மாமரம் படம் எப்படி இருக்கு?

இயக்கம் – ஜெய்காஷ்

இசை: நந்தா மற்றும் ஜெய் ஹரிஷாந்த்
தயாரிப்பு: ஜெய்காஷ் பிலிம்ஸ்

நடிப்பு : ஜெய்காஷ், மீனாட்சி, நிஷா, காதல் சுஹ்மர், கேபிஒய் திவாகர், ராகுல் தேவ், பிரம்மாஜி, அருணாச்சலம், மதுரை சக்திவேல், பிரம்மானந்தம், பாஷா, சத்தியம் ராஜேஷ், ரம்யா

ஜெய் ஆகாஷ் மிகப்பெரிய நடிகராக இருந்தவர். இப்போது அவ்வப்போது தானும் இருக்கிறேன் என ஒரு படம் செய்து வருகிறார்.

தன் நடிப்பில் பத்துவருடங்களாக எழுதி இயக்கி தயாரித்துள்ள படம் தான் மாமரம்.

காதலிக்காக வைத்த மாமரத்தின் துணையோசு காலத்தை கழிக்குன் ஒருவனின் கதை தான் இந்த மாமரம்.

ஒருத்தியை உயிருக்குயிராக காதலிக்குன் போது காதலி செய்த துரோகத்தால் காதலையும், காதலர்களையும் வெறுத்து, காதல் என்ற சொல் கேட்டாலே கோபபடுகிறார் நாயகன் ஜெய் ஆகாஷ். கல்லூரியில் படிக்கும் அவரை இன்னொரு பெண் காதலித்தும் அவருக்கு காதல் வரவில்லை. ஒரு கட்டத்தில் அவருக்கு ஆக்ஸிடெண்ட் ஆகிவிட அவருக்கு இதயம் தந்து மாண்டு போகிறார் அவர் காதலி. அப்போது தான் தன் காதலி ஏமாற்றவில்ல எனும் உண்மை தெரிய வருகிறது. தன் காதலி நினைவாக அவர் விட்டுட்சென்ற மாமரத்தை பாதுகாத்து வளர்ப்பதோடு, அந்த மாமரத்திற்காக எது வேண்டுமானாலும் செய்ய தயாராக இருக்கிறார். இது தான் மாமரத்தின் கதை

மாமரம் பத்து வருடங்களாக எடுத்தால் பத்து வருடத்திற்கு முந்தைய படம் பார்க்கும் உணர்வைத் தருகிறது. டெக்னிகலாக சின்ன பட்ஜெட் படம் என்பது படம் முழுக்க தெரிகிறது.

ஜெய் ஆகாஷ், இந்த படத்தில் இளம் வயது ஜெயம் ரவி போன்ற மிக அழகாக இருக்கிறார் இளமை தோற்றம், பழுத்த பழன், ஆக்ரோஷமான மனநலம் பாதிக்கப்பட்டவர், என்று மூன்று விதமான தோற்றங்களில் வருகிறார். அவர் தன் முழுத்திறமையையும் காட்டியிருக்கிறார். அது திரையில் நன்றாக வந்துள்ளது ஆனால்

நாயகிகளாக நடித்திருக்கு மீனாட்சி, சந்தியா இருவரும் கவர்ச்சி, நடிப்பு என இரண்டிலும் ஒப்பேத்தி இருக்கிறார்கள்.

காதல் சுகுமார், கே.பி.ஒய் திவாகர், ராகுல் தேவ், பிரம்மாஜி, அருணாச்சலம், மதுரை சக்திவேல், பிரம்மானந்தம், பாஷா, சத்யம் ராஜேஷ், ரம்யா என தெலுங்கு மற்றும் தமிழ் திரையுலக கலைஞர்களின் கலந்து படம் முழுக்க வருகிறார்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு காட்சியிலும் வேறு வேறு தோற்றத்தில் இருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் பவுல் பாண்டி, இசையமைப்பாளர் நந்தாவின் பாடல்கள், ஜெய் ஹரிஷாந்தின் பின்னணி இசை, ஏ.சி.மணிகண்டனின் படத்தொகுப்பு அனைவரும் படத்திற்கு தங்களால் முடிந்ததை செய்துள்ளனர் ஆனால் அது போதவில்லை.

பார்த்து பழகி மரத்துப்போன பழைய மாவு கதை.
பலமுறை பல படங்களுக்கு எடுத்ததை ஒன்றாக்கி ஒரு படம் செய்தது போல உள்ளது.

படத்தின் கதை, திரைக்கதை என எதிலும் பெரிதாக சுவாரஸ்யம் வரவில்லை. அங்கங்கே வரும் காமெடி மட்டும் சிரிப்பு வரவைக்கிறது.

மாமரம் பெரிதாக வளராத மரம் .