எழில் இயக்கத்தில் G.V.பிரகாஷ் நடிக்கும் புதிய காமெடி! படம்

எழில் இயக்கத்தில் G.V.பிரகாஷ் நடிக்கும் புதிய காமெடி! படம்

பல மொழிகளில் படங்களைத் தயாரித்துக் கொண்டிருக்கும் பட நிறுவனம் ரமேஷ் .பி. பிள்ளை வழங்கும் அபிஷேக் பிலிம்ஸ்.இந்த நிறுவனம் தற்போது சித்தார்த் - ஜி.வி.பிரகாஷ் நடிக்க சசி இயக்கத்தில் ஒரு படத்தை மிகப் பிரமாண்டமான முறையில் தயாரித்துக் கொண்டிருக்கிறார்கள்... இதைத் தொடர்ந்து எழில் இயக்கத்தில் ஜி.வி பிரகாஷ் நடிக்கும் படத்தை இன்று துவங்கி உள்ளார்கள்...! இன்று எளிமையாக ஒரு கோயிலில் இதன் துவக்க விழா நடை பெற்றது. இசை - C.சத்யா.. மற்ற நடிகர் நடிகைகள் தொழில்நுட்ப கலைஞர்கள் பின்னர் அறிவிக்கப்பட்ட உள்ளது. எழில் பார்முலா எப்படியோ அப்படியே தான் இதுவும் காமெடி சப்ஜெக்ட்....மார்ச் மாதம் படப்பிடிப்பு துவங்க உள்ளது.
Read More
பெயரிடப்படாத  ‘டார்க் காமெடி த்ரில்லர்’ படத்துக்கு பூஜை!

பெயரிடப்படாத ‘டார்க் காமெடி த்ரில்லர்’ படத்துக்கு பூஜை!

தமிழ் சினிமாவின் படைப்பாற்றல் வளர்ந்து வரும் இளம் இயக்குனர்கள், நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் புதுப்புது ஐடியாக்களால் நாளுக்கு நாள் மெருகேறிக் கொண்டே வருகிறது. குறிப்பாக, அதே மனநிலையுடன் இருக்கும் தயாரிப்பு நிறுவனங்கள் அத்தகைய புதுமையான திரைப்படங்களுக்கு பின்னால் தூணாக இருக்கின்றன. Hungry Wolf entertainment & productions LLP தயாரிக்கும் திரைப்படத்தில் இயக்குனராக அறிமுகமாகிறார் பாலய்யா. "இயக்குனராக அறிமுகமாகும் எனக்கு இந்த வாய்ப்பை வழங்கிய தயாரிப்பாளர்கள். வி ஜே கார்த்திக் மற்றும் சக்தி வெங்கட்ராமன் ஆகியோருக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். தமிழ் சினிமாவில் இயக்குனர் கனவோடு வருபவர்களுக்கு வாய்ப்பளிக்கும் இந்த மாதிரி தயாரிப்பாளர் களை பார்ப்பதற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது" என்கிறார் இயக்குனர் பாலய்யா. இவர் ஒரு சில குறும்படங்கள் இயக்கியிருப்பதோடு, CSK மற்றும் நடுவன் போன்ற திரைப்படங்களில் துணை இயக்குனராகவும், இணை இயக்குநராகவும் பணியாற்றியிருக்கிறார். மேலும், இந்த பெயரிடப்படாத படம் 'டார்க் காமெடி த்ரில்லர்' வகையைச் சேர்ந்தது. யோகிபாபு மற்றும்…
Read More
மார்ச் 1ல் ரிலீஸாகும் பூமராங் கண்ணனும், அதர்வாவும் அடுத்த படத்துக்கு ரெடி!

மார்ச் 1ல் ரிலீஸாகும் பூமராங் கண்ணனும், அதர்வாவும் அடுத்த படத்துக்கு ரெடி!

