முத்து என்கிற காட்டான் வெற்றி விழா !!

முத்து என்கிற காட்டான் வெற்றி விழா !!

  விஜய் சேதுபதி புரொடக்ஷன்ஸ் சார்பில் ஜியோ ஹாட் ஸ்டார் ஒரிஜினல்ஸ் படைப்பாக, இயக்குநர் மணிகண்டன் தலைமையில், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில், B. அஜித் குமார், M. மணிகண்டன் இணைந்து இயக்க, மாறுபட்ட களத்தில் உருவான சீரிஸ், “முத்து என்கிற காட்டான்”. ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில், 2026 மார்ச் 27 ஆம் தேதி வெளியான இந்த சீரிஸ் ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று, மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. வெளியான குறுகிய காலத்தில், மிகப்பெரிய அளவிலான பார்வையாளர்களைப் பெற்று சாதனை படைத்துள்ளது. படக்குழுவினர் அனைவரும் இணைந்து கேக் வெட்டி இந்த வெற்றியைக் கொண்டாடியுள்ளனர். இந்நிகழ்வினில்.. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி பேசியதாவது.., இந்த புராஜக்ட் எனக்கு ரொம்ப சந்தோஷமான அனுபவம். நாங்க பண்ணுற வேலை எல்லாருக்கும் நிறைவாக இருக்கனும் என்று தான் நானும் மணிகண்டனும் திட்டமிட்டோம். இடையில் இது நின்று விட்டது என்ற நிலை வந்த…
Read More
“ராக்கா” – அல்லு அர்ஜுனின் பிறந்தநாளில் வெளியான டைட்டில் போஸ்டர் !!

“ராக்கா” – அல்லு அர்ஜுனின் பிறந்தநாளில் வெளியான டைட்டில் போஸ்டர் !!

  இந்திய சினிமாவில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய AA22 x A6 படத்தின் தலைப்பு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. அல்லு அர்ஜூன் பிறந்தநாளை முன்னிட்டு இந்த மிகப்பெரிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்தப் படத்திற்கு “ராக்கா” என பெயரிடப்பட்டுள்ளது. இந்த டைட்டில் அறிவிப்புடன் வெளியிடப்பட்ட போஸ்டர், படத்தின் உலகை பற்றிய ஒரு தீவிரமான முன்னோட்டத்தை வழங்குகிறது. இருண்ட, மர்மமான உயிரினத்தை வெளிப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த போஸ்டர், ஒரு புதிய உலகை முன்வைக்கிறது. இது ஒரு புதிய, வித்தியாசமான சினிமா அனுபவத்தை தரும் என சுட்டிக்காட்டுகிறது. “ராக்கா” ஒரு பிரம்மாண்டமான ஃபாண்டஸி-ஆக்ஷன் படமாக உருவாகி வருகிறது. உலகளாவிய ரசிகர்களை குறிவைத்து, மிகப்பெரிய அளவில் தயாராகும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் Sun Pictures தயாரிக்கிறது. கதை, காட்சிகள் மற்றும் தொழில்நுட்பம் ஆகிய அனைத்தையும் சர்வதேச அளவிலான தரத்தில் உருவாக்கும் புதிய முயற்சியாக இது பார்க்கப்படுகிறது. இந்தப் படத்தில் அல்லு அர்ஜூன் முற்றிலும் புதுமையான அவதாரத்தில்…
Read More
லெஜண்ட் சரவணனின் லீடர் ரசிகர்களைக் கவர்ந்ததா? 

லெஜண்ட் சரவணனின் லீடர் ரசிகர்களைக் கவர்ந்ததா? 

