கமல் உருவாக்கிய தசாவதாரம் வெளியான தினமின்று!

ப்ப ராஜ்யசபா எம்பியாகிப்புட்ட கமல்ஹாசனின் பிரம்மாண்ட வெற்றித் திரைப்படமான ‘தசாவதாரம்’ இதே ஜூன் 13, 2008 அன்று வெளியாச்சு. ஆஸ்கர் பிலிம்ஸ் ஈவிச்சந்திரன் புரொட்யூஸ் பண்ணிய அந்தப் படம் நல்ல வரவேற்பைப் பெற்றுச்சு. அந்தப் படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம் அமைச்சிருந்தார் கமல். டைரக்டர் பொறுப்பை மட்டுமே கே.எஸ்.ரவிகுமார் ஏற்றிருந்தார்.

அந்தப் படத்துக்காக கமல் பட்ட கஷ்டங்கள் குறிச்சு கே.எஸ்.ரவிகுமார்கிட்டே கேட்டச்சே ,’ என் லைஃப்ஃபிலே அதிகமா டென்ஷனாகி ஒர்க் செஞ்ச படம் எதுன்னு கேட்டா அது ‘தசாவதாரம்’தான். ஒவ்வொரு ஷெட்டியூலுமே ஒரு படம் எடுக்குற மாதிரிதான். அந்த ஷெட்டியூலில் என்ன கேரக்டர், அதற்கான மேக்கப் என அம்புட்டும் பிளான் பண்ணி சொல்லிவிடுவோம். கமல் சார் ஒரு நாளைக்கு ஒரு கேரக்டர் தான் பண்ணுவார். அடுத்த நாள் தான் அடுத்த கேரக்டர் பண்ணுவோம்.

ஒரு சீனில் நிறைய கமல் இருக்கும் போது, ஒரு கேரக்டர் எடுத்து முடிச்சுடுவோம். அடுத்த நாள் வேறு கேரக்டர் மேக்கப் போட்டு அதே காட்சியை மீண்டும் எடுப்போம். ஒரு காட்சியில் 5 கமல் வாறார் என்றால் 5 நாட்கள் ஷூட் செய்வோம். 5 தடவையும் வெவ்வேறு மாதிரி படமாக்க வேண்டும். முதலில் எந்த கதாபாத்திரத்துடன் யார் லிங்க் இருக்கிறது என்று பார்த்துவிட்டு, அது வரைக்கு ப்ளூ மேட் போட்டு எடுத்து விடுவோம்.

குள்ளமாக பாட்டி கேரக்டர் பண்ணும் போது “PAIN இல்லாமல் எப்படி சார் GAIN வரும்” என்று சிரிப்பார். ஜீப்பில் பின்னாடி குள்ள கமல் உட்கார்ந்திருக்கும் காட்சி ஒன்று வரும். குள்ள கமல் என்றால் அந்தக் காட்சியை படமாக்கி சுருக்குவோம். அப்போது தான் குள்ள கமலாக தெரியும். அந்தக் காட்சியில் முன்னால் ஒரு லிட்டர் தண்ணீர் பாட்டில் இருக்கும். முன்னால் உள்ள கமல் குடிக்கும் போது ஒரு லிட்டர் தண்ணீர் பாட்டிலாகவும், குள்ள கமல் குடிக்கும் போது 1.3 லிட்டர் பிடிக்கும் தண்ணீர் பாட்டிலாக தயார் செய்து ஷூட் பண்ணினோம். இந்தளவுக்கு ஒவ்வொரு காட்சியும் ஒர்க் பண்ணினோம். அந்த மாதிரியான காட்சிகளில் எடுப்பவர்களை விட நடிப்வவிய்ங்களுக்குத்தான் கஷ்டம். அம்புட்டு கஷ்டப்பட்டு நடிப்பதால் தான் அவருக்கு ஒலக நாயகன் என்று பெயர் கொடுத்தோம். ஆரம்பத்தில் வரும் 12-ம் நூற்றாண்டு காட்சிகள் தான் யானைகள், குதிரைகள் என வைத்து கொஞ்சம் கஷ்டமில்லாமல் டைரக்ட் செஞ்சேன். மொத்தத்த்யுலே ‘தசாவதாரம்’ படத்தில் ஆரம்பத்தில் வரும் காட்சிகள் மட்டுமே கஷ்டமின்றி இயக்கினேன். மீதி காட்சிகள் அம்புட்டும் கஷ்டமோ கஷ்டம் தான்”முன்னு சொன்னார்

