Project Hail Mary மனிதனுக்கும் ஏலியனுக்குமான அன்பு !!

 

 

சுஜாதா ஒரு முறை விஞ்ஞான அறிவியல் கதைகள் குறித்து சொல்லும் போது,
நீங்கள் எதைவேண்டுமானாலும் கற்பனையில் சொல்லலாம் ஆனால் இறுதியில் அது மனிதனின் ஆதார உண்ர்ச்சிகளில் வந்து நிற்கும் என்றிருப்பார்.

அதே தான் Project Hail Mary படத்தின் சிறப்பு

இது சயின்ன் பிக்சன் என்றாலும் இதை தனித்துவமாக்குவது.. இதில் எதிர்பாரா நேரத்தில், ஏலியனுக்கு மனிதனுக்கும் இடையில் உருவாகும் அன்பும் நட்பும் தான்.

இந்தப்படம் பார்த்த போது Interstellar பட ஞாபகம் நிறைய வந்தது.

அதற்கும் இதற்கும் நிறைய ஒற்றுமைகள்.

Accurate Science விசயங்கள் ஆரம்பித்து கதையின் தன்மையும் கூட ஒன்று தான்.

Interstellar படத்தில் நோலன் எந்தளவு உண்மையான அறிவியலுக்கு பக்கத்தில் படத்தை கொண்டு வந்திருந்தார் என்பது உங்களுக்கே தெரியும்.
அப்படத்தில் வந்த பிளாக் ஹோல் வடிவமைப்பு கூட, பின்னாளில் அதே போல் இருப்பதாக பேசப்பட்டது. அப்படத்தை வைத்து சயின்ஸ் பேப்பர்ஸ் எல்லாம் சப்மிட் செய்தார்கள்.

அதை விட்டுவிடுவோம் Project Hail Mary க்கு வருவோம், இந்தப்படமும் முழுக்க அறிவியலுக்கு முழு நெருக்கமாக இருக்கும் படம் காரணம் இந்தப்படத்தின் எழுத்தாளர் Andy Weir.

இவர் பிரபலமான சயின்ஸ் பிக்சன் நாவல்கள் எழுதுபவர் ஆனால் கமர்ஷியல் எழுத்தாளர் கிடையாது. நோலன் டைப். இவர் புத்தகம் எல்லாம் சயின்ஸ் தீசிஸ் படிப்பது போல இருக்கும். இவர் புத்தகங்கள் Hard Science கேட்டகரியில் தான் இருக்கும் ஆனால் நாவல் தான். இவர் புத்தகங்கள் படிக்க மிகமிக பொறுமை வேண்டும். அறிவியலும் தெரிஞ்சுருக்கனும்.

The Martian படம் பார்த்திருப்பீர்கள் அது இவர் எழுதிய நாவல் தான்.

அதே போல தான் இந்த படமும் இதில் வரும் சயின்ஸ் விசயங்களை விட்டு விடுங்கள், இந்த தலைப்புக்கே ஒரு தனி அர்த்தம் இருக்கிறது.

“Hail Mary” என்பது முதலில் கிறிஸ்தவ பிரார்த்தனையில் வரும் சொல். ஆனால் பொதுவாக ஆங்கிலத்தில், குறிப்பாக அமெரிக்க கால்பந்து விளையாட்டுகளில், கடைசி நிமிடத்தில் வெற்றி பெற முடியுமா என்று தெரியாமல் எடுக்கப்படும் மிக ஆபத்தான, இறுதி முயற்சியை இப்படி அழைப்பார்கள்.

இந்தக் கதையில் பூமி மிகப்பெரிய ஆபத்தில் இருக்கும் நிலையில், மனித குலத்தைக் காப்பாத்த செய்யப்படும் இறுதி முயற்சி தான் “Project Hail Mary”.

சரி இப்போது Interstellar க்கு வருவோம்

பூமி அழிவின் நெருக்கத்தில் இருக்கிறது.
இன்னும் 20, 30 வருடங்கள் தான் தாங்கும், பூமியை காப்பாற்றுவதற்கான விடை விண்வெளியில் இருக்கிறது. ஒரு குழுவோடு விண்வெளியில் விடை தேடி நாயகன் விருப்பமே இல்லாமல் பயணமாகிறான்.

