அதர்ஸ் – மருத்துவ துறை பின்னணியில் நடக்கும் திரில்லர்!

 

தயாரிப்பு: கிராண்ட் பிக்சர்ஸ், அப் 7 வெஞ்சர்ஸ்
இயக்கம்: அபின் ஹரிஹரன்
நடிப்பு: ஆதித்யா மாதவன், கௌரி கிஷன், அஞ்சு குரியன்

மருத்துவ துறையில் நிகழும் உண்மை சம்பவங்களை ஆதாரமாகக் கொண்டு, சஸ்பென்ஸ் மற்றும் உணர்வுகளை இணைத்து உருவாக்கப்பட்டிருக்கும் திரைப்படம் — அதர்ஸ்.

ஒரு விபத்தில் நான்கு சடலங்கள் கிடைக்கிறது. வழக்கமான விபத்தா இது, இல்லை கொலைக்குப் பின்னால் ஏதாவது இரகசியமா? என்பதற்கான பதிலை தேடும் போலீஸ் அதிகாரி ஆதித்யா மாதவன் மற்றும் அவரது குழு. அதே சமயம், கௌரி கிஷன் பணிபுரியும் மருத்துவமனையில் சில விசித்திரமான நிகழ்வுகள் நடக்கத் தொடங்குகின்றன. அந்த விபத்துக்கும் மருத்துவமனைக்கும் என்ன சம்பந்தம்? யார் தான் “அதர்ஸ்”? — என்பதையே படத்தின் கதையெங்கும் நம் மனதில் வினாவாக வைத்துக் கொண்டு செல்லும் திரைக்கதை.

நடிப்பு:
அறிமுக நாயகனாக வரும் ஆதித்யா மாதவன், புதுமுகம் என்றாலும், அவரது உடல் மொழி, டயலாக் டெலிவரி, கண்களில் தெரியும் தீவிரம் என போலீஸ் கதாப்பாத்திரத்திற்கு தேவையான அனைத்தையும் சரியாக வெளிப்படுத்தியிருக்கிறார். குறிப்பாக கிளைமாக்ஸ் பகுதியில் அவரது ஆக்சனும் நடிப்பும் சிறப்பு. தமிழ் சினிமாவுக்கு நிச்சயமாக ஒரு promising hero கிடைத்திருக்கிறார்.

கௌரி கிஷன், வழக்கமான காதல் கதை நாயகியாக இல்லாமல், மருத்துவமனையின் மையப் புள்ளியாக கதையை தாங்கி நிற்கிறார். சில காட்சிகளில் நயன்தாரா பாணியில் தன்னம்பிக்கையோடு ஒளிர்கிறார்.
அஞ்சு குரியன், ஸ்டைலிஷ் போலீஸ் ஆபீசராக அசத்துகிறார்.
முனீஷ்காந்த், வழக்கம்போல் காமெடியில் அசத்துகிறார்.

 

ஹரிஷ் பேரடி, மாலா பார்வதி, ஜெகன், ஆர். சுந்தர்ராஜன் ஆகியோரின் பங்களிப்பும் சிறப்பாக உள்ளது.

தொழில்நுட்பம்:
அரவிந்த் சிங் ஒளிப்பதிவில் ஹாஸ்பிட்டல் சீன்களும், நைட் ஷாட்ஸும் — வெகு சிறப்பாக வந்துள்ளது.

ஜிப்ரான் இசை, குறிப்பாக பின்னணி இசை, கதைக்கு விறுவிறுப்பை கூட்டுகிறது.
ராமர் எடிட்டிங்கில் வேகம் உள்ளது, ஆனால் சில காட்சிகள் குறைக்கப்பட்டிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.

இயக்கம்:
இயக்குனர் அபின் ஹரிஹரன், ஒரு சென்சிட்டிவான துறையை தேர்வு செய்து, அதைக் கையாண்ட விதம் பாராட்டத்தக்கது. முதல் பாதி சஸ்பென்ஸாக நகர, இரண்டாம் பாதி சுவாரஸ்யமான திருப்பங்களால் நிறைந்திருக்கிறது. குறிப்பாக ‘அதர்ஸ்’ என்ற டைட்டில் எதற்காக வைத்திருக்கிறார் என்பதற்கான விளக்கம் — திரையில் வெளிப்படும் தருணம் ரசிகர்களை கைதட்ட வைக்கும்.

சில இடங்களில் கதையில் சிறிது வேகம் குறைந்தாலும், “அதர்ஸ்” ஒரு விறுவிறுப்பான, யூகிக்க முடியாத மருத்துவ திரில்லர் அனுபவம்.
அறிமுக இயக்குநரும், புதிய ஹீரோவுமாக இந்த குழுவிற்கு இது ஒரு நம்பிக்கைக்குரிய ஆரம்பம்!

⭐ ரேட்டிங்: 3.5 / 5

error: Content is protected !!