மிரட்டலான போஸ்டருடன் வெளியான ‘காளிதாஸ் 2’ ரிலீஸ் தேதி !

மிரட்டலான போஸ்டருடன் வெளியான ‘காளிதாஸ் 2’ ரிலீஸ் தேதி !

  2019-ம் ஆண்டு வெளியான 'காளிதாஸ்' திரைப்படம், அதன் விறுவிறுப்பான திரைக்கதையாலும், எதிர்பாராத கிளைமாக்ஸாலும் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அந்த வெற்றியைத் தொடர்ந்து, தற்போது அதன் இரண்டாம் பாகமான 'காளிதாஸ் 2' உருவாகியுள்ளது. ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் ஏப்ரல் 3ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் பாகத்தை இயக்கி முத்திரை பதித்த இயக்குநர் ஸ்ரீ செந்தில் இந்த இரண்டாம் பாகத்தையும் இயக்கியுள்ளார். பரத் நாயகனாக நடிக்கும் இப்படத்தில், மற்றுமொரு முதன்மை கதாபாத்திரத்தில் அஜய் கார்த்தி நடித்துள்ளார்.  'பூவே உனக்காக' புகழ் நடிகை சங்கீதா நீண்ட இடைவேளைக்குப் பிறகு மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளதன் மூலம் ரீ-என்ட்ரி கொடுக்கிறார். இவர்களுடன் பவானி ஸ்ரீ மற்றும் அபர்ணதி ஆகியோரும் நடித்துள்ளனர். முதல் பாகம் ஒரு குடும்பத்தை மையமாகக் கொண்ட புலனாய்வு திரில்லராக அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. அதே பாணியில், இந்த இரண்டாம் பாகமும் உணர்ச்சிகரமான அதே சமயம்…
Read More
‘லீடர்’ படத்தின் டீசர் வெளியீட்டு கொண்டாட்டம் !!

‘லீடர்’ படத்தின் டீசர் வெளியீட்டு கொண்டாட்டம் !!

லெஜெண்ட் சரவணன் முதன்மை வேடத்தில் நடிக்கும் 'லீடர்' படத்தின் டீசர் வெளியீட்டு கொண்டாட்டம் சென்னை கமலா திரையங்கில் வியாழக்கிழமை படக்குழுவினர் மற்றும் ரசிகர்கள் பங்கேற்க விமரிசையாக நடைபெற்றது. சமூக ஊடக தளங்களில் டீசர் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. பிரபல இயக்குநர் ஆர்.எஸ். துரை செந்தில்குமார் எழுதி இயக்கியுள்ள இந்தப் படத்தை லெஜெண்ட் சரவணா ஸ்டோர்ஸ் புரொடக்ஷன்ஸ் பிரமாண்டமாக தயாரித்துள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வரும் ஏப்ரல் மாதம் உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் 'லீடர்' வெளியாகிறது. ஒரு நிமிடம் 21 நொடிகள் ஓடும் டீசரில் இடம் பெற்றுள்ள லெஜெண்ட் சரவணனின் அதிரடி சண்டைக்காட்சிகள் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளதோடு, சமூக ஊடக தளங்களில் பலத்த பாராட்டுகளை குவித்துள்ளன. படத்தின் மீதான எதிர்பார்ப்பை டீசர் பெரிய அளவில் அதிகரித்துள்ளது. படத்தைப் பற்றிப் பேசிய இயக்குநர் ஆர்.எஸ். துரை செந்தில்குமார், "அசாதாரண சூழ்நிலைகளை எதிர்கொள்ளும் ஒரு சாதாரண மனிதனின் உணர்ச்சிப் பயணம்…
Read More
மர்ம விசாரணை கதையில் சுவாரஸ்யம் தரும் அனோமி !!

மர்ம விசாரணை கதையில் சுவாரஸ்யம் தரும் அனோமி !!

