‘பாகுபலி’ கதையை ஒட்டி நிறைய கதைகள் இருக்கிறது! – ராஜமெளலி பேட்டி

‘பாகுபலி’ கதையை ஒட்டி நிறைய கதைகள் இருக்கிறது! – ராஜமெளலி பேட்டி

எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் வருகிற ஏப்ரல் 28-ந் தேதி வெளியாகவுள்ள ‘பாகுபலி-2’ படத்தின் இசை வெளியீடு இன்று சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெறவிருக்கிறது. அதற்கு முன்னதாக, படக்குழுவினர் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்தனர். இந்த நிகழ்வில், இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி, பிரபாஸ், அனுஷ்கா, தமன்னா, ரம்யா கிருஷ்ணன், நாசர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதில், ராஜமௌலி பேசும்போது, ‘பாகுபலி’ படம் பெரிய ஹிட்டாகவேண்டும் என்று நினைத்துதான் படத்தை எடுத்தோம். ஆனால் இவ்வளவு பெரிய ஹிட்டாகும் என்று நினைக்கவில்லை. தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வரலாற்று படம் செய்ய வேண்டும் என்று தான் தொடங்கினோம். முதல் பாகம் தமிழில் பெரும் வெற்றி பெற்றது, அதற்கு எப்படி நன்றி சொல்வது என தெரியவில்லை. இது ஒரு கற்பனை கலந்த வரலாற்று படம். ஆகையால் இந்த காலத்தில் தான் இக்கதை நடைபெற்றது என்று சொல்ல முடியாது. கதையை 1000 வருடங்களுக்கு முன்பு நடப்பது போல வைத்துக் கொண்டோம். 'பாகுபலி' கதையைத் தொடங்கும் போது…
Read More
பேய் இல்லாத திகில் படம் “உரு”

பேய் இல்லாத திகில் படம் “உரு”

வையம் மீடியாஸ் படநிறுவனம் சார்பில் வி.பி.விஜி தயாரித்துவரும் புதிய படம் உரு. இதில் கலையரசன் கதாநாயகனாவும், சாய் தன்க்ஷிகா கதாநாயகியாகவும் நடிக்க, இவர்களுடன் மைம் கோபி, டேனியல் ஆனி, தமிழ்ச்செல்வி, கார்த்திகா உள்பட பலர் நடித்து வருகின்றனர். இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி வரும் விக்கி ஆனந்த் கூறியதாவது, உரு என்றால் பயம் என்று பொருள் உண்டு. பயத்தை மையப்படுத்தி உருவாகியுள்ள கதை என்பதால் இப்படத்திற்கு உரு என்ற தலைப்பு சூட்டப்பட்டுள்ளது. கதைப்படி நாயகன் கலையரசன் நல்ல குடும்பக்கதைகளை எழுதி வரும் எழுத்தாளர். ஆனால் இன்றைய மாறிவிட்ட சூழலில் இவரின் கதைகள் வரவேற்கப்படாமல் போகவே, தனது வாழ்வாதாரத்தை நிலைநிறுத்திக் கொள்ள இன்றைய காலகட்டத்திற்கேற்ப ரசிகர்களை மிகவும் கவரும் திரில்லர் கதைகளை எழுத முடிவுஎடுத்து, மேகமலை என்ற ஊருக்கு செல்கிறார். அங்கு அவர் கதை எழுதத் தொடங்கும் போது அவரைச் சுற்றி சில அசம்பாவிதங்கள் நடக்கின்றன. அதைத்தொடர்ந்து என்ன நடக்கிறது…
Read More
பிரபாஸ் – உலகமெங்கும் உற்று நோக்கும் உச்ச நட்சத்திரம்

பிரபாஸ் – உலகமெங்கும் உற்று நோக்கும் உச்ச நட்சத்திரம்

பல தெலுங்கு வெற்றி படங்களில் நடித்த பிரபாஸ், பாகுபலி படத்தின் மூலம் தனது பிரம்மாண்ட நடிப்பால் அனைத்து மொழி ரசிகர்களையும் கவர்ந்து உலகமே உற்று நோக்கும் உச்ச நட்சத்திரமானார்.பிரம்மிப்பையும் பிரம்மாண்டத்தையும் இணை சேர்த்து அனைவரையும் கவர்ந்த S.S.ராஜமௌலியின் ’பாகுபலி’ படத்தின் வெற்றி உலகம் அறிந்ததே. தற்போது S.S.ராஜமௌலியின் இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் உலகமே பெரிதும் எதிர்பார்க்கும் 'பாகுபலி 2' திரைப்படம் உலகமெங்கும் ஏப்ரல் மாதம் 28ம் தேதி வெளியாகவுள்ளது. ஒவ்வொரு நடிகருமே ஒரு படத்தை ஒரு வருடத்துக்குள்ளாவது முடித்துவிட்டு, அடுத்த படத்துக்கு சென்றுவிடுவார்கள். ஆனால், 'பாகுபலி' 2 பாகங்களுக்கும் சேர்த்து சுமார் 3 ஆண்டுகள் ஒதுக்கி நடித்து முடித்துள்ளார் பிரபாஸ். படத்துக்கான அவருடைய உழைப்பை வார்த்தைகளால் விவரிக்க இயலாது. ஒரு நடிகர் சினிமா மீது கொண்ட காதலினாலும் தனது ரசிகர்கள் மீது கொண்ட பாசத்தினாலும் இதையும் தாண்டி எதுவும் செய்யக்கூடுமா என்று அனைவரது புருவத்தையும் உயர்த்த வைத்திருக்கிறது பிரபாஸின் உழைப்பு. ஒரே…
Read More
தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு: சிறந்த தமிழ்ப்படம் ஜோக்கர்- வைரமுத்துவுக்கும் விருது!

தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு: சிறந்த தமிழ்ப்படம் ஜோக்கர்- வைரமுத்துவுக்கும் விருது!

2016ம் ஆண்டுக்கான தேசிய விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டன. ரஸ்தம் படத்தில் நடித்த இந்தி நடிகர் அக்ஷய் குமார் சிறந்த நடிகராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். ‘மின்னாமினுங்கு-தி ஃபயர்ஃப்ளை’ என்ற மலையாளப் படத்தில் நடித்த சுரபி சிறந்த நடிகையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். சிறந்த படத்துக்கான விருது, கசாவ் என்ற மராத்தி படத்துக்குக் கிடைத்துள்ளது. ‘வென்டிலேட்டர்’ என்ற மராத்திப் படத்தை இயக்கிய ராஜேஷ் மபுஸ்கர் சிறந்த இயக்குனராக தேர்வாகி உள்ளார். சமூக பிரச்னைகளை சிறப்பாகச் சொன்னப் படத்துக்கான விருதுக்கு அமிதாப் பச்சன் நடித்த ‘பிங்’ தேர்வு செய்யப்பட்டு உள்ளது. சிறந்த இந்திப் படத்திற்கான விருது சோனம் கபூர் நடித்த ‘நீரஜா’வுக்குக் கிடைத்துள்ளது. இந்தப் படத்தில் சிறப்பாக நடித்ததற்காக அவருக்கு சிறப்பு விருதும் கிடைத்துள்ளது. குழந்தைகளுக்கான சிறந்தப் படமாக ‘தானக்’ என்ற தெலுங்குப் படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. சிறந்த துணை நடிகைக்கான விருது ‘தங்கல்’ படத்தில் நடித்த காஷ்மீர் நடிகை சாய்ரா வாஸிமிற்கு கிடைத்துள்ளது. ஜோக்கர் தமிழில்…
Read More
தனுஷ் இயக்கத்தில் ராஜ்கிரண் நடித்த ,ப. பாண்டி’ – ஏப் 13 ரிலீஸ்

தனுஷ் இயக்கத்தில் ராஜ்கிரண் நடித்த ,ப. பாண்டி’ – ஏப் 13 ரிலீஸ்

நடிகர் தனுஷ் இயக்குனராக களமிறங்கும் "ப.பாண்டி" (பழனிச்சாமி பாண்டி) படத்தில் ராஜ்கிரண் ஹீரோவாக நடிக்க ஜோடியாக ரேவதி நடித்துள்ளார். இவர்களுடன் பிரசன்னா, சாயாசிங், வித்யுலேகா ராமன், ரின்ஸன், தீனா(அறிமுகம்), ஆடுகளம் நரேன், பாஸ்கர், மாஸ்டர் எம்.பி.ராகவன், பேபி சவி ஷர்மா, சென்ராயன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சிறப்பு தோற்றத்தில் மடோனா செபாஸ்டின். நட்பு தோற்றத்தில் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன், இயக்குனர் பாலாஜி மோகன், ரோபோ சங்கர் மற்றும் திவ்யதர்ஷினி நடித்துள்ளனர். கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், தயாரிப்பு - தனுஷ்,ஒளிப்பதிவு - ரா.வேல்ராஜ், இசை - ஷான் ரோல்டான், பாடல்கள் - தனுஷ், செல்வராகவன் மற்றும் ராஜூ முருகன், நிர்வாக தயாரிப்பு - எஸ். வினோத் குமார், படத்தொகுப்பு - ஜி.கே. பிரசன்னா, நடனம் - பாபா பாஸ்கர், சண்டைப்பயிற்சி - சில்வா, ஆடை வடிவமைப்பு - பூர்ணிமா ராமசாமி, தயாரிப்பு மேற்பார்வை - எஸ்.பி. சொக்கலிங்கம், மக்கள் தொடர்பு…
Read More
நயன்தாரா நடிக்கும் ‘அறம்’ படத்தில் ஹாலிவுட் டீம்!!

