2024 இல் நெட்ஃபிலிக்ஸ் ஓடிடியில்  ஸ்ட்ரீம் ஆகும் படங்களின் பட்டியல்!!

2024 இல் நெட்ஃபிலிக்ஸ் ஓடிடியில் ஸ்ட்ரீம் ஆகும் படங்களின் பட்டியல்!!

பொங்கல் பண்டிகையை ஒட்டி 2024 ஆம் ஆண்டிற்கான நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் ஆகும் படங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது! பொங்கல் பண்டிகையை ஒட்டி நெட்ஃபிலிக்ஸ் நிறுவனம் 2024 ஆம் ஆண்டில் தங்கள் தளத்தில் ஸ்ட்ரீமாக உள்ள காப்புரிமை பெற்ற ஒன்பது தமிழ்ப் படங்கள் குறித்தான பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்தப் படங்கள் முதலில் திரையரங்குகளில் வெளியாகும். தங்களுக்குப் பிடித்த நடிகர்களின் நடிப்பை ரசிகர்கள் பெரிய திரையில் பார்த்து அனுபவித்தப் பின்னர், மீண்டும் நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் குடும்பத்துடன் இல்லத்திலும் பார்த்து ரசிக்கலாம். இந்த 9 படங்களின் தலைப்பைத் தனது சமூகவலைதளப் பக்கத்தில் அறிவித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது நெட்ஃபிலிக்ஸ். நடிகர் அஜித்தின் 'விடாமுயற்சி', நடிகர் கமல்ஹாசனின் 'இந்தியன்2', சிவகார்த்திகேயனின் அடுத்தப் படம் மற்றும் இன்னும் பல திரைப்படங்கள் இந்த வருடம் நெட்ஃபிலிக்ஸ் தளத்தில் ஸ்ட்ரீம் ஆக உள்ளது. நெட்ஃபிலிக்ஸின் கண்டெண்ட் விபி மோனிகா ஷெர்கில் இதுகுறித்து பகிர்ந்து கொண்டதாவது, "பொங்கல் பண்டிகை நாளில் மேலும்…
Read More
Society of the snow review

Society of the snow review

Society of the snow 2023 Netflix நீங்க மூவி லவ்வரா எல்லாத்தையும் தூக்கி ஓரம் வச்சிட்டு இந்தப்படம் பாருங்க… சமீபத்துல மார்டின் ஸ்கார்ஸசி டெம்ப்ளேட் ஒன்னு சுத்துச்சு. இதாண்டா சினிமா இந்தப்படம் பார்த்தப்ப அதான் தோணுச்சு! இதுவொரு சர்வைவல் படம் உண்மையில நடந்த சம்பவங்கள வச்சி எடுத்த படம் படத்தோட கதை இருக்கட்டும் படம் பேசுற விசயம் ஒன்ணு இருக்கு. ஏன் கடவுள் இப்படி பண்றாரு வெவ்வேறு சூழ்நிலைகள்ல எத்தனையோ தடவை இந்த கேள்வி எனக்கு முன்ன வந்துட்டு போயிருக்கு.. இந்த கேள்வி இந்தப்படத்திலயும் வருது… கொரானோ வந்தப்ப நான் ஏன் சென்னை வந்தேன் ? வாழ்க்கையில என்ன பண்ண ஆசைப்பட்டேன் ? இந்தக்கேள்வியெல்லாம் மறைஞ்சு போயிடுச்சு.. ஏன்னா சுத்திலும் தெரிஞ்சவங்களோட சாவு, ஏன் சாகனும் எதுக்காக இந்த சாவு ஏன் ? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் நடுவுல உயிர் பிரச்சனை இருக்கிறது மட்டும்தான் முக்கியம் கடைசியா அதுக்காக போராடறது மட்டும்தான்…
Read More
ஆஸ்கார் விருது வென்ற ‘எலிபெண்ட் விஸ்பரர்ஸ் ‘வெளியிட்ட நிறுவனம் வெளியிடும் புதிய தமிழ்க் குறும்படம்

