‘பள்ளிச்சட்டம்பி’ படத்தின் தமிழ் பதிப்பிற்கான பத்திரிகையாளர் சந்திப்பு!!

‘பள்ளிச்சட்டம்பி’ படத்தின் தமிழ் பதிப்பிற்கான பத்திரிகையாளர் சந்திப்பு!!

வேர்ல்ட் வைட் பிலிம்ஸ் மற்றும் சி கியூப் ப்ரோஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் டிஜோ ஜோஸ் ஆண்டனி இயக்கத்தில் நடிகர் டொவினோ தாமஸ் நடிப்பில் தயாராகி, ஏப்ரல் மாதம் 10 ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் 'பள்ளிச்சட்டம்பி' படத்தின் தமிழ் பதிப்பை விளம்பரப்படுத்தும் வகையில் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இப்படத்தில் டொவினோ தாமஸ், கயாடு லோஹர், விஜயராகவன், பாபு ராஜ், அலெக்சாண்டர் பிரசாந்த், சுதீர் கராமனா, டி.ஜி.ரவி,, ஜான் ஆண்டனி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். டிஜோ டோமி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜேக்ஸ் பிஜாய் இசைமமைத்திருக்கிறார். 1957ஆம் ஆண்டின் பின்னணியில் கமர்சியல் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை வேர்ல்ட் வைட் பிலிம்ஸ் மற்றும் சி கியூப் ப்ரோஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் சார்பில் நௌஃபல், பிரிஜீஷ், சானுக்யா - சைதன்யா- சரண் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். இந்தத் திரைப்படத்தை தமிழகம் முழுவதும் சக்ரா பிக்சர்ஸ்…
Read More
‘ராவடி’ படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்தது !

‘ராவடி’ படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்தது !

  செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனத்தின்  S. S. லலித் குமார் தயாரிப்பில், நடிகர்கள் பஸில் ஜோசப் & L. K. அக்ஷய் குமார் நடிக்கும் ‘ராவடி’ படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்தது. சென்னை மற்றும் ஒகேனக்கலில் படப்பிடிப்பு நடந்து முடிந்து, தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகிறது. நடிகர்கள் பஸில் ஜோசப் - L. K. அக்ஷய் குமார் ஆகியோர் இணைந்து நடிக்கும் தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய இரு மொழிகளில் உருவாகி வரும் ‘ராவடி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் தற்போது முழுமையாக நிறைவடைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் சென்னை மற்றும்  ஒகேனக்கல் பகுதியில் படமாக்கப்பட்டுள்ளன. இயற்கை அழகுடன் கூடிய ஒகேனக்கல் லொக்கேஷன், படத்திற்கு வித்தியாசமான காட்சியமைப்பை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அறிமுக இயக்குநர் விக்னேஷ் வடிவேல் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில், ஜான் விஜய், சத்யன், ஜாபர் சாதிக், நோபல் K. ஜேம்ஸ்,…
Read More
சமுத்திரக்கனி – கௌதம் வாசுதேவ் மேனன் இணைந்து நடிக்கும்’ கார் மேனி செல்வம்’ !!

சமுத்திரக்கனி – கௌதம் வாசுதேவ் மேனன் இணைந்து நடிக்கும்’ கார் மேனி செல்வம்’ !!

பாத்வே புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் அருண் ரங்கராஜுலு தயாரிப்பில் ராம் சக்ரி இயக்கத்தில் சமுத்திரக்கனி-கௌதம் வாசுதேவ் மேனன் நடிப்பில் தயாராகி, ஏப்ரல் மூன்றாம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் 'கார் மேனி செல்வம்' திரைப்படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. ராம் சக்ரி இயக்கத்தில் உருவாகியுள்ள 'கார் மேனி செல்வம்' திரைப்படத்தில் சமுத்திரக்கனி, கௌதம் வாசுதேவ் மேனன், லட்சுமி பிரியா சந்திரமௌலி, அபிநயா, கார்த்திக் குமார், படவா கோபி, மதுமிதா, அர்ஜுனன் , ஹரிதா பராகோட், கோதண்டம், கரண் சக்கரவர்த்தி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். யுவராஜ் தக்ஷ‌ன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு மியூசிக்லௌட் ஸ்டுடியோ & டெக்னாலஜி நிறுவனம் இசையமைத்திருக்கிறது.‌ ஃபீல் குட் ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை பாத்வே புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் அருண் ரங்கராஜுலு தயாரித்திருக்கிறார். ஏப்ரல் மாதம் மூன்றாம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் இப்படத்தினை விளம்பரப்படுத்தும் வகையில் சென்னையில் நடைபெற்ற…
Read More
Project Hail Mary மனிதனுக்கும் ஏலியனுக்குமான அன்பு !!