அதே சமயம் இப்ப எக்ஸ்பீரியன்ஸ் குறிச்சு அதாவது தசாவதாரம் படம் உருவான விதம், அதில் தனக்குக் கிடைத்த அனுபவங்கள் ஆகியவற்றைப் பற்றி தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் விரிவான பதிவு ஒன்றை எழுதியிருந்தார் படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இந்திய சினிமாவில் முதல் முறையாகப் பத்து வேடங்களில் நடித்திருந்த கமல். இன்னிக்கும் அது இளம் இயக்குநர்களுக்கான பாடமாக்கும்

ஆமாமுங்க.. 12ஆம் நூற்றாண்டின் சோழர் ஆட்சிக் காலத்தில் நிகழ்ந்த சைவ-வைணவ சச்சரவுகளில் தொடங்கி 2004இல் நிகழ்ந்த சுனாமி ஆழிப் பேரலை வரை பல நூற்றாண்டு கால இடைவெளியையும் இடையில் தமிழகம், அமெரிக்கா, ஜப்பான் என பூமிப்பந்தின் கண்டங்களையும் கடந்து பயணிக்கும் கதையாக்கும் ‘தசாவதாரம்’. இந்த உலகில் வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு மூலைகளில் நடைபெறும் தொடர்பற்றதாகத் தோன்றும் அனைத்து நிகழ்வுகளுக்கும் ஏதோ ஒரு தொடர்பு உண்டு என்னும் பட்டாம்பூச்சி விளைவுக் கோட்பாட்டின் அடிப்படையில் அந்தக் கதையை எழுதியிருந்தார் கமல்.

அந்தக் கதையை அப்போ ஏகப்பட்ட முன்னணி டைரக்டர்களிடம் கமல் சொன்னாராம். ஆனா அவிய்ங்களுக்கு அந்தக் கதை கொஞ்சமும் புரிந்துகொள்ள முடியலை -னு சொல்லி இயக்க மறுத்துபுட்டாய்ங்களாம். கமலுடன் நகைச்சுவைப் படங்களில் மட்டுமே பணியாற்றியிருந்த கே.எஸ்.ரவிகுமார் மாபெரும் கற்பனையையும் வருடக் கணக்கிலான கடின உழைப்பையும் கோரும் இந்தக் கதையை இயக்க முன்வந்தது கமலுக்கே ஆச்சரியம்தான். ஆனால், ரவிகுமாருக்கு இந்தக் கதையைக் கேட்டவுடன் அது வெற்றிபெறும் என்று நம்பிக்கை ஏற்பட்டுபுடுச்சாம்.

அதே சமயம் ஸ்கீர்ன் பிளே எழுதுவதற்கு முன்னாடி மூத்த இயக்குநரும் தயாரிப்பாளருமான முக்தா சீனிவாசனிடம் கதையை விலாவாரியாச் சொல்லி அவருடைய கருத்தை கேட்டார் கமல். காரணம் முக்தா சீனிவாசன் ஒரு சிறந்த சிறுகதை ஆசிரியர் . கதையைக் கேட்ட முக்தா, இந்தப் படத்தின் ஒவ்வொரு அங்குலத்திலும் கமல் கவனம் செலுத்தோணும்முன்னு, குறிப்பா கமல் தன்னுடைய குழந்தையைப் போல் பாதுகாக்க வேண்டும் என்றும் சொன்னாராம்.

அதைத் தொடர்ந்து ஒரு திரைக்கதையை அலசுவதில் வல்லுநர்கள் என்று தான் கருதும் எழுத்தாளர்கள் சுஜாதா, மதன், கிரேஸி மோகன், நடிகர்-இயக்குநர் ரமேஷ் அரவிந்த் ஆகியோரிடம் திரைக்கதையை விவரிச்சிருக்கார் கமல். அப்ப அவிய்ங்க கேட்ட கேள்விகள் அம்வ்புட்டுக்கும் விளக்கம் அளிச்சிருக்கார். இந்தப் படத்தின் கரு, அளவு, பொருட்செலவு எல்லாமே புதுமையானது என்பதால் பலருக்கு சற்று தயக்கம் இருந்துச்சாம். ஆனால், இந்தத் திரைக்கதையுடன் முன்னகர்வதற்குக் கமலுக்கு உற்சாகமளிச்சார் சுஜாதா.

