’சியான்கள்’ டீம் நடத்தும் புதுமையான மூவி கான்டெஸ்ட்!

கே.எல். புரடெக்‌ஷன்ஸ் சார்பில் ஜி.கரிகாலன் தயாரித்துள்ள படம் “சியான்கள்”. இப்படத்தை இயக்குநர் வைகறை பாலன் இயக்கியுள்ளார். வயது முதிர்ந்த, கிராமத்து முதயவர்கள் 7 பேரின் வாழ்வில் நடக்கும் கதையை, மண்மனம் மாறமல் கூறும் படமாக உருவாகியுள்ளது. கரிகாலன், ரிஷா ஹரிதாஸ் நாயகன், நாயகியாக நடிக்க, நளினிகாந்த், பசுபதிராஜ், ஈஸ்வர் தியாகராஜன், சமுத்திர சீனி, சக்திவேல், நாராயணசாமி, துரை சுந்தரம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.

படம் குறித்து இயக்குனர் வைகறை பாலன், “ வயதான அப்பா, அம்மா எல்லோருக்கும் இருப்பார்கள் அவர்களை நாம் எப்படி பார்த்துகொள்ள வேண்டும் என்பதை கிராமத்து மண் சார்ந்து கூறும் படைப்பாக சீயான்கள் படம் இருக்கும். இப்படத்தில் உண்மையில் நடந்த பல சம்பவங்கள் தொகுத்து அதனை கதையில் சேர்த்திருக்கிறேன். இப்படம் ஏழு முதியவர்களின் பார்வையில் அவர்களது ஆசையை கூறும் படம். வருத்தப்படாத வாலிபர் சங்கத்தை வயதானவர்கள் நடத்தினால் எப்படி இருக்கும் அது தான் படம்” என கூறியுள்ளார்.

விரைவில் ரிலீஸாக இருக்கும் இந்த படத்தின் டீசர் யூடியூப் பக்கத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில் தற்போது சியான்கள் படக்குழு மூவி கான்டெஸ்ட் ( Movie Contests ) ஒன்றை நடத்த வருகிறது.அதாவது உங்கள் வீட்டில் உள்ள பெரியவர்களின் ஆசையை நிறைவேற்றும் வகையில் படக்குழு இந்த முயற்சியில் இறங்கியுள்ளது.அதாவது உங்கள் வீட்டு பெரியவர்களின் ஆசையை வீடியோவாக பதிவு செய்ய வேண்டும். அந்த வீடியோ 30 விநாடிகளுக்கு குறையாமல் ஒரு நிமிடத்திற்கு மிகாமலும் இருக்க வேண்டும்.

இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி உங்கள் வீட்டுப் பெரியவர்களின் ஆசையை நிறைவேற்ற நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் இது மட்டும் தான்.அந்த வீடியோவை பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம், போன்ற சமூக வலைதளப் பக்கங்களில் ஏதாவது ஒன்றில் #ChiyaangalMovieContest என்ற ஹாஸ்டேக்குடன் பதிவிட்டு @production_kl மற்றும் @kalakkalcinema டேக் செய்யவும்.

இந்த போட்டியின் மூலமாக தேர்ந்தெடுக்கப்படும் போட்டியாளரின் ஆசை நிறைவேற்றப்படும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.உடனே இந்த போட்டியில் கலந்து கொண்டு உங்கள் வீட்டுப் பெரியவர்கள் ஆசையை நிறைவேற்றுங்கள்.