ரியாஸ் மராத் இயக்கத்தில் உருவான “அனோமி” ஒரு சைக்காலஜிக்கல் கிரைம் திரில்லர். பாவனா, ரகுமான், ஷெபின் பென்சன் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படம் மர்மமான கொலைகள் மற்றும் அதனைத் தீர்க்கும் விசாரணையை மையமாகக் கொண்டு நகர்கிறது. கதை தடயவியல் நிபுணராக பணிபுரியும் சாரா (பாவனா) தனது தம்பியை மிகவும் பாதுகாப்பாக கவனித்து வாழ்ந்து வருகிறார். பெற்றோரின் மரணத்திற்குப் பிறகு மனஅழுத்தத்தில் இருக்கும் தம்பி திடீரென காணாமல் போகிறார். இந்த சம்பவம் ஒரு சாதாரண விஷயம் அல்ல என சந்தேகிக்கும் சாரா, உண்மையை கண்டுபிடிக்கத் தானாகவே விசாரணையில் இறங்குகிறார். அதே நேரத்தில் போலீஸ் அதிகாரி கிப்ரான் (ரகுமான்) இந்த வழக்கை அதிகாரபூர்வமாக விசாரிக்க ஆரம்பிக்கிறார். பல மர்மமான சம்பவங்கள், கொலைகள், மனநிலை மாற்றங்கள் ஆகியவற்றின் பின்னணியில் மறைந்திருக்கும் உண்மை என்ன? என்பதே படத்தின் திரில்லான பயணம். நடிப்பு பாவனா இந்த படத்தின் முக்கிய பலம். தடயவியல் நிபுணராக அவர் காட்டும் அமைதியான ஆனால்…
Read More
வடம் – விமர்சனம் !!

வடம் – விமர்சனம் !!

இயக்குனர் கேந்திரன் இயக்கத்தில், விமல், நட்டி நட்ராஜ், சனஷ்கா ஸ்ரீ உள்ளிட்டோர் நடித்துள்ள கிராமத்து ஆக்ஷன் படம் தான் “வடம்”. வடமாடு மஞ்சு விரட்டு என்ற பாரம்பரிய விளையாட்டை பின்னணியாக கொண்டு பகை, பழிவாங்கல், மனித-மாடு பாசம் போன்ற அம்சங்களை கலந்து கமர்ஷியல் வடிவில் இந்த படம் உருவாகியுள்ளது. கதை என்ன? கிராமத்தில் மாடுகளை உயிரோடு நேசிக்கும் இளைஞன் வெற்றிவேல் (விமல்). அடிமாட்டுக்கு அனுப்பப்பட்ட ஒரு கன்றைக் காப்பாற்றி வளர்த்து, அதை மஞ்சுவிரட்டு காளையாக உருவாக்குகிறார். அந்த காளை கிராமத்தில் பெருமையைப் பெறுகிறது. இதற்கிடையில் ஒரு கொலை வழக்கில் சிக்கி ஜாமீனில் வெளியே வரும் வெற்றிவேலை பலர் கொல்ல முயல்கிறார்கள். அவரைச் சுற்றி உருவாகும் பகை, மறைந்திருக்கும் பழிவாங்கும் காரணங்கள் மற்றும் அவரது காளையுடன் தொடர்புடைய நிகழ்வுகள் தான் கதையின் மையம். நடிப்பு விமல் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒரு கிராமத்து ஆக்ஷன் கதாபாத்திரத்தில் தோன்றுகிறார். காளைகளுடன் இருக்கும் காட்சிகளிலும், மஞ்சு…
Read More
கண்ணன் ரவி குழுமம் தயாரிப்பில் ‘டெக்ஸ்லா’ படத்தின் தொடக்க விழா !

கண்ணன் ரவி குழுமம் தயாரிப்பில் ‘டெக்ஸ்லா’ படத்தின் தொடக்க விழா !

  கண்ணன் ரவி குழுமம் சார்பில் தயாரிப்பாளர் கண்ணன் ரவி தயாரிப்பில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ஜெய் - சுராஜ் வெஞ்சரமூடு நடிப்பில் 'டெக்ஸ்லா' திரைப்படத்தின் தொடக்க விழா சென்னையின் சிறப்பாக நடைபெற்றது. இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகும் 'டெக்ஸ்லா' திரைப்படத்தில் ஜெய், சுராஜ் வெஞ்சானமூடு, ஆனந்தராஜ், ஜி.எம். சுந்தர், ஜார்ஜ் மரியன் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். யுவன் சங்கர் ராஜா இசையில் தயாராகும் இந்த திரைப்படத்தை கண்ணன் ரவி குழுமம் சார்பில் தயாரிப்பாளர் கண்ணன் ரவி தயாரிக்கிறார். தீபக் ரவி இணை தயாரிப்பாளராக பொறுப்பேற்றிருக்கிறார். இப்படத்தின் அறிமுக வீடியோ காணொளி வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் இதன் அதிகாரப்பூர்வமான தொடக்க விழா சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது. இந்நிகழ்வில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான திரு.சீமான், திருமதி லதா ரஜினிகாந்த், தயாரிப்பாளர் ஆர் பி சவுத்ரி, இயக்குநர் பாலா, இசையமைப்பாளர் அனிருத், தயாரிப்பாளர்கள் சுஜாதா…
Read More
மரகதமலை இசை வெளியீட்டு விழா !!

மரகதமலை இசை வெளியீட்டு விழா !!

