அல்லு அர்ஜுன் தமிழில் நடிக்கும்  ‘என் பெயர்  சூர்யா; என் வீடு இந்தியா’

அல்லு அர்ஜுன் தமிழில் நடிக்கும் ‘என் பெயர் சூர்யா; என் வீடு இந்தியா’

சமீபமாக தென்னிந்திய திரை மொழிகளில் நடிக்கும் நடிகர்கள் தங்களது மொழி பிராந்தியத்தை தாண்டி , அடுத்த மாநிலங்களிலும்  தங்களது படங்கள் ஓட வேண்டும் என முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் தெலுங்கு திரை உலகில் கோலோச்சி வரும் அல்லு அர்ஜுன் தற்போது தமிழில் " என் பெயர்  சூர்யா என் வீடு இந்தியா"  என்ற படத்தின் மூலம் அறிமுகமாகிறார்.  தன்னுடைய அதிரடி நடிப்பினாலும், நடன திறமையாலும் தென்னிந்திய ரசிகர்களை வெகுவாக கவர்ந்த அல்லு அர்ஜுன் இந்தப் படத்தில் ஒரு ராணுவ வீரனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நடிக்கிறார் அனு இமானுவேல். தமிழ் , தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் ஏராளமான பொருட்செலவில் தயாராகும்  இந்தப் படத்தில் சரத் குமார்,  action king அர்ஜுன்  ஆகிய இருவரும் மிக முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சாய் குமார், சாருஹாசன், ஹரிஷ் உத்தமன், பொம்மன் ஹிராணி, மற்றும் பல்வேறு  நடிகர்களுடன் நதியா மிக முக்கியமான…
Read More
கண்ணே கலைமானே படம் என் கேரியரில் நல்ல படம்! – தமன்னா

கண்ணே கலைமானே படம் என் கேரியரில் நல்ல படம்! – தமன்னா

சிறந்த படைப்பை நோக்கி தனது வாழ்வின் ஒவ்வொரு நொடியையும்  கடப்பவர் இயக்குநர் சீனு ராமசாமி என்றால் மிகையாகாது. சினிமாவின் அடிப்படை உணர்வுகள்தான், என்பதையும் மிக நன்கு புரிந்திருப்பவர் அவர். மனிதர்களின் உணர்வுகளை சமுதாய பொறுப்போடு  அழகாக இணைத்து தருவதில் கை தேர்ந்த சீனு ராமசாமியின் மிகவும் எதிர்பார்க்கப்படும்  அடுத்த படமான ‘கண்ணே கலைமானே’ படத்தில் உதயநிதி ஸ்டாலின் மற்றும் தமன்னா ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த படம் ரசிகர்கள் மத்தியிலும், விநியோகத்தர்கள் மத்தியிலும், பெரும் ஆவலையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த படத்தை ‘Red Giant Movies’ நிறுவனம் தயாரிக்கின்றது. சீனு ராமசாமி, யுவன் ஷங்கர் ராஜா, கவி பேரரசு வைரமுத்து ஆகியோரின் கூட்டணி தொடர்ந்து ஹிட் பாடல்கள் கொடுக்கும் கூட்டணி என்பதால் இந்த படத்துக்கு இசை தரப்பிலும் பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது.  ‘கண்ணே கலைமானே’  படத்திற்கான தனது படப்பிடிப்பினை சமீபத்தில் முடித்தார் தமன்னா. இது குறித்து தமன்னா பேசுகையில், “நிறைய பேசாமலேயே நடிகர்களுக்கு அவர்களது…
Read More
காமெடி கலாட்டாவாக தயாராகியுள்ள ‘ அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா’

காமெடி கலாட்டாவாக தயாராகியுள்ள ‘ அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா’