பூமராங் என்ற ஆயுதம் எங்கிருந்து போனதோ அதே இடத்துக்கு திரும்ப வருவதில் பிரசித்தி பெற்றது. அது 'பூமராங்' என தலைப்பிடப்பட்ட படத்துக்கும் மிகவும் பொருத்தமானது. ஆம், மார்ச் 1ம் தேதி வெளியாகும் "பூமராங்" படத்திற்கு பிறகு தயாரிப்பாளர் மற்றும் இயக்குனரான கண்ணன், நடிகர் அதர்வாவுடன் மீண்டும் ஒரு படத்தில் இணைகிறார். "தயாரிப்பு எண் 3" என்ற தலைப்பில் துவங்கப்படும் இந்த படத்தை இயக்குனர் கண்ணன் தன் மசாலா பிக்ஸ் சார்பில் தயாரிக்கிறார். இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டு இயக்குனர் கண்ணன் கூறுகையில், "ஆம், நாங்கள் 'பூமராங்கிற்கு' பிறகு மீண்டும் இணைவதில் உற்சாகமடைகிறோம். 'பூமராங்' மிகச்சிறப்பாக உருவாகி இருப்பதில் நாங்கள் இருவரும் இரட்டிப்பு மகிழ்ச்சியுடன் இருக்கிறோம். எங்கள் படத்தின் உரிமையை trident ஆர்ட்ஸ் ரவி அவர்கள் பெற்று இருப்பதை பெருமையாக கருதிகிறோம். மேலும், பூமராங் முடியும் முன்பாகவே அதர்வாவுடன் மீண்டும் இணைந்து பணியாற்றுவதற்கு எனக்கு விருப்பம் இருந்தது. அதற்கு காரணம் ரசிகர்களை கவர்ந்து…
Read More
சசிகுமாருக்கு ஜோடியாகிறார் நடிகை  நிக்கி கல்ராணி!

சசிகுமாருக்கு ஜோடியாகிறார் நடிகை நிக்கி கல்ராணி!

‘நாடோடிகள்-2’ திரைப்படம் வெளியாகவிருக்கும் நிலையில், ‘கொம்பு வச்ச சிங்கம்டா’, ‘கென்னடி கிளப்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார் இயக்குநரும், நடிகருமான சசி குமார். இந்தப் படங்களைத் தொடர்ந்து தற்போது புதிய படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகி யிருக்கிறார் சசிகுமார். செந்தூர் பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் டி.டி.ராஜா இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். இந்தப் புதிய படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நடிகை  நிக்கி கல்ராணி நடிக்கவிருக்கிறார். மேலும் ராதாரவி, தம்பி ராமையா, விஜயகுமார், ரேகா, சுமித்ரா, சதிஷ், மனோபாலா ரமேஷ்கண்ணா, சிங்கம் புலி, நிரோஷா, யோகிபாபு, கும்கி அஸ்வின், சதிஷ், ஆடம்ஸ், சந்தான  லட்சுமி, சரவணா சக்தி, சசிகலா, மணி, யமுனா, சிலம்பம் சேதுபதி, ரமணி, ராஜ்கபூர், தாஸ், மணி சந்தனா, நமோ நாராயணன், மணிமேகலை, மீரா, மனோபாலா, லாவண்யா, சிங்கம் புலி, சுந்தர், ரஞ்சனா,  நிரோஷா, ரமேஷ் கண்ணா, சமர், ரஞ்சிதா, ரம்யா, சாம்ஸ், தீபா கிரி உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட பிரபல கலைஞர்கள் நடிக்கிறார்கள். ஒளிப்பதிவு – சித்தார்த், இசை – சாம்.சி.எஸ்.. கலை இயக்கம் – சுரேஷ், படத் தொகுப்பு…
Read More
சுருளி ராஜனின் ‘காசி யாத்திரை’ படம் பார்ட் 2 தயார் ஆகிறது..!