அறிமுக இயக்குநர் எஸ். லதா கதை, திரைக்கதை, வசனம், பாடல் எழுதி இயக்கியுள்ள திரைப்படம் “மரகதமலை”. எல்.ஜி மூவிஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த படம், சிறுவர்களுக்கான சாகச காட்சிகளையும் குடும்பத்துடன் ரசிக்கக்கூடிய அம்சங்களையும் இணைத்து அழகாக உருவாக்கப்பட்டுள்ளது. விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா, படக்குழுவினருடன் பல திரைப்பிரபலங்கள் கலந்து கொண்டு, பத்திரிக்கை மற்றும் ஊடக நண்பர்கள் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வினில்.., இயக்குநர் R.கண்ணன் பேசியதாவது.., பத்திரிக்கை நண்பர்களுக்கும் இங்கு கலந்து கொண்டுள்ள அனைவருக்கும் என் வணக்கங்கள். இயக்குநர் லதா மேடம் இன்று பல பெண்களுக்கு ஒரு பெரிய இன்ஸ்பிரேஷன். தனது கனவை விட்டுவிடாமல் “மரகதமலை” என்ற கதையை எழுதி இயக்கியிருக்கிறார். இன்றைய சூழலில் ஒரு படத்தை எடுத்து வெளியிடுவது எளிதான விஷயம் அல்ல. அதற்கிடையில் தைரியமாக இந்த முயற்சியை எடுத்த லதா மேடத்திற்கு பாராட்டுகள். சம்மர் ஹாலிடே முன்னிட்டு ஏப்ரல் 3…
Read More
‘லோக்கல் டைம்ஸ்’ தமிழ் காமெடி-டிராமா தொடர் உலகளாவிய வெளியீடு !

‘லோக்கல் டைம்ஸ்’ தமிழ் காமெடி-டிராமா தொடர் உலகளாவிய வெளியீடு !

  ரிஷிகாந்த், அப்தூல் லீ, மௌரிஷ் தாஸ், அத்விதா அறுமுகம், R.பாண்டியராஜன், சின்னி ஜெயந்த், ரினி மற்றும் நந்திதா ஸ்ரீகுமார் நடித்துள்ள ஏழு எபிசோடுகள் கொண்ட இந்த சீரிஸை, நவீன் ஜார்ஜ் தாமஸ் இயக்கத்தில், Fanboy Production நிறுவனத்தின் சார்பில் ஜித்தின் துரை தயாரித்துள்ளார். இந்தியா மற்றும் உலகம் முழுவதும் 240 நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் மார்ச் 13 அன்று வெளியாகும் ‘லோக்கல் டைம்ஸ்’, பிரவீன் முத்துரங்கன் எழுதியுள்ளார், அபிநவ் கஸ்தூரா, பிரவீன் முத்துரங்கன், சாத்விக் கதே,தாமஸ் மானுவல் மற்றும் விஷ்வக் சென் பி. ஆகியோரால் உருவாக்கப்பட்டுள்ளது இந்தியாவின் மிகவும் விரும்பப்படும் பொழுதுபோக்கு தளமான பிரைம் வீடியோ, தனது தமிழ் ஒரிஜினல் காமெடி-டிராமா தொடர் ‘லோக்கல் டைம்ஸ்’ சீரிஸின் உலகளாவிய வெளியீட்டை மார்ச் 13 அன்று அறிவித்துள்ளது. சிரிக்க வைக்கும் அதே சமயம் மனதை தொடும் டிரெய்லருடன் வெளியிடப்பட்ட இந்த ஏழு எபிசோடுகள் கொண்ட சீரிஸ், வேகமாக மாறிவரும் டிஜிட்டல் செய்தி…
Read More
சாய் அபயங்கர் உடன் நடிகை ஸ்ருதிஹாசன் பாடிய “பவழ மல்லி”  !!

சாய் அபயங்கர் உடன் நடிகை ஸ்ருதிஹாசன் பாடிய “பவழ மல்லி” !!