சினிமா விநியோகத்தில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ள ‘Auraa Cinemas’, ‘அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா’ என்ற படத்தை தயாரித்துள்ளனர். இந்தப் படத்தின் படப்பிடிப்பு நேற்று சென்னையில்  நிறைவு பெற்றுள்ளது. ‘ராஜதந்திரம்’ புகழ் வீரா மற்றும் ‘குக்கூ’ புகழ் மாளவிகா நாயர் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில்  இந்த படத்தில் நடித்துள்ளனர்.  நடிகர்கள் பசுபதி, ரோபோ ஷங்கர், ‘மொட்டை’ ராஜேந்திரன் மற்றும் பல முன்னணி நடிகர்கள் இந்தப் படத்தில் முக்கிய துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சுதர்ஷன் ஒளிப்பதிவில், எட்வர்ட் தயாரிப்பு டிசைனில், பிரவீன் ஆண்டனியின் படத் தொகுப்பில், மாட்லி ப்ளூஸ் இசையில் ‘அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா’ உருவாகியுள்ளது.  புதுமுகம்  அவினாஷ் ஹரிஹரன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படம் நமது அரசியல் சூழலை நையாண்டித்தனமாக கையாளும் காமெடி படமாகும். இந்தப் படம் பற்றி இயக்குநர் அவினாஷ் ஹரிஹரன் பேசும்போது, “தமிழ்ச் சினிமா இன்றைக்கு இருக்கும் சூழலில் ஒரு படத்தை கொடுத்த அவகாசத்தில், கொடுத்த பட்ஜெட்டில் முடித்து கொடுப்பதே ஒரு…
Read More
அழிந்து வரும் கிராமத்து வாழ்வியலை சொல்லவரும் “ உளிரி “

அழிந்து வரும் கிராமத்து வாழ்வியலை சொல்லவரும் “ உளிரி “

ஸ்ரீலட்சுமி பிரியா பிலிம்ஸ் என்ற பட நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர்கள் எம்.ஸ்ரீனிவாசன்,   சுந்தரி, எஸ்.யோகேஷ்  ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள திரைப்படம் ‘உளிரி.’ இந்தப் படத்தில் சுரேஷ் கதாநாயகனாக நடித்திருக்கிறார். கதாநாயகியாக சயனி நடித்துள்ளார். மற்றும்  பசங்க சிவகுமார், கலாராணி, யோகி, சர்மிளா, சுமதி ஆகியோரும் நடித்துள்ளனர்.      ஒளிப்பதிவு – வெங்கட், படத் தொகுப்பு – சுரேஷ் அர்ஸ், கலை இயக்கம் – சாமி கலைக்குமார், சண்டை இயக்கம் – மெட்ரோ மகேஷ், நடன இயக்கம் – மது மாலிக், தயாரிப்பு மேற்பார்வை – A நாகராஜ், தயாரிப்பு  – எம்.ஸ்ரீனிவாசன்,  சுந்தரி,  எஸ்.யோகேஷ், இசை, பாடல்கள், எழுத்து, இயக்கம், – R.ஜெயகாந்தன். படம் பற்றி இயக்குநர் ஆர்.ஜெயகாந்தன் பேசும்போது, “சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்புவரை காவிரி ஆற்று படுகை மனிதர்களின் பஞ்சம் தீர்க்க உணவாக, அவர்களது பண்பாட்டின் கூறாக இருந்த ‘உளிரி’ எனும் மீன்  இனமே இன்று அழிக்கப்பட்டுவிட்டது. அதுமட்டுமல்லாமல், நமது வாழ்வியல் பண்பாட்டின், பல கூறுகள் அழிக்கப் பட்டு இன்று காவிரியாற்று கிராமங்கள் தனது அடையாளங்களை இழந்து பொலிவற்று,  இயல்பை தொலைத்து பொய்யான முகப் பூச்சோடு உண்மை பொலிவை…
Read More
சுந்தர பாண்டியன்’ இரண்டாம் பாகத்தில் நடிக்கிறார் சசிகுமார்!

சுந்தர பாண்டியன்’ இரண்டாம் பாகத்தில் நடிக்கிறார் சசிகுமார்!