லெஜண்ட் சரவணன் நடிப்பில்,  என துரை செந்தில்குமார் இயக்கம், ஜிப்ரான் இசை என வலுவான டீமுடன் வந்திருக்கும் லீடர் ரசிகர்களைக் கவர்ந்ததா?   “Leader” ஒரு வழக்கமான கமர்ஷியல் ஆக்ஷன் படமாக இருந்தாலும், அதை சுவாரஸ்யமாக கொண்டு செல்ல முயற்சி செய்திருக்கிறது. தூத்துக்குடி பின்னணியில் நடக்கும் இந்தக் கதையில், மெக்கானிக்காக வாழும் ஹீரோவின் சாதாரண வாழ்க்கை திடீரென பெரிய சதித்திட்டத்துடன் இணைகிறது. ஒரு துறைமுகத்தை அழிக்கும் திட்டத்தை தடுக்க அவர் எடுத்துக் கொள்கிற பயணம் தான் படத்தின் மையம். படத்தின் முதல் பாதி வேகமாக நகர்கிறது; குடும்ப உணர்வு, குறிப்பாக அப்பா–மகள் பாசம் நல்ல எமோஷனாக வேலை செய்கிறது. இடைவேளைக்குப் பிறகு ஹீரோவின் உண்மை முகம் வெளிப்படும் தருணங்கள் “மாஸ்” ரசிகர்களுக்கு பிடிக்கும் வகையில் அமைந்திருக்கின்றன. ஆக்ஷன் காட்சிகள் பல இடங்களில் ரசிக்க வைக்கும் அளவுக்கு இருக்கின்றன. நடிப்பில், லெஜண்ட் சரவணன் தனது முந்தைய படத்தை விட முன்னேற்றம் காட்டுகிறார். அவர்…
Read More
நடிகர் பிரஷாந்த் பிறந்தநாளில், ரஞ்ஜன் பட டைட்டில் லுக் டீசர் வெளியீடு!

நடிகர் பிரஷாந்த் பிறந்தநாளில், ரஞ்ஜன் பட டைட்டில் லுக் டீசர் வெளியீடு!

  டாப் ஸ்டார் பிரஷாந்த் பிறந்த நாளை முன்னிட்டு அவரது தந்தை தியாகராஜன் இயக்கத்தில் உருவாகும் புதிய படமான ரஞ்ஜன்" படத்தின் டைட்டில் லுக் டீசர், திரைபிரபலங்கள் முன்னிலையில் இன்று கோலாகலமாக வெளியிடப்பட்டது. இப்படத்தின் முதன்மை நாயகனாக பிரஷாந்த் நடிக்கிறார். தயாரிப்பாளர் ஃபைவ் ஸ்டார் கதிரேசன் மகன் ஹரி இளம் நாயகனாக அறிமுகமாக அவருக்கு ஜோடியாக நடிகை தேவயானி மகள் பிரியங்கா நடிக்கிறார் பிரஷாந்த் பிறந்த நாள் கொண்டாட்டத்துடன் இவர்களை அறிமுகப்படுத்தும் விழாவும் இணைந்து நடந்தது. இன்றைய விழாவில் திரையுலக பிரபலங்கள் தயாரிப்பாளர்கள் கலைப்புலி தாணு ஃபைவ் ஸ்டார் செந்தில் ஃபைவ் ஸ்டார் கல்யாண் கமல்போரா. SK சம்பத்குமார், மதியழகன், நடிகர்கள் விஷால், RK சுரேஷ் சத்யா ஆதேஷ்பாலா, மோகன்லால், சந்தோஷ்பிரபாகர், நடிகைகள் கிரண், ஆதிரா. செம்மலர் அன்னம், நடிகர் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ். இயக்குநர்கள் ஆர்.கே செல்வமணி, கே எஸ் ரவிக்குமார், சரண் வெற்றிமாறன், துரை செந்தில்குமார் ஸ்ரீகணேஷ் கணேஷ்…
Read More
*“வைஃப்” (Wife) திரைப்படத்தின்  “நீ சாரல்” மனதை வருடும் மெலடி பாடல் வெளியானது!

*“வைஃப்” (Wife) திரைப்படத்தின் “நீ சாரல்” மனதை வருடும் மெலடி பாடல் வெளியானது!

  ஒலிம்பியா மூவிஸ் சார்பில் S அம்பேத்குமார் தயாரிப்பில், ஹேமநாதன் R இயக்கத்தில் R J விஜய், அஞ்சலி நாயர் நடிப்பில் இன்றைய நவீன கால "திருமண வாழ்வை" மையப்படுத்தி உருவாகியிருக்கும் திரைப்படம் “வைஃப்” (Wife). விரைவில் திரைக்குவரவுள்ள இப்படத்தின் முதல் சிங்கிள் பாடலான  ''நீ சாரல்” மெலடி பாடல் இன்று வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்த இனிமையான பாடலை ஜென் மார்டின்  இசையமைத்து, சுபலக்‌ஷினியுடன்  இணைந்து பாடியுள்ளார். இயக்குநர் விஷ்ணு எடவன் இப்பாடலை  எழுதியுள்ளார். மென்மையான இசையும், மனதை வருடும் வரிகளும் இணைந்து, “நீ சாரல்” பாடலை ஒரு அழகான காதல் மெலடியாக மாற்றியுள்ளது. வெளியான உடனே இந்தப் பாடல் இசை ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது. இன்றைய தலைமுறையில் திருமணத்திற்கு முன்பான காதலும், திருமணத்திற்குப் பின்பான காதலும் எப்படி இருக்கிறது என்பதையும், இன்றைய நவீன தம்பதிகளின் உறவுச்சிக்கலை மையப்படுத்தி அனைத்து தரப்பினரும்…
Read More
மீண்டும் இணைந்த சத்ய ஜோதி பிலிம்ஸ் தியாகராஜன், இசைஞானி இளையராஜா கூட்டணி !!

