‘வெங்காயம்’ படத்தின் இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார், ‘நெடும்பா’ வெளியீட்டுக்காக படும் துயர்!

‘வெங்காயம்’ படத்தின் இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார், ‘நெடும்பா’ வெளியீட்டுக்காக படும் துயர்!

சங்ககிரி ராஜ்குமார் இயக்கத்தில் வெளியான படம் 'வெங்காயம்'. கவுரவ வேடத்தில் சத்யராஜ் நடித்திருந்தார். இப்படத்துக்கு பலரும் தங்களுடைய பாராட்டைத் தெரிவித்திருந்தார்கள். இந்நிலையில் சங்ககிரி ராஜ்குமார் தன்னுடைய அடுத்த படமான 'நெடும்பா'வை வெளியிட தான் அடையும் துயரங்களின் வேதனையை தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார். இயக்குநர் சங்ககிரி ராஜ்குமாரின் ஃபேஸ்புக் பதிவு: '' 'நெடும்பா' திரைப்படம் முடிந்து இரண்டு வருடங்கள் ஆகிறது. முற்றிலும் புதுமுகங்கள் நடித்த ஒரு படத்தை அவ்வளவு எளிதாக திரையிட்டு விட முடியாது. அப்படி வெளியிட்டாலும் எந்த பயனும் இருக்காது. இந்நிலையில் படம் பார்த்த சேரன் அண்ணன் 'வெங்காயம்' திரைப்படத்தை விட பல மடங்கு சிறந்த படம் என சிலாகித்து இதை நானே வெளியிடுகிறேன் என சொல்லி ஒப்பபந்தம் செய்திருந்த நிலையில், சில சிக்கல்களால் ஒன்றரை ஆண்டுகள் கடந்து விட்டன. அதன் பிறகு வேறு நிறுவனம் மூலமாக வெளியிடலாம் என அவர் முயற்சித்த போது உயர்மதிப்பு நோட்டு பிரச்சினை உட்பட…
Read More
கவண் ஒரு பாதி கவர்கிறது!

கவண் ஒரு பாதி கவர்கிறது!

கவண் கதை - சுரேஷ் பாலா இயக்கம் - கே வீ ஆனந்த் விஜய் சேதுபதி, டி.ஆர்,மடோனா செபாஸ்டியன் சின்னத்திரையின் உள்ளடி வேலைகள், செய்தியை தரும் ஊடகங்கள் டி ஆர் பி க்காக விளையடும் வில்லங்க விளையாட்டுக்கள். மக்களிடம் உண்மையை சொல்வதை விட சுவராஸ்யத்தை கூட்டி கார்பேரேட்டுக்கும், அரசியல்வாதிக்கும் சொம்பு தூக்குவது என தற்கால ஊடக தீவிரவாதம் தான் கதை. இந்த விஷயத்தை எடுத்துக் கொண்டதற்காகவும், அதை சமரசமின்றி சொன்னதற்கும் பாராட்டுக்கள்.செய்தியை பிரேக்கிங்காக எப்படி மாற்றுகிறார்கள், டாக் ஷோவில் அரசியல் வாதிக்கு எப்படி பாலிஷாக சொம்படிக்கிறார்கள், மியூசிக் புரோக்ராமில் எப்படி திறமையான வர்களை விட்டுவிட்டு வியாபரத்தை முன்னுறுத்துகிறார்கள் என்பது மிக விரிவாக முன் பாதியில் வருகிறது. அத்தனையும் மக்களிடம் சேர்க்க வேண்டிய விஷயம் தான். அட்டகாசம். திரைக்கதையாக படம் முதல் பாதியில் பரபரவென இருக்கிறது இரண்டாம் பாதி ஒரே இடத்தில் தேங்கி விடுகிறது. இடைவேளைக்குப் பிறகு படத்தில் எந்த சுவாரஸ்யங்களும் இல்லை.…
Read More
டோரா சிரிப்பும் இல்லை, பயமும் இல்லை!