நாடோடிகள்’ படத்தின் இரண்டாம் பாகத்தைத் தொடர்ந்து ‘சுந்தர பாண்டியன்’ இரண்டாம் பாகத்தில் நடிக்கிறார் சசிகுமார். சமுத்திரக்கனி இயக்கத்தில், சசிகுமார் நடிப்பில் 2009ஆம் ஆண்டு ரிலீஸான படம் ‘நாடோடிகள்’. இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் தற்போது எடுக்கப்பட்டு வருகிறது. சசிகுமார், அஞ்சலி, எம்.எஸ்.பாஸ்கர், அதுல்யா, பரணி, நமோ நாராயணன் ஆகியோர் நடித்து வருகின்றனர். இந்தப் படத்தைத் தொடர்ந்து, ‘சுந்தர பாண்டியன்’ படத்தின் இரண்டாம் பாகத்திலும் சசிகுமார் நடிக்க இருப்பதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கத்தில் 2012ஆம் ஆண்டு வெளியான இந்தப் படத்தில், சசிகுமார் ஜோடியாக லட்சுமி மேனன் நடித்திருந்தார். இதன் இரண்டாம் பாகம் விரைவில் தொடங்க இருக்கிறது. அனேகமாக, ‘நாடோடிகள் 2’ முடிந்த உடனேயே ‘சுந்தர பாண்டியன் 2’வில் நடிக்க வாய்ப்புள்ளது. எஸ்.ஆர்.பிரபாகரன், ‘சுப்ரமணியபுரம்’ மற்றும் ‘ஈசன்’ படங்களில் சசிகுமாரிடம் இணை இயக்குநராகப் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Read More
அர்ஜுன் ரெட்டி புகழ் விஜய் தேவரகொண்டாவின் ‘ நோட்டா ’

அர்ஜுன் ரெட்டி புகழ் விஜய் தேவரகொண்டாவின் ‘ நோட்டா ’

ஸ்டுடியோகிரீன் சார்பில் கே.ஈ. ஞானவேல்ராஜா தயாரிக்கும் புதிய படத்திற்கு ‘நோட்டா ’என பெயரிடப்பட்டுள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளில் ஒரே சமயத்தில் தயாராகும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியிடப்பட்டது. இதற்கான பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் விமர்சையாக நடைபெற்றது.   இதில் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா, படத்தின் நாயகன் விஜய் தேவரகொண்டா, நாயகி மெஹ்ரீன், நடிகர் சத்யராஜ், படத்தின் இயக்குநர் ஆனந்த் சங்கர், ஒளிப்பதிவாளர் சாந்தா ரவி.கே. சந்திரன், இசையமைப்பாளர் சாம் சி.எஸ், கலை இயக்குநர் கிரண், எடிட்டர் ரேமாண்ட் டெரீக் க்ராஸ்தா, ஸ்டைலீட் ஷ்ராவ்யா சர்மா என படத்தில் பணியாற்றும் தொழில்நுட்ப கலைஞர்களும், தயாரிப்பாளர் ஷிபு தமின்ஸ், முன்னணி இயக்குநர்கள் பா. இரஞ்சித், எஸ்எம்எஸ் ராஜேஷ், டீகே, ஷாந்தகுமார், விஜய் வரதராஜ், சந்தோஷ் பி. ஜெயக்குமார் ஆகியவர்களுடன் பிரபல விநியோகஸ்தர்களும் கலந்து கொண்டனர்.   இதில் இயக்குநர் பா. இரஞ்சித் பேசுகையில்,‘ஸ்டூடியோ…
Read More
அமலாபால் நடிக்கும் “அதோ அந்த பறவை போல” ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை  காஜல் அகர்வால் வெளியிட்டார்!

அமலாபால் நடிக்கும் “அதோ அந்த பறவை போல” ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை காஜல் அகர்வால் வெளியிட்டார்!