ஆஸ்கார் விருது வென்ற ‘எலிபெண்ட் விஸ்பரர்ஸ் ‘வெளியிட்ட நிறுவனம் வெளியிடும் புதிய தமிழ்க் குறும்படம்

'வைரம் பாஞ்ச கட்ட ' : ஒரு நம்பிக்கையூட்டும் 45 நிமிட குறும்படம்! ஆஸ்கார் விருது வென்ற 'எலிபெண்ட் விஸ்பரர்ஸ் 'ஆவணப் படத்தை வெளியிட பங்கு பெற்ற நிறுவனம் வெளியிடும் புதிய தமிழ்க் குறும்படம் வைரம் பாஞ்ச கட்ட! குறும்படம் இசை ஆல்பம் என்று கவனிக்கத்த வகையில் பங்களிப்பு செய்த காமன் மேன் சதீஷ் நடிக்கும் 45 நிமிட குறும்படம் 'வைரம் காஞ்ச கட்ட'. இக்குறும்படத்தில் நாயகனாக நடித்திருக்கும் சதீஷ்,ஏற்கெனவே 'இந்தியன் டூரிஸ்ட்', 'நொடிக்கு நொடி' குறும்படங்களை உருவாக்கியுள்ளார். 'இந்தியன் டூரிஸ்ட் ' குறும்படம் 24 மில்லியன் பார்வையாளர்களைக் கவர்ந்து யூடியூப் மற்றும் சமூக வலைதளத்தில் சாதனை முத்திரை பதித்தது. அது மட்டுமல்ல சர்வதேச அளவில் விருதுகளும் பெற்றது. அதேபோல் 'நொடிக்கு நொடி' குறும்படம் திரையுலகினரின் கவனத்தைக் கவர்ந்து பாராட்டைப் பெற்றது.இவர் உருவாக்கிய 'இவளை போல்' இசை ஆல்பம் டாப் டென் வெற்றி வரிசையில் இடம் பெற்றது. அந்த சதீஷ் நாயகனாக…
Read More
அஸ்வின்ஸ் படத்தின் ஓடிடி உரிமையை நெட்ஃபிலிக்ஸ் வாங்கியுள்ளது.

அஸ்வின்ஸ் படத்தின் ஓடிடி உரிமையை நெட்ஃபிலிக்ஸ் வாங்கியுள்ளது.

*ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி சித்ரா (SVCC) தயாரிப்பு: பிவிஎஸ்என் பிரசாத் வழங்குபவர்: பாபிநீடு பி இணை தயாரிப்பு: பிரவீன் டேனியல் அறிமுக இயக்குநர் தருண் தேஜா இயக்கத்தில் 'ASVINS'* வளர்ந்து வரக்கூடிய திரைப்படத் துறையில், தரமான நல்ல கதைகள் படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைகிறது. 'ASVINS' படத்தின் பின்னால் இருக்கும் ஆர்வமுள்ள திறமையான குழு நல்ல கதையுடன் படத்தின் வெற்றியை நிரூபிக்கத் தயாராக உள்ளது. திரைப்படம் வெளியான பின்பு, ஓடிடி உரிமையை மதிப்புமிக்க ஸ்ட்ரீமிங் நிறுவனமான நெட்ஃபிலிக்ஸ் நல்ல விலைக்கு வாங்கியுள்ளது. உளவியல், ஹாரர் த்ரில்லர் வகையில் உருவாகியுள்ள 'ASVINS' திரைப்படத்தின் மூலம் தருண் தேஜா இயக்குநராக அறிமுகமாகிறார். இது அவரது 20 நிமிட பைலட் திரைப்படத்தை அடிப்படையாகக் கொண்டது. இது விமர்சகர்கள் மற்றும் பார்வையாளர்களிடமிருந்து பெரும் வரவேற்பைப் பெற்றது. இப்படத்தில் 'தரமணி' மற்றும் 'ராக்கி' புகழ் வசந்த் ரவி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இருளில் இருந்து மனித உலகிற்கு…
Read More