டோரா சிரிப்பும் இல்லை, பயமும் இல்லை!

கதை, இயக்கம் - தாஸ் ராமசாமி நயன்தாரா, தம்பி ராமையா, கார் நயன்தாராவை முழுதாக நம்பி எடுக்கப்பட்டிருக்கும் படம். நயன்தாரா அப்பா தம்பி ராமையாவுடன் வாழ்ந்து வருகிறார். ஒரு கால் டாக்ஸி நடத்த திட்டமிட்டு ஒரு கார் வாங்குகிறார்கள். அந்தக் காரில் ஒரு ஆவி இருக்கிறது. அது ஏன் நயன்தாராவை தேடி வந்திருக்கிறது. அந்த ஆவி யாரை எதனால் பழி வாங்குகிறது என்பது தான் படம். மாயாவிற்கு பிறகு வந்திருக்கும் நயன்தாராவின் பேய்ப்படம். நயந்தாரா நடித்தாலே ஹிட் எனும் மந்திரத்தை தோற்கடிக்க வந்தது போல் இருக்கிறது. காட்சிகளில் பாத்திரங்களில் எந்தத் தெளிவும் இல்லை. ஏனோ தானோவென்று இருக்கிறது. கார் வந்து ஒரு கொலை நடக்கும் வரை படத்தில் எந்த சுவாரஸ்யமும் இல்லை. ஒரு பக்கம் கொலை விசாரனை மறுபக்கம் பேய்க்கதை என ஒன்லைன் பிடித்தவர்கள் திரைக்கதையில் கோட்டைவிட்டுவிட்டாரகள். ஆரம்பத்தில் இது காமெடிப்படமா பேய்ப்படமா என்றே தெரியாமல் நகர்கிறது. நயன்தாரா சொந்தக்குரல். பேசிக்…
Read More
‘அதி மேதாவிகள்’ – அரியர்ஸ் மாணவர்களுக்கான படம்..!

‘அதி மேதாவிகள்’ – அரியர்ஸ் மாணவர்களுக்கான படம்..!

அப்சலூட் பிச்சர்ஸ்’ சார்பில் மால்காம் தயாரித்துவரும் இந்த  ‘அதி மேதாவிகள்’ திரைப்படத்தில் பிரபல தொகுப்பாளர் சுரேஷ் ரவி(அறிமுகம்) மற்றும் ‘சதுரங்க வேட்டை’ புகழ் இஷாரா நாயர் இருவரும் முன்னணி கதாபாத்திரங்களிலும், தம்பி ராமையா, லிவிங்ஸ்டன், ரேணுகா, மதுசூதனன், கல்லூரி வினோ ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்திருப்பது  குறிப்பிடத்தக்கது.  “நானும் ஒரு அரியர்ஸ் மாணவன் என்பதால், இந்த படத்தின் கதையை முதல்முறையாக கேட்டபொழுதே எனக்கு மிகவும் பிடித்துவிட்டது. எங்கள் மேல் நம்பிக்கை வைத்து, இந்த படத்தை தயாரித்தது மட்டுமின்றி எங்கள் ஒட்டு மொத்த படக் குழுவினருக்கும் பேராதரவாக இருந்த எங்கள் ‘அதி மேதாவிகள்’ படத்தின் தயாரிப்பாளர் மால்காம் அவர்களுக்கு எங்களின் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கின்றோம். எல்லா அரியர்ஸ் மாணவர்களுக்கும் எங்களின் அதி மேதாவிகள் திரைப்படம் ஓர் சமர்ப்பணம்” என்று உற்சாகமாக கூறுகிறார் கதாநாயகன் சுரேஷ் ரவி.  “பெற்றோர்களின் வற்புறுத்தலால்  இரண்டு மாணவர்கள் பொறியியல் கல்லூரியில் சேர்ந்து, படிக்க முடியாமல்  அரியர்ஸ் மேல்…
Read More
பழமை வாய்ந்த டெல்லி ரீகல் தியேட்டர் இன்று மூடப்படுகிறது!