அமலாபால் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை ட்விட்டரில் வெளியிட்டுள்ள காஜல் அகர்வால், அவரை ‘பேரழகி’ என வர்ணித்துள்ளார். அமலாபால் நடிப்பில் உருவாகிவரும் படம் ‘அதோ அந்த பறவை போல’. எம்.ஜி.ஆர். நடிப்பில் வெளியான ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்தில் இடம்பெற்ற பாடல் ‘அதோ அந்த பறவை போல வாழ வேண்டும்’. அதிலிருந்துதான் இந்தப் படத்தின் தலைப்பைத் தேர்ந்தெடுத்துள்ளனர்.   இன்று மகளிர் தினம் என்பதால், இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை காஜல் அகர்வால் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். காஜல் அகர்வாலும், அமலாபாலும் நெருங்கி தோழிகள் என்பதால், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை அவர்தான் வெளியிட வேண்டும் என்று விரும்பினாராம் அமலாபால். அதன்படி ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட காஜல் அகர்வால், அமலாபாலை ‘பேரழகி’ என வர்ணித்துள்ளார். ’அதோ அந்த பறவை போல’ படத்தை கே.ஆர்.வினோத் இயக்குகிறார். சாந்தகுமார் சக்கரவர்த்தி ஒளிப்பதிவு செய்ய, ஜேக்ஸ் பிஜோய் இசையமைக்கிறார். ஜோன்ஸ் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்.
Read More
‘அர்ஜுன் ரெட்டி’ நாயகன் விஜய் தேவரகொண்டா நடிக்கும் முதல் தமிழ் பட பூஜை!

‘அர்ஜுன் ரெட்டி’ நாயகன் விஜய் தேவரகொண்டா நடிக்கும் முதல் தமிழ் பட பூஜை!

அர்ஜுன் ரெட்டி’ படப்புகழ் நாயகன் விஜய் தேவரகொண்டா நடிக்கும் முதல் தமிழ் படத்தின் தொடக்கவிழா  ஹைதராபாத்தில் நடைபெற்றது.  இவ்விழாவில் பிரபல தயாரிப்பாளர் கீதா ஆர்ட்ஸ் அல்லு அரவிந்த் கலந்துகொண்டு கிளாப் அடித்து படபிடிப்பைத் தொடங்கிவைத்தார். இதன் போது தெலுங்கு திரையுலகின் முன்னணி தயாரிப்பாளர்களான ஸ்வப்னா தத்து - வைஜெயந்தி மூவீஸ், கே எஸ் ராமாராவ் - கிரியேட்டீவ் கமர்சியல், பி வி என் பிரசாத் - எஸ் வி சி, நவீன் மற்றும் ரவி மைத்ரீ மூவிஸ்,  ஆகியோர்களுடன் தெலுங்கு திரையுலகின் முன்னணி இயக்குநர்களான வம்சி,சந்தீப் ரெட்டி வங்கா, படத்தின் தயாரிப்பாளர் கே ஈ ஞானவேல்ராஜா, இயக்குநர் ஆனந்த் சங்கர், நாயகன் விஜய் தேவரகொண்டா, நாயகி மெஹ்ரீன் பிர்ஸாதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கடந்த ஆண்டில் தெலுங்கில் வெளியாகி பெரிய வெற்றியைப் பெற்ற படம் அர்ஜுன் ரெட்டி. இந்த படத்தின் மூலம் ஏராளமான ரசிகர்களைப் பெற்றவர் நடிகர் விஜய் தேவரகொண்டா. இவர் தமிழில் அறிமுகமாகும்…
Read More
நேஷனல் ஜூனியர் சாம்பியன்களுடன் தேவயானி & விவேக் நடிக்கும் படம் – எழுமின்’

நேஷனல் ஜூனியர் சாம்பியன்களுடன் தேவயானி & விவேக் நடிக்கும் படம் – எழுமின்’

