டாக்ஸிக் திரைப்படம் வெளியீட்டு தேதி ஜூன் 4க்கு மாற்றம் !!

டாக்ஸிக் திரைப்படம் வெளியீட்டு தேதி ஜூன் 4க்கு மாற்றம் !!

கே வி என் புரொடக்ஷன்ஸ் KVN Productions மற்றும் மான்ஸ்டர் மைண்ட் கிரியேசன்ஸ் Monster Mind Creations நிறுவனங்கள் இன்று மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஆக்ஷன்-டிராமா திரைப்படமான 'டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்-அப்ஸ்' படத்தின் உலகளாவிய திரையரங்கு வெளியீட்டின் மறுதேதியை நிர்ணயித்துள்ளதாக அறிவித்துள்ளனர். முதலில் 2026 மார்ச் 19 அன்று உலகம் முழுவதும் வெளியிட திட்டமிடப்பட்டிருந்த இந்த படம், தற்போது மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் பதற்றம் மற்றும் பிராந்திய அசாதாரண சூழ்நிலை காரணமாக இத்திரைப்படத்தின் வெளியீட்டு தேதி 2026 ஜூன் 4ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. அவர்களின் முக்கிய விநியோக கூட்டாளிகளில் ஒருவரான Phars Films வழங்கிய ஆலோசனையின் பேரில், கல்‌ஃப் பகுதிகளில் அதிகரித்து வரும் பதற்றம் மற்றும் அதன் விளைவாக அங்குள்ள திரையரங்குகளின் செயல்பாடுகளில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை கருத்தில் கொண்டு, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பல மொழிகளில் உலகளாவிய அளவில் வெளியாகும் இந்த படத்திற்கு கல்‌ஃப் நாடுகள் முக்கிய…
Read More
ZEE5-ல் பூக்கி திரைப்படம் வரும் மார்ச் 13 முதல் ஸ்ட்ரீமிங்காகிறது !

ZEE5-ல் பூக்கி திரைப்படம் வரும் மார்ச் 13 முதல் ஸ்ட்ரீமிங்காகிறது !

ZEE5 நிறுவனம் இன்று, இயக்குநராக கணேஷ் சந்திரா அறிமுகமான ரொமான்டிக் காமெடி திரைப்படமான **‘பூக்கி’**படத்தின் டிஜிட்டல் வெளியீட்டை அறிவித்துள்ளது. இந்தப் படம் மார்ச் 13 முதல் ZEE5-ல் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் பிரத்யேகமாக ஸ்ட்ரீமிங் ஆகும். விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் கீழ் ஃபாத்திமா விஜய் ஆண்டனி தயாரித்துள்ள இந்த படத்தில் அஜய் திஷான் மற்றும் R.K. தனுஷா நடித்துள்ளனர். மேலும் பாண்டியராஜன், சுனில், லட்சுமி மஞ்சு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்தின் இசை மற்றும் எடிட்டிங்கை விஜய் ஆண்டனி மேற்கொண்டுள்ளார். ‘பூக்கி’ திரைப்படம், பிரிவை விரும்பும் நிலையில் இருந்தும் ஒருவரை ஒருவர் இன்னும் நேசித்து கொண்டிருப்பதை உணர்ந்து, குழப்பத்தில் சிக்கிக் கொள்ளும் ஒரு காதல் ஜோடியின், நகைச்சுவையுடன் கூடிய உணர்ச்சிப்பூர்வமான பயணத்தை சித்தரிக்கிறது. நவீன உறவுகளின் குழப்பம், பாசம் மற்றும் முரண்பாடுகளை இந்தப் படம் சுவாரஸ்யமாக வெளிப்படுத்துகிறது. படத்தின் தயாரிப்பாளர், இசையமைப்பாளர் மற்றும்…
Read More
‘மேட் இன் கொரியா’ டிரெய்லர் வெளியீடு !!

‘மேட் இன் கொரியா’ டிரெய்லர் வெளியீடு !!

