19
Apr
ஒவ்வொரு நிமிடமும் கோபம், சிரிப்பு, ஏமாற்றம், எதிர்பார்ப்பு, காதல், ஏக்கம், சோகம், விரக்தி…எனப் பலபல உணர்வுகளைக் காட்டும் மனித உணர்வுகளுக்கு வயது வரம்பே கிடையாது, வாழும் ஒவ்வொரு தருணத்தையும் உணர்வது தான். குழந்தையை போன்ற ஒரு அப்பாவியான தன்மை மற்றும் சந்தோஷமான இயல்புகள் எப்போதும் தனது ராஜ்யத்தில் மனிதர்களை வரவேற்க தயாராக உள்ளன. அத்தகைய சொர்க்கம் போன்ற தருணங்கள் பெரும்பாலும் வயோதிக வயதில் தான் நிகழ்கிறது. சீயான்கள் அந்த மாதிரியான தூய்மையான அன்பு மற்றும் அப்பாவியான தன்மையை கொண்டிருக்கும் கதாபாத்திரங்களை சுற்றி நிகழும் ஒரு அன்பின் கதை. தூய்மையான மற்றும் அப்பாவியான கதாபாத்திரங்களை கொண்டு சொர்க்கம் போன்ற ஒரு பின்னணியில் தயாராக உள்ளது. இதற்காக மேற்குத் தொடர்ச்சி மலைகளின் அடிவாரத்தில் உள்ள அழகான ஒரு சில கிராமங்களை தேர்ந்தெடுத்திருக்கிறார் இயக்குனர் வைகறை பாலன். இது குறித்து இயக்குனர் வைகறை பாலன்,"நான் வளரும்போது பார்த்த விஷயங்களை அடிப்படையாக கொண்டது தான் இந்த படம்.…