சமீபத்தில் வெளிவந்த ‘உரு’ படத்தின் தயாரிப்பாளர் வி.பி.விஜி, ‘எழுமின்’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். தற்காப்பு கலைகளை தங்களது விருப்பமாக தேர்ந்தெடுத்து அதில் சாதிக்க நினைக்கும் ஆறு சிறுவர்களை சுற்றியே ‘எழுமின்’ படத்தின் கதை உருவாக்கப்பட்டிருக்கிறது.விஷ்வநாதனின் மகன் அர்ஜூனும் ஐந்து சிறுவர்களும் நெருக்கமான நண்பர்களாக இருக்கிறார்கள். சிறுவர்கள் ஒன்றாக அகாடமியில் கராத்தே, குங்ஃபூ, பாக்ஸிங் மற்றும் சிலம்பம் போன்ற தற்காப்பு கலைகளை பயில்கிறார்கள். வசதியில்லாத இந்த ஐந்து சிறுவர்களுக்கு அவர்களது பெற்றோர்களே தடையாக இருக்கையில், விஷ்வநாதனும் அவரது மனைவியும் அவர்களுக்கு உறுதுணையாக இருக்கிறார்கள். விஷ்வநாதனாக விவேக்கும் அவரது மனைவியாக தேவயானியும் நடித்திருக்கிறார்கள். இந்த ஐந்து சிறுவர்களின் வாழ்க்கையில் ஏற்படும் தடைகளும், வேறு சில எதிர்பாராத சூழ்நிலைகளையும் தாண்டி சிறுவர்கள் எப்படி சாதிக்கிறார்கள் என்பது புதிய கோணத்தில் சொல்லப்பட்டிருக்கும் திரைப்படம் எழுமின். ஐந்து சிறுவர்களும் படத்தில் இடம்பெற்ற கடுமையான சண்டை காட்சிகளில் தத்ரூபமாக நடித்திருக்கிறார்கள். இவர்கள் நிஜ வாழ்விலும் மாநில மற்றும் தேசிய…
Read More
ரொம்பவும் தனித்துவமா இருக்கும் கருப்பி’ பாடலுக்கு மெகா வரவேற்பு!

ரொம்பவும் தனித்துவமா இருக்கும் கருப்பி’ பாடலுக்கு மெகா வரவேற்பு!

யக்குநர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்குநராக அறிமுகமாகும் ‘பரியேறும் பெருமாள்’ திரைப்படத்தின் முதல் பாடலான ‘கருப்பி என் கருப்பி’ வெளியாகி மிகவும் சிறப்பான வரவேற்பைப் பெற்றுள்ளது. சந்தோஷ் நாராயணன் இசையில் மாரி செல்வராஜ், விவேக் இணைந்து எழுதியுள்ள இந்த ‘கருப்பி’ பாடல் பற்றி பிரபலங்கள் தங்கள் கருத்துகளை பகிர்ந்துள்ளனர். இயக்குநரும், மாரி செல்வராஜின் குருவுமான இயக்குநர் ராம், இயக்குநர்கள் நவீன், புஷ்கர் காயத்ரி, பாடலாசிரியர் கபிலன் வைரமுத்து, பாடலாசிரியர் முருகன் மந்திரம் உள்பட பலர் கருத்து தெரிவித்துள்ளார்கள். இயக்குநர் ராம் இந்தப் பாடல் குறித்து பேசுகையில், “என் தம்பி மாரி செல்வராஜ் முதல்முறையாக இயக்கியிருக்கும் ‘பரியேறும்  பெருமாள்’  திரைப்படத்தின்  முதல் பாடல் தற்போது வெளியாகி இருக்கிறது.   ‘தாமிபரணியில் கொல்லப்படாதவர்கள்’  சிறுகதைத் தொகுப்பின்  மூலமாக  அறிமுகமாகி, ‘ஆனந்த  விகடனில்’  வெளியான  மறக்கவே முடியாத  தொடரான ‘மறக்கவே நினைக்கிறேன்’ மூலம்  தமிழக  மக்களை  தன்வசப்படுத்திய  மாரி  செல்வராஜின்  முதல்  படம்.  அல்லது  முதல் கோபம்னுகூட …
Read More