கோடம்பாக்க ரீலும், ரியலும்! – சாப்டர் 1

கோடம்பாக்க ரீலும், ரியலும்! – சாப்டர் 1

இயக்குநர் சி.வி.ஸ்ரீதருக்கும், நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கும் இடையில் அந்த காலத்தில் அப்படி ஒரு கெமிஸ்ட்டிரி.எதிர்பாராதது, அமரதீபம், உத்தமபுத்திரன், விடிவெள்ளி என்று பல திரைப்படங்கள் அடுத்தடுத்து வெளிவந்து பட்டையைக் கிளப்பிக் கொண்டிருந்த நேரம்.அந்தப் படங்கள் ஒவ்வொன்றிலும் ஏதோ ஒருவகையில் ஸ்ரீதரின் கைவண்ணம் மிளிர்ந்தது. அமரதீபம், உத்தமபுத்திரன் போன்ற படங்களில் ஸ்ரீதரின் வீனஸ் நிறுவனத்தின் பங்களிப்பு இருந்தது. இந்தநிலையில் ஒரு விழாவில் இயக்குநர் ஸ்ரீதரும், மக்கள் திலகம் எம்.ஜி.ஆருக்கு மிகவும் வேண்டப்பட்ட ஒருவரும் தற்செயலாகச் சந்தித்துக் கொண்டார்கள். ‘என்னங்க, எப்பப் பார்த்தாலும் நடிகர் திலகத்துக்கு கூடவே ஒட்டி உறவாடுறீங்க? அவரை வச்சே படம் எடுக்கிறீங்க? ஏன் மக்கள் திலகத்தை வச்சு படம் எடுக்க மாட்டீங்களா?’ என்று கேட்டிருக்கிறார் அந்த வேண்டப்பட்டவர். ஸ்ரீதருக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. நடிகர் திலகத்தைப் பொறுத்தவரை அவர் இயக்குநர்களுக்கான நடிகர். இயக்குநர்கள் சொல்வதைக் கேட்டு நடிப்பார். சொந்த ஐடியாக்கள் எதுவும் இருந்தால் அதை இயக்குநரிடம் சொல்லி தனது நடிப்பை…
Read More
எம்.ஜி.ஆர் . நடித்த நாடோடி மன்னன் ரிலீஸான நாளின்று!

எம்.ஜி.ஆர் . நடித்த நாடோடி மன்னன் ரிலீஸான நாளின்று!

எம்.ஜி.ஆர் நடிச்ச நாடோடி மன்னன் படத்துக்கான அப்போதைய பட்ஜெட் ஜஸ்ட் ரூ.18 லட்சம். ‘இந்தப் படம் ஓடினால் நான் மன்னன், இல்லையேல் நாடோடி’ அப்படீன்னு ஓப்பனா அறிவிச்சுப்புட்டு படத்தை ரிலீஸ் செஞ்சார் எம்.ஜி.ஆர். படம் மெகா ஹிட். கூட்டம் கூட்டமாக பெரும் கொண்டாட்டமாகக் கொண்டாடி தீர்த்தாய்ங்க ரசிகர்களுங்க. உலகம் முழுவதும் 23 திரையரங்குகளில் 100 நாள்கள் ஓடி புதிய சாதனையை படைச்சுது. அத்துடன் 175 நாள்களை கடந்து வெள்ளிவிழா கண்டுச்சு. அப்பவே நெசமா ஒரு கோடிக்கும் மேல் வசூல் ஈட்டி கொட்டிக் கொடுத்துச்சாம். இந்தப் படம்.எம்.ஜி.ஆருக்கும் தமிழ் சினிமாவுக்கும் திருப்புமுனை தந்த இந்தப்படம். அதே சமயம் நாடோடி மன்னனின் வெற்றியை திமுக தனது சொந்த வெற்றியாகக் கொண்டாடிச்சு. 1958 அக்டோபர் 16 ஆம் தேதி மதுரை தமுக்கம் மைதானத்தில் 2 லட்சத்துக்கும் அதிகமானோர் திரண்ட கூட்டத்தில் திமுக தலைவர் அண்ணாதுரை எம்ஜி ராமச்சந்திரனுக்கு தங்க வாள் பரிசளிச்சார். இதனை பிறகு எம்ஜி…
Read More
எம்.ஜி.ஆரின் ராஜாதேசிங்கு பட கலாட்டா!

எம்.ஜி.ஆரின் ராஜாதேசிங்கு பட கலாட்டா!

  இலட்சிய நடிகர் எனப்பெயர் பெற்றவர்எஸ். எஸ். ராஜேந்திரன். இவரை எஸ்.எஸ். ஆர். என்று அன்புடன் அழைப்பார்கள். இவருடைய தமிழ் உச்சரிப்பு மிகவும்அருமையானது. நடிகர் திலகத்துக்குஇணையாக வசனம் பேசி நடிக்கும் திறமை உள்ளவர் எஸ். எஸ். ஆர்.எஸ். எஸ். ஆரும் எம்.ஜி. ஆரும் மிகவும் நெருங்கிய நண்பர்கள். திராவிடமுன்னேற்றக் கழகத்திலிருந்து வெளியேறிய மக்கள் திலகம் அண்ணா திராவிடமுன்னேற்றக் கழகம் என்ற அரசியல் கட்சியை ஆரம்பித்த போது அவருடன்இணைந்து அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத்தின் வெற்றிக்காகப் பாடுபட்டதுடன்அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத்தின் சார்பில் சட்டசபைத் தேர்தலில்நின்று வெற்றிபெற்றவர். லேனா செட்டியார் என்பவர் "ராஜா தேசிங்கு' என்ற படத்தைத் தயாரிக்கத் திட்டமிட்டார். மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். கதாநாயகனாகவும் நாட்டியப் பேரொளி பத்மினி கதாநாயகியாகவும் நடிப்பது என்றுமுடிவு செய்தார்கள். எம்.ஜி.ஆரின் நண்பனாக என்.டி. ராமராவும் அவரது ஜோடியாக பானுமதியும் நடிப்பது எனவும் தயாரிப்பாளர் திட்டமிட்டார்."ராஜா தேசிங்கு' படத்துக்கு கவியரசுகண்ணதாசன் வசனம் எழுதினார். கவிய ரசு கண்ணதாசனின் வசனங்களை படித்த…
Read More