04
Aug
போட் சிம்பு தேவன் இயக்கத்தில் யோகி பாபு நடிப்பில் வெளிவந்திருக்கும் திரைப்படம், ஆங்கில நாவலான கடலுக்குள் ஒரு கிழவன் நாவல், 12 ஆங்கிரி மேன் திரைப்படமும் இந்த படத்திற்கு ஆதர்சம் என டைட்டில் கார்டு போட்டு ஆரம்பிக்கிறார் சிம்பு தேவன் ஆனால் அந்த திரைப்படங்களில் இருக்கும் தனித்துவம் இந்த திரைப்படத்தில் இல்லாமல் போனது வருத்தம் தான். சிம்பு தேவன் திரைப்படங்களில் எப்போதும் ஒரு தனித்துவமான கதை சொல்லல் இருக்கும். காமெடியுடன் கலந்து அரசியல் கருத்துக்களையும், சமூக கருத்துக்களையும் பேசும் படைப்பாகவே, தொடர்ந்து தன் படங்களை இயக்கி வருகிறார். முதல் முறையாக இந்த படம் அரசியல் பேசினாலும், ஒரு திரைப்படமாக கலையின் முழு வடிவத்தை அடையவில்லை. ஆங்கிலேயர் காலகட்டத்தில் சென்னையை ஜப்பான் விமானங்கள் தாக்கப் போகிறது என்ற நிலையில், ஜப்பான் விமானங்கள் வானில் பறக்க, அதற்கு பயந்து கொண்டு, ஒரு பத்து பேர் கொண்ட குழு, ஒரு போட்டில் நடுக்கடலுக்கு தப்பி செல்கிறது.…