ஒரு புது மாதிரியான ஒரு கிளைமாக்ஸ் காட்சி கொண்ட ‘நானும் சிங்கிள்தான்’

THREE IS A COMPANY என்ற பட நிறுவனம் மற்றும் ஜெயகுமார், புன்னகை பூ கீதா ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள படம் “ நானும் சிங்கிள் தான் “. இந்த படத்தில் தினேஷ் கதாநாயகனாக நடித்துள்ளார். கதாநாயகியாக தீப்தி திவேஸ் நடித்துள்ளார். மற்றும் மொட்ட ராஜேந்திரன், மனோபாலா, செல்வேந்திரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் – கோபி. இவர் இயக்கும் முதல் படம் இது.

இது முழுக்க முழுக்க காதல், கமர்ஷியல் படம். வித்தியாசமான திரைக்கதை அமைத்துள்ளார் இயக்குனர் கோபி. ஒரு புது மாதிரியான ஒரு கிளைமாக்ஸ் காட்சி இந்த படத்தில் உள்ளது அது ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாக நிச்சயம் இருக்கும். லண்டனில் இருக்கும் தமிழ் டான் கதாபாத்திரத்தில் நடித்து மொட்ட ராஜேந்திரன் காமெடியில் கலக்கி இருக்கிறார். இந்த படம் ரசிகர்களுக்கு அருமையான காமெடி விருந்தாக இருக்கும். படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் நடைபெற்று வருகிறது. அக்டோபர் முதல் வாரத்தில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளதாக கூறுகிறார் தயாரிப்பாளர் ஜெயகுமார்.

படப்பிடிப்பு சென்னை மற்றும் லண்டன், யூரோப் போன்ற இடங்களில் நடைபெற்றுள்ளது.

ஒளிப்பதிவு – டேவிட் ஆனந்த்ராஜ்

இசை – ஹித்தேஷ் மஞ்சுநாத் ( இவர் A.R.ரகுமானிடம் உதவியாளராக பணியாற்றியவர்)

பாடல்கள் – கபிலன் வைரமுத்து

ஸ்டன்ட் – கனல் கண்ணன்

கலை – ஆண்டனி ஜோசப்

எடிட்டிங் – ஆதித்யன்

நடனம் – அபீப் உஷேன்

இணை தயாரிப்பு – ஜெயகுமார், புன்னகை பூ கீதா

தயாரிப்பு – THREE IS A COMPANY