சுருளி ராஜனின் ‘காசி யாத்திரை’ படம் பார்ட் 2 தயார் ஆகிறது..!

முன்னொரு காலத்தில் சென்னையில் 300 மேடைகளில் சுருளிராஜனை கதாநாயகனாக வைத்து எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் வி.சி.குக காதன் கதை வசனத்தில் நாடகமாக நடத்தப்பட்டது. பின்னர் சுருளிராஜன், தேங்காய் சீனிவாசன், சோ, வி.கே.ராமசாமி, மனோரமா, ஸ்ரீகாந்த், எம்.ஆர்.ஆர்.வாசு.போன்ற அன்றைய முன்னணி நகைச்சுவை நடிகர்களை வைத்து வைத்து திரைப்படமாக வெளிவந்து வெற்றிப் படமாக ஓடியதுதான் "காசி யாத்திரை "படம். இதனிடையே | கண்ணா லட்டு தின்ன ஆசையா வெற்றிப் படத்தை அடுத்து | காசியாத்திரை படத்தை ரீமேக் செய்ய இராமநாராயணன் ஆலோசித்தார். ஆனால் அதற்குள்ளாக அவர் காலமாகிவிட்டதால் அத்திட்டம் அப்போதைக்கு நிறுத்தப்பட்டிருந்தது. பின்னர் ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா, விஜய் சேதுபதி உட்பட முன்னணி நடிகர்கள் படத்தை வெளிநாட்டு உரிமை வாங்கி வினியோகம் செய்து லாபம் ஈட்டிய மனோன்ஸ் சினிகம்பைன்ஸ் நிறுவனம் "காசி யாத்திரை - 2 " படத்தை தயாரிக்க வி.சி.குகநாதனிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவரிடம் படத்தின் முழு ஸ்கிரிப்டையும் வாங்கி உள்ளது.…
Read More
சிவகார்த்திகேயனின் ‘ மிஸ்டர் லோக்கல்’ எப்போ ரிலீஸ் தெரியுமா?

சிவகார்த்திகேயனின் ‘ மிஸ்டர் லோக்கல்’ எப்போ ரிலீஸ் தெரியுமா?

சீமராஜா’ படத்தைத் தொடர்ந்து ராஜேஷ் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் நடித்து வந்தார் சிவகார்த்திகேயன். முழுக்க காமெடிக்கு முக்கியத்துவம் அளித்து உருவாகியுள்ள இப்படத்தை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்துள்ளது. இன்னும் பெயரிடப்படாத இப்படத்துக்கு ‘Mr. லோக்கல்’ என்று தலைப்பிட்டு, படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளது படக்குழு. இதில் சிவகார்த்திகேயன் கோர்ட்-ஷூட் எல்லாம் அணிந்து, கையில் டீ க்ளாஸ் வைத்திருப்பது போல ஃபர்ஸ்ட் லுக் இருக்கிறது. இப்படம் கோடை விடுமுறைக்கு வெளியாகும் எனவும் அறிவித்து உள்ளனர். நயன்தாரா, ராதிகா சரத்குமார், சதீஷ், யோகி பாபு உள்ளிட்ட பலர் சிவகார்த்திகேயனுடன் நடித்துள்ளனர். ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைப்பாளராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் Mr. லோக்கல் குறித்து ஸ்டூடியோ க்ரீன் வெளியிட்ட செய்திக் குறிப்பில் ஒரு படத் தின் தலைப்பு என்பது ஏறத்தாழ ஒரு படத்தின் வெற்றியை நிர்ணயிக்கும் சக்தியாக இருக்கும். குறிப்பாக சிவ கார்த்திகேயன் படங்களின் தலைப்பு மக்களை எளிதாக ஈர்க்கும் வகையில்…
Read More
பாண்டி முனியில் அகோரியா நடிக்க ஏன் ஓ.கே. சொன்னேன்? ஜாக்கி ஷெராப் விளக்கம்!