நயன்தாரா நடிக்கும் ‘அறம்’ படத்தில் ஹாலிவுட் டீம்!!

ஆஸ்கர் விருதிற்கு பரிந்துரை செய்யப்பட்ட  'THE PKF - PRAGUE PHILHARMONIA' இசை குழு, நயன்தாரா நடித்திருக்கும் 'அறம்' படத்தில் இணைந்து பணியாற்ற இருக்கின்றது. மிகவும்  பழமை வாய்ந்த இந்த PRAGUE PHILHARMONIA இசை குழு,  ஒவ்வொரு வருடமும் 250 க்கு ம் அதிகமான இசை பதிவுகளை நடத்தி, உலகின் மதிப்பிற்குரிய இசை குழுக்களில் ஒன்றாக திகழ்கின்றது. மேலும் 'பாரமௌன்ட்', 'சோனி', 'லூகாஸ் பிலிம்' போன்ற தலைச் சிறந்த தயாரிப்பு நிறுவனங்களுடனும், ஆஸ்கர் விருதிற்கு பரிந்துரை செய்யப்பட்ட 'லார்ட் ஆப் தி ரிங்ஸ்', 'ஹாரி பார்ட்டர்' மற்றும் 'கேம் ஆப் த்ரோன்ஸ்' போன்ற படங்களிலும் இணைந்து பணியாற்றி இருப்பது குறிப்பிடத்தக்கது. https://www.youtube.com/watch?v=YXMYS-pwU7Y தலை சிறந்த நடிகர் கமல் ஹாசனை போலவே விடா முயற்சியை பின்பற்றி வரும் ஜிப்ரான் தான், அவர் இசையமைத்து வரும்  அறம் படத்திற்கு இந்த இசை குழுவையை தேர்வு செய்தார். சமுதாயத்தில் நிலவி வரும் முக்கிய பிரச்சனையை மையமாக கொண்டு…
Read More
சந்திரஹாசன் இரங்கல் கூட்டத்தில் ரஜினிகாந்த்!

சந்திரஹாசன் இரங்கல் கூட்டத்தில் ரஜினிகாந்த்!

நடிகர் கமல்ஹாசன் அண்ணனும், சினிமா தயாரிப்பாளருமான சந்திரஹாசன் சமீபத்தில் லண்டனில் மரணம் அடந்தார். அவரது மறைவுக்கான இரங்கல் கூட்டம் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் நேற்று நடந்தது. இதில் நடிகர் ரஜினிகாந்த் கலந்துகொண்டு சந்திரஹாசன் உருவப்படத்துக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் பேசியதாவது:- “என் நண்பர் கமல்ஹாசனுக்கு அவரை பெற்றவர் மற்றும் வளர்த்த சாருஹாசன், ஆளாக்கிய சந்திரஹாசன் என்று மூன்று தகப்பனார்கள். சந்திரஹாசனை நான் இரண்டு தடவை பார்த்து இருக்கிறேன். அவரிடம் பழகும் வாய்ப்பும் கிடைத்துள்ளது. நண்பர் கமல்ஹாசன் சினிமாவில் அதிகம் சம்பாதிக்காதவர். இப்போது உள்ள நடிகர்களிடம் இருக்கும் பணம் கூட அவரிடம் கிடையாது. அதற்காக அவர் கவலைப்பட்டதும் இல்லை. அதையும் மீறி கொஞ்சம் அவரிடம் பணம் இருக்கிறது என்றால் அதற்கு காரணம், சந்திரஹாசன். இனிமேல் எப்படி கமல்ஹாசன் சம்பாதிக்கப்போகிறார். சம்பாதித்ததை எப்படி பாதுகாக்கப்போகிறார் என்றுதான் நான் இப்போது சிந்திக்கிறேன். கமல்ஹாசன் மாதிரி ஒரு கோபக்காரரை நான் பார்த்தது…
Read More
ஆரியா – கேத்தரின் தெரஸா நடிக்கும் “ கடம்பன் “  – ஏப் 14ல் ரிலீஸ்!

ஆரியா – கேத்தரின் தெரஸா நடிக்கும் “ கடம்பன் “ – ஏப் 14ல் ரிலீஸ்!

சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர்.பி.சௌத்ரி, ஆர்யாவின்  The Show people   நிறுவனங்கள் அதிக பெருட் செலவில் தயாரிக்கும்   படம் “ கடம்பன் “   ஆரியா கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக கேத்தரின் தெரஸா நடிக்கிறார். மற்றும் முருகதாஸ், சூப்பர் சுப்ராயன், தீப்ராஜ் ரணா, ராஜசிம்மன், ஒய்.ஜி.மகேந்திரன், எத்திராஜ் ஆகியோர் நடிக்கிறார்கள். ஒளிப்பதிவு   -  S.R.சதீஷ் குமார்    இசை   -  யுவன்சங்கர் ராஜா எடிட்டிங்   -  தேவ்  கலை   -  A.R.மோகன்  ஸ்டன்ட்  -  திலீப்சுப்ராயன் பாடல்கள்   -  யுகபாரதி  நடனம்   -  ராஜு சுந்தரம், ஷோபி இணைத் தயாரிப்பு   -  B.சுரேஷ் B.ஜீவன், ஜித்தன் ரமேஷ், ஜீவா தயாரிப்பு   -  ஆர்.பி.சௌத்ரி கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் -  ராகவா படம் பற்றி இயக்குனர் ராகவாவிடம் கேட்டோம் .... கடம்பன்  இதுவரை இல்லாத அளவிற்கு பிரம்மாண்டமான ஆர்யா படமாக உருவாகி உள்ளது.ஆர்யா  இப்படத்திற்காக தனது உடம்பை  வருத்தி கடம்பனாகவே வாழ்ந்திருக்கிறார்.  இன்றைய…
Read More

ரசிகர்களை சிலிர்க்கவைக்கும் 3D, மெய்நிகர் காட்சியனுபவ அரங்க அமைப்புகள்!

42 ஆண்டுகளுக்கு பிறகு ஷோலே திரைப்படத்தில் வரும் கபார் சிங் தொடர்பான காட்சிகள் ராமநாகராம் மாவட்ட பாறைக் குன்றுகளில் என்றென்றும் நினைவுகூரத்தக்கவகையில் மீண்டும் பொறிக்கும் முயற்சிகள் நடந்துவருகிறது. அதுமட்டுமின்றி ஒரு பெரிய வெற்றிப்படமான ஷோலே படத்தின் காட்சிகள் படமாக்கப்பட்ட அங்குள்ள மலைப்பாறை இடுக்குகள் ரமேஷ் சிப்பியின் திரை அனுபவத்தோடு ஒரு பெரிய இசைக் கொண்டாட்டத்திற்கு தயாராகி வருகிறது. கர்நாடகா சுற்றுலா வளர்ச்சிக்கழகம் 42 ஆயிரத்து 184 அடிகளுக்கு ஷோலே ஒரு '3டி விர்சுவல் ரியாலிடி கிராமம்' ஒன்றை ராமநாகராம் மாவட்டத்தில் ராமதேவரா கிராமம் அருகே நிறுவும் பணியில் ஈடுபட்டு வருகிறது. இங்குதான் ஷோலே திரைப்படத்தின் காட்சிகள் இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்றது. இப்பகுதி 'ஷோலே ஸ்பாட்' என்றே கர்நாடக மக்களால் அழைக்கப்பட்டு வருகிறது. 7.5 கோடி திட்டம் கர்நாடக சுற்றுலாத்துறை சமர்ப்பித்துள்ள 7.5 கோடியில் வினோதமான இந்த திட்ட வரைவுக்கு கர்நாடக அரசு ஒப்புதல் அளித்துள்ளது. ஷோலே திரைப்படத்தின் விறுவிறுப்பான சண்டைக்…
Read More
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல் ; நடிகர் விஷால் வெற்றி!

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல் ; நடிகர் விஷால் வெற்றி!

தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல் சென்னை அண்ணாநகரில் உள்ள கந்தசாமி நாயுடு கல்லூரியில் நேற்று நடைபெற்றது. புதிய நிர்வாகிகளுக்கான இந்த தேர்தலில் தலைவர் பதவிக்கு நடிகர் விஷால், ஆர். ராதாகிருஷ்ணன், கேயார் ஆகிய மூன்று அணிகள் போட்டியிட்டன. இந்த தேர்தலில், நடிகர்கள் ரஜினிகாந்த், கமலஹாசன் உள்ளிட்டோர் வாக்களித்தனர். இதையடுத்து, பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு நேற்று இரவு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில், திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தலைவருக்கு போட்டியிட்ட விஷால் 478 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இதேபோன்று, பொருளாளர் பதவிக்கு விஷால் அணி சார்பில் போட்டியிட்ட எஸ்.ஆர்.பிரபு 344 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட எஸ்.ஏ.சந்திரசேகர் 326 வாக்குகளும், விஜய் முரளி 212 வாக்குகளும் பெற்றனர். துணைத்தலைவர் பதவிக்கு போட்டியிட்ட, நடிகர் பிரகாஷ்ராஜ் 408 வாக்குகளும், இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் 357 வாக்குகளும் பெற்று வெற்றி பெற்றனர். மேலும், செயற்குழு உறுப்பினர்களாக விஷால் அணியை சேர்ந்த…
Read More