19
Apr
”என்னடி செஞ்ச என்னோட நெஞ்ச" – மையல் படத்திலிருந்து மெலோடி இசையை விரும்பும் இசைநாயகர்களுக்கான இனிய இசை விருந்தாக வெளியாகியுள்ளது! மெல்லிசை, மனதை வருடும் குரல்கள், கவிதையாய் பேசும் வரிகள்… இவை அனைத்தும் இணையும் போது, இசை நாயகர்களின் உள்ளங்களை தீண்டும் ஒரு மந்திரம் உருவாகிறது. கூட மேல கூட வச்சு, கண்கள் இரண்டால் போன்ற இனிமை நிரம்பிய பாடல்களின் வரிசையில் இப்போது இணையப்போகும் இன்னொரு மர்ம மாயம் – மையல் படத்தில் இருந்து வெளிவந்துள்ள "என்னடி செஞ்ச என்னோட நெஞ்ச". இந்த சுகாத இசை அனுபவத்தை இசையமைப்பாளர் அமர்கீத் தனது நுட்பமான இசை பாணியால் உயிரூட்டுகிறார். பாடலுக்குச் சுவை கூட்டும் விதமாக, சத்யப்ரகாஷ் மற்றும் வந்தனா ஸ்ரீனிவாசன் ஆகியோரின் மென்மையான குரல்கள் பாடலின் உணர்வுகளை நம் உள்ளங்களில் நேரடியாகப் பதிய செய்கின்றன. மிக எளிமையாக அமைக்கப்பட்ட இசை பின்னணி, பாடலின் உணர்வுபூர்வ தன்மையை தெளிவாக வெளிப்படுத்துகிறது. ஏகாதசி எழுதிய வரிகள்,…