பாண்டி முனியில் அகோரியா நடிக்க ஏன் ஓ.கே. சொன்னேன்? ஜாக்கி ஷெராப் விளக்கம்!

தனுஷ் நடித்த ‘துள்ளுவதோ இளமை’, ‘காதல் கொண்டேன்’, ‘யாரடி நீ மோகினி’, ‘திரு விளையாடல் ஆரம்பம்’,  ‘3’ ஆகிய படங்களைத் தயாரித்த ஆர்.கே.புரொடெக்சன்ஸ் பட நிறுவனம் தற்போது தயாரித்து வரும் திரைப்படம் ‘பாண்டி முனி.’ இந்தப் படத்தில் நாயகனாக ஆசிப் என்ற மாடல் அறிமுகமாகிறார். நாயகிகளாக மேகாலி, ஜோதி, வைஷ்ணவி, யாஷிகா  நால்வரும் அறிமுகமாகிறார்கள். பிரபல பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப், ‘அகோரி’ வேடத்தில் நடிக்கின்றார். இன்னொரு முக்கிய வேடத்தில் ஷாயாஜி ஷிண்டே நடிக்கிறார்.  ஒளிப்பதிவு – மது அம்பட், இசை – ஸ்ரீகாந்த் தேவா, கலை   இயக்கம் –   ஸ்ரீமான், பாலாஜி, நடன இயக்கம் – சிவசங்கர், சண்டை பயிற்சி   -சூப்பர் சுப்பராயன்,  படத் தொகுப்பு – சுரேஷ் அர்ஸ், எழுத்து, இயக்கம் – கஸ்தூரி ராஜா. தற்போது இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. படப்பிடிப்பில் ‘அகோரி’ வேடத்தில் நடித்துக் கொண்டிருந்தார் ஜாக்கி ஷெராப். சாதாரண நடிகர்கள்கூட  தன்னை மிக உயர்ந்தவர்களாக காட்டிக் கொண்டிருக்கும் இன்றைய கால கட்டத்தில், மிக உயர்ந்த இடத்தில் மதிக்கக் கூடிய நிலையில் இருக்கும் நடிகர்…
Read More
காதலர்களின் கதைதான் ‘ரீல்’!

காதலர்களின் கதைதான் ‘ரீல்’!

ஒரு காதல் கதையில் இருக்கும் உண்மையும், அதன் தன்மையுமே அந்தக் காதல் கதா பாத்திரங்களின் வலிமையை  உணர்த்தும். இந்த வகையான காதல் திரைப்படங்களை தமிழ் சினிமா நிறையவே கண்டுள்ளது. இத்தகைய தமிழ்ச் சினிமாக்களின் வரிசையில், நம்பிக்கையோடு அடுத்து வருகிறது ‘ரீல்’ திரைப்படம். ஸ்ரீமுருகா மூவி மேக்கர் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது. நாயகன் உதய்ராஜ் மற்றும் நாயகி அவந்திகா இருவரும் காதலர்கள் என்கிற கதாபாத்திரத்தின் வலிமையை உணர்ந்து நடித்திருக்கிறார்கள். KPY புகழ் சரத் இப்படத்தில் முழு நேர நகைச்சுவை நடிகராக மட்டுமில்லாமல், ஒரு குணச்சித்திர நடிகராகவும் நடித்திருக்கிறார். இப்படத்திற்கு சந்தோஷ்  சந்திரன் பாடல்களையும், அச்சு ராஜாமணி பின்னணி இசையும் கவனிக்கின்றனர். சுனல் பிரேம் ஒளிப்பதிவு செய்ய, சாய் சுரேஷ் படத் தொகுப்பு செய்கிறார். படத்தின் கதையை T.N.சூரஜ் எழுத, முனுசாமி என்னும் அறிமுக இயக்குநர் இந்த ‘ரீல்’ படத்தை இயக்குகிறார். ‘ரீல்’ படம் பற்றி இயக்குநர் முனுசாமி பேசுகையில், “காதல் திரைப்படங்கள் ரசிகர்களுக்கு…
Read More
இன்னமும் தலைப்பிடப் படாத ’அஜித் 59’ படத்தின் தொழில் நுட்ப கலைஞர்கள் பட்டியல்!

