இயக்குநர் ஆதிக் ரசிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்திருக்கும் படம். ரசிகர்களின் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கும் படம் ஆனால் ஒரு திரைப்படமாக இப்படம் எப்படி இருக்கிறது?
ஆதிக் ரவிச்சந்திரன் கிரேஸியான ஐடியாக்களை வைத்துக் கொண்டு, அந்த அந்த நடிகர்களின் பழைய படங்களின் சீன்களை தொகுத்து, தனக்கு பிடித்த பழைய பாடல்களை போட்டுவிட்டு ஒரு கதம்பமாக, இந்தக்கால இன்ஸ்டா குருவிகள் கத்துவதற்கு மட்டுமே படமெடுக்கக் கூடியவர். இதிலும் அதே வகை தான்.
ஆதிக் இயக்கிய மார்க் ஆண்டனி படத்தில் எதுவெல்லாம் பாராட்டு வாங்கியதோ, அதை பல மடங்கு கூட்டி, அஜித்தை நடக்க விட்டு, அவரை பல வித கெட்ட்ப போட வைத்து, ஒப்பேத்தி படம் என ஏமாத்தியிருக்கிறார்.
குடும்பத்திற்காக வயலன்ஸை விட்ட ஒரு முன்னாள் கேங்ஸ்டர், தனது மகனுக்காக மீண்டும் வயலன்ஸை கையிலெடுக்கிறார் இது தான் கதையாம். ஆனால் கதைக்காக சீனுக்காகவெல்லாம் படக்குழு உழைக்கவில்லை.
அஜித்தின் ஹிட்டான எல்லாப்பட கேரக்டரையும் மிக்ஸியில் அடித்து குழப்பி, ஒவ்வொரு சீனிலும் அவரை புகழ்ந்து, கடைசி வரை மாஸ் மட்டுமே முக்கியம் என ஏதோ ஒன்றை கிண்டித் தந்துள்ளார்.
இந்த பழைய பாடலை பயனபடுத்துவதை முதலில் தடை செய்ய வேண்டும். ஒரு காட்சிக்கு அழகியலை சேர்க்க உதவினால் அது சரியாக, இருக்கும்.
முதலில் ஆரண்ய காண்டத்தில் தியாகராஜன் குமாரராஜா பயன்படுத்தினார். அது பிடித்துப்போய் இயக்குநர் லோகெஷ் தனது படங்களில் பயன்படுத்த இப்போது எல்லோரும் எல்லாப்படத்திலும் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டார்கள்.
ஆதிக் ஒரு படி மேலே போய் ஒவ்வொரு கேரக்டர் அறிமுகத்திற்கும் இந்த பழைய பாடலை ஓட விடுகிறார். வில்லனுக்கு, பிரியா வாரியருக்கு, கிங்ஸ்லிக்கு என எல்லோருக்கும் ஒரு பழைய பாடல். அது செட்டாகிறதா இல்லையா என்பதில் எல்லாம் எந்த கவலையும் இல்லை.
கதையோ, கதாப்பாதிரங்களோ எந்த தொடரச்சியும் இல்லாமல் இருக்கிறது. எல்லாக் கேர்கடர்களுக்கும் ஒரே அஜித்தின் பழைய பட ரெஃபரென்ஸ் சொல்லி புகழ்வது மட்டுமே முழு வேலை.
படத்தையே இப்படித்தான் டிசைன் செய்துள்ளார்கள். 10 பழைய பாட்டுக்கு காப்பிரைட் வாங்கிடுங்க..
போன படத்துல சில்க் ஸ்மிதாவை கொண்டு வந்தோம். அப்ப இந்தப் படத்துல சிம்ரனை இறக்குவோம்.
போன படத்துல அந்த அனகோண்டா துப்பாக்கி செம்ம ஹிட்டு.
அப்ப அதே மாதிரி தலக்கு.. கார் முழுக்க பீரங்கி துப்பாக்கி.. இப்படித்தான் முழுப்படமும் எந்த லாஜிக்கும் எந்த வரைமுறையும் இல்லாமல் இருக்கிறது.
இயக்குநர் ஆதிக் ஒரே ஒரு காட்சியையாவது ஒழுங்காக முழுதாக எடுத்து ரசிக்க வைப்பார் நினைத்தால் ஏமாற்றமே!
ஒரு காட்சிக்கான ஸ்டேஜிங், கண்டினியூட்டி, வசனம், கேமரா கோணம் எதுவுமே இதில் முழுமையாக இல்லை.
ஒரு காட்சியில் ஒரு இடத்தில் நிற்பவர்கள், குளோசப்பில் வேறு இடத்தில் நிற்கிறார்கள். வைடில் ஒரு ரியாக்ஸன் குளோசப்பில் வேறு ரியாக்சன், பட முழுக்க இதே தான்.
அஜித்தின் பழைய சீன்களை ரீகிரியேட் செய்யும் போது, பழைய படத்தில் இருந்த அந்த அழுத்தம் அந்த கேமரா கோணம் எல்லாம் எப்படி இருந்திருக்க வேண்டும் ? அதிலும் கோட்டை விட்டிருக்கிறார்கள்.
நான் எவ்வளவு பெரிய தல பேன் தெரியுமா? என்று அஜீத் ரசிகர்களை மட்டுமல்லாமல், அஜீத்தையும் சேர்த்தே ஸ்கேம் செய்திருக்கிறார் இயக்குனர் ஆதிக்.
அஜித் எப்படி இந்தப்படத்திற்கு ஒத்துக்கொண்டார் எனத் தெரியவில்லை.
ஜிவி பிரகாஷ் படம் முழுக்க இரைச்சலை சிதறவிட்டுள்ளார். இசை மருந்துக்கூட இல்லை. புலி புலி பாடல் என்ன வகையென தெரியவில்லை
படத்தில் ஆறுதல் அஜித் படத்தின் முதல் காட்சியில் இருந்தே சிரித்துக்கொண்டே.. மிக இயல்பாக ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தியிருக்கிறார். அவருக்கு இணையாக அர்ஜூன் தாஸ் அசத்தியிருக்கிறார்.
மற்றபடி யாருமே சொல்லிக்கொள்ளும் படி இல்லை.
சுட்ட வேகத்தில் சாப்பிடும் தோசை பசியில் சூப்பராக இருப்பதாக தோன்றும் ஆறிப்போனால்.. குப்பையில் தான் போட வேண்டும் மாதிரி இருக்கும்..
குட் பேட் அக்லியும் அதே தான் அஜித் கேரியரில் மிக மோசமான படம்.
#GoodBadUgly