27
Jun
உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில், பிரமாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில், இந்தியாவெங்கும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் திரைப்படம் “இந்தியன் 2”. லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் & ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில், பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இப்படம், வரும் ஜூலை மாதம் 12 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், இந்தியாவெங்கும் படக்குழுவினர் பட புரமோசன் பணிகளைத் துவங்கியுள்ளனர். லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம், இந்தியா முழுக்க, இதுவரை இல்லாத வகையில், படத்தின் விளம்பர புரமோசன் பணிகளைச் செய்து வருகிறது. முன்னதாக படக்குழுவினர் மும்பையில் இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவை கோலாகலமாக நடத்திய நிலையில், இன்று வெளியாகியுள்ள "கல்கி 2898 கிபி" படத்துடன் "இந்தியன் 2" படத்தின் டிரெய்லரை வெளியிட்டு அசத்தியுள்ளது. இன்று அமிதாப் பச்சன், கமல்ஹாசன், பிரபாஸ், தீபிகா படுகோன் நடிப்பில் திரையரங்குகளில், வெளியாகியுள்ள கல்கி 2898 கிபி படத்துடன், “இந்தியன் 2” படத்தின் டிரெய்லரும் வெளியாகியுள்ளது. இந்த ஆண்டில் இந்தியத் திரையுலகில் மிகப்பெரும் எதிர்பார்ப்பை…