மீண்டும் இணைந்த சத்ய ஜோதி பிலிம்ஸ் தியாகராஜன், இசைஞானி இளையராஜா கூட்டணி !!

தமிழ் சினிமாவில் நீண்ட காலமாக தரமான படைப்புகளை வழங்கி வரும் சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம், மறுபடியும் ஒரு நினைவுகூரத்தக்க கூட்டணியை உருவாக்கியுள்ளது. தயாரிப்பாளர் T. G. தியாகராஜன் மற்றும் இசை மாமன்னன் இசைஞானி இளையராஜா, 32 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கைகோர்த்து “லெனின் பாண்டியன்” திரைப்படத்தின் மூலம் ரசிகர்களை சந்திக்கவுள்ளனர். அற்புதமான ஒரு சிறு வீடியோ மூலம் படக்குழு இதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். ஒரு காரில், சத்ய ஜோதி பிலிம்ஸ் தியாகராஜன், இசைஞானி இளையராஜா இருவரும் தங்களின் அற்புதமான படங்களின் பழைய பாடல்களை கேட்டுக்கொண்டே பயணிக்கும் அழகான அனிமேசன் வீடியோ இணையம் முழுக்க பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்த கூட்டணி தமிழ்சினிமாவில் ஏற்கனவே பல மறக்க முடியாத படைப்புகளை வழங்கியுள்ளது. குறிப்பாக மூன்றாம் பிறை (1982), தங்க மகன் (1983), காக்கி சட்டை (1985), பகல் நிலவு (1985), காதல் பரிசு (1987), கிழக்கு வாசல் (1990), பணக்காரன்…
Read More
லெஜெண்ட் சரவணன் நடிக்கும் ‘லீடர்’ படத்தின் இசை & ஆக்ஷ‌ன் டீசர் வெளியீடு !!

லெஜெண்ட் சரவணன் நடிக்கும் ‘லீடர்’ படத்தின் இசை & ஆக்ஷ‌ன் டீசர் வெளியீடு !!

லெஜெண்ட் சரவணன் முதன்மை வேடத்தில் நடிக்க, ஆர்.எஸ். துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள 'லீடர்' திரைப்படம் வரும் ஏப்ரல் 3ம்  தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தின் இசை மற்றும் ஆக்ஷ‌ன் டீசர் வெளியீடு திரைப் பிரபலங்கள் முன்னிலையில் படக்குழுவினர் மற்றும் ரசிகர்கள் பங்கேற்க சென்னையில் பிரம்மாண்டமாக‌ நடைபெற்றது. பாடலாசிரியர் விவேகா பேசுகையில், "இந்த இசை நிகழ்ச்சியின் தொடக்கத்தில் அருணகிரிநாதர் பாடிய திருப்புகழில் உள்ள‌ முத்தைத்தரு பத்தித் திருநகை பாடல் ஒலித்தவுடன் எனக்கு உடல் எல்லாம் சிலிர்த்து விட்டது. இப்படத்தில் நான் இரண்டு பாடல்களை எழுதி இருக்கிறேன், இரண்டும் அற்புதமான அனுபவங்கள். இப்படத்தின் முன்னோட்டத்தை பார்த்தவுடன் இது அனைவருக்குமான படமாக வரப்போகிறது என்பது தெரிகிறது. லெஜெண்ட் சரவணன் பற்றி சொல்ல வேண்டும் என்றால், அவர் பேசுவது வைரல் ஆகிறதா, இல்லையென்றால் வைரல் ஆவதை தான் அவர் பேசுகிறாரா என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை. சமீபத்தில் ஒரு நிகழ்வில் கலந்து கொண்ட போது அவரிடம்…
Read More
விமானி சாய் ரோஷன் ஷாம் என்பவரை மணந்தார் நடிகை ஜனனி!

விமானி சாய் ரோஷன் ஷாம் என்பவரை மணந்தார் நடிகை ஜனனி!