ஆஸ்கார் ரவிச்சந்திரன் படத்தின் தயாரிப்பாளர் என்று உறுதியானது. படத்தில் கமலின் பத்துத் தோற்றங்கள் மற்றும் அவற்றின் மேக்கப்புக்கான சோதனைக்கு மட்டும் 21 நாட்கள் அமெரிக்காவில் முகாமிட வேண்டும் என்று கேட்டிருந்தால் எந்த ஒரு தயாரிப்பாளரும் அதை ஏற்றுக்கொண்டிருக்க மாட்டாய்ங்க்க. 21 நாட்களும் ஒரு லேப்பில் கடுமையான உழைப்புக்கிடையே அந்தப் பரிசோதனை நடைபெற்றிருக்கிறது. கமலுடன் ‘இந்தியன்’ உள்ளிட்ட படங்களில் பணியாற்றிய ஹாலிவுட் மேக்கப் கலைஞரான மைக்கேல் வெஸ்ட்மோர் இந்தப் படத்திலும் ஒர்க் செஞ்சா. மேக்கப்புக்கு மட்டுமல்லாமல் அவற்றுக்கான ஃபோட்டோ ஷூட் நடத்தவும் அவர் உதவ வேண்டியிருந்தது. ஒரே நேரத்தில் இரண்டு வெவ்வேறு தோற்றம்/ மேக்கப்பை புகைப்படம் எடுக்க வேண்டியிருந்தது. இதைப் பார்த்த இயக்குநர் ரவிகுமார் உடனடியாக நாள் ஒன்றுக்கு 250 டாலர் கட்டணத்தில் ஒரு புகைப்படக் கலைஞரைப் பணியமர்த்திவிட்டார்.

இவையெல்லாம் புரொடியூசர் ரவிச்சந்திரனின் ஒத்துழைப்பால்தான் சாத்தியமாச்சு. ஆனா, க்ளைமாக்ஸ் காட்சியைச் சுனாமி பின்னணியில் படமாக்குவதற்குத் திட்டமிட்டதைவிட மேலும் ஒரு கோடி ரூபாய் தேவைப்பட்டுச்சு. இன்னிக்கு 20 கோடி ரூபாயும் 30 கோடி ரூபாயும் திரட்டுவது சகஜமாகியிருக்கலாம். ஆனால், ‘தசாவதாரம்’ உருவான காலகட்டத்தில் ஒரு கோடி ரூபாய் என்பது அம்மாம் பெரிய தொகை. அதனால் சுனாமி இல்லாம படமாக்கும் வகையில் படத்தின் இறுதிக் காட்சியை மாற்றியமைக்க யோசனை பண்ணினார் கமல். ஆனால், அப்படிச் செஞ்சா படத்தின் பட்டாம்பூச்சி விளைவுக் கோட்பாடு நீர்த்துப் போய்டும்-முன்னு திரைக்கதையை முழுமையாக உள்வாங்கியிருந்த படத்தின் டைரக்டர் ரவிகுமார் ஏற்கெனவே திட்டமிடப்பட்ட சுனாமி இறுதிக் காட்சியைத்தான் படமாக்கோனும்ம் என்பதில் பிடிவாதமாக இருந்தார். ஃபைனலா கமல் படத்தின் விற்பனையில் தனக்கிருந்த சில உரிமைகளைத் தயாரிப்பாளருக்கு விட்டுக்கொடுத்து முன்பே திட்டமிட்டிருந்தபடி அந்தக் காட்சியை எடுத்தாய்ங்க.

பத்து வேடங்களில் கிருஷ்ணா பாட்டி கதாபாத்திரத்துக்கான மேக்கப்பே தனக்கு மிகவும் கடினமா இருந்துச்சாம். அதற்குக் கொடுக்கப்பட்ட செயற்கை கண் கமலின் நிஜக் கண்ணின் பார்வையை மறைச்சுபுடுமாம், அந்த மேக்கப்பை அணிந்துகொண்டிருக்கும் போது தாமதமாகும் ஒவ்வொரு நொடியும் வலியை உணர வேண்டியிருந்தாம். அதே சமயம் எல்லா தரப்பு ரசிகர்களின் ஆரவார வரவேற்பைப் பெற்ற பல்ராம் நாயுடு கதாபாத்திரத்தின் மேக்கப்பே ரொம்ப ஈசியா இருந்துச்சாம்.

இம்புட்டையும் விவரமா சொல்லிபுட்டு முத்தாய்ப்பா. “சினிமாவே மிகச் சிறந்த ஆசான். அப்படத்தில் சில பகுதிகளில் தோற்றுத்தான் போனோம். ஆனால், அதை அந்த ஆசான் மன்னித்தார். அந்தப் படத்தை வெற்றி பெறவைத்த பார்வையாளர்களைவிட அதிகமாக மன்னித்தார். இந்தப் படத்தை உருவாக்கும்போது நான் ஜனநாயகத்தைப் பயின்றேன் என்று சொல்லலாம். நான் மட்டுமோ அல்லது ரவிகுமார், ரவிச்சந்திரன், வெஸ்ட்மோர் ஆகியோர் மட்டுமோ அல்ல நாங்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாகச் சேர்ந்தே இதைச் சாதிச்சோம்” முன்னு சொன்னார்

இப்படியாப்பட்ட படம் ரிலீஸாகி .17 வருசமானாலும் இன்னிக்கும் ரசனைக்குரிய படம் தசாவதாரம் இல்லையா?