அப்படியே இந்த ஒன்லைன் இந்தப்படத்திற்கும் பொருந்தும் ஆனால் திரைக்கதையில் நிறைய மாற்றங்கள் இருக்கிறது.

கதை இது தான்
அண்ட வெளியில் ஒவ்வொரு நட்சத்திரமாக அழிந்து வருகிறது அதில் சூரியனும் இருக்கிறது. இன்னும் 30 வருடங்களில் மொத்த பூமியும், சூரியன் இல்லாமல் உறைந்து விடும், இந்த நேரத்தில தான் ஒரு சயின்ஸ் புரபசர் Hail Mary புராஜக்டுக்கு அழைத்து செல்லப்படுகிறார்.

Astrophage எனும் சிறு உயிரினம் ஒரு பாதை போல விண்வெளியில் பரவி நட்சத்திரங்களை விழுங்கிட்டு வருது. ஆனால் 14.1 ஒளிவருடத்தில் உள்ள ஒரு நடசத்திரம் இதில மட்டும் பாதிக்கப்படவில்லை. விண்வெளியில இருந்து எடுத்துட்டு வந்த Astrophage யை ஒரு எரிசக்தியாக பயன்படுத்தி, ஒரு விண்களத்தில் அந்த நட்சத்திரத்துக்கு ஒரு வழிப்பயணமாக போய், ஆராய்ச்சி செய்து முடிவுகளை மட்டும் பூமிக்கு திருப்பி அனுப்புவது தான் Project Hail Mary.

அப்பாட ஒரு வழியா ஓரளவுக்கு புரியற மாதிரி சொல்லிட்டேன்.

ஆனா படம் இதுவல்ல படம் ரெண்டு டைம் லைன்ல நடக்குது.

விண்கலத்தில எழுந்திருக்கிற ஹீரோ தன்ன தவிர எல்லோரும் இறந்து போயிருக்கிறத பாக்குறாரு.. இப்ப தன்னோட மிஷன சக்ஸஸ் பண்ண தொடர்ந்து பயணமாகுறாரு..

இன்னொரு பக்கம் Project Hail Mary பூமியில எப்படி ஆரம்பிச்சதுங்கற கதை வருது..

விண்வெளி கதை IMAX லயும் பூமியோட கதை Scope லயும் வரும்
இது டிஜிட்டல் IMAX கேமரால எடுத்த படம்..

ஒரு நல்ல IMAX திரையில் பாருங்க.. அந்த அனுபவமே சூப்பரா இருக்கும் விண்வெளியில் ஃப்ரேம்கள் ஒவ்வொன்னும் கண்ணுக்குள்ள ஒத்திக்கற மாதிரி இருக்கும்.

அய்யோ என்ன சொன்னாலும் டிராக் மாறி போயிடறேன்.

இந்தப்படத்தோட மையக்கதையே வேற..
தனியா விண்வெளியில பயணிக்கிற ஹீரோ, எதிர்பாராத ஒரு தருணத்துல தன்ன மாதிரியே தன்னோட கிரகத்த காப்பாத்த வந்த ஒரு ஏலியன சந்திக்குறாரு.. அவங்க இரண்டு பேருக்கு இடையில் உருவாகுற அன்பும் நட்பும் தான் இந்தப்படம். அவங்களுக்குள்ள நடக்குற உரையாடல்கள் எல்லாம் ஒரு லவ் ஃபிலிம் மாதிரி அவ்வளவு க்யூட்டா படத்தில வந்திருக்குது..

முக்கியமான ஸ்பாய்லர்
மொத்த உலகமே அழியப்போகுதுனு தெரியும் போது கூட, விண்வெளி பயணத்துக்கு ஒத்துக்காத ஹீரோ, இறுதியில தன்னோட உயிர காப்பாத்திக்க வழியிருந்தும், அதை துறந்துட்டு ஏலியன காப்பாத்த போவாரு.. இந்தப்புள்ளியில் தான் இந்தப்படம் உங்க மனசுக்குள்ள வந்து உட்கார்ந்துக்கும்.. ❤️

சயின்ஸ் பிக்சன் படங்கள் பிடிச்சவங்களுக்கு Must watch 🤩