பழமை வாய்ந்த டெல்லி ரீகல் தியேட்டர் இன்று மூடப்படுகிறது!

டெல்லி மக்களின் மனதில், பொழுதுபோக்கு அம்சங்களில் மிகவும் இடம் பிடித்த ரீகல் தியேட்டர் இன்று - 30ம் தேதியோடு இழுத்து மூடப்படுகிறது. பாலிவுட் ஹீரோயின் அனுஷ்கா ஷர்மா நடித்து தற்போது திரையிடப்பட்டு உள்ள ‘பில்லவ்ரி’ இந்தி சினிமாதான் ரீகல் தியேட்டரில் கடைசி படமாகும். மல்டிபிளக்ஸ் எனப்படும் ஷாப்பிங் மால், உணவகம் மற்றும் பல சினிமா அரங்குகள் ஒரே கட்டிடத்தில் அமைந்த பொழுதுபோக்கு மையங்கள், இன்றைய இளைஞர்கள் மற்றும் காதலர்கள் சந்திக்கும் மையமாக மாறிவருகிறது. அதையடுத்து, பழைய தியேட்டர்களுக்கு கிராக்கி குறையத் தொடங்கியது. எனினும், பாரம்பரியமிக்க தியேட்டர்களை இழக்க ரசிகர்கள் இன்றளவும் விரும்பவில்லை. எனவே, 84 ஆண்டுகளாகியும், ரீகல் தியேட்டரில் நிறுத்தாமல் காட்சிகள் தொடர்ந்து அரங்கேறி வருகிறது. இந்நிலையில், இரண்டு பழைய கட்டிடங்கள் இடிந்து விழுந்ததை அடுத்து, பாரம்பரிய பகுதியும், காலனி ஆட்சியில் கட்டப்பட்ட கட்டிடங்கள் நிரம்பியதுமான கன்னாட்பிளேசில் உள்ள கட்டிடங்களின் பாதுகாப்பை உறுதிபடுத்தும் ஆய்வுகள் நடத்த புதுடெல்லி நகராட்சி உத்தரவிட்டு உள்ளது.…
Read More
‘நாலு பேருக்கு நல்லதுன்னா எதுவும் தப்பில்ல.’!-

‘நாலு பேருக்கு நல்லதுன்னா எதுவும் தப்பில்ல.’!-

ஆல்ஃபா ஸ்டுடியோஸ் தயாரிப்பில், உருவாகியிருக்கும் படம் ‘நாலு பேருக்கு நல்லதுன்னா எதுவும் தப்பில்ல.’ ‘அலைபாயுதே’, ‘டும் டும் டும்’, ‘கன்னத்தில் முத்தமிட்டால்’, ‘கடல்’ ஆகிய படங்களில் இயக்குநர் மணிரத்னத்திடம் இணை இயக்குனராய் பணியாற்றியவரும், பிரபல கதாசிரியர் ஆர்.செல்வராஜின் மகனுமான தினேஷ் செல்வராஜ், இப்படத்தின் மூலம் இயக்குனராக தமிழ்த் திரையுலகில் அறிமுகமாகிறார். ‘அன்னக்கிளி’,  ‘கிழக்கே போகும் ரயில்’,  ‘முதல் மரியாதை’,  ‘கடலோரக் கவிதைகள்’,  ‘உதயகீதம்’,  ‘சின்னக் கவுண்டர்’ உள்ளிட்ட பல படங்களுக்கு கதை எழுதியவரும்,  பிரபல இயக்குநர்களான பாரதிராஜா, மணிரத்னம்,  எஸ்.பி.முத்துராமன்,  ஆர்.வி.உதயகுமார் ஆகியவர்களுடன் இணைந்து பணியாற்றியவருமான கதாசிரியர் ஆர்.செல்வராஜ் இப்படத்திற்கு தினேஷுடன் இணைந்து கதை அமைத்துள்ளார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘ஆபிஸ்’ தொடரில் கதாநாயகனாக நடித்த கார்த்திக்கேயன் இப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகிறார். இவர்களுடன் ஷரியா,  இவன்ஸ்ரீ,  ஜெகதீஸ்,  ஜார்ஜ் விஜய், அரவிந்த், அருள் ஜோதி ஆகியோரும் நடித்துள்ளனர். ஒளிப்பதிவு – ஏ.டி.பகத்சிங், இசை – நவீன் மற்றும் பியோன் சுரோ, படத்தொகுப்பு –சேவியர் திலக், பாடல்கள் – கலை சாய் அருண், கலை இயக்கம் – க்ராஃபோர்டு, சண்டை…
Read More
தென் திரையுலகின் வர்த்தக நாயகி ஸ்ருதி ஹாசன்!

