01
Nov
ஒரிஜினல் தெலுங்கு, தமிழ்ல டப்பிங்.. ஆனா கதை நடக்குறது மும்பையில … Sweet Surprise இந்த குழப்பங்கள் இல்லாம.. எளிமையான மனிதனோட குடும்பக்கதையா.. இத புரிய வச்சது தான் இந்தப்படத்தோட வெற்றி. இந்த டிரெய்லர் பார்த்தப்பவே படத்த எதிர்பார்த்தேன்… ஏன்னா Con man அது சம்பந்தமான படங்கள் எனக்குப் பிடிக்கும், அதுவும் மக்கள ஏமாத்தாம.. அரசாங்கத்த ஏமாத்துற Con man Story இன்னும் சுவாரஸ்யமா இருக்கும். Wolf of Wall Street ஆரம்பிச்சு, Scam 93 வரைக்கும் நிறைய ஹிட் சினிமாக்கள் இருக்கு.., இந்தப்படமும் அதே டெம்ப்ளேட் தான், என்னதான் பேங்ல வேலை பார்த்தாலும், கஷ்டபடுற குடும்பத்துல, மாச சம்பளத்த தாண்டி செலவு இருக்குற குடும்பத்துல.. இருக்க ஒருத்தன், பணத்துக்கா மானம், மரியாதை எல்லாமே போற இடத்துல…. நேர்மைய தூக்கி கடாசிட்டு… துணிஞ்சு ஸ்கேம்ல இறங்கி சம்பாதிக்க ஆரம்பிக்க,,, கோடி கோடியா கொட்டுது…. அந்த ஸ்கேம அவன் எப்படி பண்றான்? அந்த…