நடிகை பிரியங்கா மோகன் மற்றும் நெட்ஃபிலிக்ஸின் ’மேட் இன் கொரியா’ குழுவினர் எம்சிசி கல்லூரி மாணவர்களுடன் கொரியன் வார்த்தை விளையாட்டை (Korean Word Game) கலகலப்பாக விளையாடினர்! இயக்குநர் ரா. கார்த்திக் இயக்கத்தில், ஸ்ரீநிதி சாகர் தயாரிப்பில் நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ள ‘மேட் இன் கொரியா’ படக்குழுவினர் இன்று சென்னையிலுள்ள மெட்ராஸ் கிறிஸ்டியன் கல்லூரி மாணவர்களை சந்தித்து படத்தின் டிரெய்லரை வெளியிட்டனர். படப்பிடிப்பில் நடந்த சுவாரஸ்ய அனுபவங்களை மாணவர்களுடன் பகிர்ந்து கொண்டதுடன் கொரிய மொழி வார்த்தை விளையாட்டு மற்றும் ’திஸ் ஆர் தட்’ (This or That) போன்ற ஃபன் விளையாட்டுகள் விளையாடி மாணவர்களுடன் கலகலப்பாக கலந்துரையாடினர். ரா. கார்த்திக் இயக்கத்தில், ரைஸ் ஈஸ்ட் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் ஸ்ரீநிதி சாகர் தயாரிப்பில், நடிகை பிரியங்கா மோகன் நடிப்பில் உருவாகியுள்ள ‘மேட் இன் கொரியா’ மார்ச் 12 முதல் நெட்ஃபிலிக்ஸ் தளத்தில் ப்ரீமியர் ஆகிறது.
Read More
லாக்கப் மரணங்களை  பேசும் ‘போலீஸ் ஃபேமிலி’ திரைப்படம். மார்ச்-13ல் வெளியாகிறது.

லாக்கப் மரணங்களை பேசும் ‘போலீஸ் ஃபேமிலி’ திரைப்படம். மார்ச்-13ல் வெளியாகிறது.

சமீப வருடங்களில் நடைபெற்ற சில லாக்கப் மரணங்கள் தமிழகத்தையே உலுக்கியதுடன் இந்திய அளவிலும் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த லாக்கப் மரணங்கள், அது தொடர்பான பழிவாங்கல்கள், அதனால் காவலர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் எதிர்கொள்ளும் பிரச்சனைகள், அதை அவர்கள் சமாளிக்கும் விதம் இவற்றை மையப்படுத்தி உருவாகி உள்ள படம் ‘போலீஸ் ஃபேமிலி’. ஆத்திரம் கொண்டு பழி வாங்குதல் என்பது எந்த ஒரு விஷயத்துக்கும் தீர்வு ஆகாது.. அப்படி செய்தால் பழிவாங்கும் உணர்வு என்பது அடுத்தடுத்த தலைமுறைக்கும் தொடரவே செய்யும். ஒருவன் அதை உணர்ந்து பழிவாங்கும் எண்ணத்தை விட்டு விட்டு மன்னிக்கும் மனதுக்கு எப்போது மாறுகிறானோ அன்று தான் அதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்படும். இதை மையக்கருத்தாக கொண்டு இந்த ‘போலீஸ் ஃபேமிலி’ படம் உருவாகியுள்ளது... ஆன் தி டேபிள் புரொடக்சன்ஸ் (On The Table Productions) சார்பில் மலைச்சாமி ஏஎம் ராஜா தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘போலீஸ் ஃபேமிலி’. சஸ்பென்ஸ் கிரைம்…
Read More
‘Vowels’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!

‘Vowels’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!

  ‘VOWELS – An Atlas of Love’ திரைப்படம் காதலின் பல பரிமாணங்களை பேசும் தனித்துவமான திரைப்படமாக உருவாகியுள்ளது. ராஜு ஷெரேகர் தயாரிப்பில், இந்த ஐந்து கதைகளையும் திலிப் குமார், சங்கீத், ஹேமந்த் குமார், சந்தோஷ் ரவி மற்றும் ஜெகன் ராஜேந்திரன் ஆகிய ஐந்து இயக்குநர்கள் இயக்கியுள்ளனர். யூகி சேது, சின்னி ஜெயந்த், சம்யுக்தா விஷ்வநாதன், ராஜ் அய்யப்பா, தீபக் பரமேஷ் உள்ளிட்டப் பலர் நடித்துள்ளனர். மார்ச் 13 அன்று இந்தத் திரைப்படம் உலகம் முழுவதும் உள்ள திரையரங்களுகளில் வெளியாகிறது. இதன் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. நிகழ்வில் படத்தொகுப்பாளர் ஹரிஷ் கொம்மே பேசியதாவது, "இந்தப் படத்தில் பணிபுரிந்தது எனக்கு வித்தியாசமான அனுபவம். பார்வையாளர்களும் படம் பார்க்கும்போது அதை உணர்வார்கள்" என்றார். கலை இயக்குநர் மதி, "படத்தின் தயாரிப்பாளர் ராஜூ சாருக்கு நன்றி. ஐந்து இயக்குநர்கள் ஒன்றாக பணியாற்றிய படத்தில் நான் பணிபுரிந்திருப்பது இதுதான் முதல்முறை. என்னுடைய டீம்…
Read More
#சூர்யா46 படத்திற்கு ‘விஸ்வநாத் & சன்ஸ்’ – என தலைப்பிடப்பட்டுள்ளது !!