Project Hail Mary மனிதனுக்கும் ஏலியனுக்குமான அன்பு !!

    சுஜாதா ஒரு முறை விஞ்ஞான அறிவியல் கதைகள் குறித்து சொல்லும் போது, நீங்கள் எதைவேண்டுமானாலும் கற்பனையில் சொல்லலாம் ஆனால் இறுதியில் அது மனிதனின் ஆதார உண்ர்ச்சிகளில் வந்து நிற்கும் என்றிருப்பார். அதே தான் Project Hail Mary படத்தின் சிறப்பு இது சயின்ன் பிக்சன் என்றாலும் இதை தனித்துவமாக்குவது.. இதில் எதிர்பாரா நேரத்தில், ஏலியனுக்கு மனிதனுக்கும் இடையில் உருவாகும் அன்பும் நட்பும் தான். இந்தப்படம் பார்த்த போது Interstellar பட ஞாபகம் நிறைய வந்தது. அதற்கும் இதற்கும் நிறைய ஒற்றுமைகள். Accurate Science விசயங்கள் ஆரம்பித்து கதையின் தன்மையும் கூட ஒன்று தான். Interstellar படத்தில் நோலன் எந்தளவு உண்மையான அறிவியலுக்கு பக்கத்தில் படத்தை கொண்டு வந்திருந்தார் என்பது உங்களுக்கே தெரியும். அப்படத்தில் வந்த பிளாக் ஹோல் வடிவமைப்பு கூட, பின்னாளில் அதே போல் இருப்பதாக பேசப்பட்டது. அப்படத்தை வைத்து சயின்ஸ் பேப்பர்ஸ் எல்லாம் சப்மிட் செய்தார்கள். அதை…
Read More
சாந்தி டாக்கீஸ் தயாரிப்பில் பாரத் – சான்வே திரைப்படத்திற்கு இசையமைக்கிறார் நிவாஸ் கே பிரசன்னா

சாந்தி டாக்கீஸ் தயாரிப்பில் பாரத் – சான்வே திரைப்படத்திற்கு இசையமைக்கிறார் நிவாஸ் கே பிரசன்னா

தமிழ் திரையுலகில் ரசிக்கும்படியான ஹிட் பாடல்களை தொடர்ந்து கொடுத்து வருகிறார் இசையமைப்பாளர் நிவாஸ் கே. பிரசன்னா. தனது தனித்துவமான இசைக்காக கொண்டாடப்படும் அவர் தமிழ் திரையுலகின் இசையுலகில் புத்துயிர் ஊட்டியதாக பாராட்டப்படுகிறார். அவரது இசை ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெறுவதுடன், திரையரங்குகளுக்கு ரசிகர்களை ஈர்க்கும் முக்கிய அம்சமாகவும் உள்ளது. சமீபத்தில் வெளியான ‘தாய் கிழவி’ உள்ளிட்டப் பல வெற்றிப் படங்களைத் தொடர்ந்து இன்னும் பல நம்பிக்கைக்குரிய படங்களில் இசையமைக்கிறார் நிவாஸ் கே பிரசன்னா. அந்த வரிசையில், தயாரிப்பாளர் அருண் விஸ்வா தலைமையிலான சாந்தி டாக்கீஸ் நிறுவனத்தின் அடுத்த தயாரிப்பான ’புரொடக்ன் நம்பர் 4’ திரைப்படத்திற்கு அவர் இசையமைப்பாளராக இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தரமான படங்களைத் தயாரித்து வரும் சாந்தி டாக்கீஸ் நிறுவனம், ஹரிஹர சுதன் அழகிரி இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்தை அறிவித்ததில் இருந்தே ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. ஜென் ஸீ சென்சேஷன் பாரத் கதாநாயகனாகவும், ‘குடும்பஸ்தன்’ படப்புகழ்…
Read More
‘ஹபீபி’ திரைப்படத்திற்கு  வழிகாட்டி வலுசேர்த்துள்ளார் கஸ்தூரி ராஜா!

‘ஹபீபி’ திரைப்படத்திற்கு வழிகாட்டி வலுசேர்த்துள்ளார் கஸ்தூரி ராஜா!

ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது ‘ஹபீபி’ திரைப்படம். வலுவான கதை சொல்லல், ஆழமான உணர்வுகள் மற்றும் கலாச்சாரத்தை மையமாகக் கொண்ட கதைக்களத்தோடு மறக்க முடியாத சினிமா அனுபவத்தையும், மொழிகளை தாண்டி பல தரப்பட்ட ரசிகர்களையும் ஈர்க்கும் படமாகவும் இது உருவாகி வருகிறது. ’ஹபீபி’ திரைப்படத்தில், திரைத்துறையில் அனுபவம்மிக்க இயக்குநர் கஸ்தூரி ராஜா இணைந்திருப்பது படத்தின் தரத்தை மேலும் உயர்த்தியுள்ளது. அவரது நீண்டகால அனுபவமும், வழிகாட்டுதலும் ஆதரவும் இந்தப் படத்தை மேலும் செழுமைபடுத்தியுள்ளதோடு படக்குழுவினருக்கும் பெரும் பலமாக மாறியுள்ளது. படத்தில் தனது பங்களிப்பு குறித்து கஸ்தூரி ராஜா பகிர்ந்து கொண்டதாவது, “’ஹபீபி’ திரைப்படத்தில் எனது பங்கு படக்குழுவினரை ஆதரித்து அவர்களை மேலும் வலுப்படுத்தியதுதான். ஒரு நல்ல கதை எப்போதும் தனது பார்வையாளர்களை கண்டடையும் என்று நான் நம்புகிறேன். இந்த திரைப்படத்தில் அந்த உண்மைத்தன்மை உள்ளது” என்றார். இயக்குநர் மீரா கதிரவன் பகிர்ந்து கொண்டதாவது, “’ஹபீபி’ படத்தில் கஸ்தூரி…
Read More
‘முத்து என்கிற காட்டான்’ இணையத் தொடருக்கான பத்திரிகையாளர் சந்திப்பு !

‘முத்து என்கிற காட்டான்’ இணையத் தொடருக்கான பத்திரிகையாளர் சந்திப்பு !

'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி நடிப்பில் மணிகண்டன் - பி. அஜித் குமார் இயக்கத்தில் ஜியோ ஹாட் ஸ்டார் டிஜிட்டல் தளத்தில் மார்ச் மாதம் 27 ஆம் தேதி முதல் வெளியாகும் 'முத்து என்கிற காட்டான்' பத்து அத்தியாயங்கள் கொண்ட இணையத் தொடரை விளம்பரப்படுத்தும் வகையில் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. தேசிய விருது வென்ற படைப்பாளியான இயக்குநர் மணிகண்டன் மற்றும் இயக்குநரும், படத்தொகுப்பாளருமான பி. அஜித் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள 'முத்து என்கிற காட்டான்' இணையத் தொடரில் விஜய் சேதுபதி, மிலிந்த் சோமன், சுதேவ் நாயர், முத்துக்குமார், சிங்கம் புலி, கலைவாணி பாஸ்கர், வி ஜே பார்வதி, ரிஷா ஜேக்கப், வடிவேல் முருகன், அபி நட்சத்திரா உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். மது நீலகண்டன் மற்றும் சண்முகசுந்தரம் இணைந்து ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த இணையத் தொடருக்கு ராஜேஷ் முருகேசன் இசையமைத்திருக்கிறார். ஜியோ ஹாட் ஸ்டார் டிஜிட்டல் தளத்திற்காக இந்த இணையத்…
Read More
‘பள்ளிச்சட்டம்பி’ படத்தின் டீசர் வெளியீடு !!

‘பள்ளிச்சட்டம்பி’ படத்தின் டீசர் வெளியீடு !!

டிஜோ ஜோஸ் ஆண்டனி இயக்கி, டொவினோ தாமஸ் நடித்துள்ள ' பள்ளிச்சட்டம்பி 'படத்தின் டீசர் வெளியாகி, ஒரு புத்தம் புதிய திரை அனுபவத்தை அளிப்பதை உறுதி செய்துள்ளது. டிஜோ ஜோஸ் ஆண்டனி இயக்கி டொவினோ தாமஸ் கதாநாயகனாக நடித்துள்ள 'பள்ளிச்சட்டம்பி' படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது.  டீசர் முழுவதும் விறுவிறுப்பான சண்டை  காட்சிகளால் நிரம்பியுள்ளது. டீசரில் இருந்து 'பள்ளிச்சட்டம்பி' மலையாள திரையுலக வரலாற்றில் மட்டுமல்லாமல் தமிழ் திரையுலகிலும் மற்றொரு மைல்கல்லை பதிக்கும் என்பது தெளிவாகிறது. மேலும் இது அனைத்து வயதினரும் ரசிக்கக் கூடிய ஒரு படமாக இருக்கும் என்றும் உறுதியளிக்கிறது. இப்படத்திற்கு ஹிட் மேக்கர் ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ளார்.  அவரது இசையில் வெளியான 'காட்டு செம்பகம்'  பாடலை பிரபல பின்னணி பாடகர் அகில் ஜே. சந்த் மற்றும் பின்னணி பாடகி அவனி  மல்ஹார் ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர். இந்தப் பாடலை மோகன் ராஜா எழுதியிருக்கிறார். இந்தப் பாடல் ஏற்கனவே ட்ரெண்டிங் பட்டியலில் இடம்…
Read More
ஷர்வானந்த் நடிக்கும் பைக்கர் ( BIKER) பட பத்திரிகையாளர் சந்திப்பு !!

