அதர்ஸ் – மருத்துவ துறை பின்னணியில் நடக்கும் திரில்லர்!

அதர்ஸ் – மருத்துவ துறை பின்னணியில் நடக்கும் திரில்லர்!

  தயாரிப்பு: கிராண்ட் பிக்சர்ஸ், அப் 7 வெஞ்சர்ஸ் இயக்கம்: அபின் ஹரிஹரன் நடிப்பு: ஆதித்யா மாதவன், கௌரி கிஷன், அஞ்சு குரியன் மருத்துவ துறையில் நிகழும் உண்மை சம்பவங்களை ஆதாரமாகக் கொண்டு, சஸ்பென்ஸ் மற்றும் உணர்வுகளை இணைத்து உருவாக்கப்பட்டிருக்கும் திரைப்படம் — அதர்ஸ். ஒரு விபத்தில் நான்கு சடலங்கள் கிடைக்கிறது. வழக்கமான விபத்தா இது, இல்லை கொலைக்குப் பின்னால் ஏதாவது இரகசியமா? என்பதற்கான பதிலை தேடும் போலீஸ் அதிகாரி ஆதித்யா மாதவன் மற்றும் அவரது குழு. அதே சமயம், கௌரி கிஷன் பணிபுரியும் மருத்துவமனையில் சில விசித்திரமான நிகழ்வுகள் நடக்கத் தொடங்குகின்றன. அந்த விபத்துக்கும் மருத்துவமனைக்கும் என்ன சம்பந்தம்? யார் தான் “அதர்ஸ்”? — என்பதையே படத்தின் கதையெங்கும் நம் மனதில் வினாவாக வைத்துக் கொண்டு செல்லும் திரைக்கதை. நடிப்பு: அறிமுக நாயகனாக வரும் ஆதித்யா மாதவன், புதுமுகம் என்றாலும், அவரது உடல் மொழி, டயலாக் டெலிவரி, கண்களில் தெரியும்…
Read More