையில், தயாரிப்பாளர்கள் ஒரு பெரிய அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். இப்படத்தின் டீசர் தேதி ஜூலை 6 ஆம் தேதி, காலை 5:12 மணிக்கு வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியத் திரையுலகில் மிகப்பெரும் படைப்பாக உருவாகி வரும் திரைப்படம் சலார். கேஜிஎஃப் மூலம் ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களையும் கவர்ந்த இயக்குநர் பிரசாந்த் நீல் மற்றும் பாகுபலி மூலம் மிகப்பெரிய சூப்பர்ஸ்டாராக உருவெடுத்திருக்கும் பிரபாஸ் ஆகியோர் முதன்முறையாக இப்படத்தில் இணைந்து பணியாற்றியுள்ளனர். மிக நீண்ட காத்திருப்புக்குப் பிறகு, Hombale Films நிறுவனம்,…
Read More
இசையமைப்பாளர் தமனின் ஹோட்டல் பில்லை பார்த்து கடுப்பான தயாரிப்பாளர்! படத்திலிருந்து நீக்கம்!

இசையமைப்பாளர் தமனின் ஹோட்டல் பில்லை பார்த்து கடுப்பான தயாரிப்பாளர்! படத்திலிருந்து நீக்கம்!

தெலுங்கில் 5க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்து வரும் மியூசிக் டைரக்டர் தமன் ஸ்டார் ஹோட்டலான ஹயாத்தில் சூட் ரூமை எடுத்து தங்கியுள்ளார். இதற்காக அவர் 40 லட்சம் செலவானதாக தயாரிப்பாளர் ஒருவருக்கு பில் கொடுத்துள்ளார், அதனை வாங்கிய தயாரிப்பாளர் கடுப்பாகி விட்டாராம். பல படங்களுக்கு இசையமைத்து  விட்டு மொத்த பில்லையும் ஏன் என் தலைமீது கட்டுறீங்க என தயாரிப்பாளர் கேள்வி எழுப்பியுள்ளார், இது தெலுங்கு சினிமாவில் அவருக்கு சிக்கலை உண்டாக்கி உள்ளது. இதன் காரணமா தமனை நெட்டிசன்கள் பலரும் ட்ரோல் செய்ய ஆரம்பிச்சிருக்காய்ங்க. பாய்ஸ் படத்தில் நடித்த தமன் மல்லி மல்லி எனும் தெலுங்கு படத்திற்கு இசையமைத்து இசையமைப்பாளராக அறிமுகமானார். தமிழில், சிந்தனை செய் படத்திற்கு முதன் முதலில் இசையமைத்தார். இப்போ பிசியான (மாதிரியான) இசையமைப்பாளராக மாறியுள்ள தமன் கடந்த ஆண்டு இறுதியில் பிரின்ஸ், இந்த ஆண்டு வாரிசு, வீர சிம்ஹா ரெட்டி உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்திருந்தார். இந்நிலையில், வயிறு எரியுதுன்னா…
Read More
இந்திய சினிமாத்துறையே எதிர்பார்த்த ராம்சரண்- உபாசனா தம்பதியருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது!

இந்திய சினிமாத்துறையே எதிர்பார்த்த ராம்சரண்- உபாசனா தம்பதியருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது!

தெலுங்கு திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான மெகா பவர் ஸ்டார் ராம்சரண் மற்றும் உபாசனா கொனிடேலா தம்பதியினருக்கு பெண் குழந்தை பிறந்திருக்கிறது. இவர்களுக்கு தெலுங்கு திரையுலகினர் மட்டுமல்லாமல் இந்திய திரையுலகினரும் உலகமெங்கும் உள்ள ரசிகர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். வாழ்த்துகளை தெரிவித்த அனைவருக்கும் ராம்சரண் -உபாசானா சார்பில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி தன் மனமார்ந்த நன்றியை தெரிவித்திருக்கிறார். மெகா பவர் ஸ்டார் ராம்சரண்- உபாசனா தம்பதியருக்கு இன்று ( ஜூன் 20) பெண் குழந்தை பிறந்திருக்கிறது. ஹைதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட திருமதி உபாசனா ராம்சரணுக்கு இன்று அதிகாலை பெண் குழந்தை பிறந்தது. இந்த நல்ல செய்தியால் மெகா ஸ்டார் குடும்பத்தினர், அவருடைய நண்பர்கள், நலம் விரும்பிகள், ரசிகர்கள் என அனைவரும் மகிழ்ச்சியடைந்திருக்கிறார்கள். இது தொடர்பாக அப்பல்லோ மருத்துவமனையின் டாக்டர் சுமனா மனோகர் பேசுகையில், '' இன்று அதிகாலை உபாசனாவுக்கு பெண் குழந்தை பிறந்தது. குழந்தை மற்றும் தாய்…
Read More
நடிகர் பிரபாஸின் ஹாட்ரிக் வசூல் சாதனை! விமர்சனங்களுக்கு மத்தியிலும் இப்படி ஒர் சாதனை!

