போட் சிம்பு தேவன் இயக்கத்தில் யோகி பாபு நடிப்பில் வெளிவந்திருக்கும் திரைப்படம்,
ஆங்கில நாவலான கடலுக்குள் ஒரு கிழவன் நாவல், 12 ஆங்கிரி மேன் திரைப்படமும் இந்த படத்திற்கு ஆதர்சம் என டைட்டில் கார்டு போட்டு ஆரம்பிக்கிறார் சிம்பு தேவன் ஆனால் அந்த திரைப்படங்களில் இருக்கும் தனித்துவம் இந்த திரைப்படத்தில் இல்லாமல் போனது வருத்தம் தான்.
சிம்பு தேவன் திரைப்படங்களில் எப்போதும் ஒரு தனித்துவமான கதை சொல்லல் இருக்கும். காமெடியுடன் கலந்து அரசியல் கருத்துக்களையும், சமூக கருத்துக்களையும் பேசும் படைப்பாகவே, தொடர்ந்து தன் படங்களை இயக்கி வருகிறார். முதல் முறையாக இந்த படம் அரசியல் பேசினாலும், ஒரு திரைப்படமாக கலையின் முழு வடிவத்தை அடையவில்லை.
ஆங்கிலேயர் காலகட்டத்தில் சென்னையை ஜப்பான் விமானங்கள் தாக்கப் போகிறது என்ற நிலையில், ஜப்பான் விமானங்கள் வானில் பறக்க, அதற்கு பயந்து கொண்டு, ஒரு பத்து பேர் கொண்ட குழு, ஒரு போட்டில் நடுக்கடலுக்கு தப்பி செல்கிறது. அந்த 10 பேரும் 10 பின்னணிகளை கொண்டவர்களாக இருக்கிறார்கள். அவர்களுக்கு இடையே நடக்கும் சண்டையும், பேச்சு வார்த்தைகளும், சிக்கல்களும் தான் இந்த திரைப்படம்.
முழுக்க முழுக்க ஒரு இடத்தில் மட்டுமே நடக்கும் கதை. ஒரு போட்டில் நடுக்கடலில் 10 பேர் இதுதான் மொத்த கதை எனும்போது, திரைக்கதை எத்தனை சுவாரசியமாக இருந்திருக்க வேண்டும். ஆனால் இந்த படத்தில் திரைக்கதை மிகவும் மோசமாக அமைந்து விட்டது. சுவாரஸ்யப்படுத்துவதற்காக அவர்கள் வைத்திருக்கும் ஒவ்வொரு சம்பவங்களுமே நமக்கு அயர்ச்சியை தருகிறது.
சுறா வருவது, இன்னொரு ஆங்கிலே சிப்பாய் வருவது என எதுவுமே படத்தை காப்பாற்றவில்லை
உண்மையில் யோகி பாபு நடிக்கிறாரா? என்பதை சந்தேகமா இருக்கிறது. அவருக்கு எந்த ஒரு குளோசப்பும் நீண்ட நேரம் எந்த ஒரு இயக்குநருமே வைப்பதில்லை. சொல்லும் டயலாக்கை அப்படியே திருப்பி சொல்லிக் கொண்டிருக்கிறார். முகத்தில் எந்த உணர்வுகளுமே இல்லை.
படத்தில் இசை ஒளிப்பதிவு என எல்லாமே வீக்காக அமைந்த ஒரு திரைப்படமாக இருக்கிறது.
படத்தின் திரைக்கதையிலே எந்த சுவாரஸ்யமும் இல்லை எனும் போது நடிகர்களின் நடிப்பும் வீண்
சிம்புதேவனை காப்பாற்றும் என நினைத்த இந்த போட் நடுக்கடலில் கவிழ்ந்து விட்டது.