  அவன் இவன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமான ஜனனி அதே படத்தில் தனது நடிப்பிற்காக நல்ல பெயரையும் பெற்றார். அதனை தொடர்ந்து தெகிடி, பலூன், ஹாட்ஸ்பாட் உள்ளிட்ட தமிழ் திரைப்படங்களிலும் மலையாள படங்களிலும் நடித்துள்ளார். நடிகை ஜனனிக்கு சென்னையில் பிறந்து வளர்ந்து துபாயில் குடிபெயர்ந்து விமானியாக பணியாற்றி வரும் தனது காதலரான சாய் ரோஷன் ஷாம் என்பவருடன் கடந்த ஆண்டு நிச்சயதார்த்தம் நடந்தது. தற்போது சாய் ரோஷன் ஷாம் - ஜனனி இருவருக்கும் குடும்பத்தினர் முன்னிலையில் மகாபலிபுரம் அருகே உள்ள நட்சத்திர ஓட்டலில் இன்று திருமணம் நடைபெற்றது. இந்நிகழ்வில் இரு வீட்டாரின் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் கலந்துக் கொண்டனர்.
Read More
“TN 2026” வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி திரைக்கு வருகிறது !!

“TN 2026” வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி திரைக்கு வருகிறது !!

  KRG Kannan Ravi Group சார்பில் கண்ணன் ரவி மற்றும் தீபக் ரவி தயாரிப்பில், உமாபதி ராமையா இயக்கத்தில், நட்டி நாயகனாக நடிக்க, பரபரப்பான பொலிடிகல் காமெடி கமர்ஷியல் படமாக உருவாகியுள்ள திரைப்படம் “TN 2026”. இப்படம் வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ளதாக அதிகாரப்பூர்வ போஸ்டர் வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது. அரசியல் பகடி கலந்து, சமூக அக்கறை மிக்க கருத்துக்களுடன் அனைவரும் ரசிக்கும் கமர்ஷியல் படமாக இப்படம் உருவாகியுள்ளது. தற்போது வெளியாகியிருக்கும் போஸ்டரில், நட்டி நடுநாயகமாக மேடையின் மீது கையை உயர்த்தி நிற்க, அருகில் முக்கிய கதாப்பாத்திரங்கள் கோஷமிட, சுற்றிலும் பெரும் கூட்டம் கொடிகள் மற்றும் பகடியான வசன பதாகைகளுடன் சூழ்ந்து நிற்கிறது. பார்த்தவுடன் ஈர்க்கும் இந்த போஸ்டர் இணையம் முழுவதும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. தம்பி ராமையா கதை எழுதியுள்ள இப்படத்தை திரைக்கதை அமைத்து இயக்கியுள்ளார் உமாபதி ராமையா. தமிழ் திரையுலகில்…
Read More
ZEE5 ஒரிஜினல் சீரிஸ் ‘காக்கி சர்கஸ்’ ஏப்ரல் 10 முதல் ஸ்ட்ரீமிங்காகிறது!

ZEE5 ஒரிஜினல் சீரிஸ் ‘காக்கி சர்கஸ்’ ஏப்ரல் 10 முதல் ஸ்ட்ரீமிங்காகிறது!

  தமிழ் மற்றும் மலையாள ZEE5 இன்று தங்களது அடுத்த ஒரிஜினல் சீரிஸான ‘காக்கி சர்கஸ்’ ஐ அறிவித்துள்ளது. வித்தியாசமான நகைச்சுவை, அதிரடி, கற்பனை மற்றும் திரில்லர் அம்சங்கள் கலந்த இந்த ஏழு எபிசோடுகள் கொண்ட சீரிஸ், ஒரு சப்-ஜெயிலை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது. தயாரிப்பு நிலையில் ஒன்ஸ் அப்பான் எ டைம் இன் காயம்குளம் ( ‘Once Upon a Time in Kayamkulam’ ) என்ற பெயரில் உருவான இந்த சீரிஸ், தற்போது ‘காக்கி சர்கஸ்’ என்ற புதிய பெயரில் பார்வையாளர்களை சந்திக்க வருகிறது. இந்த சீரிஸின் தனித்துவமான நகைச்சுவை, விசித்திரமான கதாபாத்திரங்கள் மற்றும் எதிர்பாராத திருப்பங்கள் நிரம்பிய உலகத்தை இந்த தலைப்பு அழகாக பிரதிபலிக்கிறது. இந்த சீரிஸை அமீன் பாரிஃப் எழுதி இயக்கியுள்ளார். ரைஸ் ஈஸ்ட் என்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் சார்பில் ஸ்ரீநிதி சாகர் தயாரித்துள்ளார். மேலும், முனிஷ்காந்த், சுபாஷ் செல்வம், ராஜேஷ் மாதவன், கவுதமி நாயர், வின்சு…
Read More