#சூர்யா46 படத்திற்கு ‘விஸ்வநாத் & சன்ஸ்’ – என தலைப்பிடப்பட்டுள்ளது !!

நடிகர் சூர்யா நடிக்கும் அடுத்த படம் #சூர்யா46 தற்போது அதிகாரப்பூர்வமாக ‘விஸ்வநாத் & சன்ஸ்’ என பெயரிடப்பட்டுள்ளது. பெயரே சொல்வது போல், இப்படம் ஒரு அழகான, உணர்ச்சிபூர்வமான குடும்பக் கதையாக உருவாகியுள்ளது. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்களில் சூர்யா ஒரு குழந்தையுடன் தோன்றும் காட்சி, ரசிகர்களுக்கு பழைய நினைவுகளை எழுப்பும் வகையில் நெகிழ்ச்சியும், நம்பிக்கையும் கலந்த இனிய உணர்வை தருகிறது. முன்னதாக ‘வாத்தி’ மற்றும் ‘லக்கி பாஸ்கர்’ போன்ற வெற்றிப் படங்களை வழங்கிய இயக்குநர் வெம்கி அட்லூரி (Venky Atluri) இந்தப் படத்தை இயக்குகிறார். உணர்வுப்பூர்வமான கதை சொல்லலில் வல்லவரான இவர், இந்தப் படத்திலும் மறக்க முடியாத அனுபவத்தை வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தில் மமிதா பைஜு, ராதிகா சரத்குமார், ரவீனா டாண்டன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர். குடும்பத்தோடு கொண்டாடும் அசத்தலான திரை அனுபவமாக உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவு பெற்ற நிலையில், வருகிற ஜூலை மாதம்…
Read More
‘காதல் ரீசெட் ரிப்பீட்’ – நல்ல மனம் கொண்ட மனிதனின் கதை – இயக்குநர் விஜய் !!

‘காதல் ரீசெட் ரிப்பீட்’ – நல்ல மனம் கொண்ட மனிதனின் கதை – இயக்குநர் விஜய் !!

மாலி& மான்வி மூவி மேக்கர்ஸ் ( Mali & Manvi Movie Makers) - டி ஸ்டுடியோஸ் ( D Studios) -டென்வி புரொடக்ஷன் ( Denvi Production) - ஆகிய நிறுவனங்களின் தயாரிப்பில், தயாரிப்பாளர் பிரபா பிரேம்குமார் இணை தயாரிப்பில் முன்னணி இயக்குநர் விஜய் இயக்கத்தில் உருவாகி, மார்ச் 6 ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் 'காதல் ரீசெட் ரிப்பீட்' படத்தின் முன் வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இயக்குநர் விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள 'காதல் ரீசெட் ரிப்பீட்' படத்தில் மதும்கேஷ், ஜியா சங்கர் , அர்ஜுன் அசோகன், எம். எஸ். பாஸ்கர், ஜெயப்பிரகாஷ், விஜி சந்திரசேகர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை ஆண்டனி கவனிக்க கலை இயக்கத்தை சரவணன் வசந்த் மேற்கொண்டிருக்கிறார். மனோகர் வர்மா சண்டை பயிற்சியையும், ருச்சி…
Read More
செ. ஹரி உத்ரா இயக்கும் ‘மாஸ்டர் பிளான்’ பட பூஜை இன்று கோலகலமாக நடைபெற்றது!!

செ. ஹரி உத்ரா இயக்கும் ‘மாஸ்டர் பிளான்’ பட பூஜை இன்று கோலகலமாக நடைபெற்றது!!

