21
Dec
உள்குத்து” திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது இதில் படத்தின் நாயகன் தினேஷ், தயாரிப்பாளர் PK FILM Factory G.விட்டல் குமார் , இயக்குநர் கார்த்திக் ராஜு , இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் , ஒளிப்பதிவாளர் P.K.வர்மா , நடிகர் பாலசரவணன் உள்ளிட்ட படக்குழுவினர் பலர் கலந்து கொண்டு பேசினர். இதில் நடிகர் தினேஷ் பேசியது :- நீண்ட நாட்களுக்கு பிறகு நான் கதாநாயகனாக நடிக்கும் திரைப்படம் வெளியாகிறது. வாழ்க்கை எனக்கு இந்த இடைவெளியில் நிறைய விஷயங்களை எனக்கு கற்றுதந்துள்ளது. எனக்கு நெருக்கமாக இருந்த சிலர் தூரமாக சென்றுள்ளனர். தூரமாக இருந்த சிலர் இன்று எனக்கு நெருக்கமாக உள்ளனர். கபாலி படத்துக்கு பிறகு இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பின் போது அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி என்றார். தயாரிப்பாளர் விட்டல்குமார் பேசிய போது, “ உள்குத்து திரைப்படம் வெளியாவதற்கு முக்கியமான காரணம் கடவுளும் , விஷால் சாரும் தான். கடவுளுக்கு நன்றி விஷால் சாருக்கு…