இன்னமும் தலைப்பிடப் படாத ’அஜித் 59’ படத்தின் தொழில் நுட்ப கலைஞர்கள் பட்டியல்!

விஸ்வாசம் படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து அஜித் குமார் நடிக்கும் அடுத்த படத்தை பே வியூ ப்ரொஜெக்ட்ஸ் எல் எல் பி என்கிற நிறுவனத்தின் சார்பில் போனி கபூர் தயாரிக்க, வினோத் குமார் இயக்க உள்ளார் என்பது அறிந்ததே. 2019 ஆம் ஆண்டின் கோடை விடுமுறையில் வெளியிட வேண்டும் என்கிற உத்வேகத்துடன் படப்பிடிப்பு குழுவினர் படத்தை துவக்க உள்ளனர் . ஒரு படத்தின் வெற்றிக்கு அந்த படத்தின் நடிக, நடிகையர் , தொழில் நுட்ப கலைஞர்கள் அனைவரும் முக்கியம் என்று கூறுகிறார் தயாரிப்பாளர் போனி கபூர். இது குறித்து அவர் மேலும் விவரித்த போது, “அஜித் குமாருடனான எனது நட்பு ,அவர் மறைந்த எனது மனைவி ஸ்ரீதேவியுடன் "இங்கிலீஷ் விங்கிலிஷ்" திரைப்படத்தில் நடிக்கும் போது தொடங்கியது. தனது தாய் மொழியான தமிழில் ஒரு படம் தயாரிக்க வேண்டும் என்றும் அதில் அஜித் கதாநாயகனாக நடிக்க வேண்டும் என்கிற தனது விருப்பத்தை அவர்…
Read More
YouTube இணையதளத்திற்காக தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் பிரத்யேகமாக  உருவாகும் திரைப்படம்!

YouTube இணையதளத்திற்காக தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் பிரத்யேகமாக  உருவாகும் திரைப்படம்!

இந்தியாவில் முதன் முறையாக YouTube இணையதளத்திற்காக தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் பிரத்யேகமாக  உருவாகும் திரைப்படம்! பேசும் படமாக ஆரம்பமான இந்திய சினிமா  ஒவ்வொரு காலகட்டத்திலும் பல விதமான பரிணாம வளர்ச்சியை கண்டு வருகிறது. கடந்த  சில வருடங்களாக திரைப்படங்கள் திரையரங்கு மட்டும் அல்லாமல்  OTT எனப்படும் டிஜிட்டல் தளங்களிலும் வெளியாகி வருகிறது. அந்த வகையில் இந்தியாவில் முதன் முறையாக, முதல் முயற்ச்சியாக  YouTube இனையதளத்திற்காக பிரத் யேகமாக படம் தயாரிக்கும் முயற்ச்சியில் இறங்கியிருக்கிறது NextGen எனும்  நிறுவனம். Crowd Funding எனப்படும் கூட்டு தயாரிப்பில் இப்படம் ஒரே சமயத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் உருவாகவிருக்கிறது. இதன் ஒருங்கிணைப்பாளரான அரவிந்த் ஸ்ரீனிவாசன் இந்த முயற்ச்சி குறித்து கூறுகையில் "YouTube இனையதளம் இன்று திரையுலகில் முக்கிய பங்க்காற்றி வருகிறது. படத்தின் டீசர், டிரைலர், பாடல்கள் என ஒரு படத்தினை ரசிகர்களிடம் கொண்டு சேர்ப்பதில் YouTube இனையதளத்தின்…
Read More