நடிகர் பிரபாஸின் ஹாட்ரிக் வசூல் சாதனை! விமர்சனங்களுக்கு மத்தியிலும் இப்படி ஒர் சாதனை!

  பான் இந்திய நட்சத்திர நடிகரான பிரபாஸ் நடிப்பில் தயாரான 'ஆதி புருஷ்' திரைப்படம், வெளியான மூன்று நாட்களில் 340 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனையை படைத்திருக்கிறது. இதன் மூலம் நடிகர் பிரபாஸ் வசூலில் புதிய சாதனையை படைத்து பான் இந்திய சூப்பர் ஸ்டாராக ஜொலிக்கிறார். டீ சிரீஸ் பூஷன் குமார் & கிரிஷன்குமார், ஓம் ராவத், பிரசாத் சுதார், ரெட்ரோ ஃபைல்ஸ் ராஜேஷ் நாயர் ஆகியோர் தயாரிப்பில், பாலிவுட் இயக்குநர் ஓம் ராவத் இயக்கத்தில் தயாராகி வெளியான திரைப்படம் 'ஆதி புருஷ்'. இதில் பான் இந்திய நட்சத்திர நடிகர் பிரபாஸ், நூபுர் சனோன், சயீப் அலி கான், சன்னி சிங் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். உலகம் முழுவதும் ஏழாயிரத்திற்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியான இந்த திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், வசூலில் சாதனை படைத்து வருகிறது. வெளியான மூன்று தினங்களில் உலகம் முழுவதும் 340 கோடி ரூபாயை வசூலித்து…
Read More
நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் மறைக்கப்பட்ட கதையை பற்றி சொல்லும் ”ஸ்பை” படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு

நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் மறைக்கப்பட்ட கதையை பற்றி சொல்லும் ”ஸ்பை” படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு

நிகில் சித்தார்த்தா- இயக்குநர் கேரி பி. ஹெச்- Ed என்டர்டெய்ன்மெண்ட்ஸ் கூட்டணியில் தயாராகி இருக்கும் தேசிய அளவிலான திரில்லர் திரைப்படம் 'ஸ்பை', ஜூன் 29ஆம் தேதியன்று வெளியாகும் என பிரத்யேக புகைப்படத்தை வெளியிட்டு, படக்குழு உறுதிப்படுத்தி இருக்கிறது. தெலுங்கு திரையுலகின் முன்னணி பட தொகுப்பாளரும், இயக்குநருமான கேரி பி ஹெச் இயக்கத்தில் தயாராகி இருக்கும் திரில்லர் திரைப்படம் 'ஸ்பை'. இதில் நிகில் சித்தார்த்தா, ஆரியன் ராஜேஷ், ஐஸ்வர்யா மேனன், சான்யா தாகூர், அபினவ் கோமடம், மகரந்த் தேஷ் பாண்டே, ஜிஷு சென்குப்தா, நித்தின் மேத்தா, ரவிவர்மா, கிருஷ்ண தேஜா, பிரிஷா சிங், சோனியா நரேஷ் மற்றும் பலர் நடித்துள்ளனர். ஸ்ரீ சரண் பகாலா ஒலிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசையமைத்திருக்கிறார். இப்படத்திற்கான படத்தொகுப்பு பணிகளையும் இயக்குநர் கேரி பி ஹெச் கவனித்திருக்கிறார். திரில்லர் ஜானரிலான இந்த திரைப்படத்தை Ed என்டர்டெய்ன்மெண்ட்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே.…
Read More
காவல்துறை அதிகாரியாக மிரட்டும் விஜய்தேவரகொண்டா! தொடங்கியது படப்பிடிப்பு!

காவல்துறை அதிகாரியாக மிரட்டும் விஜய்தேவரகொண்டா! தொடங்கியது படப்பிடிப்பு!

சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ், பார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் தயாரிப்பில், விஜய் தேவரகொண்டா, ஸ்ரீ லீலா நடிக்கும் 'VD12' படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. டோலிவுட் ஸ்டார் விஜய் தேவரகொண்டா, தீவிரமான ஒரு ஆக்‌ஷன் திரில்லர் கதைக்காக 'ஜெர்சி' புகழ் கௌதம் தின்னனுரியுடன் இணைந்துள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே! இந்தப் படத்திற்கு தற்காலிகமாக 'VD12' என்று தலைப்பிடப்பட்டுள்ளது. இதன் படப்பிடிப்பு இன்று ஹைதராபாத்தில் தொடங்கியுள்ளது. ஹைதராபாத்தில் உள்ள சாரதி ஸ்டுடியோவில் தொடங்கிய இந்த படப்பிடிப்பில், படத்தின் முன்னணி நடிகர்கள் மற்றும் படக்குழுவினர் பங்கேற்றனர். விஜய்யின் புதிய போஸ்டர் ஒன்றையும் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த போஸ்டரில், விஜய் தீவிரமாக துப்பாக்கியை பிடித்துள்ள அதே சமயம் அழகாகவும் இருக்கிறார். இந்த முதல் கிளிம்ப்ஸ் போஸ்டரில் அவரது தோற்றம் அவுட் ஆஃப் போகஸில் உள்ளதால் படத்திற்காக அவர் எப்படி மாறியுள்ளார் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர். கௌதம் இயக்கும் இப்படத்தில் ஸ்ரீ லீலா நாயகியாக நடித்துள்ளார். சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் மற்றும்…
Read More
மைசூர் விமான நிலையத்திலிருந்து ராம் மற்றும் ஸ்ரீலீலாவின் கேண்டிட் புகைப்படங்கள்!

மைசூர் விமான நிலையத்திலிருந்து ராம் மற்றும் ஸ்ரீலீலாவின் கேண்டிட் புகைப்படங்கள்!

பிளாக்பஸ்டர் மேக்கர் போயபதி ஸ்ரீனு இயக்கத்தில் உஸ்தாத் ராம் பொத்தினேனி நடிப்பில் ஸ்ரீனிவாசா சித்தூரி தயாரிப்பில் ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் பேனரின் கீழ் உருவாகி வரும் #BoyapatiRAPO படத்தின் மைசூர் ஷெட்யூல் தொடங்கியது! பிளாக்பஸ்டர் இயக்குநரான போயபதி ஸ்ரீனு மற்றும் உஸ்தாத் ராம் பொதினேனியின் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படமான #BoyapatiRAPO வின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பை படக்குழு இன்று மைசூரில் தொடங்குகிறது. இம்மாதம் 15ம் தேதி வரை நடக்கும் இந்த ஷெட்யூலில், அதிரடியான ஆக்ஷன் காட்சியும், ஒரு பாடலும் படமாக்கப்பட உள்ளது. ஒரு பாடலைத் தவிர படத்தின் மொத்தப் படப்பிடிப்பும் இந்த ஷெட்யூலுடன் முடித்துவிடும். மைசூர் விமான நிலையத்திலிருந்து ராம் மற்றும் ஸ்ரீலீலாவின் கேண்டிட் புகைப்படங்களும் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன. ராமின் பிறந்தநாளுக்காக வெளியிடப்பட்ட முதல் பார்வையில் அவரை முரட்டுத்தனமான, மாஸ் தோற்றத்துடன் காட்டியிருப்பது ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பைப் பெற்றது. சந்தோஷ்…
Read More
நடிகர் பிரபாஸ் படத்தில் நடிக்கவுள்ள கமலுக்கு இவ்வளவு சம்பளமா!!

நடிகர் பிரபாஸ் படத்தில் நடிக்கவுள்ள கமலுக்கு இவ்வளவு சம்பளமா!!

நடிகர் பிரபாஸ் தற்போது ப்ராஜெக்ட் கே என்ற படத்தில் நடித்து வருகிறார். மிக பிரம்மாண்டமாக தயாராகி வரும் இந்த படத்தில் தீபிகா படுகோன் ஹீரோயினாக நடிக்கிறார். நாக் அஸ்வின் இயக்கும் இந்த படம் ஹாலிவுட் தரத்திற்கு மிக பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது இந்த படத்தில் கமல்ஹாசன் வில்லனாக நடிப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. பிரம்மாண்ட படத்தில் வில்லனாக நடிக்கும் கமல்! மிரள வைக்கும் சம்பளம்.. 20 நாளுக்கு இத்தனை கோடியா Project K படத்தில் நடிப்பதற்காக கமல்ஹாசனுக்கு 150 கோடி ரூபாய் சம்பளமாக பேசப்பட்டு இருக்கிறதாம். அவர் வெறும் 20 நாள் மட்டுமே ஷூட்டிங்கில் கலந்துகொள்ள இருக்கிறார் என்றும் தகவல் வந்திருக்கிறது. கமல்ஹாசனை முழுக்க முழுக்க வில்லனாக பார்க்கலாம் என்பதால் தற்போது ரசிகர்கள் இந்த தகவலால் கொண்டாட்டத்தில் இருக்கின்றனர்.
Read More