23
Mar
நடிகர் பிரபுதேவாவின் மகன் ரிஷி தேவா 'முதல் முதலாய் ' இன்டி மியூசிக்கல் வீடியோ ஆல்பம் மூலம் தனது கலைப் பயணத்தை தொடங்கி இருக்கிறார். இந்த ஆல்பத்தில் அசத்தலான நடனமாடி நடிகராக அறிமுகமாகி இருக்கிறார். இசையமைப்பாளர் ரவிச்சந்திரன் ஸ்ரீநிவாஸ் இப்பாடலை எழுதி இசையமைக்க, ஜி.வி பிரகாஷ் குமார் பாடியிருக்கிறார். ரிஷி தேவா, நடிகை கைரா ஆகியோர் இணைந்து நடனமாடி நடித்திருக்கிறார்கள். மெலோடியும், ராப் இசையும் கலந்த இந்த ஆல்பத்தில் உள்ள ராப் பாடலை இசைக் கலைஞர் ஆதித்யா பாடியிருக்கிறார். இந்தப் பாடலில் காதல் -அப்பாவித்தனம் - மறக்க இயலாத தருணங்கள்- ஆகியவை இனிமையான பாடல் வரிகளுடன் இணைந்து இருப்பதால்.. இசை ரசிகர்களின் வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்தப் பாடலை ட்ரஸ்டினா ஐசக் இயக்க, ஆர். பி. குருதேவ் ஒளிப்பதிவு செய்ய , சுரேன் நடனம் அமைத்திருக்கிறார். இந்தப் பாடலுக்கான காட்சி மொழி... ரிஷி தேவா மற்றும் கைராவின் ஸ்டைலான தோற்றம்... நடனம்…