  நடிகை ஸ்ருதிஹாசனின் நடிப்புக்கு மட்டுமல்ல, அவரது இசைத்திறமைக்கும் பெரும் ரசிகர் பட்டாளம் உள்ளது. தற்போதைய இளைஞர்கள் பெரிதும் கொண்டாடும் இசையமைப்பாளர் சாய் அபயங்கருடன் இணைந்து அவர் பாடியுள்ள “பவழ மல்லி” பாடல் தற்போது இசை உலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. “பவழ மல்லி” பாடல் பாரம்பரியத்தின் மணமும், நவீன இசையின் அதிரடியும் ஒன்றாக கலந்த தனித்துவமான இசை அனுபவமாக உருவாகியுள்ளது. இண்டி இசை உலகில் தனித்துவமான பாணிக்காக அறியப்படும் சாய் அபயங்கர் இந்த பாடலுக்கு இசைமைத்துள்ளார். இந்த பாடலின் மிகப்பெரிய சிறப்பாக அமைந்துள்ளது ஸ்ருதிஹாசனின் குரல். அவரது குரல் பாடலுக்கு ஒரு தனித்துவமான கவர்ச்சியையும் ஆழமான உணர்ச்சியையும் அளிக்கிறது. மணமகன்–மணமகள் இடையே நடைபெறும் சுவாரஸ்யமான ஊடலை மையமாகக் கொண்டு, கேள்வி–பதில் பாணியில் இந்த பாடல் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் மணமகளின் பதில்கள் ஸ்ருதிஹாசனின் குரலில் இனிமையாக ஒலித்து பாடலுக்கு மேலும் உயிரூட்டுகின்றன. காதல் வளர வளர, இந்தப் பாடலின் இசையும் பல…
Read More
“கான் சிட்டி” (Con City)பட அதிரடி டைட்டில் டீசர் வெளியானது!!

“கான் சிட்டி” (Con City)பட அதிரடி டைட்டில் டீசர் வெளியானது!!

புதுமையான கதைக்களத்தில், கொண்டாட்டமான ஃபேமிலி எண்டர்டெயினராக உருவாகி வரும் ‘கான் சிட்டி’ திரைப்படத்தின் டைட்டில் டீசர் தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மூலம் ஏற்கனவே ஆர்வத்தை தூண்டியிருந்த இந்த படம், தற்போது வெளியான டைட்டில் டீசர் மூலம் மேலும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. நகர வாழ்க்கையில் கடனில் போராடும் ஒரு மிடில் கிளாஸ் குடும்பத்தின் வாழ்க்கையோடு ஆரம்பிக்கும் டைட்டில் டீசர், அடுத்தடுத்து ஆச்சரியம் தரும் காட்சிகளால் அதிர வைக்கிறது. அவர்களுக்கு கிடைக்கும் ஒரு பண மிஷின், பட்டன் தட்டினால் கொட்டும் பணம் என கண்கள் விரிய ஒரு புதுமையான கதைக்களத்திற்குள் நம்மை இழுத்து செல்கிறது. உணர்வுப்பூர்வமாக ஆரம்பிக்கும் இந்த டைட்டில் டீசர் காமெடி டிராக்கில் மாறி, வெகு சுவாரஸ்யமாக நிறைவு பெறுகிறது. இந்த படத்தில் முன்னணி இளம் நடிகர் அர்ஜூன் தாஸ், மலையாளத்தின் பிரபல நடிகை அன்னா பென், நகைச்சுவை நடிகர் யோகி பாபு, மூத்த…
Read More
‘பெத்தி’ படத்தின் இரண்டாவது சிங்கிள் சூப்பர் ஹிட் – 46M+ பார்வைகளுடன் டிரெண்டிங்!

‘பெத்தி’ படத்தின் இரண்டாவது சிங்கிள் சூப்பர் ஹிட் – 46M+ பார்வைகளுடன் டிரெண்டிங்!

மெகா பவர் ஸ்டார் ராம் சரண் நடனமாடுவது மட்டும் அல்ல, திரையை முழுவதும் தனது 'ரிதம்' மூலம் ஆளும் தனித்துவமான ஸ்டைல் கொண்டவர். மிகுந்த எதிர்பார்ப்பில் உருவாகி வரும் பான்-இந்தியா திரைப்படமான பெத்தி படத்தின் முதல் சிங்கிள் ‘சிக்கிரி சிக்கிரி’ வெளியானபோது, அவரது கிரேஸ், பவர், மற்றும் ஆளுமை ஒன்று சேர்ந்து ரசிகர்களை உற்சாகப்படுத்தியது. அந்தப் பாடல் உடனே வைரலாகி, அடுத்த பாடலுக்கான எதிர்பார்ப்பை அதிகரித்தது. நேற்று வெளியான இரண்டாவது சிங்கிள் ‘ரை ரை ரா ரா’ ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தப் பாடல் ஐந்து மொழிகளில் சேர்த்து 46.1 மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வைகள் மற்றும் 800K+ லைக்குகள் பெற்று புதிய சாதனை படைத்துள்ளது. குறிப்பாக தெலுங்கில் மட்டும் 29.21 மில்லியன் பார்வைகள் பெற்று, முன்பு ‘‘சிக்கிரி சிக்கிரி’ பாடல் 24 மணி நேரத்தில் பெற்ற 29.1 மில்லியன் பார்வை சாதனையை முறியடித்துள்ளது. ஆஸ்கர் விருது பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.…
Read More