ஷர்வானந்த் நடிக்கும் பைக்கர் ( BIKER) பட பத்திரிகையாளர் சந்திப்பு !!

  முன்னணி நட்சத்திர நடிகர் ஷர்வானந்த், டாக்டர் ராஜசேகர், மாளவிகா நாயர், அதுல் குல்கர்னி நடிப்பில் இந்தியாவின் முதல் பைக் ஸ்போர்ட்ஸ் திரைப்படமாக, பிரம்மாண்டமாக உருவாகியுள்ள படம் “பைக்கர்”. இப்படத்தை அபிலாஷ் ரெட்டி இயக்கியுள்ளார். UV Creations தயாரிப்பில், விக்ரம் ரெட்டி வழங்க, வம்சி கிருஷ்ணா ரெட்டி மற்றும் பிரமோத் உப்பலபாட்டி தயாரித்துள்ளனர். இப்படம் தெலுங்கு, தமிழ், மலையாளம் உட்பட பல மொழிகளில் பான் இந்திய வெளியீடாக வரும் 2026 ஏப்ரல் 3 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில் படத்தின் தமிழ்ப்பதிப்பை விளம்பரப்படுத்தும் வகையில் படக்குழுவினர் சென்னையில் தமிழ் பத்திரிக்கை ஊடக நண்பர்களைச் சந்தித்தனர். இந்நிகழ்வினில் மோட்டார் சைக்கிள் டிரெய்னர் ரோஷிணி பேசியதாவது.., இது எனக்கு புதிய அனுபவமாக இருந்தாலும், மிகவும் நெருக்கமாக உணர்ந்தேன்.நான் பெண்களுக்கு மோட்டார் சைக்கிள் பயிற்சி அளித்து வருவதால், இந்தப் படத்தின் உலகத்தை எளிதாக புரிந்துகொள்ள முடிந்தது. ‘பைக்கர்’ உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட படம் என்பதால்,…
Read More
தேற்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிலைப்பாடு !!

தேற்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிலைப்பாடு !!

தமிழக சட்டமன்றத் தேர்தலில், பேட்டரி டார்ச் சின்னத்தில் மட்டும் தான் போட்டியிடுவது என்பது மக்கள் நீதி மய்யம் கட்சியின் உறுதியான நிலைப்பாடு. பேட்டரி டார்ச் என்பது எங்களுக்கு வெறும் சின்னமல்ல. அது எங்களின் அடையாளம். எந்த ஆதாயமும் இன்றி என்னோடு பயணிக்கும் என் தொண்டர்களின் உணர்வுகளை என்னால் புறக்கணிக்க முடியாது; புறக்கணிக்கவும் மாட்டேன். இந்தச் சூழ்நிலையை நாங்கள் முழுவதுமாக புரிந்து கொள்வதோடு, தமிழக மக்களின் நலன் கருதியும், மதவாத சக்திகளின் பிடியில் இருந்து தமிழகத்தைக் காக்கும் கடமையினை உணர்ந்தும், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் நேரடியாகப் போட்டியிடவில்லை என்றும், திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளர்களை நிபந்தனையின்றி ஆதரிப்பது என்கிற முடிவை திறந்த மனதுடன், தெளிந்த உள்ளத்துடனும் அறிவிக்கிறோம். என்னையும் என் அரசியலையும் புரிந்துகொண்டு எந்த சுயநலமின்றி, ஒன்பது ஆண்டுகளாக என்னோடு தொடர்ந்து பயணிக்கும் மக்கள் நீதி மய்யத்தின் தொண்டர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் நெஞ்சின் ஆழத்திலிருந்து நன்றிகளைத்…
Read More