  உத்ரா புரொடக்ஷன்ஸ் & டிஜே இன்டர்நேஷனல் தயாரிப்பில், செ. ஹரி உத்ரா எழுதி இயக்கும் புதிய திரைப்படமான ‘மாஸ்டர் பிளான்’ படத்தின் பூஜை இன்று எளிமையாகவும் சிறப்பாகவும் நடைபெற்றது. இப்படம் கோலமாவு கோகிலா, டாக்டர், டூரிஸ்ட் ஃபேமிலி போன்ற திரைப்படங்களைப் போல அனைவரும் ரசிக்கும் வகையில் கலகலப்பான பிளாக் ஹூயுமர் கலந்த நகைச்சுவை திரைப்படமாக அரசியல் பின்னணியில் இப்படம் உருவாகவுள்ளது. இன்று நடைபெற்ற பூஜை விழாவில் தயாரிப்பாளர்கள் ஃபைவ் ஸ்டார் கதிரேசன், P.L. தேனப்பன், உள்ளிட்டோர் கலந்துகொண்டு படக்குழுவினரை வாழ்த்தினர். புதிய முயற்சியாக உருவாகும் இந்த திரைப்படம், அரசியலைச் சேர்ந்த ஆட்களால் ஏற்படும் பிரச்சனையில் நாயகன் நாயகியின் குடும்பம் சிக்கிக் கொள்வதும், அந்த குடும்பம் வில்லன்களிடம் இருந்து, எவ்வாறு மீண்டு வருகின்றது என்பதையும் நகைச்சுவை மற்றும் டார்க் ஹூமர் கலந்த அணுகுமுறையில் சொல்லவுள்ளது. இந்தப் படத்தில் தருண் விஜய் மற்றும் சாயாதேவி நாயகன்–நாயகியாக நடிக்கின்றனர். இவர்களுடன் திவ்யா ஜெகத், அப்புகுட்டி,…
Read More
நற்பண்புகளின் இலக்கணம் ஐயா நல்லகண்ணு / நடிகர் சிவகுமார் நினைவு அஞ்சலி!

நற்பண்புகளின் இலக்கணம் ஐயா நல்லகண்ணு / நடிகர் சிவகுமார் நினைவு அஞ்சலி!

1925 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26 ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் பிறந்தார் ஐயா ஆர். நல்லகண்ணு. பள்ளி மாணவனாக விளங்கியபோதே ஸ்ரீவைகுண்டத்தில் நடைபெற்ற தேசியத் தலைவர்கள் பேசிய பொதுக்கூட்டங்களுக்குச் சென்று அவர்களின் உரைகளைக் கேட்டுள்ளார். அதனால் ஏற்பட்ட தாக்கத்தால் தானும் ஒரு உணர்வாளராக உருவெடுத்தார். பள்ளி ஆசிரியர் ஒருவர் கொடுத்த கம்யூனிஸ நூல்களைப் படித்த அச்சிந்தனைக்கு ஆட்பட்டார். திருநெல்வேலி இந்துக் கல்லூரியில் இண்டர்மீடியட் படித்து முடித்து பட்ட வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது பொதுவாழ்வில் மூழ்கி படிப்பைப் பாதியில் விட்டு விட்டார். 1945 இல் மதுரையில் நடைபெற்ற தொழிலாளர் மாநாட்டில் ஜீவா ஆற்றிய உரை கேட்டு ஊக்கம் பெற்றார். கம்யூனிஸ்ட் இயக்கத்தில் தீவிரமாகச் செயல்படத் தொடங்கினார். ஆதிக்கங்களுக்கு எதிராகவும், ஏழை எளியவர்களுக்கு ஆதரவாகவும் இளம் வயதிலேயே போராட்டக்களம் இறங்கினார். சுதந்திரத்திற்குப் பின்னர் கட்சி தடை செய்யப்பட்டதால் தலைமறைவு வாழ்க்கை நடத்தினார். 1949 இல் காவல்துறையால் கைது செய்யப்பட்டு பல…
Read More
‘மென்டல் மனதில் ‘ படத்தின் ‘உயிரே உயிரே’  ஃபர்ஸ்ட் சிங்கிள் !!

‘மென்டல் மனதில் ‘ படத்தின் ‘உயிரே உயிரே’ ஃபர்ஸ்ட் சிங்கிள் !!

தேசிய விருதைப் பெற்ற இசையமைப்பாளரும், நட்சத்திர நடிகருமான ஜி வி பிரகாஷ் குமார் கதையின் நாயகனாக நடிக்கும் 'மென்டல் மனதில்' படத்தில் இடம்பெற்ற 'உயிரே உயிரே' முதல் பாடலும், பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் முன்னணி நட்சத்திர நடிகரான கார்த்தி அவரது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில், உருவாகி வரும் 'மென்டல் மனதில்' திரைப்படத்தில் ஜி வி பிரகாஷ் குமார் - மாதுரி ஜெயின் முதன்மையான கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். இவர்களுடன் நடிகை சீதா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். அருண் ராமகிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். படத்தொகுப்பு பணிகளை பாலாஜி கவனிக்க, கலை இயக்கத்தை ஆர்.கே. விஜய் முருகன் மேற்கொள்கிறார். தினேஷ் குணா நிர்வாக தயாரிப்பாளராக பொறுப்பேற்றிருக்கும் இந்தத் திரைப்படத்தை பேரலல் யூனிவர்ஸ் பிக்சர்ஸ் (Parallel Universe Pictures) நிறுவனம் சார்பில் ஜி.வி. பிரகாஷ் குமார் தயாரிக்கிறார்.…
Read More