தென் திரையுலகின் வர்த்தக நாயகி ஸ்ருதி ஹாசன்!

தெலுங்கில் தொடர்ந்து  6 வெற்றி படங்களையும், கடந்த  2016 ஆம் ஆண்டில், தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் 4 தொடர் வெற்றி படங்களையும் கொடுத்த ஸ்ருதி ஹாசன், தற்போது   தமிழிலும் - தெலுங்கிலும்  இரண்டு மிக பெரிய வெற்றி படங்களை கொடுத்து, இந்த 2017 ஆண்டை வெற்றிகரமாக துவங்கி இருக்கிறார். தொடர்ந்து வெற்றி படங்களை மட்டுமே கொடுத்து, வர்த்தக உலகின் நாயகியாக வலம் வரும் ஸ்ருதி ஹாசனுக்கு, சமீபத்தில் வெளியான பவன் கல்யாணின் 'கட்டமராயுடு' திரைப்படம் மேலும் பெருமையை சேர்த்துள்ளது. இதை பற்றி திரையுலக  வர்த்தக துறையில் இருக்கும் நிபுணர்  ஒருவர் கூறுகையில், ""வர்த்தக உலகில் தனக்கென ஒரு வலுவான  அடையாளத்தை பதித்து இருக்கும் ஸ்ருதி ஹாசன், கட்டமராயுடு படம் மூலம் தொடர்ந்து தெலுங்கில் ஆறு வெற்றி படங்களை  கொடுத்து இருக்கும்  கதாநாயகியாக உருவெடுத்து இருக்கிறார். அதுமட்டுமின்றி, தமிழ் - தெலுங்கில் வெளியான 'சிங்கம் 3' திரைப்படம்…
Read More
ஸ்ரீலங்கா விசிட் இப்போதைக்கு ரத்து! -ரஜினிகாந்த் அறிவிப்பு

ஸ்ரீலங்கா விசிட் இப்போதைக்கு ரத்து! -ரஜினிகாந்த் அறிவிப்பு

இலங்கை, யாழ்ப்பாணத்தில் வீடுகளை இழந்து தவிக்கும் ஏழை தமிழ் மக்களுக்கு 150 வீடுகள் லைகா நிறுவனம் சார்பில் கட்டித்தர திட்டமிட்டிருந்தது. வீடு வழங்கும் விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அத்தமிழ் மக்களுக்கான வீட்டு சாவியினை அவர்கள் கையால் கொடுக்கும் படி விழாக் குழுவினர் ஏற்பாடு செய்திருந்தனர். சுமார் 4 லட்சம் பேருக்கு மேல் கலந்து கொள்ளும் இவ்விழா ஏப்ரல் 9 ஆம் தேதி நடக்கவிருந்தது. இந்நிலையில் தமிழ் அரசியல் தலைவர்கள் ரஜினிகாந்திடம் அவ்விழாவில் கலந்து கொள்ள வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்ததன் பெயரில் சூப்பர் ஸ்டார் அவர்களின் அன்பு வேண்டுகோளை ஏற்று இப்பயணத்தை ரத்து செய்து கொண்டார். இதை அவர் அதிகார பூர்வாமாக தன் கடிதத்தின் மூலம் இன்று தெரிவித்தார்.    
Read More